செட்டிநாடு முட்டை குழம்பு

தேதி: November 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (16 votes)

 

1. முட்டை - 4 ( வேக வைத்து இரண்டாக வெட்டியது)
2. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது. சின்ன வெங்காயம் இருந்தால் சிறப்பு. 15 சின்ன வெங்காயம் முன்பே 1 தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி நசுக்கி வைக்கவும்)
3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
4. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. உப்பு
7. கடுகு, சீரகம் - தாளிக்க

எண்ணெயில் வறுத்து அரைக்க:

1. மல்லி - 2 தேக்கரண்டி
2. மிளகாய் வற்றல் - 3
3. பூண்டு - 2 பல்
4. இஞ்சி - 1/2 இன்ச்
5. மிளகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
8. அரிசி - 1/2 தேக்கரண்டி
9. கருவேப்பிலை - சிறிது


 

தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆர வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.


சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் காரசாரமா... ம்ம்.... சூப்பரா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Thanks for your immediate reply. We will try this tomorrow and let u know the feedback.

All your recipes are nice. We like to have this chettinadu kulambu.

Beginner in cooking,we have some doubts.

can u give gram measurement for onion,tomato.

We have readymade ginger garlic paste, howmany teaspoon of gingergarlic paste we can use in this kulambu.

While grinding, is it parboiled rice or raw rice.

We are eagerly expecting your answer to make it tomorrow.

Thanks.

it is very nice

vanitha madam

We made it today for lunch. Very very tasty & spicy.We have kept it for dinner too.Thanks for the nice recipe.

We like to have chettinad food.We like to make your chettinad tomato kulambu(node/10437).We have some doubts on that.Can u clear it?

Thanks

Thank you vanitha madam for this wonderful recipie. Today I did this for chappathi and came out very nicely. I just added cashews and Soombu(perunseerakam) to the masala. Everyone in the family enjoyed this dish. Thanks once again.

அருண்ராஜ்... மன்னிக்கவும் எனக்கு வெங்காயம், தக்காளி கிராம் கணக்கில் சொல்ல தெரியல, ஏன்னா அளவு ரொம்ப கம்மி. ஒரு முட்டை அளவு வெங்காயம், 1 1/2 முட்டை அளவு தக்காளி'னு கணக்கு வெச்சுங்க. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் போதும். அரிசி பச்சரிசி சேர்த்துக்கங்க. செய்து பார்த்து சொல்லுங்க எப்படி வந்ததுன்னு. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுதா சுரேஷ்... மிக்க நனி.

இஷானி... இப்ப தான் உங்க பின்னூட்டத்தை பார்க்கிறேன். மன்னிகனும் தாமதமான பதில் பதிவுக்கு. :) மிக்க நன்றி இஷானி, செய்து பார்த்து வரும் பின்னூட்டம் எப்பவுமே படிக்க மகிழ்ச்சி.

சங்கீதா... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருண்ராஜ்... செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Anug.. மிக்க நன்றி. உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்களின் இந்த குறிப்பை இன்று செய்து பார்த்தேன்.நன்றாக வந்தது.நிறைய மசாலாக்களின் கலவை இருந்ததால் ரொம்ப காட்டா காரமா தான்பா இருந்தது.தங்களின் குறிப்புக்கு நன்றி.

இது காரமா தான் இருக்கும் சுகன்யா. உங்களுக்கு காரம் பிடிக்குமா?! எனக்கு ரொம்ப இஷ்டம். :) அதுவும் அசைவத்துக்கு காரம் தூக்கலா சேர்ப்பேன். மிக்க நன்றி சுகன்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இன்னைக்கு மதியம் உங்க செட்டிநாடு முட்டை குழம்புதான்.நல்லா இருந்தது.ஆனா குழம்பின் காரத்த குறைச்சு போட்டும் காகாகாகாகாரம்.ரொம்ப நன்றி:-)

இன்னைக்கு இந்த முட்டைக் குழம்புதான் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. Night -க்கும் சேர்த்து இருக்கட்டும்னு செய்தேன். மதியமே காலி. குறிப்புக்கு நன்றி

அன்புடன்,
இஷானி

எனக்கு பொதுவாகவே காரம் தான் பிடிக்கும்.... அதான் இப்படி. ரொம்ப நன்றி கவி. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி எப்படி இருக்கீங்க?உங்க இந்த ரெஸிபியை ஒரு வாரம் முன் செய்தேன் செம சுவை மின்னூட்டம் இப்பதான் கொடுக்க முடிஞ்சது நன்ரி காரசாரமா செம சூப்பர்
அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

பிரியா... நீங்க குடுத்திருக்கும் பின்னூட்டத்தை நான் இப்போது தான் பார்க்கிறேன்.... தாமதத்துக்கு மன்னிக்கனும். மிக்க நன்றி செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு. :)

மிக்க நன்றி Noohu. சம காரமோ??!! ;) ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து பிடிச்சிதுன்னு சொன்னதுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

priseka...

ஹாய் வாணி அக்கா.....
நான் பிரேசில் ல இருகிறேன். இப்ப இங்க மணி மதியம் 3.45.
இன்று உங்கலோட செட்டிநாடு முட்டை குழம்பு தான். என்ன ஒரு ருசி...... சாப்பிடுகிட்டே உங்கலுக்கு செய்தியை டைப் பண்னுறேன்...

Priya
Brazil / 09-04-2009.

priseka

என்னையும் தோழிய சேர்த்து கொள்விர்களா
வாணி அக்கா.....நான் dubai ல இருகிறேன். இப்ப இங்க மணி மதியம் 2.oo
இன்று உங்கலோட செட்டிநாடு முட்டை குழம்பு தான். என்ன ஒரு ருசி..என் husband சாப்பிட்டு நல்ல teast என்று ஓரே பாராட்டுதான் .உடனே உங்கலுக்கு நன்றி சொல்ல செய்தியை டைப் பண்னுறேன்...

என்னையும் தோழிய சேர்த்து கொள்விர்களா
வாணி அக்கா.....நான் dubai ல இருகிறேன். இப்ப இங்க மணி மதியம் 2.oo
இன்று உங்கலோட செட்டிநாடு முட்டை குழம்பு தான். என்ன ஒரு ருசி..என் husband சாப்பிட்டு நல்ல teast என்று ஓரே பாராட்டுதான் .உடனே உங்கலுக்கு நன்றி சொல்ல செய்தியை டைப் பண்னுறேன்...

hi sudha,i don t no how to message u

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியாக உள்ளது. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வெகு நாட்களுக்கு பின் இப்போதே வர முடிந்தது. தோழியாக சேர்த்து கொண்டேன்!!!! ;) நேரம் கிடைக்கும்போது நிச்சயம் அரட்டை பக்கத்தில் சந்திப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

iam very happy for ur reply.i feel flying in sky.மகிழ்ச்சியாக உள்ளது.இன்று நான் மிகவும் ஷந்தோஷமாக உள்ளேன். நேற்று friday என் husband வீட்டில் இருந்தார் அதனால் உடனடிய பதில் தர முடியவில்லை தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தோழியாக சேர்த்து கொண்டதற்கு நன்றி. நிச்சயம் அரட்டை பக்கத்தில் சந்திப்போம்.