ப‌ருத்திப் பால்

தேதி: November 26, 2008

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ப‌ருத்திக் கொட்டை -‍ 100 கிராம்
ப‌ச்ச‌ரிசி - 3 டேபிள்ஸ்பூன்
வெல்ல‌ம் -‍‍‍‍‍ 300 கிராம்
சுக்கு - ‍சிறிது அள‌வு
தேங்காய் துருவ‌ல் -‍ தேவையான‌ அள‌வு


 

ப‌ருத்திக் கொட்டையை ந‌ன்கு ஊற‌வைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ள‌வும்.
ப‌ச்ச‌ரிசியை சிறிது நேர‌ம் ஊற‌வைத்து மிக்சியில் அரைத்து கொள்ள‌வும்.
அரைத்த‌ ப‌ச்ச‌ரிசி மாவை ப‌ருத்தி பாலுட‌ன் க‌ல‌ந்து அடுப்பில் ஏற்றி கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.
பால் க‌ல‌வை சிறிது கெட்டியாக‌ பொங்கி வ‌ரும் போது வெல்ல‌ம் க‌ல‌ந்து கிள‌றிக் கொண்டே இருக்க‌வும்.
வெல்ல‌ம் முழுதும் க‌ரைந்த‌வுட‌ன் சுக்கு, தேங்காய் துருவ‌ல் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் க‌ழித்து இற‌க்க‌வும்.
சூடான‌ சுவையான‌ ப‌ருத்திப் பால் த‌யார்.


வெறும் வ‌யிற்றில் ப‌ருத்திப் பால் அருந்துவ‌து நெஞ்சுச‌ளிக்கு ந‌ல்ல‌ ம‌ருந்து.

மேலும் சில குறிப்புகள்


Comments

பருத்திப்பால் கடையில் தான் வாங்கி சாப்பிட்டு இருக்கிரேன்,நீங்க புதுசா?வித்தியாசமான ரெசிபி,உங்க பெயரும் புதிதா இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எங்க‌ ஊர்ல‌ நாங்க‌ வீட்டிலேயே செய்து சாப்பிடுவோம். செய்வ‌து மிக‌வும் எளிது. செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்க‌ளேன்.

ஆம், நான் புதிய‌ அங்க‌த்தின‌ர் தான். இதுதான் என‌து முத‌ல் முய‌ற்சி. உங்க‌ள‌னைவ‌ர‌து ஆத‌ர‌வும் இருக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையில் என‌து ம‌க‌ள் பெய‌ரில் ப‌திய‌ தொட‌ங்கி இருக்கிறேன்.

உங்களது ப‌ருத்திப் பால் உடனே செய்து பார்க்கவேண்டும் போல் உள்ளது. இதனை கர்ப்பிணிகள் குடிக்கலாமா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

க‌ர்பிணிக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ அனைவ‌ரும் அருந்த‌லாம். சூட்டை த‌ணிக்கும் ம‌ற்றும் நெஞ்சு ச‌ளிக்கும் ந‌ல்ல‌து.

பருத்தி கொட்டை எப்படி இருக்கும். எல்லா கடைகலிலும் கிடைக்குமா.
தெரிந்தவர்கள் செல்லுங்கள்.
.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*