பட்டூரா

தேதி: November 27, 2008

பரிமாறும் அளவு: 4- 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - இரண்டு கோப்பை
தயிர் - அரைக் கோப்பை
தண்ணீர் - அரைக்கோப்பை
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆப்பச் சோடா - ஒரு சிட்டிக்கை
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

மைதாவில் உப்பு, பேக்கிங் பவுடர், மற்றும் சோடாவைப் போட்டு ஜல்லடையில் ஜலித்து கொள்ளவும்.
பிறகு அதில் தயிரையும் எண்ணெயையும் ஊற்றி பிசறிய பின் தண்ணீரை சிறுது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சையளவு பத்து அல்லது பன்னிரெண்டு உருண்டைகளாக உருட்டவும்.
பின்பு உருட்டிய உருண்டைகளை சற்று அடர்த்தியான அகன்ற பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இந்த சுவையான பட்டூராவை சூடாக,சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்பவும் பூரிதான் செய்வேன்,இனி பட்டூராவும் செய்து கொடுக்கலாம்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மனோகரி அக்கா, நான் இதை செய்தேன். தண்ணீர் (உங்க பேச்சை கேக்காமல்) அதிகமாக ஊற்றி விட்டேன். அதனால் முழுதும் உப்பாமல் அங்கங்கே உப்பி வந்தது. நமக்கு அதுவா முக்கியம். மற்றபடி மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் சன்னா மசாலாவுடன் சாப்பிட மிகவும் டேஸ்டி. பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டனர். மிக்க நன்றி உங்களுக்கு.

வானதி டியர், இந்த மாவுக் கலவையில் தண்ணீர் கூடிவிட்டால் மேற்க்கொண்டு கொஞ்சம் மாவைச் சேர்த்துக் கொள்ளலாம் அளவில் எந்த பிரச்சனையும் வராது பூரியாக தட்ட வந்தாலே போதும். அல்லது அதிகப்படி மாவு கைவசம் இல்லையென்றால் மாவை ஊறவிடாமல் உடனே தேய்த்து சுட்டெடுத்துவிடலாம் அதுகூட நன்றாக இருக்கும். ஆர்வத்தோடு இந்த குறிப்பைச் செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு மனமார்ந்த நன்றி.

மேடம் இன்னிக்கு பட்டூரா செய்தேன்.ரொம்ப நல்லா உப்பலா வந்தது.எண்ணெயும் அதிகம் இழுக்கவில்லை.சென்னாமசாலாவோடு நல்லா இருந்தது.நன்றி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அக்கா பட்டூராவை இப்ப தான் புதுசா டேஸ்ட் பார்த்தேன். சூப்பராக இருந்தது. பூரியை மாதிரி நல்லா கிளம்பி வந்தது. அக்கா உங்க அளவுகள் எல்லாம் ரொம்ப கரெக்ட். தண்ணீர் அளவு உட்பட. உங்க குறிப்புகள் அனைத்தும் எளிமையாகவும், மிக மிக டேஸ்டாகவும் இருந்தது அக்கா. எங்களுக்கு இது மாதிரி ரெசிபி தந்த உங்களுக்கு மிக மிக நன்றி.

பட்டுரா சூப்பர் நன்றாக நல்ல உப்பி வந்தது. படம் எடுத்துள்ளேன் அனுப்புகிறேன். நல்லா டேஸ்டியா இருந்தது.

மேடம் உங்க எல்லா ரெசிப்பிஸ்ஸுமே (வெஜ்) எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்ன இன்ன அயிட்டம்ஸுக்கு இது இது தொட்டு சாப்பிடலாம் என்று நிங்க சொல்கிற காம்பினேஷன் ரொம்ப யூஸ் & குட்.

மேலும் எஸ்பிஷ்யலி சில குழம்பு வகைகள், சைட் டிஸ் இது எல்லாம் சிலதுக்கு காம்பினேஷன்ஸ் எனக்கு தெரியும். நிறய்ய தெரியாததும் இருக்கு. மேலும் உங்க குறிப்புகளுக்கு இதே மாதிரி காம்பினேஷன் டிப்ஸை எதிர்பார்க்கிறேன்.