இலங்கைத் தமிழரான திருமதி. நர்மதா அவர்கள் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும். இது ஒரு மெக்ஸிகன் உணவு.
தேவையானப் பொருட்கள்
கார்ன் டார்டில்லா - 5 (Corn tortilla)
சோயா மீட் (சோயா உருண்டைகள்) - 1/4 கப்
கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப்
வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 2
லெட்டூஸ் - 1 இலை
உள்ளி- 3 பல்லு
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
ஒரெகானோ - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செடார் சீஸ் - 1/2 கப்
எண்ணெய் - தேவைக்கு
தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். கறுப்பு பீன்ஸை ஊறவைத்து உப்பு போட்டு அவித்து வைக்கவும். சோயா மீட்டை கொதி தண்ணீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்தூள் பிரட்டி வைக்கவும்.
உருளையை உப்பு போட்டு அவித்து மசித்து வைக்கவும். லெட்டூஸை மெலிதாக அரிந்து வைக்கவும். உள்ளியை நசித்து வைக்கவும்.
எண்ணெயை கொதிக்க வைத்து அதனுள் டோர்ட்டில்லாவின் ஒரு பாதியை இடுக்கியால் பிடித்துக்கொண்டு மறு பாதியை பொரிக்கவும்.
பின்னர் பொரித்த பாதியை பிடித்துக்கொண்டு மற்றைய பாதியை பொரிக்கவும் (Basket மாதிரி வரும்). இப்படியே அனைத்து டோர்ட்டில்லாக்களையும் பொரிக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதனுள் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்னர் கறுப்பு பீன்ஸ், உள்ளி, சோயா மீட்டைப் போட்டு வதக்கவும்.
அடுத்து மசித்து வைத்துள்ள உருளையைப் போட்டு கிளறவும்.
அதன் பின்பு 1/2 கப் தண்ணீர், தூள் வகைகள், உப்பு, ஒரெகானோவை போட்டு மூடி வேக விடவும்.
தண்ணீர் வற்றி கறி நன்கு தடிப்பானதும் இறக்கவும்.
பின்னர் பொரித்த டோர்டில்லாவினுள் இந்த கறியை அடைத்து அதன் மேல் செடார் சீஸ் தூவி, மேலே லெட்டூஸ் இலை தூவவும். சுவையான மரக்கறி டாகோ தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது தக்காளி கெட்சப், சோஸுடன் சாப்பிடலாம்.
இதில் பாவிக்கப்பட்ட தூள் வகைகளுக்கு பதிலாக கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் டாகோ ஸீஸனிங்கையும் (Taco seasoning) போடலாம்.
சமீபத்தியக் கருத்துக்கள்
28 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -