பருப்பு கீரை

தேதி: November 27, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பாலக்கீரை (அ) பருப்பு கீரை - 2 கப்
2. துவரம் பருப்பு - 1 கப்
3. பச்சை மிளகாய் - 2
4. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
5. மிளகு - 1 தேக்கரண்டி (கையால் பொடித்தது)
6. உப்பு
7. பூண்டு - 1 முழு பூண்டு ( தோல் உரித்தது)
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. தேங்காய் பால் - 1/2 கப்
10. கருவேப்பிலை
11. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
12. சீரகம் - 1 தேக்கரண்டி


 

பருப்பை குழைய வேக வைத்து எடுத்துகொள்ளவும்.
கீரை தண்டு இல்லாமல் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் ஒடித்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பூண்டு சேர்க்கவும்.
நன்றாக வதக்கி, பருப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும், கீரை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
கீரை வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து இறக்கி விடவும்.


சூடான சாதம், சப்பாத்தி'க்கு சுவையாக இருக்கும். பருப்பு வேக வைத்த தண்ணீரே போதுமானது. தனியாக தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தேங்காய் பால் சேர்க்காமலும் இதே போல செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா இன்னைக்கு உங்க பருப்பு கீரைதான்.நல்லா இருந்தது.நான் கீரையில சிகப்பு மிளகாய்தான் சேர்ப்பேன்,ஆனா இதுல பச்சைமிளகாய்,மிளகு சேர்த்து செய்தது வித்தியாசமான டேஸ்டா இருந்து நன்றி வனிதா.

மிக்க நன்றி கவி.:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருமதி. அம்முலு அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பருப்பு கீரையின் படம்

<img src="files/pictures/aa95.jpg" alt="picture" />

மிக்க நன்றி அண்ணா. மிக்க நன்றி அம்முலு. நிறைய கீரை சேர்த்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நான் செய்வது இன்னும் பருப்பு அதிகமா தெரியும். எப்படியோ.... சத்தான உணவா செய்திருக்கீங்க. ரொம்ப கலர்ஃபுல்'அ அழகா இருக்கு. :) பக்கதுல என் பேரு வேறா... அது இன்னும் சூப்பர். ;) அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ஹிஹிஹி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா