தேவையானப் பொருட்கள்
- கார்ன் ரோர்டியா - 5 (Corn tortilla)
- சோயா மீட் (சோயா உருண்டைகள்)- 1/4 கப்
- கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப்
- வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
- உருளைக்கிழங்கு - 2
- லெட்டூஸ் - 1 இலை
- உள்ளி- 3 பல்லு
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- சீரக தூள் - 1 மேசைக்கரண்டி
- மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
- ஒரெகானோ - 1 மேசைக்கரண்டி
- உப்பு
- செடார் சீஸ் - 1/2 கப்
- எண்ணெய்
|
செய்முறை
- சோயா மீற்றை கொதிதண்ணீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்தூள் பிரட்டி வைக்கவும்.
- உருளையை உப்பு போட்டு அவித்து மசித்து வைக்கவும்.
- கறுப்பு பீன்ஸை ஊறவைத்து உப்பு போட்டு அவித்து வைக்கவும்.
- லெட்டூஸை மெலிதாக அரிந்து வைக்கவும்.
- உள்ளியை நசித்து வைக்கவும்.
- எண்ணெயை கொதிக்க வைத்து அதனுள் ரோர்டியாவின் ஒரு பாதியை இடுக்கியால் பிடித்துக்கொண்டு மறு பாதியை பொரிக்கவும்.
- பின்னர் பொரித்த பாதியை பிடித்துக்கொண்டு மற்றைய பாதியை பொரிக்கவும் (Basket மாதிரி வரும்)
- இவ்வாறு ஏனைய ரோர்டியாகளையும் பொரிக்கவும்.
- வேறொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பின்னர் கறுப்பு பீன்ஸ், உள்ளி, சோயா மீற்றைப் போட்டு வதக்கவும்.
- பின்னர் உருளைய போட்டு கிளறவும்.
- பின்னர் 1/2 கப் தண்ணீர், தூள் வகைகள், உப்பு, ஒரெகானோவை போட்டு மூடி அவிய விடவும்.
- கறி வற்றி நன்கு தடிப்பானதும் இறக்கவும்.
- பின்னர் பொரித்த ரோர்டியாவினுள் இந்த கறியை அடைத்து அதன் மேல் செடார் சீஸ் தூவி மேலே லெட்டூஸ் இலை தூவவும்.
- சுவையான மரக்கறி டாகோ தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது தக்காளி கெட்சப், சோஸுடன் சாப்பிடலாம்.
|
குறிப்பு:
இதில் பாவிக்கப்பட்ட தூள் வகைகளுக்கு பதிலாக கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் டாகோ ஸீஸனிங்கையும் (Taco seasoning) போடலாம்.
வழங்கியவர்
Mrs. B. Narmatha
சமைக்கும் நேரம்
|
|
30 - 35 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -