உணவு

நல்லெண்ணெய் நல்ல‌ எண்ணெய்

'வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு' என்பது நம் பழமொழி. எண்ணெய் இன்றி நம் சமையல் இல்லை என்னுமளவுக்கு நம் சமையலில் எண்ணெய் முக்கிய‌ இடத்தை வகிக்கிறது.

மாதம் நபர் ஒன்றுக்கு அரை லிட்டர் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த‌ வேணும், ஒரே வகையான‌ எண்ணெய் வேண்டாம் எல்லா வகையான‌ எண்ணெயும் பயன்படுத்தணும் இப்படில்லாம் டயலாக் அடிக்கடி கேட்கிறோம்.

நானும் அதைக் கேட்டு
டீப் ஃப்ரை பண்ண‌ சூரியகாந்தி எண்ணெய்,
மீன் குழம்பு, முட்டை பொரிக்க‌, ரசம் வைக்க‌ நல்லெண்ணெய்,
சாம்பாருக்கோ ஆலிவ் ஆயில்,
அவியலுக்கு கம‌ கமன்னு தேங்காய் எண்ணெய்
இப்படி மாற்றி மாற்றி யூஸ் பண்ணிட்டு இருக்கேன்னு வைங்க‌.

இன்னிக்கு காலையில் அடை சுடுவதற்கு நல்லெண்ணெய் கவரை பிரிக்கும் போது அதில் இருந்த‌ வாசகம் ஒண்ணு என் கண்ணில் பட்டது. சிந்திக்கவும் வைத்தது.

'FREE FROM ARGEMONE OIL' இது தாங்க‌ அதில் இருந்த‌ வாசகம்.

என்னடா இது வம்பா போச்சு. டை விளம்பரத்தில‌ 'NO AMMONIA' அப்படின்னு வர்ற‌ மாதிரில்ல‌ இருக்கு. ஒரே யோசனையோட‌ சாப்பிட்டு முடிச்சேன்.

'ARGEMONE' அப்படீன்னா என்ன‌?? கேள்வியோட‌ நம்ம‌ கூகுளாண்டவரை பார்த்தேன்.

அவரும் இது சூரியகாந்தி மற்றும் நல்லெண்ணெயில் கலப்படம் செய்ய‌ பயன்படும் ஆயில்னு தெளிவா சொன்னார். இதை யூஸ் பண்ணினால் உடல் ந‌லனுக்கு எத்தனை தீங்கு என்றும், நல்லெண்ணெய் கம்பனிக்கு எவ்வளவு லாபம்னும் கணக்கா சொன்னார்.

சரி..... இன்னிக்கு வாங்கிய‌ ஆயிலில் ARGEMONE இல்லை. அது FREE FROM ARGEMONE. ஆனால், இது வரை யூஸ் பண்ணிய‌ ஆயில்????
ராட்டினத்தில் உட்காராமலேயே தலை சுத்துதுங்க‌ எனக்கு......

படத்தைப் பாருங்க‌. இந்த‌ செடியை பூவை நீங்க‌ பார்த்திருக்கீங்களா??

சின்ன‌ வயசில‌ சொப்பு வச்சி விளையாடும் போது இந்த‌ செடியின் விதையை எடுத்து விளையாடுவோம். இதை 'எக்கடுகு' அப்படின்னு எங்க‌ அம்மா சொல்லுறாங்க‌.
இலையெல்லாம் முள்ளா இருக்கும். காயை தலைகீழா கொட்டினால் கடுகு மாதிரி விழும். அச்சு அசல் கடுகு மாதியே இருக்கும். முள் குத்துவதை சட்டை செய்யாமல் லாவகமாக‌ கடுகைத் தட்டி எடுத்து விளையாடுவோம். எங்க‌ விளையாட்டு சமையலிலும் இது தான் கடுகு.

எங்க‌ பாட்டி இதை வீட்டுக்குள்ளே கொண்டு வர‌ விட‌ மாட்டாங்க‌.

அட‌ பாவமே!! இதையா எண்ணெய் எடுத்து கலப்படம் செய்யறாங்க‌.

தேங்காயிலிருந்து எண்ணெய் எடுத்தால் அது பேரு தேங்காய் எண்ணெய்
கடலையிலிருந்து எண்ணெய் எடுத்தால் அது பேரு கடலை எண்ணெய்
கடுகிலிருந்து எண்ணெய் எடுத்தால் அது பேரு கடுகு எண்ணெய்

ஆனா நல்லா கவனிங்க‌.

எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது பேரு .......

எள் எண்ணெய் இல்லீங்க‌ அது பேரு நல்லெண்ணெய்.
இதிலிருந்தே தெரியலியா? எது நல்ல‌ எண்ணெய் என்று.

நல்லெண்ணெயில் சமையலுக்கு மட்டுமல்ல‌; ஆயில் புல்லிங் பண்ணுறோம்; மசாஜ் பண்ணி குளிக்கிறோம்.

நல்ல‌ எண்ணெய்னு நினைச்சி யூஸ் பண்ணினால் இப்படி ஒரு கலப்படமா?

அனாட்டமிக் தெரபி ஹீலர் பாஸ்கர் கேள்விப்பட்டிருப்பீங்க‌. தெரியாதவங்க‌ யூ ட்யூப் ல‌ போயி பாருங்க‌. அவர் சொன்னதை இங்கே சொல்லிட்டுப் போறேன்.

பத்து கிலோ தரமான‌ எள் வாங்கி நல்லா வெயிலில், ரெண்டு நாள் காயப் போடுங்க‌. ஒரு பனங்கருப்பட்டி சேர்த்து, ஆயில் மில்லில் கொடுத்து எண்ணெய் ஆட்டினால் அஞ்சு லிட்டர் ஆயில் கிடைக்கும். இது சுத்தமான‌ நல்ல‌ நல்லெண்ணெய். இதை யூஸ் பண்ணினால் ரொம்பவும் நல்லது. ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து ஒரு துண்டு கருப்பட்டி போட்டு வைக்க‌ கெட்டுப் போகாமல் ஆறு மாசம் இருக்கும். இது ஹீலர் பாஸ்கர் சொன்னது.

சரி இதையே சகோ பாபுவின் செந்தணல் சிக்கன் வறுவல் பாணியிலும் சொல்லிட்டுப் போறேன். நல்லாப் புரியுமே.....

"எள்ளை எடுத்துக்கோ. தூசியெல்லாம் எடுத்து கடாசிட்டு, வெயில்ல‌ கொட்டிக்கோ. அப்பாலே, கருப்பட்டி போட்டு மிஷின்ல‌ போட்டா எண்ணெய் மழையா பொழியும். எடுத்து டின்ல‌ அடைச்சிக்கோ. அவ்ளோ தான் பா

அந்தக் காலத்தில் வாகை மரத்தாலான‌ செக்கில் எள்ளை ஆட்டி எண்ணெய் எடுப்பாங்க‌. அது மிதமான‌ உஷ்ணத்துடன் தயாராகும். இப்போது மிஷினில் அதீத‌ சூட்டுடன் ஆயில் தயாராகிறது.

எங்க‌ பாட்டி வீட்டுப் பக்கம் அந்தத் தெரு இருக்கிறது. அதுக்குப் பேரே செக்கடித் தெரு தான். சின்ன‌ வயதில் அங்கே போய் எண்ணெய் வாங்கி இருக்கேன்.

சுத்தமான‌ நல்லெண்ணெய்க்கு உறையும் சக்தி கிடையாது. நீங்கள் வாங்கிய‌ நல்லெண்ணெய் உறைந்தால் அதில் பாமாயில் கலப்படம்னு அர்த்தம்.

இப்போது ரீஃபைண்ட் ஆயில், இன்னும் மேலே போயி டபுள் ரீஃபைண்ட் ஆயில் இப்படில்லாம் விளம்பரம் வருது. இதெல்லாமே அதிகமா உஷ்ணப்படுத்தப்பட்ட‌ எண்ணெய் ஆகும். இதுவும் நல்லதில்லைனு சொல்லுறாங்க‌.

சுத்தமான‌ எண்ணெயே போதும். அதை ரீஃபைண்ட் செய்ய‌ அவசியம் இல்லை.

சமீபத்தில் டி.வி.யில் ஒரு பருப்பு விளம்பரம் பார்த்தேன். அதில் எங்க‌ பிராண்டு பருப்பு இயற்கையானது. செயற்கையான‌ பளபளப்பு மற்றும் பாலீஷ் போடப்படாதது. இப்படி வருது. இதை பார்க்க‌ எனக்கு ரொம்ப‌ சந்தோஷம்.

பாலீஷ் போடுவதால் நாம் சத்தை இழக்கிறோம். பாலீஷ் போடாத‌ அரிசி கிடைப்பதே இல்லை.

இது மாதிரி ஆயில் விளம்பரமும் 'ரீஃபைண்ட் செய்யாதது; இயற்கையான‌ முறையில் சுத்திகரிக்கப்பட்டது' என்று கூறும் காலமும் விரைவில் வரும்.

அதுவரை காத்திருப்பானேன். எள் வாங்கப் போலாமே.:) பை

5
Average: 5 (8 votes)

கிச்சன் குயின் - 3

அன்பு குயின்ஸ்.... இரண்டு பகுதிகளாக ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 2 இன்றோடு முடிவடைகிறது. இன்னுமே குறிப்புகள் வெளிவர வேண்டியவை டீமிடம் இருப்பதால், பகுதி 3க்கான நாட்களும் உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. அதனால் நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)

இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.

இதோ பட்டியல்:

1. மட்டன் உருண்டை கறி (பிரபா)
2. 160 - ஆட்டு எலும்பு சூப்
3. 381 - காரச் சுத்திரியான்
4. 409 - மட்டன் பப்டி
5. 411 - மட்டன் போப்ளா
6. 414 - மட்டன் கோஃப்தா
7. 1143 - குஷ்தபா
8. 1312 - நர்கிசி கபாப்
9. இறைச்சி தோரன் (வாணி)
10. 10963 - எள்ளு ப்ரான் ஃபிரை

11. இறால் கொழுக்கட்டை 1 (பாலநாயகி)
12. இறால் பக்கோடா (பாலநாயகி)
13. இறால் தொக்கு (தர்சா)
14. எறால் மசாலாக் கறி (பாலநாயகி)
15. இறால் குருமா (இமா)

16. 238 - பெங்களூர் சிக்கன்
17. 230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்
18. முட்டை சிக்கன் (ரேவதி பார்த்தசாரதி)
19. 271 - சோளச்சீவல் கோழி வறுவல்
20. சிங்கப்பூர் சிக்கன் வறுவல் (ரேவதி பார்த்தசாரதி)
21. 245 - சிலோன் சிக்கன் ப்ரை
22. ரோகினி சிக்கன் (வாணி)
23. 254 - கஸ்தூரி கபாப்
24. 256 - ரேஸ்மி கபாப்
25. கார்லிக் சிக்கன் ஃப்ரை (ரேவதி பார்த்தசாரதி)

26. மீன் கட்லெட் - 1 (பாலநாயகி)
27. பிஷ் பை - 1737
28. 1735 - நெத்திலி கருவாடு சுக்கா
29. சீஸ்ஸும் வறுத்த மீனும் (நித்யா ரமேஷ்)
30. மீன் குழம்பு (ரேவதி S)

31. மைக்ரோவேவ் க்ரில்டு ஃபிஷ் (பிரபா)
32. 11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
33. இக்கான் பக்கார் (bbq fish) (பாலநாயகி)

34. 8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
35. பேச்சுலர்ஸ் மீன் குழம்பு (வாணி)
36. பேச்சுலர்ஸ் பருப்பு கீரை (கவிதா)
37. பேச்சுலர்ஸ் ரவை கிச்சிடி (நித்யா ரமேஷ்)

38. பெங்காலி தக்காளி சட்னி (ஹேமா)
39. தக்காளி-இஞ்சி கொத்சு (நித்யா ரமேஷ்)
40. புளி மிளகாய் (ஹேமா)
41. தீயல் (பாலநாயகி)
42. 16565 - கோங்குரா சட்னி

43. 22983 - சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi)
44. பப்பாளி க்ரானிட்டா (ஹேமா)
45. 24139 - ஜப்பானிய சீஸ்கேக்
46. ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (நித்யா ரமேஷ்)
47. 3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
48. 7664 - பிபிம்பாப் - Korean Food
49. கீரை பிரட்டல் ( மலேஷிய முறை) (இமா)
50. பர்மிஸ் கோகனட் ரைஸ் (சுவா)
51. 9649 - ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி

52. பேபி வெனிலா புட்டிங் (6+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)
53. சீஸ் வெஜிடபிள் சாதம் (8+ மாத குழந்தைகளுக்கு) (நித்யா ரமேஷ்)

54. 19440 - ஐஸ் சல்ஸா
55. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா

56. உருளை பான்கேக் (வாணி)
57. லெமன் பிஷ் (பாக்கியா)
58. 6143 - தர்த் போம்(ஆப்பிள்)
59. மஷ்ரூம் மிளகு வறுவல் (பாக்கியா)

60. சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் (ஹேமா)
61. 8687 - சைனீஸ் இறால் வறுவல்
62. 12113 - சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்
63. 3188 - சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்)
64. 22766 - சுரைக்காய் தயிர் கறி

65. ருலங் அலுவா (Rulang aluwa) (தர்சா)
66. இலங்கை கடலை வடை (தர்சா)
67. மிதிவெடி (இமா)
68. ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் - 12304
69. 10364 - மாஸ்மலோ

70. 4765 - பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
71. 4768 - நோகி பாஸ்தா (Gnocchi)
72. 4769 - இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
73. 5162 - பழ லசான்யா (Lasagna)
74. ஸ்பெகடி இன் டொமேடோ சாஸ் (கவிதா)

75. 3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava
76. முதபெல்(egg plant dip) (இமா)

77. ஸ்ரீகண்ட் (Shrikhand) (நித்யா ரமேஷ்)
78. 22713 - அம்ரகண்ட் (Amrakhand)

79. பாதாம் கீர் (நித்யா ரமேஷ்)
80. பச்சைப்பட்டாணி குஜியா (ரேவதி)
81. பானி பூரி - 3 (ரேவதி பார்த்தசாரதி)
82. இன்ஸ்டண்ட் ரசகுல்லா (பாலநாயகி)
83. 22735 - பாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)

84. லால் மாஸ் (Lal Maas) (சுவா)
85. மால்வனி பூரி (பிரபா)
86. பாம்பே கார ரோஸ்ட் (ஹேமா)
87. கோதுமை புட்டு (வாணி)

88. அம்ரிஸ்டரி ஆலூ (பிரபா)
89. கோதுமை அடை (சுவா)
90. 5562 - சிந்தி பாஜி

91. கற்கண்டு வடை (பிரியா ஜெயராம்)
92. வெள்ளை பணியாரம் (சுவா)
93. கோஸ் மல்லி (ரேவதி S)

94. 16764 - பால்சேம்பு குழம்பு
95. கூட்டாஞ்சோறு (கவிதா)
96. 1331 - பனை வெல்லப் பணியாரம்
97. மணியாச்சி முறுக்கு (பிரபா)
98. அரிசிப் பணியாரம் (சுவா)
99. உருண்டைப் பணியாரம் (நித்யா ரமேஷ்)

100. வெங்காய கொஸ்த்து (சுவா)
101. கடலைபருப்பு பணியாரம் (சுவா)
102. கத்தரிக்காய் துவையல் -2 (சுவா)
103. வடைகறி (ரேவதி S)

104. கார்த்திகை பணியாரம்

105. சாம்பார் பொடி இல்லா சாம்பார் (ரேவதி பார்த்தசாரதி)
106. முள்ளங்கி புகாது (வாணி)

107. 5373 - பூசணிக்காய் மாங்காய் பச்சடி
108. 5186 - ஓலன்

109. மேத்தி கார்ன் புலாவ் (ஹேமா)
110. பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு (பிரபா)
111. 13691 - கீரை கார்ன் வடை

112. அவரை முட்டை பொரியல் (இமா)
113. 13862 - இறால் சுரைக்காய் குழம்பு
114. வெள்ளைக்கறி - 9771
115. 13702 - இறால் அவரைக்காய் குழம்பு

116. கேரட் லெமன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)

117. கோக்கனட் க்ரானிடா (Coconut Granita) (பிரியா)
118. 2523 - மாம்பழ ஐஸ்கிரீம்
119. வனிலா ஐஸ் கிரீம் (இமா)

120. பீட்ரூட் சூப் (நித்யா)
121. பிரொக்கோலி சூப் (கவிதா)
122. பிரொக்கோலி லெமன் வறுவல் (தர்சா)

123. 347 - இனிப்பு சேவு
124. தேங்காய் பால் அல்வா (தர்சா)
125. 508 - கசகசா பாயசம்
126. 988 - கம்பு சீனி உருண்டை
127. 744 - இஞ்சி பர்பி
128. 1048 - கொலூஷா
129. 1041 - கஸார்
130. லவங்க லதிகா (ரேவதி S)

131. மாங்காய் ஜாம் - 1699
132. கேரட் ஜாம் (இமா)
133. ப்ரூட் ஜாம் - 3776
134. ஸ்ட்ராபெர்ரி ஜாம் (இமா)

135. நண்டு மிளகு சூப் - 1690
136. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
137. ஆந்திரா நண்டு மசாலா - 1704
138. நண்டு கட்லெட் (பாரதி)

139. கருணைக்கிழங்கு பொரியல் - 14012
140. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773
141. பிடிகருணை புளிக்குழம்பு - 20546
142. கொத்தவரங்காய் வத்தல் (பிரியா)
143. கொத்தவரங்காய் பொரியல் (பிரியா)
144. சீனி அவரைக்காய் பொரியல் (கொத்தவரங்காய்) - 1 - 11705

145. பேச்சுலர்ஸ் மட்டன் சுக்கா (சுவா)
146. சோயா 65 (பிரியா)
147. பத்திய மிளகுக் குழம்பு (சுவா)
148. கோவா முளைகட்டிய பயறு சாலட் (பாக்கியா)
149. காராமணி மசாலா - 7462
150. தட்டப்பயறு குழம்பு (காராமணி பயறு) (கவிதா)

151. ஐஸ் கச்சாங் - 10418
152. பரங்கி பெரும்பயறு கூட்டு - 23246
153. போப்ரா ரைஸ் (பாரதி)
154. தக்காளி பனீர் (ரேவதி)
155. தால் மக்கானி (கவிதா)

156. மசாலா பப்பட் (கவிதா)
157. ஆலு பனீர் சப்ஜி (ரேவதி பார்த்தசாரதி)
158. மிஸ்ரி ரொட்டி - 1330
159. பாவ்பாஜி மசாலா (ரேவதி S)
160. தால் பஞ்சாரி - 1943

161. உளுத்தம் பருப்பு பூரி - 1951
162. உருளை-பரங்கிக்காய் கறி - 1948
163. ஃபளூடா/falooda - 2853
164. ஈஸி ஐஸ்கிரீம் (ரேவதி பார்த்தசாரதி)
165. மலாய் குல்பி (ரேவதி பார்த்தசாரதி)

166. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் - 12546
167. இஞ்சி சாதம் (இமா)
168. இஞ்சி குல்கந்து - 10851
169. இஞ்சி பக்கோடா (சுவா)
170. அல்லம் பச்சடி (ரேவதி S)

171. கறி மிளகு பிரட்டல் - 8268
172. சுறா பூண்டு குழம்பு - 13883
173. பூண்டு சாதம் (கவிதா)
174. கொள்ளு துவையல் - 2 - 6555
175. கொள்ளு சட்னி (பாலநாயகி)

176. வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் - 17343
177. பொட்டுக்கடலை கொதிக்கவைச்சது (பாலநாயகி)

178. பனீர் பட்டாணி குருமா (ரேவதி உதயகுமார்)
179. மும்பை மசாலா சிக்கன் (பாரதி)
180. சந்தேஷ் - 2008

181. பெங்காலி ஷர்ஷூ பிஸ் (தர்ஷா)
182. முட்டை சாண்ட்விட்ச் (ரேவதி)
183. ஈசி பாஸ்தா (கவிதா)
184. மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ (பாரதி)

185. மில்க் புட்டிங் (இமா)
186. கவாபட் ரைஸ் - 12813
187. கேரட் பட்டாணி ரைஸ் (ரேவதி உதயகுமார்)
188.ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317
189. சிக்கன் நக்கேட்ஸ் (நித்யா ரமேஷ்)
190. சிக்கன் ரைஸ் - 7150

191. கேப்பை கூழ் (கவிதா)
192. சீரக குழம்பு (தர்ஷா)
193. சிம்ளி - 15394
194. வெண்டை கத்தரி புளிக்கறி - 15992
195. மெக்சிகன் ரைஸ் (ரேவதி பார்த்தசாரதி)

196. டோர்ட்டில்லா ரோல்ஸ் - 4237
197. பச்சை ஸ்மூதி (பாரதி)
198. ரவை கோதுமை ஊத்தாப்பம் (நித்யா ரமேஷ்)
199. ஜவ்வரிசி புலாவ் - 1 (பாரதி)
200. கத்தரிக்காய் குழம்பு (தர்ஷா)

கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்யாமல் விடப்பட்ட குறிப்புகள் இம்முறை இணைக்கப்படவில்லை. மாறுதலுக்காக முற்றிலும் புதிய குறிப்புகள் கொடுக்கப்ப்ட்டிருக்கின்றன. கடந்த இரண்டு பகுதிகளில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இரண்டு வாரங்கள் தான் டைம். வரும் டிசம்பர் 29க்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், எடுத்து தர இயலும் லின்க் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க, இல்லன்னா அதுக்கு ஜோடி சேரும், அல்லது அதே வகையான இன்னொரு சின்ன குறிப்பையும் சேர்த்து அனுப்ப முடியுதா பாருங்க. இரண்டையும் சேர்த்து ஒரே குறிப்பா வெளியிட வசதியா இருக்கும். என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;)

இனி என்ன... வழக்கம் போல பிசி விக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

Average: 5 (1 vote)

குறிப்பிற்குச் சொந்தக்காரர் யார்?

இது ஒரு முக்கியமான விசயம். இதைப் பற்றி அறுசுவையில் அவ்வபோது பேசி இருக்கின்றோம் என்றாலும், சிலருக்கு இன்னமும் குழப்பம் இருப்பதால் ஒரு சிறிய விளக்கம் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். முதலில் காப்பிரைட் மற்றும் பேட்டண்ட் ரைட்ஸ் பற்றியும் ஒரு விளக்கம் கொடுத்துவிட வேண்டும். இந்த டாபிக்கிற்கு அதுவும் முக்கியமான ஒன்று.

முதலில் காப்பிரைட் பற்றி:

ஏதேனும் ஒன்றைப் பற்றி, ஒரு பொருளை, நபரை அல்லது ஒரு சம்பவம் குறித்து நீங்கள் எழுதுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் உங்கள் சொந்த நடையில் விவரிக்கும் பாங்கிற்கு மட்டுமே காப்பிரைட் விதிகள் பொருந்தும். அது கவிதையாகட்டும், கதையாகட்டும், செய்தியாகட்டும். அந்த எழுத்து நடை, வாக்கியங்கள்தான் காப்பிரைட் விதிகளுக்குள் அடங்கும். அதே போல் அப்படியே எழுத்து மாறாமல் மற்றொருவர் எழுதக்கூடாது. மற்றபடி கதையின் கரு, நடந்த சம்பவம் அல்லது சப்ஜெக்ட்க்கு காப்பிரைட் உரிமை கொண்டாட முடியாது. அதே கருவை, அதே சம்பவத்தை ஆயிரம் பேர் வேண்டுமானாலும் அவர்களது சொந்த நடையில் எழுதலாம்.

இதற்கு அறுசுவையை வைத்து ஒரு உதாரணம் தருகின்றேன். நீங்கள் ஒரு எளிமையான சிக்கன் வறுவல் குறிப்பு ஒன்றை அறுசுவையில் கொடுக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். செய்முறை இதுதான். சிக்கன் துண்டுகளை நறுக்கி மிளகாய்த்தூள், உப்பு கலந்து சோளமாவில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் தரும் குறிப்பு இதுதான்.

செந்தணல் சிக்கன் வறுவல்

தேவையானவை

சிக்கன் - அரைக்கிலோ
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - உங்க விருப்பம்
சோளமாவு - பிரட்டும் அளவு

செய்முறை

இளம் கோழியை பதமாய் வெட்டி பக்குவமாய் சுத்தம் செய்து, தேவையில்லா எலும்புகள் நீக்கி கன சதுர துண்டமிட்டு, சிவந்த மிளகாய்த்தூள், உப்பு, சோள மாவுடன் கால் கரண்டி நன்னீர் விட்டு செம்புல பெயல் பக்குவத்தில் பிரட்டி வைத்து சற்றே ஊறவிடவும்.
செந்தணல் வீசும் அடுப்பில் அடிக் கருத்த வாணலியை வைத்து அதிலே கொஞ்சம் எண்ணெய்யிட்டு, அது சூடு ஏறும் வரை அடுக்களையில் நிற்கவும்.
தொட்டால் கை வெந்திடும் பதத்தில் எண்ணெய் இலேசாய் புகைவிடும் கணத்தில், பிரட்டி வைத்துள்ள சிவந்த சிக்கன் துண்டங்களை சிறிது சிறிதாய் போட்டு, சிவக்க சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

ஓக்கே. இதுதான் உங்களது குறிப்பு. இதில் இளம் கோழியில் தொடங்கி பொரித்தெடுக்கவும் வரை உள்ள எழுத்து நடைக்கு நீங்கள் காப்பிரைட் உரிமை கொண்டாடலாம். இதை ஒருவர் அப்படியே எழுத்து மாறாமல் எடுத்து வெளியிடுகின்றார் என்றால் நீங்கள் வழக்குத் தொடுக்கலாம்.

இதையே ஒருவர் அதே செந்தணல் சிக்கன் வறுவல் என்று தலைப்பிட்டு, அதே அளவு தேவையானப் பொருட்கள் கொடுத்து, செய்முறையை இப்படி கொடுக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம்.

"சிக்கனை வெட்டிக்கோ.. எலும்பெல்லாம் எடுத்து கடாசிட்டு, சின்ன சின்னத் துண்டாய் நறுக்கி மிளகாத்தூளு உப்பு சோளமாவு எல்லாம் சேத்து பொரட்டி வச்சிடு. அப்பாலே அடுப்பில சட்டியை வச்சு எண்ணெய்யை ஊத்தி அதில போட்டு நல்லா செவப்பா பொரிச்சு எடு. அவ்ளோதான்."

அவ்வளவுதான். காப்பிரைட் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் குறிப்பு, அதே பெயர், அதே அளவு பொருட்கள், அதே செய்முறை ஆனால் பயன்படுத்திய வார்த்தைகள் வேறு. இவ்வளவு தூரம்கூட மாற்றத் தேவையில்லை. இடையிடையே இரண்டு மூன்று வார்த்தைகளை மாற்றிப் போட்டால்கூட போதுமானது.

ஒரு கதையையோ, கவிதையையோ அவ்வளவு எளிதாக இப்படி மாற்றிவிட முடியாது. அப்படி மாற்ற வேண்டுமென்றால் உண்மையிலேயே அதற்கு நல்ல திறன் இருக்க வேண்டும். அப்படி திறமை உள்ளவர்கள் அவர்களே புதிதாக கதை, கவிதைகள் படைக்கலாம். ஆனால், சமையல் குறிப்பு போன்ற விசயங்களை மிக எளிதாக மாற்றி விடலாம். இதைத்தான் நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கின்றேன். வெறும் எழுத்துக் குறிப்புகளுக்கு காப்பிரைட் வைப்பது, சொந்தம் கொண்டாடுவது என்பது கடினமான விசயம். அறுசுவையில் உள்ள குறிப்புகளை எடுத்து சில மாற்றங்களைச் செய்து ஏராளமானோர் அவர்களது தளத்திலும், வலைப்பதிவுகளிலும் பயன்படுத்தி இருக்கின்றார்கள். நாம் ஒன்றும் செய்ய இயலாது.

எழுத்து விசயத்தில்தான் இந்தப் பிரச்சனை. இதே படங்கள் என்று வரும்போது நிலைமையே வேறு. நமது காப்பிரைட் இட்ட படங்களை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. படங்கள் முழுவதும் நமக்கு சொந்தமானவை. எழுத்துக்கள் போல் அதை எளிதாக மாற்ற முடியாது. அப்படியே போட்டோஷாப்பில் சில வேலைகள் செய்தாலும், ஒரிஜினல் நம்மிடம்தான் இருக்கும் என்பதால் மிக எளிதாக நடவடிக்கை எடுக்கலாம். படங்கள் விசயத்தில் காப்பிரைட் மிகவும் உதவிகரமானவை.

பேட்டண்ட் ரைட்ஸ் பற்றி பார்க்கலாம்.

நீங்கள் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அது உங்களுடைய சொந்தக் கண்டுபிடிப்பு, அதன் உரிமை முழுவதும் எனக்கே சேர வேண்டும், இதனை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று பேட்டண்ட் ரைட் வாங்கலாம். இதற்கென உள்ள அலுவலகத்தில் பணம் கட்டி பதிவு செய்து, அதை நிரூபித்து இந்த ரைட்ஸ் வாங்க வேண்டும். இது ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசப்படும். இண்டர்நேசனல் ரைட்ஸ் என்பதெல்லாம் சாதாரணமான விசயம் அல்ல. அதுவும் சமையல் குறிப்புகள், உணவுகள் சம்பந்தமான விசயத்தில் இவையெல்லாம் கிட்டத்திட்ட இயலாத காரியம்.

ஒரு வித்தியாசமான பெயருக்கு பேட்டண்ட் அல்லது ட்ரேட்மார்க் வாங்கலாம். உதாரணமாக "கும்பகோணம் டிகிரி காப்பி" என்பதற்கு ஒருவர் பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கிவிட்டார். இதை வேறு யாரும் அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. இந்த மூன்று வார்த்தைகளையும் ஒன்றாய் சேர்த்து பயன்படுத்ததான் அனுமதி கிடையாது. வெறும் "கும்பகோணம் காப்பி" என்று பயன்படுத்தினால் விதிகள் ஒன்றும் சொல்லாது. "டிகிரி வாங்கிய கும்பகோணம் காப்பி" என்று பயன்படுத்தினாலும் பிரச்சனைகள் இருக்காது.

நம்ம அறுசுவை விசயத்திற்கு வருவோம்.

இங்கே மேற்கண்ட "செந்தணல் சிக்கன் வறுவல்" என்ற குறிப்பிற்கு அதனுடைய பெயருக்கு நீங்கள் பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கலாம். ஓரளவிற்கு சாத்தியமானது. இப்படி பெயர்ச்சூட்டும் அறிவாளிகள் நாட்டில் குறைவு என்பதால் அதற்கு பேட்டண்ட் ரைட்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதன் செய்முறைக்கு ரைட்ஸ் வாங்குவது இயலாத காரியம். உலக மக்கள் அனைவரும் சிக்கன் வறுவல் கிட்டத்திட்ட இந்த முறையில்தான் செய்வார்கள். இதை உங்களது கண்டுபிடிப்பு என்று சொல்லி ரைட்ஸ் கேட்டால் உதைத்து அனுப்புவார்கள். ஆகவே, ஒரு உணவிற்கும் அதன் செய்முறைக்கும் நீங்கள் பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கி இருந்தால் மட்டுமே அது உங்களுடையது என்று நீங்கள் உரிமை கொண்டாட முடியும்.

சரி, அறுசுவையில் இது சம்பந்தமாக அவ்வபோது எழும் கேள்விகள், பிரச்சனைகள் என்ன? அதற்கு என்னுடைய விளக்கங்கள் என்ன என்பதை இங்கே கேள்வி-பதில் பாணியில் பார்த்துவிடலாம்.

<b>தொலைக்காட்சி, புத்தகங்கள் மற்றும் இணையம் வாயிலாக நான் கற்றுக்கொண்ட குறிப்புகளை இங்கே படங்களுடன் கொடுக்கலாமா? </b>

இது அறுசுவையில் குறிப்புகள் வழங்குபவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய சந்தேகம். பலமுறை என்னிடம் கேள்வியாக கேட்கப்பட்ட விசயம், நானும் பல இடங்களில் பதில் கொடுத்திருக்கும் ஒரு விசயம். அதை இங்கே மீண்டும் ஒருமுறை விளக்கிவிடுகின்றேன்.

தாராளமாகக் கொடுக்கலாம். தொலைக்காட்சியாகட்டும், இணையமாகட்டும். நீங்கள் பார்த்து கற்றுக்கொண்டு சமையல் செய்வதற்குதான் குறிப்புகள் கொடுக்கின்றார்கள். அவற்றைப் பார்த்து நீங்கள் தாராளமாகச் செய்யலாம். அப்படி செய்தவற்றை நீங்கள் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம். அதை நீங்கள் வீடியோவாக வெளியிடலாம். புத்தகமாக வெளியிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நான் மேலே குறிப்பிட்டுள்ள காப்பிரைட், பேட்டண்ட் ரைட்ஸ் விசயங்களை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில் நாம் செய்யும் எந்த உணவுக்கும் பேட்டண்ட் ரைட்ஸ் வாங்க்கபடவில்லை. ஆகவே, எந்த உணவையும் நீங்கள் செய்யலாம். அதன் விளக்கங்களுக்கு, அதாவது செய்முறை குறிப்பிற்கு காப்பிரைட்ஸ் இருக்கலாம். உதாரணமாக நீங்கள் ஒரு புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுத்து செய்கின்றீர்கள் என்றால், அந்த குறிப்பை அப்படியே எழுத்து மாறாமல் இங்கே வெளியிடக்கூடாது. நீங்கள் செய்தவற்றை உங்களது சொந்த நடையில் எழுதி இங்கே வெளியிடலாம்.

<b>அப்படி குறிப்புகள் கொடுக்கும்போது எங்கிருந்து நான் குறிப்பு எடுத்தேன் என்பதை குறிப்பிட வேண்டுமா? யாருடைய குறிப்பு என்று அவருடைய பெயரைக் குறிப்பிட வேண்டுமா? </b>

அவசியமில்லை. நீங்கள் எங்கிருந்து குறிப்பு எடுத்தீர்கள், எதைப் பார்த்து கற்றுக்கொண்டீர்கள் என்பது முக்கியமில்லாத விசயம். அதனை இங்கே குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமில்லை. இங்கே அறுசுவையில் இருந்து பார்த்து செய்த குறிப்பாக இருந்தாலும் அவற்றை நீங்கள் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒருவேளை நீங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினால் குறிப்பிடலாம். அல்லது எங்கிருந்து அந்த குறிப்பு வந்தது என்ற தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்பினால் குறிப்பிடலாம். அது முழுக்க முழுக்க உங்களது சுயவிருப்பம். இது கட்டாயமில்லை.

இங்கே அறுசுவையில் பலரும் நூற்றுக்கணக்கான குறிப்புகளை கொடுத்து இருக்கின்றார்கள். அவை எல்லாமே அவர்களது சொந்தக் கண்டுபிடிப்புகள் அல்ல. அவற்றை எங்கிருந்தோ, யாரிடமிருந்தோ தெரிந்து கொண்டுதான் இங்கே வழங்குகின்றார்கள். ஆனால் ஒவ்வொரு குறிப்பும் யாரிடம் இருந்து அல்லது எதில் இருந்து எடுக்கப்பட்டது என்று யாரும் குறிப்பிடுவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. புத்தகங்களில் இருந்து எடுத்ததை அப்படியே இங்கே வெளியிடக்கூடாது. அதையும் சிலர் ஒரு நேரத்தில் செய்தார்கள். யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் பழைய புத்தகங்களில் வந்ததையெல்லாம் அப்படியே கொடுத்தார்கள். அதை சுட்டிக்காட்டிய பிறகு அவசரம் அவசரமாக சரி செய்த நிகழ்வுகளும் அறுசுவையில் உண்டு. ஆகவே, பெயர் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் இல்லை.

<b>அப்படி பார்த்து செய்யும் குறிப்புகளில் நான் மாற்றங்கள் செய்யலாமா? </b>

தாராளமாகச் செய்யலாம். எப்போது நீங்கள் ஒரு குறிப்பை எடுத்து சொந்தமாக செய்கின்றீர்களோ அப்போது அது உங்களுடைய சொந்த வெர்சன். அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டலாம், என்ன பொருட்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

இது எல்லா உணவுகளுக்கும் பொருந்துமா என்றால், இதில் சில விதிவிலக்குகளும் உண்டு என்று சொல்ல வேண்டும். சில பாரம்பரிய உணவுகள், சில வட்டார உணவுகள் இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைக்கு உட்பட்டு இருக்கும். அவை சட்டப்பூர்வமான வரைமுறைகள் அல்ல. இருந்தாலும் நடைமுறையில் உள்ள வரைமுறை. அதை அதன்படி செய்வதுதான் சிறப்பு. உதாரணமாக, காஞ்சிபுரம் இட்லி என்றால் அது காஞ்சிபுரம் கோயிலில் கொடுக்கப்படும் இட்லி. அது சாதாரண இட்லி போல் இருக்காது. அதன் மூலப்பொருட்கள், செய்முறை எல்லாமே சாதா இட்லியில் இருந்து வேறுபடும். இதையே நீங்கள் குஷ்பு இட்லி போல் செய்து அதற்கு காஞ்சிபுரம் இட்லி என்று பெயரிட்டு இங்கே குறிப்பு வெளியிட்டால், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும் உங்களுக்கு செய்முறை தெரியவில்லை என்ற குற்றச்சாட்டை மற்றவர்கள் முன்வைக்க வழிவகுத்திடும். எனவே இது போன்ற பிரபலமான வட்டாரக்குறிப்புகள், பாரம்பரியக் குறிப்புகள் கொடுக்கும்போது அவற்றை கூடுமானவரை மாற்றங்கள் செய்யாமல் எப்படிச் செய்யவேண்டுமோ அப்படியே செய்து வெளியிடுங்கள்.

<b>அறுசுவையில் உள்ள எனது குறிப்பை பார்த்து ஒருவர் செய்து இங்கேயே குறிப்பு கொடுக்கின்றார்.. எப்படி அவர் கொடுக்கலாம்? </b>

இந்த ஒரு பஞ்சாயத்து அறுசுவை ஆரம்ப காலத்தில் இருந்து அவ்வபோது நடந்து வருகின்றது. ஒரு நேரத்தில் இருவருக்கிடையே நடந்த போர், அவர்கள் எப்படியெல்லாம் என்னுடன் மாறி மாறி தொலைபேசியில் முறையிட்டு அடுத்தவரை குறை கூறினார்கள் என்பதெல்லாம் எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கின்றது. என்னைப் பொறுத்த மட்டில் இந்த விசயத்தில் நான் மேலே கூறிய விதிகளைத்தான் இதற்கும் சொல்வேன். ஒரு குறிப்பை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்து செய்யலாம். அது அறுசுவையாகவும் இருக்கலாம். இதில் அறுசுவை விதிவிலக்கு இல்லை. ஆனால், குறிப்பு வெளியிடும் விசயத்தில் நான் சொன்ன மற்ற விசயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பு அப்படியே எழுத்து மாறாமல் இருக்கக்கூடாது. உங்களது சொந்த நடையில் இருக்க வேண்டும்.

<b>அறுசுவையில் ஏற்கனவே வெளியானதை இன்னொருவரது எழுத்து நடையில் மறுபடியும் ஏன் வெளியிட வேண்டும்? </b>

இந்த நியாயமான கேள்வி அடுத்து எழும். இதில்தான் எனக்கும் பிரச்சனை. ஒருவர் ஏற்கனவே கொடுத்தக் குறிப்பினை மீண்டும் ஏன் கொடுக்க வேண்டும்? மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி குறிப்புகள் வெவ்வேறு பெயரில் வெவ்வேறு அளவுகளில் அறுசுவையில் வெளியாவதில் பயன் எதுவும் இல்லையே.. இதைத்தான் நான் பல இடங்களில் வலியுறுத்தி இருக்கின்றேன். குறிப்புகள் அனுப்புவோர் அறுசுவையில் இடம்பெற்றிராத குறிப்புகளை அனுப்புங்கள் என்று. அப்படியும் சில நேரங்களில் ஒரே மாதிரிக் குறிப்புகள் வந்துவிடுகின்றன. இதை முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. காரணங்களைச் சொல்கின்றேன்.

நீங்கள் அனைவரும் அறிந்த விசயம், அறுசுவையில் இரண்டு விதமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது. ஒன்று படங்கள் இல்லாத குறிப்புகள், இன்னொன்று படங்களுடன் கூடிய யாரும் சமைக்கலாம் பகுதி குறிப்புகள். சொல்லவே தேவையில்லை. படங்களுடன் கூடிய குறிப்புகளுக்குதான் நேயர்களிடம் நிறைய வரவேற்பு இருக்கின்றது. படங்களுடன் கூடிய குறிப்புகளை அப்படியே இன்னொருவர் செய்து வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிட்டால் தெரிந்துவிடும். ஏதேனும் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். அப்படி இருந்தாலும் அதில் சிறிய மாற்றங்களாவது செய்து வெளியிடுவார்கள். சில வகைப் பொரியல், வறுவல் போன்றவை கிட்டத்திட்ட யார் செய்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். இந்த வகைக் குறிப்புகளை ஒவ்வொருவரும் தங்களது வெர்சனாக வெளியிடும்போது ஒரே மாதிரியானக் குறிப்புகள் போன்று தோற்றத்தைத் தரும். இது தவிர்க்க இயலாதது. படங்களுடன் கூடிய குறிப்புகள் செய்முறை கிட்டத்திட்ட ஒன்றுபோல் இருந்தாலும், ஓரளவிற்கு வித்தியாசங்களுடன் வெளியானால் பிரச்சனை இல்லை. படங்கள் வித்தியாசப்படும், அவருடைய வெர்சன் இதுவென்று எடுத்துக்கொள்ளலாம். சில நேரங்களில் புதிதாகக் குறிப்புகள் கொடுக்க வருபோரை உற்சாகப்படுத்த ஒரே மாதிரி குறிப்பு என்றாலும் வெளியிட வேண்டியது அவசியமாகின்றது.

எழுத்துக்குறிப்புகளை எடுத்து, மாற்றியமைத்து படங்கள் எடுத்து வெளியிடுகின்றார்கள். (இப்போது நடக்கும் கிச்சன் குயின் பற்றிக் குறிப்பிடவில்லை. அதைப் பற்றி கடைசியில் எழுதுகின்றேன்). அறுசுவையில் குறிப்பு வழங்கும் சில சகோதரிகள் என்னிடம் முறையிட்டு இருக்கின்றார்கள். என்னுடைய குறிப்பை எடுத்து அறுசுவையிலேயே கொடுக்கின்றார்கள், எனது பெயரைக்கூட குறிப்பிடவில்லை என்று. அவர்களுடைய படங்கள் இல்லாத குறிப்புகளை சிலர் செய்து பார்த்து, படங்கள் எடுத்து அனுப்பி இருப்பார்கள். செய்முறைக் குறிப்பிலும் சில மாற்றங்கள் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் ஒன்றும் சொல்ல இயலாது என்பதுதான் எனது பதிலாக இருக்கும். நான் மேலே சொன்னதுபோல் குறிப்பு கொடுப்போர் கொஞ்சம் நன்றியுணர்வுடன் இந்த குறிப்பு இன்னாரது குறிப்பு, அவருக்கு என் நன்றிகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். மற்றபடி அவர்கள் சொல்ல வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. இதுவே குறிப்பை அப்படியே எழுத்து மாறாமல் பயன்படுத்தி இருந்தால் நாம் கேள்வி கேட்கலாம். சிலர் நான் கொடுத்த தலைப்பையே அவரும் கொடுத்து இருக்கின்றார் என்றெல்லாம் சண்டைக்கு வந்திருக்கின்றார்கள். இவையெல்லாம் சற்று சிறுபிள்ளைத்தனம். நான் மேலே சொன்னதுபோல் தலைப்பையோ, செய்முறைப் பொருட்களையோ அப்படியே பயன்படுத்துவதால் அது என்னுடைய குறிப்பு என்றுச் சொல்லி உரிமை கொண்டாட இயலாது.

எனவே, எழுத்துக்குறிப்புகளை படங்களுடன் வெளியிடும்போது இரண்டு ஒரே மாதிரியான குறிப்புகள் என்று இருந்தாலும், ஒன்று படங்களுடன் கூடிய குறிப்பு ஒன்று படங்கள் இல்லாத குறிப்பு என்று இரண்டு வகையாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதை தவிர்க்க இயலாது.

<b>சரி, இப்போது என்னத்தான் சொல்கின்றீர்கள்? அறுசுவையில் இடம்பெற்ற மற்றவர்களது குறிப்புகளை மீண்டும் இங்கேயே செய்து அனுப்பலாமா? </b>

படங்கள் இல்லாத எழுத்துக் குறிப்புகளை நீங்கள் பார்த்து கற்றுக்கொண்டு செய்து அனுப்பலாம். அப்படி அனுப்பும்போது செய்முறையை உங்கள் சொந்த நடையில் அனுப்ப வேண்டும். அந்தக் குறிப்பில் இருந்ததை அப்படியே காப்பி செய்து அனுப்பக்கூடாது. அதேபோல் நீங்கள் செய்து அனுப்பும் குறிப்பு ஏற்கனவே யாரும் சமைக்கலாம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றதா என்பதை பார்த்துவிட்டு, இல்லையென்றால் மட்டும் அனுப்பவும். அதேக் குறிப்பை மற்றொருவர் செய்து அனுப்பி இருந்தால், அதை மீண்டும் செய்து அனுப்ப வேண்டாம்.

<b>அப்படி அனுப்பும்போது இது யாருடையக் குறிப்பை பார்த்து செய்தது என்று குறிப்பிட வேண்டுமா? </b>

செய்முறை உங்களது எழுத்து நடையில் இருக்கும்போது நீங்கள் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை. அது அவரது குறிப்புதான் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லாது போகின்றது. ஆனால், குறிப்பை அப்படியே அங்கே இருந்து எடுத்து எழுத்து மாறாமல் வெளியிட்டு இருந்தீர்கள் என்றால், கட்டாயம் இது அவருடைய குறிப்பு என்பதை குறிப்பிட வேண்டும். அதற்கு நன்றி தெரிவிப்பது உங்களுடைய பெருந்தன்மையைப் பொறுத்தது. நாங்கள் வலியுறுத்த இயலாது. ஆனால், அவரது பெயரை குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயம் வலியுறுத்துவோம். (மீண்டும் கவனிக்க. இது அவருடைய குறிப்பை அப்படியே எழுத்து மாறாமல் நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே.)

<b>நான் குறிப்பு கொடுக்கின்றேன். இன்னொருவர் அதை செய்து படங்கள் எடுத்து வெளியிட்டு பாராட்டு முழுவதையும் அவரே பெற்றுக்கொண்டு விடுகின்றாரே? </b>

இந்தக் கேள்வியையும் சிலர் என்னிடம் கேட்டுவிட்டார்கள். என்னவென்று பதில் சொல்வது?

என்னைப் பொறுத்தமட்டில் இதைத்தான் பதிலாகச் சொல்வேன். ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகின்றார். அவர் நடத்துவதைக் கேட்டு, படித்து ஒரு மாணவன் மாநில அளவில் முதலிடம் பெறும்போது அங்கே மாணவன்தான் எல்லோர் பார்வையிலும் படக்கூடியவனாக இருக்கின்றான். எல்லாப் பாராட்டுகளும் அவனுக்குதான் வந்து சேருகின்றது. அவன் சற்று நன்றியுணர்வுடன் இந்த ஆசிரியர்தான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் நல்லது. அவன் என்னுடைய பெற்றோர்தான் காரணம் என்பதோடு முடித்துக்கொண்டால் அல்லது நான் படித்தேன் வெற்றி பெற்றேன், நானேதான் காரணம் என்று சொல்லிக்கொண்டால் அவனை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் அந்த ஆசிரியர் மனதிற்கு தெரியும். அவனுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் எல்லாம் தனக்கு கிடைக்கும் பாராட்டுகள் என்று.

இதைத்தான் நான் சொல்ல விரும்புகின்றேன். அது உங்களுடையக் குறிப்பு என்ற அளவில் நீங்களும் ஒரு ஆசிரியர் போல் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இங்கே கிடைக்கும் பாராட்டுகள் வெறும் குறிப்பிற்காக மட்டுமென்றால், அது உங்களுடைய எழுத்துக் குறிப்புகளுக்கே கிடைத்திருக்க வேண்டும். அவை படங்களாக மற்றவர்களுக்கு ப்ரெசெண்ட் செய்யப்படும்போது, அதை கஷ்டப்பட்டு செய்தவர்க்கு கிடைக்கும் பாராட்டுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். செய்தவரை யாரும் பாராட்டக்கூடாது என்று சொல்ல முடியாது. குறிப்பு கொடுத்தவர் என்பதால் என்னை வந்து எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கேட்கவும் முடியாது. இவை எல்லாமே மனரீதியான, உணர்வுரீதியான விசயங்கள். இதில் விதிகளும், சட்டங்களும் பேச முடியாது. தார்மீக அடிப்படையில் சிலர் சில விசயங்களைச் செய்ய வேண்டும். அதைச் செய்யாத போது நாம் கண்டுகொள்ளாது விட்டுவிட வேண்டும். சுட்டிக் காட்டினால் வீண் விவாதங்கள் வரும். அந்தக் குறிப்பு அவரது குறிப்பே இல்லை என்று வாதம் வரலாம். அப்படி நிறைய நடந்து இருக்கின்றது. அப்போது என்ன சொல்ல முடியும்?

<b>கிச்சன் குயின் பகுதியில் இவரது குறிப்புதான் என்பது தெளிவாகத் தெரிகின்றதே? </b>

கிச்சன் குயின் பகுதி தனி. இதற்குதான் நான் மேலே குறிப்பிட்டேன். மேற்கண்ட விசயங்கள் எல்லாம் கிச்சன் குயின் பகுதிக்கு அல்லாது சாதாரணமாக குறிப்புகள் அனுப்புவோருக்கானது. கிச்சன் குயின் பற்றி கடைசியாக குறிப்பிடுவதாகக் குறிப்பிட்டேன். இதுதான் அந்த கடைசி.

கிச்சன் குயின் பகுதியின் நோக்கம், எதற்காக நடத்தப்படுகின்றது, என்ன விதிகள் என்பதெல்லாம் சகோதரி வனிதா அவர்களது வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கேயே கருத்துக்கள் பகுதியில் என்னுடைய விளக்கங்களையும் கொடுத்துள்ளேன். இருப்பினும் இங்கே சுருக்கமாக ஒரு முன்னுரை.

அறுசுவையில் படங்களுடன் கூடிய குறிப்புகளுக்குதான் வரவேற்பு அதிகம் இருக்கின்றது என்ற காரணத்தாலும், படங்கள் இல்லாது நல்லக் குறிப்புகள் ஆயிரக்கணக்கில் அதிகம் பார்வையிடப்படாமல் அறுசுவையில் இருக்கின்ற நிலையை மாற்றவும், எழுத்துக் குறிப்புகளை படங்களோட கூடிய குறிப்புகளாக மாற்றவும்மே இந்த பகுதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் நாங்கள் தேர்வு செய்து தரும் குறிப்புகள் பட்டியலில் இருந்து தங்களுக்கு பிடித்தமானதை உறுப்பினர்கள் தேர்வு செய்து, வீட்டில் செய்து பார்த்து படங்கள் எடுத்து எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதில் படங்கள் மட்டும் எடுத்து அனுப்பினால் போதுமானது. குறிப்பு ஏற்கனவே இருக்கும் ஒரிஜினல் குறிப்பையே பயன்படுத்திக்கொள்வோம்.

இங்கு நாங்களே அறுசுவையில் உள்ள குறிப்புகளை தேர்வு செய்து கொடுப்பதால், அது யாருடைய குறிப்பு என்பதை கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். குறிப்பினை செய்து பார்ப்பவர் அதைக் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், குறிப்பை வெளியிடும் நாங்கள் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். முதல் குறிப்புகள் வெளியான போது என்னுடைய கவனக்குறைவால் அதில் சிறிய தவறு நேர்ந்தது. பின்னர் அது சரி செய்யப்பட்டுவிட்டது. கிச்சன் குயின் பகுதியில் வெளியாகும் குறிப்புகளில் ஒரிஜினல் குறிப்புகள் கொடுத்தவர் பெயர் கண்டிப்பாக குறிப்பிடப்படும்.

ஆரம்ப காலத்தில் அறுசுவை நிர்வாகம் சார்பாக சமையல் போட்டிகள் நடத்தி அதன்மூலம் ஆயிரக்கணக்கான குறிப்புகள் பெறப்பட்டன. அவற்றில் நிறைய குறிப்புகள் படங்கள் இல்லாத காரணத்தால் வெளியிடப்படாமலே இருக்கின்றன. அந்தக் குறிப்புகளையும் படங்களாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அவையும் சீக்கிரம் அறுசுவையில் வெளியாகும். அறுசுவை டீம் குறிப்புகளை கிச்சன் குயின் பகுதியில் செய்து பார்த்து வெளியிடும்போது கொடுத்தவர் பெயர் வெளியாகாது. அப்படி யார் பெயரும் இல்லாது கிச்சன் குயின் பகுதியில் வெளியாகும் குறிப்புகள் டீம் கலெக்ட் செய்த குறிப்புகளாக இருக்கும்.

<b>கிச்சன் குயின் பகுதியில் வெளியாகும் குறிப்புகளில் படம் எடுத்து வெளியிட்டவரைத்தானே எல்லோரும் பாராட்டுகின்றார்கள்.. குறிப்பு கொடுத்தவரை பாராட்டவில்லையே..? </b>

ஆசிரியர் - மாணவர் :-)

எங்கள் பக்கமிருந்து குறிப்பு கொடுத்தவர் பெயரை கண்டிப்பாக வெளியிட்டுவிடுவோம். நன்றியும் தெரிவித்துவிடுவோம். யார் யாரை பாராட்டுகின்றார்கள் என்பது எங்கள் கையில் இல்லை. :-)

<b>கிச்சன் குயின் பகுதியில் செய்து காட்டப்படும் உணவுகள் நான் செய்வது போல் இல்லை. ஒரிஜினல் இப்படி இருக்காது. என்ன செய்யலாம்? </b>

இது தவிர்க்க இயலாத பிரச்சனை. மற்றவர்கள் குறிப்பை எடுத்துச் செய்வது என்பது ஒரு முயற்சிதான். இதில் பங்கேற்கும் பலர் இப்போதுதான் குறிப்புகள் வழங்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு எழுத்துக் குறிப்பை பார்த்து செய்யும் போது மிகச் சரியாக வந்துவிடும் என்று சொல்ல இயலாது. குறிப்பில் சில விசயங்கள் விடுபட்டு இருக்கலாம். சில சமயங்களில் கால அளவு, பொருள் அளவு சரியாக இல்லாமல் போகலாம். ஒரு ஸ்பூன் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் ஸ்பூன் ஒரு கரண்டி அளவில் இருக்கும். இப்படியெல்லாம் சிலப் பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே, ஒரிஜினல் குறிப்பு போல் மிகச் சரியாக எல்லாக் குறிப்புகளுக்கும் ரிசல்ட் வந்துவிடும் என்று உத்திரவாதம் அளிக்க இயலாது.

இன்றைய எக்ஸ்பர்ட்ஸ் எல்லோரும் ஒரு நேரத்தில் கற்றுக்குட்டிகள்தான். :-) ஆகவே, புதிதாக முயற்சி செய்பவர்களை உற்சாகப்படுத்துவோம். ஒருவேளை செய்முறையில் பிழை இருந்தால், திருத்தங்கள் இருந்தால், ஒரிஜினல் குறிப்பு கொடுத்தவர்கள் பின்னூட்டங்களின் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தலாம். தயவுசெய்து திட்டிவிடாதீர்கள். பக்குவமாக எடுத்துரையுங்கள்.

5
Average: 4.8 (9 votes)

கிச்சன் குயின் - 2

அன்பான அறுசுவை மக்களே, கிச்சன் குயின் பாகம் 1 வெற்றிபெற்றதை கொண்டாட வேண்டிய நேரம் வந்து விட்டது :) இந்த வாரம் முழுக்க முகப்பில் வரப்போகும் குறிப்புகளையும் தோழிகளின் பெயரையும் காண மிகுந்த ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். அந்த சந்தோஷத்தை இரண்டு மடங்காக்க இதோ அடுத்த பகுதி உங்களுக்காக வந்துவிட்டது. இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இவற்றையும் செய்து சுவைத்து “நல்ல நல்ல குறிப்புகள், இத்தனை நாள் கண்ணில் படவில்லையே” என்று நிச்சயம் எண்ண வைக்கும். :) இதோ பட்டியல்:

1. ஹைதராபாத் கோழி வறுவல் (செண்பகா)
2. 554 - கட்டா மீடா நிம்பு
3. மாங்காய் சொதி (செண்பகா)
4. குவாக்கமொலே (சுமி)
5. 3366 - மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்

6. 13125 - செந்தோல் (Chendhol)
7. 4083 - தாய்லன்ட் கார்லிக் சிக்கன்
8. தாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai ) (தர்ஷா)
9. 1981 - தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)
10. 3569 - மஷ்ரூம் பார்லி சூப்

11. கொத்தவரங்காய் மோர் குழம்பு (பாலநாயகி)
12. சில்லி மட்டன் வறுவல் (ரேவஸ்)
13. 1168 - மோர் வில்லை
14. 268 - பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா
15. 338 - ஸ்டஃப்டு நண்டு

16. 1962 - சாம்பார் வெங்காயம் கறி
17. தயிர் குருமா (மெர்சி)
18. முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் - 2590
19. 3374 - வனிலா ஐஸ் கிரீம்
20.ஊந்தியா (செண்பகா)

21. 4800 - அடைத்த பெல் பெப்பர் (Stuffed Bell Peppers)
22. 5156 - லசான்யா (Lasagna)
23. தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை (பாக்கியா)
24. 4087 - மெக்ஸிக்கன் சில்லி
25. 4232 - மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்

26. 1707 - தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
27. கஸ்டர்ட் அப்பிள் புடிங் (ஹேமா)
28. ஜெல்லி ஐஸ்க்ரீம் - 3151
29. கஸ்டர்டு ஐஸ்க்ரீம் - 3153
30. எலுமிச்சை மார்மலேட் - 6203

31. கவ்வர் மசாலா - 22820
32. கேரள நண்டு மசாலா (செண்பகா)
33. சில்லி நண்டு (சைனீஸ் முறை) (பாலநாயகி)
34. நண்டு மசாலா குழம்பு (பாலநாயகி)
35. தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு (செண்பகா)

36. சிறுகிழங்கு பொரியல் (மெர்சி)
37. சுண்டைக்காய் பச்சடி (ரேவ்ஸ்)
38. மேங்கோ டேங்கோ ஸ்மூதி - 19004
39. கடப்பா (ரேவஸ்)
40. கோழிச்சாறு (வாணி)

41. இத்தாலியன் பாஸ்தா (கவிதா உதயகுமார்)
42.பீன்ஸ் - தக்காளி கூட்டு (சுமி)
43. ப்ரெஷ் வெஜிடபிள் ஊறுகாய் (கவிதா உதயகுமார்)
44. 3415 - தாய்லன்ட் பீன்ஸ் ஃபிரை
45. 3641 - ஃபிரெஞ்ச் சிக்கன் ஃப்ரை

46. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா
47. காராமணி பகோடா (பிரபா)
48. கருணைக்கிழங்கு பக்கோடா (ஹேமா)
49.மல்லித் துவையல் (ஹேமா)
50. சிறுபயறு புட்டு (பிரியா ஜெயராம்)

51. பத்திய குழம்பு (பாலநாயகி)
52. கீரை தயிர் கறி (ஹேமா)
53.கம்பங்கூழ் (ஹேமா)
54. புல்லு கொழுக்கட்டை (ஹேமா)
55. 4225 - பார்லி & ரைஸ் புலாவ்

56. தட்டப்பயறு மசாலா (பாலநாயகி)
57. காராம8888 - காராமணிக்கடைசல் (பிரியா ஜெயராம்)
59. 7463 - காராமணி பிரட்டல்
60. கொள்ளு பொடி (பிரபா)

61. சோயா சோலே (பாலநாயகி)
62. சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல் (மெர்சி)
63. 12687 - சோயாபீன் மில்க்
64.சோயா வெஜ் குருமா (ஹேமா)
65. சோயாபீன்ஸ் தோசை (மெர்சி)

66. பொட்டுக்கடலை மாவுருண்டை (பிரியா ஜெயராம்)
67. பொட்டுக்கடலை துவையல் (பிரியா ஜெயராம்)
68. பொட்டுக்கடலை துவையல் (சுமி)
69. குழந்தைகளின் டானிக் (ஹேமா)
70. பொட்டுக்கடலை பாயசம் (பாலநாயகி)

71. பொட்டுக்கடலை இட்லி பொடி (ரேவ்ஸ்)
72.மசாலா மொச்சை (சுமி)
73. முட்டை குருமா (பிரபா)
74. பாகற்காய் சிப்ஸ் (பிரியா ஜெயராம்)
75. டோ நட் (தர்ஷா)

76.பால் ரவா உருண்டை (ஹேமா)
77.கேழ்வரகு தோசை (ஹேமா)
78. வெஜ் சாகு (பிரபா)
79. 11862 - உருளை பர்ப்பி
80.பஞ்சாபி சிக்கன் (சுமி)

81. 1158 - போப்ரா ரைஸ்
82.மிர்ச்சி பூரி (சுமி)
83. ஆலு பாலக் தால் (கவிதா உதயகுமார்)
84.சாஹி சிக்கன் குருமா (சுமி)
85. 364 - பாம்பே லஸ்ஸி

86. 515 - மார்வாரி மிர்சி
87. ஆலூ புர்தா (சுமி)
88. உருளை டிக்கி (சுமி)
89. தஹி பிந்தி (ஹேமா)
90. உருளைக்கிழங்கு பாஜி (தர்ஷா)

91. பேகன் பர்த்தா (கவிதா உதயகுமார்)
92. ராஜ்மா ரொட்டி (ரேவதி)
93. 10440 - காஷ்மீரி லாம்ப் க்ரேவி
94.காப்சிகம் பச்சடி (சுமி)
95.வெண்ணைய் சிக்கன் மசாலா (சுமி)

96. கச்சோடி (ரேவ்ஸ்)
97. பெங்காலி தம் ஆலு (ரேவ்ஸ்)
98. ஆலூ டிக்கியா (ரேவதி)
99. தூத் பேடா (ரேவதி)
100. சேனைக்கிழங்கு கட்லட் (கறி) – 16792

101. மட்டன் போப்ளா - 411
102. சேனைக்கிழங்கு 65 (மெர்சி)
103. சேனைகிழங்கு சாப்ஸ் (மெர்சி)
104. சேனைக்கிழங்கு கட்லெட் (ரேவதி)
105. சேனை சிப்ஸ் (பிரியா ஜெயராம்)

106. எரிச்சேரி – 4787
107. வத்த குழம்பு பேஸ்ட் (தர்ஷா)
108. சன்னாதால் ஸ்டப்டு சப்பாத்தி (ரேவதி)
109. பிரண்டை கடைசல் – 16683
110. பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் (சுமி)

111. மைதா தோசை (சுமி)
112. தயிர் குழம்பு (சுமி)
113. கொத்து புரோட்டா (சுமி)
114. சப்பாத்தி புட்டு (சுமி)
115. ஈசி ப்ரெட் உப்புமா (பிரபா)

116. எக் ரைஸ் (வாணி)
117. வெங்காய உதிரிபக்கோடா (பேச்சுலர்ஸ்க்கு) (ரேவதி)
118. கொத்துக்கறி மசாலா(பேச்சுலர்ஸ்) (கவிதா)
119. பேச்சுலர்ஸ் மெது வடை (ரேவதி)
120. புழுங்கல் அரிசிக் கஞ்சி (ஹேமா)

121. ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ (சுமி)
122. வெஜிடபிள் சூப் (கவிதா உதயகுமார்)
123. பருத்திப்பால் – 17457
124. ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி (பாக்கியா)
125. அவகோடா டிப் (தர்ஷா)

126. டயட் சூப் (ஹேமா)
127. டயட் மோர் (வாணி)
128. பத்தியக் கஞ்சி (கவிதா உதயகுமார்)
129. உளுத்தம்மா புட்டு – 26035
130. மீன் உப்பாணம் (செண்பகா)

131. பாசிப்பருப்பு பொரித்த முட்டை (வாணி)
132. சுறா பூண்டு குழம்பு – 13883
133. சீரகம் உளுந்து மாவுருண்டை (கவிதா)
134. மசாலா இட்லி (வாணி)
135. கருப்பட்டி இட்லி (பாலநாயகி)

136. தேங்காப்பூ-இனிப்பு இட்லி (பிரியா ஜெயராம்)
137. தோப்பம் (சுமி)
138.ஜவ்வரிசி புலாவ் (பாலநாயகி)
139. 1138 - தக்காளி மஹாசா
140. 1147 - பஞ்ச கல்யாணி

141. மீ (வாணி)
142. வெஜிடபிள் பிரியாணி குருமா (கவிதா)
143. பிரட் பகோலா (தர்ஷா)
144. ஸர்வாரி (சுமி)
145. நெல்லூர் புலவு (பிரபா)

146. ஆமை வடை (பாலநாயகி)
147. கம்பு வடை (ஹேமா)
148. 1157 - கருப்பட்டி வடை
149. இஞ்சி ரசம் (கவிதா உதயகுமார்)
150. 885 - திப்பிலி ரசப் பொடியும் திப்பிலி ரசமும்

151. 273 - சிக்கன் ஷெரின்
152. சிக்கன் அக்பரா (கவிதா உதயகுமார்)
153. 276 - சிக்கன் நவாபி
154. மொஹல் சிக்கன் கறி (பாக்கியா)
155. சிக்கன் தர்பாரி (ரேவதி)

விடுபட்ட பழைய குறிப்புகளும் சேர்த்திருப்பதால் 155 குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இம்முறை அவற்றுக்கான பொருட்களும் நேரமும் கிடைத்தால் முயற்சிக்க உதவும் என்றெண்ணினேன். இவற்றில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இந்த ஒரு வாரம் தான் டைம். இந்த வாரம் சனிக்கிழமைக்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த வாரம் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும்.

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க.

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க, இல்லன்னா அதுக்கு ஜோடி சேரும், அல்லது அதே வகையான இன்னொரு சின்ன குறிப்பையும் சேர்த்து அனுப்ப முடியுதா பாருங்க. இரண்டையும் சேர்த்து ஒரே குறிப்பா வெளியிட வசதியா இருக்கும். என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;)

இனி என்ன... வழக்கம் போல பிசி விக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

5
Average: 4.8 (5 votes)

கிச்சன் குயின் - 1

அன்பு மக்களே, போட்டி வெச்சு பரிசு கொடுத்து ரொம்ப நாளாகுது ;) எனக்கு கை பரபரங்குது. புதுசா ஒரு போட்டி வைக்கலாமா? முன்ன நம்ம அதிரா இருந்த போது ஒரு ரயிலு வண்டி ஓடும்... சமைத்து அசத்தலாம் என்று. அந்த வண்டியில் வாரம் ஒரு உறுப்பினரின் குறிப்பை எடுத்து பட்டியலிடுவாங்க. நாம அதில் இருந்து குறிப்புகள் செய்து பார்த்து சொல்ல வேண்டும். அதிக குறிப்புகள் செய்து சொன்னவர் தான் வெற்றி பெற்றவர். அந்த ரயிலு வண்டி அப்பறம் ஏகப்பட்ட ட்ரைவர் மாறி ஓடுச்சு. ஆனா அவ்வளவு ஸ்டெடியா வண்டி போகலங்க. :( வெரி பேட்.

சரி ஃபீல் பண்ண வேணாம் வனி... நம்ம மக்கள் இப்ப இந்த புது ஃப்ளைட்டை நல்லா ஓட்ட உதவுவாங்கன்னு நம்பி (நம்பி - இதை போல்ட் லெட்டர்ஸ்ல போட்டதா நினைச்சு படிச்சுக்கங்க) இந்த ஃப்ளைட்டை நான் பச்சை விளக்கு காட்டி துவங்கி வைக்கிறேன் (ஃப்ளைட்டுக்கு பச்சை லைட்டா காட்டுவாங்க??? சரி விடுங்கப்பா... நாம நம்ம ஃப்ளைட்டுக்கு பச்சை விளக்கு காட்டிக்கலாம்). முதல்ல கீழ இருக்க ஒரு பட்டியலை பார்த்துடுங்க, அப்பறம் ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் எல்லாம் பட்டியல் போடுறேன். பின்ன? ரூல்ஸ் இல்லாம கேமா? வெயிட் வெயிட்.

1. யுகாதிச் சட்னி (செண்பகா)
2. ஹைதராபாத் கோழி வறுவல் - http://www.arusuvai.com/tamil/node/213
3. http://www.arusuvai.com/tamil/node/554 - கட்டா மீடா நிம்பு
4. அப்பக்கா (கல்பு)
5. ஆந்திரா தக்காளித் தொக்கு (சுவர்ணா)

6. உளுந்து அல்கா பணியாரம் (சுமி)
7. சம்பாரப் புளி (சுவர்ணா)
8. சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை (சுமி)
9. வறுத்த பருப்பு குழம்பு (சுமி)

10. தாம்பாள் பணியாரம் (வாணிசெல்வின்)
11. புளிக்கூழ் (செண்பகா)
12. கொங்கு கோழி வறுவல் (சுவர்ணா)

13. கச்சான் அல்வா (கல்பு)
14. வாய்ப்பன் (ரேவ்ஸ்)
15. http://www.arusuvai.com/tamil/node/5813 - மாங்காய் சொதி
16. மட்டன் யாழ்பாண வறுவல் (சுவர்ணா)

17. http://www.arusuvai.com/tamil/node/19851 - குவாக்கமொலே
18. http://www.arusuvai.com/tamil/node/3366 - மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்
19. சில்லி மெக்ஸிகன் ரைஸ் (ரேவதி)

20. http://www.arusuvai.com/tamil/node/13125 - செந்தோல் (Chendhol)
21. தாய்லாந்து சிக்கன் பிரைட் ரைஸ் (வாணிசெல்வின்)
22. http://www.arusuvai.com/tamil/node/4083 - தாய்லன்ட் கார்லிக் சிக்கன்
23. http://www.arusuvai.com/tamil/node/1942 - தாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai )
24. http://www.arusuvai.com/tamil/node/1981 - தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)

25. http://www.arusuvai.com/tamil/node/3569 - மஷ்ரூம் பார்லி சூப்
26. முள்ளங்கி - பார்லி சூப் (கவிதா உதயகுமார்)

27. பேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ் (ரேவதி)
28. பனினி ப்ரெட் சாண்ட்விச் (வாணிசெல்வின்)

29. கொத்தவரைக்காய் பருப்பு உசிலி (ரேவ்ஸ்)
30. சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு (மெர்சி)
31. http://www.arusuvai.com/tamil/node/1679 - கொத்தவரங்காய் மோர் குழம்பு
32. http://www.arusuvai.com/tamil/node/12276 - அவரைக்காய் வறுவல்

33. நூல்கோல் மசாலா (கவிதா உதயகுமார்)
34. நூல்கோல் வடை (கல்பு)
35. நூல்கோல் கூட்டு (கவிதா உதயகுமார்)

36. பில்ல குடுமு (செண்பகா)
37. http://www.arusuvai.com/tamil/node/1168 - மோர் வில்லை
38. கோழி கொத்தமல்லி மசாலா (ரேவதி)

39. கோவா சிக்கன் கறி (ரேவ்ஸ்)
40. http://www.arusuvai.com/tamil/node/268 - பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா
41. http://www.arusuvai.com/tamil/node/338 - ஸ்டஃப்டு நண்டு

42. குலாப் ஜாமூன் (சுவர்ணா)
43. மோர் குழம்பு (கடலை மாவுடன்) (ஹேமா)
44. http://www.arusuvai.com/tamil/node/1962 - சாம்பார் வெங்காயம் கறி

45. ஜெய்பூரி ஆலு (சுமி)
46. தஹி பூரி (பிரேமா ஹரிபாஸ்கர்)
47. காபேஜ் கோப்தா கறி (பிரியா)
48. பூவா (கல்பு)
49. ஹக்காரா (ஹேமா)
50. மசாலா லெஸி (சுமி)

51. முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் - 2590
52. http://www.arusuvai.com/tamil/node/3374 - வனிலா ஐஸ் கிரீம்

53. பூண்டு லேகியம் (வாணிசெல்வின்)
54. புதினா டீ (லோ பிரெஷருக்கு) (மெர்சி)
55. நெல்லிக்காய் துவையல் (கவிதா உதயகுமார்)

56. இஞ்சி தொக்கு (ரேவ்ஸ்)
57. மலாய் சட்னி (சுவர்ணா)
58. இஞ்சி தயிர் பச்சடி (சுமி)

59. சேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்) (கல்பு)
60. சேப்பங்கிழங்கு காரக்குழம்பு (வனிதா)
61. சேப்பங்கிழங்கு மசாலா (செண்பகா)
62. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (மெர்சி)
63. சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் (ரேவதி)

64. இறால் அவரை பொரியல் (செண்பகா)
65. அவரைக்காய் சைனீஸ் கூட்டு - 12359 (தர்ஷா)
66. அவரைக்காய் கூட்டு - 14945 (தர்ஷா)

67. நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் (சைனா) (வாணிசெல்வின்)

68. துவரம் (வாணிசெல்வின்)

69. சீராளக்கறி (பிரியா)

70. கோழி உப்புக்கறி (சுமி)

71. குஜராத்தி சீஸ் போண்டா (சுமி)
72. அண்டா புர்ஜி (கவிதா உதயகுமார்)
73. 6887 - ஊந்தியா

74. 4800 - அடைத்த பெல் பெப்பர் (Stuffed Bell Peppers)
75. 5156 - லசான்யா (Lasagna)
76. புரோக்லி ஸலட் (ஹேமா)

77. தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி (தர்ஷா)
78. 5625 - தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை
79. தாய்லாந்து வெள்ளரிக்காய் சாலட் (சுமி)

80. இறால் பஜ்ஜி (ரேவதி)
81. பட்டி ஷு (பிரெஞ்சு பப்ஸ்) (தர்ஷா)

82. சல்ஷா (மெக்சிக்கன் உணவு) (கவிதா உதயகுமார்)
83. 4087 - மெக்ஸிக்கன் சில்லி
84. 4232 - மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்
85. மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை (தர்ஷா)
86. சீஸ் கேசடீயா (Cheese Quesadilla) (சுமி)

87. பீர்க்கங்காய் வேர்கடலை கறி (ரேவ்ஸ்)
88. மாங்காய் பருப்பு மசியல் (கல்பு)

89. 1707 - தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
90. மொச்சைக்கொட்டை முருங்கைக்காய் புளிக்குழம்பு (ரேவதி)
91. தேங்காய் திரட்டுப் பால் (ஹேமா)

92. கேரட் ஐஸ்கிரீம் (சுமி)
93. கஸ்டர்ட் அப்பிள் புடிங் - 5924
94. ஜெல்லி ஐஸ்க்ரீம் - 3151
95. கஸ்டர்டு ஐஸ்க்ரீம் - 3153

96. பேரீச்சம் பழ ஜாம் (ஹேமா)
97. வெஜிடபிள் ஜாம் (தர்ஷா)
98. எலுமிச்சை மார்மலேட் - 6203
99. அன்னாசிப் பழ ஜாம் (செண்பகா)
100. கவ்வர் மசாலா - 22820

101. கேரள நண்டு மசாலா - 319
102. சில்லி நண்டு (சைனீஸ் முறை) - 320
103. நண்டு மசாலா குழம்பு - 334
104. தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு - 1701

105. கருணைக்கிழங்கு மசியல் (ஹேமா)
106. சிறுகிழங்கு பொரியல் - 7507
107. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு (ஹேமா)

108. சுண்டைக்காய் குழம்பு (கல்பு)
109. கறிச்சுண்டைக்காய் கோலா (செண்பகா)
110. சுண்டைக்காய் பச்சடி - 6189
111. மேங்கோ டேங்கோ ஸ்மூதி - http://www.arusuvai.com/tamil/node/19004
112. ஸ்பைசி கார்ன் (ரேவதி)
113. சிக்கன் ஹாரா மசாலா (பிரேமா ஹரிபாஸ்கர்)
114. காஷ்மீரி பொட்டேட்டோ புலாவ் (பிரேமா ஹரிபாஸ்கர்)
115. காஷ்மீர் ரொட்டி (ரேவதி)

116. சந்தேஷ் (பிரியா)
117. பேல் பூரி (ஹேமா)
118. சாய்துக்ரா (சுமி)
119. ஆலூ படூரா (சுமி)
120. ராப்டி கீர் (பிரியா)
121. பாதுஷா (கல்பு)

122. www.arusuvai.com/tamil/node/7438 - கோழிச்சாறு
123. வெங்காய மசாலா குழம்பு (சுமி)
124. கேழ்வரகு இனிப்பு அடை (ரேவ்ஸ்)
125. தூதுவளை தோசை (ரேவ்ஸ்)

மேலே 125 குறிப்பு இருக்கோ?? ரைட்டு... இப்ப ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இந்த ஒரு வாரம் தான் டைம். இந்த வாரம் சனிக்கிழமைக்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த வாரம் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது.

இது தான் ரூல்ஸ். ரொம்ப ஈசியா இருக்கில்ல? பின்ன.. குறிப்பை நாங்க கொடுத்துட்டோம், செய்து பார்த்து நீங்க படம் மட்டும் அனுப்பினா போதும், அந்த குறிப்புகள் யாரும் சமைக்கலாம் பகுதியில் உங்கள் பெயரில் வெளியாகும்.

ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (அண்ணா உதைப்பார் வனின்னு யாராவது பின்னாடி சொல்றீங்களோ? நம்ம அண்ணா.. பேசிக்கலாம் ;) உதைச்சாலும் நான் வாங்கிக்கிட்டு உங்க குறிப்புகளை வர வைக்கிறதுக்கு காரண்டி கொடுக்கறேன்). எப்படி இருக்கும் கற்பனை பண்ணிப்பாருங்க... :) சூப்பரில்ல?

இனி ஏன் தாமதம்? வாங்க... குறிப்புகளின் லின்க் மேலே இருக்கு, தேர்வு செய்து உங்களால் இந்த வாரமே செய்து முடிக்க முடிந்ததை எனக்கு இங்க சொல்லிட்டு, கடகடன்னு சமையலை ஆரம்பிங்க. வீட்டில் இருக்கவங்களையும் அசத்தலாம், அறுசுவையில் உள்ளவங்களையும் அசத்தலாம்.

வாழ்த்துக்கள் மக்களே... என்ன சந்தேகம் என்றாலும் அவசியம் கேட்டுவிடுங்கள் :) லிஸ்ட் யார் யார் என்ன என்ன சொல்ல போறீங்கன்னு நான் ஆவலா காத்திருக்கேன். ஃபாஸ்ட்... வாங்க வாங்க.

5
Average: 4.8 (6 votes)

ஆரோக்கிய சமையல்

அறுசுவை மக்களுக்கு வணக்கம்.

தலைப்பைப் பார்த்தவுடன் இந்தம்மா (நாந்தாங்க!!) ஏதோ புதுவிதமான ஆரோக்கிய சமையல் குறிப்பு சொல்லப்போறாங்கன்னு நினைத்து படிக்க ஆரம்பிக்காதீங்க மக்களே!! நாங்க சமையலில் அந்தளவுக்கெல்லாம் அப்பாடக்கர் இல்லீங்கோ!!!

சமைக்கிற உணவு எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருப்பது முக்கியமோ, அதே அளவு சமைக்கும் பாத்திரமும் ஆரோக்கியமா இருக்கனும் இல்லைங்களா??

நம்ம மக்களோட பேசி எந்த பாத்திரம் ஆரோக்கியம்னு தெரிந்துகொள்ளலாம்னு வந்திருக்கேனுங்க!! இது என்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு!! இவ்வளவு நாளா இது தெரியாமயா சமைச்சிட்டு இருந்தன்னு கேக்கறது புரியுதுங்கோ!!

ஏதோ கொஞ்சம் தெரிந்தாலும், முழுசா சந்தேகத்தை போக்கிக்கனும் இல்லைங்களா? என்னைமாதிரி கத்துக்குட்டிகளுக்கும், புதுசா சமைக்க ஆரம்பிக்கிறவங்களுக்கும் பயன்படலாமில்லீங்களா?

மண்சட்டியில் ஆரம்பித்து அலுமினியம், எவர்சில்வர் மற்றும் நான்ஸ்டிக்னு எவ்வளவோ பாத்திரங்கள் வந்துவிட்டது. இதுல, சமைக்கிற உணவுக்கும், அதை சாப்பிடற நமக்கும் கெடுதல் உண்டுபன்னாத பாத்திரங்கள்னா ? இவற்றில் முதலிடம் மண்பாத்திரங்களுக்குத்தான் .
மண்சட்டியில் சமைப்பதால் நிறைய நன்மைகள் இருக்குன்னு தெரிந்து ,சமீபகாலமாக நிறையபேர் மண்சட்டிக்கு மாறிட்டாங்க!! நல்லவிஷயம் நடந்தா நல்லதுதானே!

நான் சமைக்க ஆரம்பித்த புதுசுலயே மண்சட்டியும் பயன்படுத்த தொடங்கிட்டேன்! அதனாலேயே, மக்கள் அதிகமா மண்சட்டி பயன்படுத்தறதுக்கு முன்னாடி (அப்பல்லாம் விற்பனை அதிகம் இல்லை) , இந்த மண்பாத்திரங்கள் எப்படி எல்லாம் இருந்ததுன்னு எனக்கு ஓரளவு தெரியும்னு வைங்களேன். அப்பொழுது பளபளப்பு எதுவும் இல்லாமல் இருந்தது! ஆனால் இப்பல்லாம் கடைகளில் கிடைக்கிற மண்பாத்திரங்கள் நல்லா மொழுமொழுன்னு, பளபளப்பா இருக்கு!! நிறமும் வித்தியாசமா இருக்கு!! பார்க்கும்போதே கூடவே சந்தேகமும் வருதுங்க! வியாபார நோக்கத்துக்காக இதுலயும் ஏதாவது கெமிக்கல் கலந்த மேற்பூச்சு பூசி விற்பனை பன்றாங்களோன்னு!!!

ஆரோக்கிய வாழ்வுக்கு திரும்பனும்னு நினைத்துதான் மக்கள் மண்பாத்திரங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்காஙக"! இதுலயுமா???? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க மக்களே! எனக்கு வந்த சந்தேகம் சரியா? தவறா?

முன்னாடி நாம நீண்டகாலமாக பயன்படுத்திவந்த அலுமினியப்பாத்திரங்கள் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலாம்!! சமைக்கும்போது அந்த பாத்திரங்களில் உள்ள அலுமினியம் உணவுடன் கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குதாம்!!

எவர்சில்வர் பாத்திரத்தில சமைக்கிறது ஒன்னும் பிரச்சனை இல்லை!! ஆனா சமைக்கிற உணவு அடிபிடிக்கிற பிரச்சனை இருக்கே, அது ஒரு தொல்லைதான்!! ஆரோக்கியம் வேண்டுமென்றால், இந்த பிரச்சனையெல்லாம் சாதாரணமப்பா!!!

அடுத்து விதவிதமா, பளபளப்பா கிடைக்கிற நான்ஸ்டிக் பாத்திரங்கள்!! சமைக்கும்போது நான்ஸ்டிக் பாத்திரங்கள்ல இருக்கிற டெஃப்லான் பூச்சு உரிந்து வந்தால்தான் பிரச்சனை!! அதனால் அப்படி வராம இருக்க மரக்கரண்டி பயன்படுத்துங்கன்னு சொல்றாங்க!! இதுல எவ்வளவு வில்லங்கமோ!! தெரியலை???

ஒரு சமயம் மைக்ரோவேவ் ஓவன் வாங்கனும்னு நினைத்தேன்!! பிறகு மனசு என்னவோ ஒத்துக்கல.....புதுசு புதுசா என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க!! ஆரம்பத்துல எல்லாமே நல்லா இருக்கு! பிறகுதான் அதுல இருக்கிற ஒவ்வொரு பிரச்சனையா தெரிய வருது! மைக்ரோவேவும் அப்படிதானோ? அதுலயும் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அந்த வேவ்ஸ் உடம்புக்கு ஏதாவது பிரச்சனை பன்னுமோன்னு, பலவிதமா யோசித்து, ஓவன் வாங்கிறத விட்டுட்டேன்!!

இப்ப என்னாச்சுன்னா, மைக்ரோவேவ் இல்லாத ஒரு நாள் இல்லைங்கிறமாதிரி ஆயிடுச்சு!! நம்ம பிழைப்பு!!! ஆனாலும் மனசுக்குள்ள அதே பட்டிமன்றம்!! இது சரியா?? முறையான்னு?? இதில் உபயோகிப்பதற்கு என்றே வித விதமான பாத்திரங்கள்!! மைக்ரோவேவ் சேஃப் பிளாஸ்டிக்னு சொல்றாங்களே!! அந்த பிளாஸ்டிக்னால எந்த கெடுதலும் வராதா??

இந்த மைக்ரோவேவ் ஓவன் பற்றி (சமைப்பது ஆரோக்கியமா ??) எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்குங்க!! என்ன மாதிரியே இன்னும் நிறையபேருக்கு இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம அறுசுவையில அதைப்பற்றி யாராவது பதிவிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.........

இப்பல்லாம் விஜய் டிவியில் வர்ற ஒருசமையல் நிகழ்ச்சியில், அந்த செஃப் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை பயன்படுத்தி சமைக்கிறார்!! பார்க்க பீங்கான் பாத்திரம் மாதிரியே இருக்கு! ஆனா நான்ஸ்டிக்மாதிரி சமைக்கிறது எதுவுமே பாத்திரத்தில் ஒட்டறதில்லை! மைக்ரோவேவ்ல உபயோகப்படுத்திற மாதிரியும் இருக்கு!! ஆனா ஸ்டவ்வில் வைத்து சமைக்கிறாங்க!! இது என்ன பாத்திரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா!!

ஏதோ எனக்குத் தெரிந்ததையும், தெரியாத பல விஷயங்களையும் இங்கு கொட்டிட்டேன். அறுசுவை மக்களுக்கு எனது விண்ணப்பம் என்னன்னா? உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொண்டால் அது எனக்கு மட்டும் அல்லாமல் பலருக்கும் உபயோகப்படும்னு நினைக்கிறேன் .

5
Average: 4.3 (3 votes)

சின்னச் சின்ன டிப்ஸ் - 2 (பிரியாணி)

பிரியாணி செய்யுறது பலருக்கு சரியா வரதில்லைன்னு சொல்றோம். எனக்கும் ஆரம்பத்தில் பெரிய சிக்கலான விஷயமா தான் இருந்தது. ஆனா வாரம் ஒருமுறை அல்லது குறைந்தது 15 நாளுக்கு ஒரு முறை பிரியாணி செய்யும் போது பக்குவம் தானா வந்துடுச்சு. ”ப்ராக்டிஸ் மேக்ஸ் பெர்ஃபக்ட்” ;) அப்படி என்ன பெரிய விஷயம் பிரியாணி பண்றது?? ஒன்னுமே இல்லைங்க... ரொம்ப ரொம்ப சுலபம் தான். சின்ன சின்ன விஷயங்களை கவனிச்சா போதும், உங்க பிரியாணியும் சம ஹிட் ஆகும். கீழ இருக்க டிப்ஸ் ட்ரை பண்ணிப்பாருங்க, என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காம கேளுங்க, நானும் எக்ஸ்பர்ட் இல்லைங்க, இப்பவும் பலர் வீட்டு பிரியாணி என்னை விட சூப்பர்னு கத்துக்க விரும்புறது தான்.... ஆனாலும் கட்டாயம் எனக்கு தெரிஞ்ச அளவில் உதவ காத்திருக்கேன். அட்லீஸ்ட் சுவையில் இல்லன்னாலும் பக்குவத்தில் நிச்சயம் பெர்ஃபக்‌ஷன் கொண்டு வர நான் உதவுவேன்.

1. பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். சுவை நன்றாக இருக்கும்.

2. அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை தண்ணீர் மாற்றி கழுவி 15 நிமிடம் ஊற வைங்க.

3. அரிசி மோட்டா டைப்பா இருந்தா நீரில் ஊற வைங்க, ரொம்ப மெல்லிய அரிசியா இருந்தா நீரை வடிச்சுட்டு ஈரமான அரிசியை அப்படியே வைங்க 15 நிமிஷம். அதுவே போதும், நீரோட ஊற வைக்க தேவை இல்லை.

4. அரிசி அதிகம் ஊறினாலும் உங்க பிரியாணி குழைந்து போகும். நினைவில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கும் போது ஊற வைங்க போதும்.

5. வெங்காயம், தக்காளி எல்லாமே நல்லா வதங்கணும் பிரியாணிக்கு. அரைகுறையா வதக்க கூடாது.

6. சிக்கன் சேர்ப்பதா இருந்தா நீர் சேர்க்காமல் வேக விடுங்க மூடி போட்டு. சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது.

7. மட்டன் சேர்ப்பதா இருந்தா மட்டன் வேக வெச்சு தனியா அந்த நீரை வடிச்சு எடுத்து வெச்சுக்கங்க. மட்டனை மசாலாவோடு சேர்த்து பிரட்டி விட்ட பின் மட்டன் வேக வைத்த நீர், கூட தேவையான நீர் எல்லாம் சேர்த்து கொதிக்க விடுங்க. மட்டன் வேக வெச்ச நீர் சுவையை அதிகப்படுத்தும்.

8. சிக்கன் பிரியாணியோ மட்டன் பிரியாணியோ... கறியில் உள்ள கொழுப்பை கவனிங்க சமைக்கும் முன். எவ்வளவு கொழுப்பு இருக்கோ அவ்வளவுக்கு எண்ணெய் விடும். அதுக்கு ஏற்ப உங்க எண்ணெய் அளவை முடிவு பண்ணுங்க. அதிகமான எண்ணெய் கூட பிரியாணி சுவையை கெடுத்துடும், திகட்டும்.

9. சிக்கனோ மட்டனோ... எலும்போடு இருப்பது தான் பிரியாணிக்கு சுவையான கறி. எலும்பில்லாதது அத்தனை சுவை சேர்க்காது. நிச்சயம் நல்ல கறி தான் நல்ல பிரியாணியை தரும்.

10. எந்த கறியா இருந்தாலும் பிரியாணி செய்யும் முன் ஒரு 1/2 மணி நேரம் ஊற விடுங்க. நிச்சயமா பிரியாணியோட சேர்த்து சாப்பிடும் போது கறி மட்டும் சுவையில்லாம இருந்தா நல்லா இருக்காது தானே? அதிலும் சுவை சேர்க்கணும்னா கொஞ்சம் ஊறுவது நல்லது. கறி மிருதுவா இருக்க தயிர், உப்பு, சர்க்கரை (1/2 தேக்கரண்டி போதும்) சேர்த்து ஊற வைக்கலாம்னு எப்பவோ யாரோ சொன்னாங்க. நான் சிக்கனுக்கு அதிகமா இதை ஃபாலோ பண்ணுவேன். ட்ரை பண்ணிப்பாருங்க.

11. இஞ்சி பூண்டு ஜீரணத்துக்கு மட்டுமில்லைங்க, அசைவத்தில் வாசமும் நல்லா இருக்க உதவுவது. கடையில் வாங்கின இஞ்சி பூண்டு விழுது இந்த வாசத்தை தராதுங்க. எந்த அளவு இஞ்சி எடுக்கறீங்களோ, அந்த அளவு பூண்டை எடுத்து ஃப்ரெஷா தட்டி போடுங்க. நல்ல வாசம் தரும். நான் பூண்டு எப்பவும் தோலோடு சேர்ப்பேன் வீட்டுக்கு அரைக்கும் போது. நீங்க தோல் இல்லாம சேர்ப்பதா இருந்தாலும் சேர்க்கலாம். மத்தில் கூட தட்டி போடலாம், மைய்யா அரைக்கணும்னு அவசியமே இல்லை.

12. நான் பயன்படுத்தும் கரம் மசாலா காம்பினேஷன்: 1 சின்ன பிரியாணி இலை, 1 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 பச்சை ஏலக்காய், 1/2 கறுப்பு ஏலக்காய், 1/4 துண்டு ஜாதிக்காய், ஒரு சிட்டிகை சோம்பு, 1/4 துண்டு நட்சத்திர மொக்கு, 1/4 துண்டு ஜாதிபத்திரி. இதை லேசான தீயில் வைத்து வறுத்து எடுத்து கையால் பொடி செய்து பயன்படுத்துங்க. இதையும் அரைச்சு ஸ்டோர் பண்ணிக்காதீங்க, ஃப்ரெஷா பொடிக்குறது தான் வாசம்.

13. நீர் அளவு பாசுமதின்னா 1 கப் அரிசிக்கு 1 1/4 கப் முதல் 1 3/4 கப் வரை ஊற்றலாம். சராசரியா 1 1/2 கப் நீர் சரியா இருக்கும். இதுவும் சிக்கன், மட்டன் பிரியாணிக்கு மாறும். சிக்கன் என்றால் அதுவே நீர் விடுவதாயிற்றே. அதனால் கொஞ்சம் நீர் கம்மி பண்ணலாம். நாம ஊற்றும் தயிர், கறி விட்ட நீர் எல்லாம் கணக்கில் எடுக்கணும்.

14. உண்மையில் நீர் கொஞ்சம் குறைவா இருந்தா கூட முக்கால் பதம் வெந்ததும் கண்டு பிடிச்சுடலாம். அப்போ கொதி நீர் சிறிது பரவலா சேர்த்து தம்மில் வேக விடலாம். அதிகமா போனாலும் தீயை கொஞ்சம் கூட்டி வெச்சு வேகமா நீர் வத்தி போக விடலாம். அப்பறம் தம்மில் போடலாம். ஆனா இதெல்லாம் சொதப்ப வாய்ப்பிருக்கு. முதல் முறை இப்படி செய்து உங்க அரிசிக்கு எவ்வளவு நீர் விட்டா சரியா வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அடுத்த அடுத்த முறை அதை சரியா செய்யுங்க.

15. அரிசி போடும் முன் உப்புமா மாதிரி நீர் நல்லா கொதிக்கணும். இதுவும் அரிசி பதமா வேக அவசியம்.

16. கொதிக்குற நீரில் அரிசியை போட்டு ஒரே ஒரு முறை கலந்து விடுங்க. கறியோட பிரியாணி நல்லா கலந்ததும், மறுபடி கொதிக்க விடுங்க. கொதிக்க துவங்கினதும் தீயை மிதமா வெச்சு மூடிவிடுங்க.

17. கலக்க எப்பவும் முனை நேரா இருக்க கரண்டி பயன்படுத்துங்க. சாதம் போடுற கரண்டி போல. குழியானது போட்டு கலந்தா பிரியாணி குழையும். கிளறுவதும் எப்பவும் பாத்திரத்தின் ஓரத்தில் இருந்து ரொம்ப பக்குவமா கிளறிவிடணும். நடுவில் விட்டு கொடைஞ்சா குழைந்து போகும்.

18. நல்லா கவனிங்க... கொதி நீரில் அரிசி சேர்த்து ஒரே ஒரு முறை கலந்து விடுவதோடு போதும், அதன் பின் முழுவதும் வேகும் வரை கரண்டி போடாதீங்க. அரிசியை அடிக்கடி கலந்தால் கஞ்சி வெளியாகும், பிரியாணி குழைந்து போகும். இந்த தப்பு தான் காமனா நிறைய பேர் பண்றது.

19. முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடுங்க. முக்கால் பதம் வெந்ததும் மேலே சாதம் தெரியும் , நீர் தெரியாது. கலந்து விடாதீங்க. நீர் குறைவுன்னு தோணினாலும் தம்மில் போடும் போது அந்த ஆவி உள்ளுக்குள் இருந்து நீராவியா வேக வைக்கும் என்பதை நினைவில் வைங்க. கரம் மசாலா சேர்ப்பதை இப்போ சேர்க்கலாம். எலுமிச்சை இந்த நிலையில் பிழிந்தாலும் சரி, அல்லது கடைசியா பிழிந்தாலும் சரி தான்.

20. தம் போடும் முறை நிறைய இருக்கு. அவனில் போடுறாங்க, அடுப்பிலேயே தோசை கல் வெச்சு போடுறாங்க, எதுவும் இல்லாம ரொம்ப பொடி தீயில் நேராவே கூட வைக்கிறாங்க. எதை செய்வதானாலும் நீங்க பிரியாணி பண்ற பாத்திரம் அடி கனமான பாத்திரமா இருந்தா நல்லது. அது தான் தீயாமல் பிரியாணி நல்லா தம் போட வரும். மேலே ஆவி போகாமல் மூட வசதியா மூடி இருக்கணும். அலுமினியம் ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடிட்டு மூடி போடலாம், அல்லது மாவு பிசைந்து தட்டையும் பாத்திரத்தின் ஓரத்தையும் சேர்த்து மூடலாம், அல்லது தட்டு மேல கல்லு வைக்கலாம். இதெல்லாம் ஆவி
வெளிய போகாம தம்மில் போடும் முறை.

21. பிரியாணிக்கு தக்காளி வதக்கும் போது, கறி வேகும் போதுன்னு எல்லா நிலையிலும் மூடி போட்டு வதக்குங்க, வேக விடுங்க. வாசம் நல்லா இருக்கும், தக்காளி எல்லாம் நல்லா குழைந்து வேகும்.

22. வெங்காயம் வதக்க, தக்காளி வதக்கன்னு எல்லா ஸ்டேஜுலையும் அந்த அந்த பொருளுக்கு ஏற்ப உப்பு சேர்த்து வதக்குங்க. அது சீக்கிரம் வதக்க மட்டுமில்ல, அந்த அந்த பொருளில் உப்பு சேர்ந்து சுவையை கூட்டவும் உதவும்.

23. கொத்தமல்லி புதினா எல்லாம் ரொம்ப அரைக்காம, பொடியா நறுக்கி போடுறது வாசம் நல்லா இருக்க உதவும். சிலருக்கு இதன் வாசம் கறியிலும் இருந்தால் பிடிக்கும், அப்படி நினைக்கிறவங்க கறி சேர்க்கும் முன்னே கூட புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கலாம்.

24. பிரியாணி எப்பவுமே சாப்பிட 2 மணி நேரம் முன்பே செய்துட்டா சுவை ரொம்ப நல்லா இருக்கும். பார்ட்டிக்கு எல்லாம் மதியமே பிரியாணி பண்ணி 3/4 பதம் வெந்ததும் அடுப்பை விட்டு எடுத்து அலுமினியம் ஷீட் போட்டு டைட்டா மூடி வெச்சுடுவேன். மாலை பரிமாற 1/2 மணி நேரம் முன் எடுத்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து எடுத்து கிளறுவேன். பதமா வெந்து மசாலா கறியில் நல்லா ஊறி சுவையா இருக்கும் பிரியாணி. வீட்டிலும் இது போலவே சீக்கிரமா செய்து ஊற விட்டுட்டா டேஸ்ட் நிச்சயம் நல்லா இருக்கும். எலுமிச்சை சாதம், புளி சாதம் எல்லாம் கிளறி கொஞ்ச நேரம் வெச்சிருந்தா எப்படி சாதத்தில் அதன் சுவை கூடுதோ, அப்படி தான் பிரியாணியும்.

குக்கரில் நான் இதுவரை விசில் வைத்ததில்லை. கொதிக்கும் நீரில் அரிசி போட்டு கொதி வந்ததும் மூடி ஒரு விசில் கூட விடாம அப்படியே சிம்மில் 15 நிமிடம் வைப்பேன், நல்லா வரும். ஆனாலும் பிரியாணி குக்கரில் செய்வதை விட அடி கனமான பாத்திரத்தில் அடுப்பில் சமைப்பதே எனக்கு பிடிச்ச முறை. என்னவோ பிரியாணி என் கண்ட்ரோலில் இருப்பது போல ஒரு உணர்வு ;)

நம்ம அறுசுவையில் வித விதமான பிரியாணி குறிப்பு வருது. பலருக்கும் குழப்பம் இருக்கும், எல்லாத்துலையும் அதே சிக்கன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தயிர், மசாலா வகை தானே இருக்கு, என்ன வித்தியாசம்னு... ஆனா ஒவ்வொரு வகைக்கும் சுவையில் நிறைய வித்தியாசம் இருக்கும், அதை சுவைத்து பார்த்தா உங்களுக்கே நல்லா புரியும்.

1. பிரியாணியில் வெங்காயம் அரைத்து சேர்ப்பதுக்கும், நறுக்கி சேர்ப்பதுக்கும் சுவை மனம் வேறுபடும். சின்ன வெங்காயம் அரைத்து சேர்த்தால் அது வேறு விதமான சுவையையும் மனத்தையும் தரும்.

2. புதினா கொத்தமல்லி சேர்த்தா ஒரு வாசம், சேர்க்கலன்னா வேறு விதம். நான் கறிவேப்பிலை கூட சேர்ப்பது உண்டு ஒரு வகை பிரியாணிக்கு. முக்கியமா வெஜிடபிள் பிரியாணிக்கு அது நல்ல வாசம்.

3. காரத்துக்கு மிளகாய் தூள் / பச்சை மிளகாய் / நறுக்கி தாளிப்பது / அரைத்து வதக்குவது ஒவ்வொன்றும் ஒரு வகை.

4. புளிப்புக்கு எலுமிச்சை / தயிர் / தக்காளி - ஒவ்வொன்றும் ஒரு வகை. இவற்றின் காம்பினேஷன் ஒரு வகை.

5. தாளிக்க முதலில் மசாலா பொருட்கள் சேர்ப்பது ஒரு வாசம், இஞ்சி பூண்டு முதலில் சேர்த்தால் ஒரு வாசம், வெங்காயம் முதலில் சேர்த்தால் ஒரு வாசம், புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கினா ஒரு வாசம்... இப்படி எண்ணெயில் முதலில் சேர்க்கும் பொருளே வாசத்தை மாற்றிவிடும்.

6. எண்ணெய் / நெய் - இதிலும் சுவை, வாசம் மாறுபடும். நெய்யை தாளிக்க பயன்படுத்துறதுக்கும், கடைசியில் சிறிது நெய் சேர்ப்பதுக்கும் கூட வித்தியாசம் இருக்கு தெரியுமா?

7. சிக்கன் எலும்போடு போட்டால் ஒரு சுவை, எலும்பில்லாமல் போட்டால் ஒரு சுவை. எலும்போடு இருப்பதே மிகுந்த சுவை தரும்.

8. தேங்காய் கசகசா முந்திரி சேர்த்து அரைப்பது ஒரு காம்பினேஷன். தேங்காய் மட்டுமே அரைப்பது ஒரு வகை. தேங்காய் பாலாக சேர்ப்பது ஒரு வகை. அந்த தேங்காய் பால் கூட ரெடிமேடுக்கும், வீட்டில் எடுத்ததுக்கும் எவ்வளவு வித்தியாசம்!!

9. மசாலா அரைக்கும் போதே பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் அரைத்து சேர்த்தால் அது ஒரு வகை.

10. கரம் மசாலாவை முதலில் சேர்த்து வதக்கினா ஒரு வாசம், கடைசியா தூவி தம்மில் போட்டால் ஒரு வாசம். பிரியாணிக்கு கரம் மசாலா கடைசியா சேர்ப்பது தான் எனக்கு பிடிச்ச முறை.

11. நட்ஸ் எல்லாம் வறுத்து சேர்த்தால் ஒரு சுவை / அவை இல்லாமல் செய்தால் ஒரு சுவை / சிலர் பைனாப்பிள் கூட சேர்ப்பாங்க பிரியாணியில் அது ஒரு சுவை. எனக்கு ஆனா நட்ஸ் சேர்க்கும் முறை பிடித்தமில்லை. முஹல் டைப் பிரியாணியில் நட்ஸ் நிறைய இருக்கும். ரிச்சான உணவு.

12. கறியுடன் உருளை சேர்த்தால் வாசமும் சுவையும் மாறுபடும்.

13. கறி தனியா அரிசி தனியா சமைச்சு லேயர் லேயரா தம் போடுவாங்க. இது ஒரு வகை பிரியாணி.

14. அரிசியை நெய்யில் அல்லது எண்ணெயில் லேசா வதக்கிட்டு அப்பறம் சமைப்பாங்க பிரியாணி, ஒன்னோடு ஒன்னு ஒட்டாம வரவும் இது நல்ல முறை. இப்படி செய்யும் போது சுவை வித்தியாசமா இருக்கும்.

15. புலாவுக்கும் பிரியாணிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முக்கியமா மசாலா. பிரியாணி கொஞ்சம் ஹெவி மசாலா, புலாவ் ரொம்பவே மைல்டா இருக்கும். லேயர் லேயரா தம் போடுறதும் பிரியாணிக்கே உள்ள தனித்துவம். தம் போடுறதே தனித்துவம்னு சொல்லலாம்.

பிரியாணி வகைகளும், மாறுபாடும்:

16. அவாதி பிரியாணி ஏறக்குறைய முஹல் பிரியாணி போல தான். முஹல் பிரியாணி நட்ஸ் எல்லாம் சேர்த்து, லேயர் லேயரா தம் போடும் முறை. அவாதி பிரியாணியில் நெய் அதிகம் இருக்கும். அரிசியை கூட நெய்யில் வறுத்து பின் கறி சமைத்த மசாலாவில் வேக வைத்து பின் கறியையும் சாதத்தையும் லேயர் லேயரா தம் போடுவாங்க. முக்கியமா மட்டன் இந்த முறையில் நல்ல சுவையா இருக்கும். மட்டன் வேக வெச்ச நீரில் அரிசியை சமைத்து, அதன் பின் கறி மசாலா கலவையை வைத்து லேயரா தம் போடுவாங்க.

17. ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி எல்லாம் நம்ம ஊர் ஸ்பெஷல். இவங்க யாரும் லேயரா போடுறதில்லைன்னு சொல்ல முடியாது. ஆம்பூர் பிரியாணியும் சிலர் லேயரா போடுறாங்க. செட்டிநாடு பிரியாணியில் ஸ்பெஷல் தேங்காய் பால் சேர்ப்பது.

18. திண்டுக்கல் / தலப்பாக்கட்டி பிரியாணியில் ஸ்பெஷல்னு சொல்லணும்னு ஜீரக சம்பா அரிசி தான். பாசுமதியை விட ஜீரக சம்பா சுவையும் வாசமும் தனி தான். ஆனா நீர் அதிகமா தேவைப்படும் பாசுமதியை விட. எலுமிச்சை, தயிர் சேர்ப்பது இதுல ஸ்பெஷல்.

19. ஹைதராபாத் பிரியாணி பச்சை மிளகாய் ஸ்பெஷல். அதை விட ஸ்பெஷல் தம் போடும் முறை. கறி அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதை மாவு கொண்டு மூடி தம்மில் வைப்பாங்க. அந்த கங்கு சூட்டில் சாதம் தம்மில் இருப்பது தான் ஹைதராபாத் பிரியாணியின் ஸ்பெஷல் வாசம், சுவைக்கு காரணம்.

20. தலச்சேரி பிரியாணி, மலபார் ஸ்டைல். இதில் பயன்படுத்துவது சின்ன வகை அரிசி. நம்ம ஊர் ஜீரக சம்பா போல. தம் போடும் போது தட்டை மூடி மேலயும் சூடான கறி துண்டு வைத்து தம் போடுவாங்க.

21. வாணியம்பாடி பிரியாணி ஆல்மோஸ்ட் ஆம்பூர் பிரியாணி போல தான், ஆனால் ஆம்பூர் பிரியாணி சுவை கூட இருக்குறதா தோணும். ஆர்காட் நவாபுகள் அறிமுகப்படுத்தியவை.

22. சிந்தி பிரியாணி பாகிஸ்தானி ஸ்டைல்.

சில வகை பிரியாணியில் முஹல் போன்றவற்றில் வெங்காயத்தை நிளவாட்டில் நறுக்கி நெய்யில் அல்லது எண்ணெயில் சிவக்க வறுத்து எடுத்து பிரியாணியில் தூவுவாங்க. கொஞ்சம் இனிப்பான சுவை தரும். இப்படி பிரியாணி ஒவ்வொன்னு ஒவ்வொறு வகையில் சிறப்பானவை. எல்லா வகையும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. ஆம்பூர் பிரியாணி பிடிக்கிறவங்களுக்கு செட்டிநாட்டு பிரியாணி சுவையா தெரியாம போகலாம். நான் இங்க சொல்லி இருக்குறது ஓரளவு பிரபலமான சில பிரியாணி வகைகளை மட்டுமே. இன்னும் எத்தனையோ வகையான பிரியாணி இருக்குங்க.

செய்து பார்த்தா உங்களுக்கு ஒவ்வொன்னும் ஒரு சுவையா தெரியும் :)

பிரியாணி எந்த நாட்டில் இருந்து வந்ததோ... அதுக்கு ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லி, எங்க நாடு தான் பிரியாணிக்கு தாய் வீடுன்னு சொல்வாங்க. அது எந்த நாட்டில் இருந்து வந்தாலும் நம்ம வீட்டில் செய்து பரிமாறும் போது நம்ம ஊர் பெண்களுக்கே உள்ள அதீத அன்பும், பொறுமையும் கலந்து சுவையான உணவா அமையும். எனக்கு பிடிச்ச விஷயம்.. “Don't practice until you get it right. Practice until you can't get it wrong." அதனால் விடாம ட்ரை பண்ணுங்க... பிரியாணி எப்பவுமே சூப்பரா வரும் என்ற நிலைவரை. ஆல் தி பெஸ்ட். ;)

5
Average: 4.6 (14 votes)

பனை ஓலைக் கொழுக்கட்டை

திருக் கார்த்திகை என்றதும் தீபத்திற்கு அடுத்து நம் நினைவுக்கு வருபவர் பனை ஓலை மணம் வீச‌ வரும் மாண்புமிகு கொழுக்கட்டையார் தான்.

முன்பு வயலிலுள்ள‌ பனையில் நல்ல‌ இளங்குருத்து ஓலையாகப் பார்த்து வெட்டி எடுத்து வருவார்கள். இப்போது ஓலையை விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். இங்கே 20 ரூபாய்க்கு ஓலை வாங்கினால் போதும். அது ஒரு கிலோ அரிசிக்கு போதுமானது. இதிலிருந்து சுமார் 35 கொழுக்கட்டைகள் தயாராகும்.

கார்த்திகை அன்று மாவு மிஷினில் ரொம்பக் கூட்டமாக‌ இருக்கும். எனவே, முன் தினமே பச்சரிசியை ஊறவிட்டு துணியில் விரித்து லேசாக‌ ஈரத்தைப் போக்கி அந்த‌ ஈர‌ அரிசியை புட்டுக்கு அரைக்கும் பக்குவத்தில் அரைத்து கொள்ளுங்கள். மிகவும் நைசாக‌ அரைக்கக் கூடாது.

அரைத்த‌ மாவை லேசாக‌ வறுத்து சலித்து கட்டியை நீக்கிக் கொள்ளலாம் அல்லது மாவை ஆவியில் வேக‌ வைத்து கட்டியை உதிர்த்து தாம்பாளத்தில் கொட்டி காற்றாட‌ உலர்த்தி வைத்துக் கொள்ளலாம்.

வறுத்த‌ மாவை விட‌ ஆவியில் வேக‌ வைத்த‌ மாவில் கொழுக்கட்டை மிகவும் மிருதுவாக‌ வரும்.

ஆனால், வறுத்த‌ மாவை ரொம்ப‌ நாட்கள் கெடாமல் டப்பாவில் இட்டு பத்திரப்படுத்தலாம். வேக‌ வைத்த‌ மாவு வெகு நாட்கள் வராது. விரைவில் பயன்படுத்தி விட‌ வேண்டும்.

இப்போது மாவு ரெடி
பச்சரிசி = 1 கிலோ (மாவாக்கவும்)
வெல்லம் = 1/2 கிலோ (நீரில் கரைத்து வடிகட்டவும்)
தேங்காய் = 1 (துருவிக் கொள்ளவும்)
சிறுபருப்பு = 100 (வறுத்துக் கொள்ளவும்)
ஏலம், சுக்கு = சிறிது (பொடி செய்யவும்)

அனைத்தையும் கலந்து மாவு பிசைந்து கொள்ளவும்.

பனையோலை கொத்தாக‌ கிடைக்கும். அதை மாவு வைப்பதற்கு ஏற்ப‌ ஒவ்வொன்றாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும். தென்னை ஓலையைப் போல‌ ஒவ்வொரு இதழையும் பிரிக்க‌ வேண்டும். பின்னர் அதனை 15 செ. மீ. நீளத்திற்கு வெட்டிக் கொள்ள‌ வேண்டும். சிலவற்றை கொழுக்கட்டையை கட்டுவத‌ற்கு கயிறு போல‌ மெல்லிசாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும்.

நறுக்கிய‌ துண்டில் மாவை திணித்து மற்றொரு துண்டால் மூடிக் கட்ட வேண்டும்.

பெரிய‌ குக்கரில் ஒரு செம்பு நீரை ஊற்றி அதில் வேஸ்டான‌ ஓலைதுண்டுகளைப் போட்டு அதன் மீது கொழுக்கட்டைகளை நிறுத்தி வைக்க வேண்டும். விசில் வந்த‌ பின் 20 நிமிடம் ஆனதும் எடுத்தால் பனையோலை மணம் வீசும் சுவையான‌ கொழுக்கட்டை ரெடி. சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க‌ தோழிகளே.

அவற்றை எடுத்து தாம்பாளத்தில் வைத்து மறுதினம் ஒரு கவரில் அடுக்கி ஃப்ரிஜில் ஓலையுடனே வைத்திருந்து சாப்பிடலாம்.

கொழுக்கட்டையை கருப்பட்டி, சர்க்கரையிலும் செய்வார்கள். கருப்பட்டியில் செய்வது கொஞ்சம் டார்க் கலராகவும் , சர்க்கரையில் செய்வது வெள்ளையாகவும் இருக்கும்.ஆனால், வெல்லம் தான் பிரௌன் கலராக‌ அலாதியான‌ சுவையாக‌ இருக்கும்.

சோளமாவு கொழுக்கட்டை.

வெள்ளை சோளத்திலும் அம்மா கொழுக்கட்டை செய்வாங்க‌. சோளத்தை மிஷினில் கொடுத்து புட்டு மாவு போல‌ பரபர‌ என‌ அரைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் மாவை வேக‌ வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி அதே முறையில் செய்ய‌ வேண்டியது தான்.

சோள‌ மாவு ஓலைக் கொழுக்கட்டை ரொம்ப‌ மிருதுவாக‌ இருக்கும். மிகுந்த‌ சுவையாகவும் இருக்கும்.

கார்த்திகைப்பொரி என்று இந்த‌ சீசனில் விற்பனைக்கு வரும். அதை வாங்கி வெல்லப் பாகில் நெய் தடவி உருண்டை பிடிக்க‌ பொரி உருண்டை கிடைக்கும்.

மேலும் விளக்குகளை கொஞ்சம் டிரென்டியா அலங்கரித்து உங்கள் கைவண்ணத்தைக் காட்டலாம்.

பழைய‌ சி.டி. மீது ஓரத்தில் கோலிக்குண்டுகளை வரிசையாக‌ அடுக்கி ஒட்டுங்கள். மேலும் மேலும் மூன்றடுக்கு கோலிகுண்டு ஒட்டவும். நடுவில் விளக்கேற்றி வைத்தால் ஒளி கோலியில் பட்டு சிதறி நாற்புறமும் டாலடிக்கும்.
குந்தன் கற்கள் வைத்தும் சி. டி. யை அலங்கரிக்கலாம். தரையிலும் எண்ணெய் வழியாது தடுக்கலாம். விளக்கும் ஜொலிக்கும்.

செய்து பார்த்து, சுவைத்துப் பார்த்து சொல்லுங்களேன் தோழிகளே.:)

5
Average: 5 (4 votes)

சின்னச் சின்ன டிப்ஸ் - 1

என்றோ எங்கோ தட்டி வெச்ச பதிவு வெகு நாட்களா இமா சொல்லியும் போடாம மறந்து போயிருந்தேன், இன்னைக்கு க்றிஸ் நினைவுபடுத்தி போட வைக்கிறாங்க :) தேன்க்யூ இமா & க்றிஸ். பூரி வரல பொங்கல் வரலன்னு படிச்சதோட எஃபக்ட் தான் இந்த பதிவு ;) எனக்கு இட்லி தவிற மற்றவர் எல்லாம் அம்சமா வருவாங்க. அதனால் பார்ட்டிக்கு இட்லி தவிர வேறு யாரையாவது தான் எப்பவும் ப்ளான் பண்ணுவேன். இப்போ இட்லியும் மல்லி பூ போல அம்சமாத்தான் வருது சீதா புண்ணியத்துல. எனக்கு தெரிஞ்ச சில டிப்ஸ்... அம்மா எனக்கு ஆரம்பத்துல சொன்னது.

சப்பாத்தி & பூரி:

1. சப்பாத்தி மாவு நிறைய தண்ணீர் விட்டு மிருதுவா பிசையணும். பூரி மாவு சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியா இருக்கணும். ரொம்ப மிருதுவா இருக்க தேவை இல்லை. பூரியோ சப்பாத்தியோ மாவை நல்லா பிசைய வேண்டியது முக்கியம். மாவு எடுத்து உருட்டினா க்ராக் இல்லாம வழு வழுன்னு ஒண்ணு போல பந்தா உருட்ட வரணும். அப்ப தான் மாவுக்கு தேவையான நீர் ஊற்றி இருக்கோம், நல்லா பிசைந்து இருக்கோம் என்று அர்த்தம்.

2. பூரி மாவு பிசைஞ்சதும் சுடலாம். ஊற வைக்க தேவை இல்லை. ஆனால் சப்பாத்திக்கு மாவை பிசைந்து 1 மணி நேரம் மூடி வெச்சிருந்து சுட்டா நல்லா சாஃப்ட்டா வரும்.

3. பூரிக்கு முக்கியமானது எண்ணெயின் சூடு. சரியான அளவில் சூடாகி இருக்க வேண்டும். கடாய் கொஞ்சமாவது அகலம், ஆழம் உள்ளதா இருக்கட்டும். சில நேரம் பூரி உள்ள விட்டதும் எண்ணெய் பொங்கிடும். முக்கியமா நல்லெண்ணெய் பயன்படுத்துறவங்க இந்த பிரெச்சனையை சந்திச்சிருப்பீங்க. சரியான சூடில்லாத எண்ணெயில் பூரி/வடை எல்லாம் போட்டா பொங்கும். அதனால் ஆழமான கடாய் தான் சரி.

4. மாவை திரட்டும் போது கொஞ்சமே கொஞ்சம் சப்பாத்தியை விட திக்கா இருக்கலாம். கூடவே மாவை சின்ன சின்ன உருண்டையா எடுத்து திரட்டுங்க உங்க கடாய் அகலத்துக்கு ஏற்றபடி.

5. எண்ணெயில் சிறு மாவு துண்டை போட்டால் ஒரு சில நொடியில் மேலே எழும்பி வர வேணும்... அது தான் எண்ணெய் பதம்.

6. பூரி வெள்ளையா இருந்து உப்பாம எண்ணெய் குடிச்சு வந்தா தீ பத்தல / எண்ணெய் சூடு பத்தலன்னு அர்த்தம். கூட்டி வெச்சு கொஞ்சம் எண்ணெய் காய்ஞ்சதும் போடுங்க.

7. பூரி போட்டதும் சிவந்து எண்ணெய் குடிச்சு தட்டை போல வந்தா தீ அதிகம் / எண்ணெய் சூடு அதிகம்னு அர்த்தம். தீயை குறைச்சு வைங்க.

8. ஒரு பூரிக்கும் இன்னொரு பூரிக்கும் நடுவில் ஒரு பூரி தேய்க்கும் நேரம் கேப் விடலாம்... எண்ணெய் சூடு ஆக சரியா இருக்கும். ஒரு பூரியை சுட்டு எடுத்ததும் எண்ணெய் கொஞ்சம் சூடு ஆறி இருக்கும், மீண்டும் பதமான சூடு வர ஒரு பூரி தேய்க்கும் நேரம் சரியா இருக்கும்.

9. பூரிக்கு மட்டும் எண்ணெய் சூடு மெயிண்டெய்ன் பண்ணனும். முதலில் வெச்ச தீயை அப்படியே கடைசி வரை வெச்சிருக்க இயலாது. அடிக்கடி தீயை சரி பண்ணணும், எண்ணெயின் சூடுக்கு ஏற்றபடி.

10. இப்படி செய்தா பூரிக்கு மாவை மைதா / கோதுமை / மல்டிக்ரெய்ன் என எதில் வேணும்னாலும் செய்யலாம், புஸ்ஸுன்னு தான் வரும்.

11. மிருதுவா பிசைந்த மாவில் சப்பாத்தி செய்தால் நிச்சயம் சப்பாத்தி ஒரு முழு நாள் ஆனாலும் சாஃப்ட்டாவே இருக்கும். எங்க வீட்டில் வெளியே போனால் சப்பாத்தி தான் அதிகமா செய்து எடுத்துட்டு போவேன். இரண்டு நாள் ஆனாலும் கெடாது, சாப்பிட சாஃப்டா இருக்கும்.

12. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சமா எண்ணெய் சேர்த்து பிசைந்தாலும் சப்பாத்தி சாஃப்ட்டா வரும். சூடான தண்ணீர் விட்டு பிசைந்தாலும் சாஃப்ட்டா வரும்.

13. சப்பாத்தி சுடும் போது தீ மிதமா இருக்கணும். அதிக சூடு, அல்லது சிறு தீயில் வைத்து சுட்டால் சப்பாத்தி சாஃப்ட்டா வராதுங்க. ஆற ஆற ஹார்டா ஆகிடும்.

14. நான் சப்பாத்தியா போடுவதை விட ஃபுல்காவா போடுவது அதிகம். எண்ணெய் விடவே மாட்டேன் துளியும், ஆனால் சாஃப்ட்டோ சாஃப்ட்டா இருக்கும். தேச்சு கல்லில் போட்டு மேலே சிறு சிறு முட்டை போல எழும்பியதும் திருப்பி விடுங்க. அடுத்த பக்கம் சிவந்ததும் எடுத்து முதல்ல கல்லில் பட்ட பக்கம் இப்போது தீயில் படும்படி நேரடியா அடுப்பில் போட்டு ஊப்பி வந்ததும் எடுக்க வேண்டியது தான். புஸ்ஸுன்னு பூரி போல உப்பின சப்பாத்தி.... ம்ம்... கூட 2 கண்டிப்பா உள்ள போகுமாக்கும்.

பொங்கல்:

1. 1 கப் அரிசி 1/4 கப் பருப்புக்கு 4 1/4 கப் நீர் ஊற்ற வேண்டும்.

2. உப்பு போட்டு குக்கரில் வெச்சு 1 விசில் விட்டு பின் 10-15 நிமிஷம் சிம்மில் வைத்து எடுக்கலாம்.

3. தாளிக்க எண்ணெய் + நெய் சேர்த்து 2 - 3 மேஜைக்கரண்டி பயன்படுத்தலாம். இதை விட கம்மியாவும் பயன்படுத்தலாம், உங்க விருப்பம்.

4. மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பெருங்காயம். இது தான் நான் வழக்கமா தாளிக்க பயன்படுத்துறது. வாசம் சூப்பரா இருக்கும்.

5. தாளிச்சு கொட்டி கிளறியதும் குக்கரை மூடி சிம்மில் ஒரு 5 நிமிஷம் வெச்சு எடுத்தா பொங்கல் அருமையா இருக்கும்.

6. பொங்கல் புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் தான் சுவை அதிகம்.

7. முந்திரி வறுத்து சேர்ப்பதும் பண்ணலாம் விரும்பினால். பொங்கல் எப்பவுமே சூடா பரிமாறணும், ஆற ஆற கொஞ்சம் கெட்டியாகிடும். முக்கியமா பச்சரிசி பயன்படுத்தும் போது கெட்டியாகும் தன்மை அதிகமா இருக்கும். இதே முறையில் புழுங்கல் அரிசி, குதிரைவாலி, சாமை, வரகரிசி என எல்லாத்துலையும் பொங்கல் சுவையா பண்ணலாம்.

பிரியாணி:

1. வீட்டில் தயாரிக்கும் மசாலா தான் சுவை. கடைகளில் வாங்குவது அவசரத்துக்கு மட்டுமே.

2. நான் பயன்படுத்தும் கரம் மசாலா காம்பினேஷன்: 1 சின்ன பிரியாணி இலை, 1 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 பச்சை ஏலக்காய், 1/2 கறுப்பு ஏலக்காய், 1/4 துண்டு ஜாதிக்காய், ஒரு சிட்டிகை சோம்பு, 1/4 துண்டு நட்சத்திர மொக்கு, 1/4 துண்டு ஜாதிபத்திரி. இதை லேசான தீயில் வைத்து வறுத்து எடுத்து கையால் பொடி செய்து பிரியாணி முக்கால் பதம் வெந்ததும் மேலே தூவி, எலுமிச்சை பிழிந்து தம்மில் போடுவேன்.

3. கடைசியா எடுத்து கிளறிவிட்டு பரிமாறலாம். இந்த காம்பினேஷன் வாசமே அருமையா இருக்கும். ட்ரை பண்ணிப்பாருங்க.

4. பிரியாணி பண்ணும் போது சிக்கன் செய்தா தண்ணி விடாம வேக வைங்க. அது தான் சுவை.

5. மட்டன், காய்கறி என்றால் அதை வேக வெச்ச நீரை பிரியாணியில் சேருங்க, அது தான் சுவை.

6. பிரியாணி எப்பவுமே சாப்பிட 2 மணி நேரம் முன்பே செய்துட்டா சுவை ரொம்ப நல்லா இருக்கும். பார்ட்டிக்கு எல்லாம் மதியமே பிரியாணி பண்ணி 3/4 பதம் வெந்ததும் அடுப்பை விட்டு எடுத்து அலுமினியம் ஷீட் போட்டு டைட்டா மூடி வெச்சுடுவேன். மாலை பரிமாற 1/2 மணி நேரம் முன் எடுத்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து எடுத்து கிளறுவேன். பதமா வெந்து மசாலா கறியில் நல்லா ஊறி சுவையா இருக்கும் பிரியாணி. வீட்டிலும் இது போலவே சீக்கிரமா செய்து ஊற விட்டுட்டா டேஸ்ட் நிச்சயம் நல்லா இருக்கும். எலுமிச்சை சாதம், புளி சாதம் எல்லாம் கிளறி கொஞ்ச நேரம் வெச்சிருந்தா எப்படி சாதத்தில் அதன் சுவை கூடுதோ, அப்படி தான் பிரியாணியும்.

இதெல்லாம் நான் ஃபாலோ பண்ற சின்ன சின்ன விஷயம்... யாருக்காவது பயன்படுமென்றால் மகிழ்ச்சி :) தப்பா இருந்தா கோச்சுக்காம உட்டுடுங்க. வனி பாவம், அவளும் இப்ப தான் கத்துக்குறா கொஞ்சம் கொஞ்சமா.

5
Average: 4.8 (8 votes)

வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்!!

வாங்க!! வணக்கோ_()_ :)

எல்லாரும் சௌக்கியந்தானுங், ஊர்ல நல்ல மழையாட்டம் இருக்குங்.. டேம்ல தண்ணி வரத்து நல்லா இருக்கும்போல தெரிதுங். இந்த முறை நடவுக்கு தண்ணி பஞ்சம் இருக்காது இல்லிங்களா? இப்படியாகப்பட்ட பேச்சைத்தான் ஊரில் மழைக்காலங்களில்அதிகம் கேட்டதுண்டு.

ஆனால் நகர்புறத்திலோ மழையினால் ஏற்பட்ட பாதிப்பு இதோ.. வீரபாண்டிய கட்டபொமன் இருந்திருந்தால் இப்படித்தான் சீறி இருப்பார்.

" வானம் பொத்துக்கிச்சு
பூமி பிச்சுக்கிச்சு
உனக்கேன் கொடுக்கணும் வரி
எங்களுடன் சாக்கடை நீரில் நடந்தாயா?
வேலைக்குச் செல்லும் எங்கள் குல பெண்களுக்கு
குடைதான் பிடித்தாயா?
யாரைக் கேட்கிறாய் வரி
எதற்கு கேட்கிறாய் வரி

நோட் திஸ் பாயிண்ட் ஆல் பீப்பிள், நாஞ் சொல்லல இந்த வசனத்தை நம்ம வீரு இருந்திருந்தா இப்படிலாம் சொல்லி இருப்பார்னு சொல்ல வாரேன்.

ஃபேஸ்புக்ல எதுக்கு லைக் போடணும், எதுக்கு கம்னு வரணும்னு யோசிக்கிற மூளை இப்படிலாம் வீர வசனம் பேச வெக்கும்னு நினைக்கிறீங்க.

சரி அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க, இப்ப இந்த படத்தில இருக்கும் வடைய, சாரிங்க கட்லெட் ( எண்ணைய்ல போட்டு பொரிப்பவை எல்லாமே எங்கள பொறுத்தவரை வடைதானுங்கோ, அதுனாலதான் லேசா டங் ஸ்லிப் ஆகிடுச்சு) எப்படி செய்வதுனு சொல்லிக் கொடுக்கப் போறேன்.

எதாச்சி வேலையா இருந்தீங்கனா போட்டது போட்டாப்பில அப்பிடியே ஓடியாங்கோ!! இந்த அரிய வாய்ப்பு போனா வராது!!

இதுக்கு மூலப்பொருள் சோயா சங்க் (சோயா புண்ணாக்குதானுங், நிசமாவே அதுதான் திட்டறேனு நினைக்கப்படாது), இஞ்சி சிறு துண்டு, பூண்டு 10 பல்லு, பச்சைமிளகாய் 2 (அவியவிய காரத்துக்கேத்தாப்பில போட்டுக்கோங்க).
வழக்கம் போல சோயா உருண்டைய எப்படி குளிப்பாட்டுவீங்களோ அப்பிடியே செய்துடுங்க. முதல்ல சுடுநீர்க்குளிய, பொறவு ரெண்டு தடவ பச்ச தண்ணில முக்கி எடுங்க. அப்பரமா சுத்தமா தண்ணி இல்லாம புழிஞ்சு எடுத்து வைங்க.
மேலே சொல்லி இருக்கு எல்லாத்தையும் மிக்ஸில போட்டு நல்லா அரைச்சுடுங்க.

அரைச்ச கலவையோட பொடியா நறுக்கிய பெரியவெங்காயம் 2, கறிவேப்பிலை 4 இணுக்கு, அதையும் நல்லா பொடிப்பொடியா அரிஞ்சுக்கணும். மல்லி தழை அதையும்...பொ.பொ. அரிஞ்சுக்கணும்.
இதுக்கூட ஒரு சிறு கரண்டி மைதாமாவு, தேவையான அளவு உப்பு போட்டு கலந்துக்கணும்.
முக்கியமான விசியம் தண்ணியே தேவையில்லை.

வட சட்டில எண்ணைய காயவெச்சு, இந்த உருண்டைகளை ரொட்டித்துள்ள பொரட்டி எடுத்து போட்டு எடுத்தால் சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்.
இப்பதான் போட்டு எடுத்து சுடச் சுட போட்டிருக்கேன், சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க.

இது எங்க தோட்டத்தில பூத்த அடுக்குமல்லி, செடி வெச்சு ரொம்பநாளாச்சு, இன்னிக்குத்தான் அதிகபட்சமா நாலு பூ பூத்திருக்கு. பறிச்சு வெச்சுக்கோங்க தோழீஸ் :)
மீண்டும் சந்திப்போம். நன்றி!! வணக்கம் _()_ :)

5
Average: 5 (3 votes)