தேவையானப் பொருட்கள்
- கூந்தள் மீன் - 1 கிலோ
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி&பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- கறிவேப்பிலை - 2 கொத்து
- சோம்பு - 1/2 ஸ்பூன் பொடித்தது
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
|
செய்முறை
- முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைய்யுங்கள் அப்பொழுது தோல் எளிதாக உரிந்து வரும்..பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து வரும்..மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம்..உள்ளில் இருந்து வரும் பகுதியில் கடைசி பகுதியை மட்டும் எடுக்கலாம்..மீனின் உள் வருபவற்றை நீக்கி களைந்து விடலாம்.பிறகு மீனை நன்கு கழுகி தண்ணீர் வடிய விடவும்.(இல்லையென்றால் வேகும்பொழுது அதிக தண்ணீர் பெருகும்)
- பிறகு ஒரு குக்கரில் எண்ணை 3 ஸ்பூன் காயவைத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- அதன் பின் தக்காளி ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,சோம்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி கூந்தள் மீனை சேர்க்கவும்.பிறகு குக்கரை மூடி 1 விசில் விடவும்
- இப்பொழுது மீன் வெந்திருக்கும் அதிகம் தண்ணீர் காணப்படும்..மூடியைத் திறந்து தண்ணீர் வற்றி ரோஸ்டாக வரும்வரை கொதிக்க விடவும்
- சுமார் 10 நிமிடம் வற்றவிட்டால் மிக சுவையான கூந்தள் ரோஸ்ட் தயார்
|
குறிப்பு:
இதனை வேறு விதத்திலும் செய்யலாம்.வெங்காயம் முதல் எல்லா பொடிகளையும் குக்கரில் கணவாயுடன் சேர்த்து 1 விசில் விட்டு வற்றவைத்து கடைசியில் 1 ஸ்பூன் எண்ணையில் கறிவேப்பிலை,2 சின்ன வெங்காயம் தாளித்து ஊற்றலாம்.குறைந்த எண்ணையில் எண்ணையில் மிகவும் சுவையாக,சுலபமாகக் கூட சமைக்கலாம்
வழங்கியவர்
தளிகா
சமீபத்தியக் கருத்துக்கள்
18 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -