துவரம் பருப்பு ரொட்டி

தேதி: November 25, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1/2 கப்
கோதுமை மா - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சைமிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் துவரம் பருப்பை மஞ்சள், சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பினபு வேகவைத்த பருப்பு, கோதுமை மா, உப்பு, தயிர், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி
இலை, எண்ணெய் எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
மூடி அரைமணி நேரம் வைக்கவும்
பின்பு மெல்லிய சப்பாத்திகளாக உருட்டவும்.
தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான துவரம் பருப்பு ரொட்டி தயார்.


இதை ஊறுகாய் அல்லது கெட்சப்புடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்