Sponsored link


Sponsored links


புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

ஏப்ரல் 9, 2006 - 8:34pm - வழங்கியவர் admin
Policy

இந்த இணையத்தளத்தினை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கும், விதிகளுக்கும் கட்டுப்பட்டு, அதன்படி இந்த இணையத்தளத்தினை பயன்படுத்துவதற்கான தற்காலிக உரிமையையும், அனுமதியையும் பெறுகின்றீர்கள்.

இந்த இணையத்தளத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு மக்களிடம் இருந்தும், பல்வேறு தரப்பட்ட ஆதாரங்களில் இருந்தும் ஒப்புதல் பெற்று திரட்டப்பட்டவை. தகவல்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டதல்ல. இதில் உள்ள தவறுகளுக்கும், குறைகளுக்கும் அறுசுவை நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. வாசகர்களிடம் இருந்து பெறப்படும் குறிப்புகள், கட்டுரைகள் அனைத்தையும் எந்த வடிவத்திலும் பயன்படுத்த நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. கூட்டாஞ்சோறு, மன்றம் போன்றவற்றில் வெளியாகும் குறிப்புகள் மற்றும் பயனுள்ள தகவல்களை அறுசுவையின் இதரப் பக்கங்களில் தொகுத்து வெளியிடவும், அறுசுவை சம்பந்தமான அனைத்து ஊடகங்களிலும் அவற்றை வெளியிடும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.

இதில் இடம்பெற்றுள்ள சித்திரங்கள் பல http://www.hasslefreeclipart.com, http://www.free-clip-art.net, http://www.ace-clipart.com போன்ற இலவச படங்கள் வழங்கும் தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த படங்களின் உரிமை முழுவதும் அதனை வெளியிடும் இணையத்தளங்களைச் சாரும். அதனைத் தவிர்த்து இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், செய்திகள், அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் அனைத்து தகவல்களும் அறுசுவை நிர்வாகத்திற்கு சொந்தமானவை. தனிநபர் பயன்பாட்டிற்கு இதில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தவோ, பிரதி எடுக்கவோ அனுமதி வழங்கப்படுகின்றது. வியாபார பயன்பாட்டிற்கு அனுமதியின்றி பயன்படுத்துதல் சட்ட ரீதியில் குற்றமாகும்.

இந்தத் தளத்தில் பெயர்ப்பதிவு செய்து தங்களின் கருத்துக்கள், படைப்புகளை வெளியிடும் வசதி உள்ளது. இதன் உண்மையான பயன்பாட்டின் இலக்கைத் தாண்டி, அதனைத் தவறாகப் பயன்படுத்துவோர் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவர். மன்றத்தில் தனிநபர் தாக்கு, அரசியல், இனம், மதம் குறித்த உரையாடல்கள் தவிர்க்கப்படவேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் அதற்கான அனைத்து விளைவுகளுக்கும், சட்ட நடவடிக்கைகளுக்கும் சம்பந்தப்பட்டவரே பொறுப்பாவார். அறுசுவை நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

மற்றத்தளங்களுக்கு விளம்பரம் செய்யும் வகையில், அறுசுவை நேயர்களை திசை திருப்பும் வகையில் மற்ற இணையத்தளங்களுக்கான தொடுப்புகளை இந்தத் தளத்தில் எந்த இடத்திலும் கொடுக்க அனுமதி இல்லை. அப்படி கொடுக்கப்படும் தொடுப்புகள் நீக்கப்படும். அந்த பயனீட்டாளரும் நீக்கப்படுவார்.

உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்கள் சிறந்த நிபுணர்களிடம் இருந்தும், நம்பத்தகுந்த பல ஆதாரங்களிடம் இருந்தும் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உடல் சம்பந்தமான குறிப்புகளையும் செயல்படுத்திப் பார்க்கும்முன் தங்களது மருத்துவரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளவும். மருத்துவரின் ஆலோசனை இல்லாது தாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பரீட்சார்த்தமான செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பாவீர்கள்.

இதில் இடம்பெறும் விளம்பரங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து அறுசுவை நிர்வாகம் எந்தவித உத்திரவாதமும் அளிப்பது இல்லை. அவை குறித்த குறைகளுக்கும், தவறுகளுக்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகமே பொறுப்பாகும்.

இதில் பல்வேறு வெளித்தளங்களுக்கான இணைப்புகள் காணப்படலாம். இவ்விணையத்தில் இல்லாத பல தகவல்கள் மற்ற தளங்களில் இருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவை கொடுக்கப்பட்டுள்ளன. மற்றபடி அறுசுவை இணையத்தளத்திற்கும் மற்ற இணையத்தளங்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதும், அப்படி கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அறுசுவை எந்த உரிமையும் கொண்டாது என்பதும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. அதுபோல் அப்படி கிடைக்கப்பெறும் தகவல்கள் குறித்த குறை நிறைகளுக்கும் அறுசுவை நிர்வாகம் பொறுப்பேற்காது.

மற்ற இணையத்தளங்கள் அறுசுவை இணையத்தளத்தின் முதல் பக்கத்திற்கான இணைப்புகளை அவர்களது தளத்தில் வெளியிட அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்படி கொடுக்கப்படும் இணைப்புகள் அறுசுவை நிறுவனத்தைப் பற்றின தவறான, உண்மைக்கு புறம்பான, நிறுவனத்தைப் பாதிக்கும் வகையான பொருளில் கொடுக்கப்பட்டிருக்குமேயானால் அவை சட்டரீதியான நடவடிக்கைக்கு தகுதியுள்ளவையாகும்.

இதில் இடம்பெறும் தகவல்கள் துல்லியமானது, முழுமையானது, முற்றிலும் நம்பத்தகுந்தது என்பது போன்ற உத்திரவாதங்களுக்கு உட்பட்டது அல்ல. தங்களுடைய சொந்த கருத்து, விருப்பம் இவற்றினைக் கொண்டே இந்த இணையத்தளத்தினை நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் என்பதனை மேற்கொண்டு தொடர்வதன் மூலம் நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்கள்.