உணவு

என்ன காய்??!

கோவக்கா ,வெண்டைக்கா ,பாவற்க்கா இது என்ன தோசைக்காய்.
இந்த காய்க்கு என்ன பேருன்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்.
அப்ப இந்த காய் தெரியுமான்னு கேட்கறிங்களா , இரண்டுவாரத்துக்கு முன்னாடிதான் இந்தகாயை என் கண்ணால பார்த்தனே .
வழக்கம்போல வெளிய இரவு தோழியுடன் அரட்டை .அப்ப ஒரு சேட்டம்மா காய் வாங்கின்னு வீட்டுக்கு போனாங்க .அப்பதான் இந்த காயை நான் என் கண்ணால பார்த்தேன் .இது என்ன அப்படின்னு கேட்டதுக்கு இதோட பேரு தமில்ல நமிக்கி தெரிலே ,ஆனா சமிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்க .எப்படி செய்யணும்னு சொன்னாங்க ,நான் மறந்துட்டேன் . தால் மாதிரி சப்பாத்திக்கு நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்க (ரேவதிக்கு எல்லாமே பிளாஸ்பேக் தான் )

இன்னைக்கு காலைல கடைக்கு காய் வாங்க போன் இந்தகாய் இருந்தது . எங்க ஊருல குடைமிளகாய் கிடைக்கறதே பெரிய விஷயம் .சரி கிடைக்கும்போது வாங்கிக்குவோம்ன்னு நம்ம அறுசுவையை நம்பி வாங்கி வந்துட்டேன் . எப்படியும் ரெசிபி கிடைச்சுடும்ன்னு கிடைச்சுடுச்சு பாருங்க நமக்கு .
அப்பறம் என்ன செய்து பார்த்துட்டு சாப்பிட்டாச்சு .இதை கட் பண்ணா கிர்னி பழத்தோட குட்டி வெர்ஷன் மாதிரி இருந்துச்சு .
விதைகளும் அப்படிதான்.

http://www.arusuvai.com/tamil/node/23376?page=1

இந்த ரெசிபி பெயர் .தோசைக்காய்பப்பூ

இதோட டேஸ்ட் கிள்ளி போட்ட சாம்பார் மாதிரி இருந்துச்சு .

நம்ம தோழிஸ் கூட எப்பயாவது பேசும்போது அது என்ன கிள்ளி போட்டு சாம்பார்ன்னா என்னன்னு கேட்கறாங்க .ஆமா சென்னை தோழிகளுக்கு தெரியும்ல என்ன சாம்பார்ன்னு

ஆமா இந்த காய்க்கு ஏன் தோசைக்காய்ன்னு பேரு வந்துச்சு .யாருக்காவது தெரியுமா...

5
Average: 4.6 (5 votes)

சூப்பர் டூப்பர் ஈசி ரெசிப்பீஸ் (1)

வந்துட்டேன்....வந்துட்டேன்.. உங்க சுமி வந்துட்டேன்.. அப்படி உங்களை எல்லாம் என் தொந்தரவு இல்லாம நிம்மதியா இருக்க விட்டுடுவேனாக்கும்...;) வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து நான் சமைச்ச சூப்பர் டூப்பர் ஈசி ரெசிப்பி பத்தி தெரிஞ்சுக்கலாம்., வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே போல சமைத்து போரடிக்காமல் புதுமையான வித்தியாசமான குறிப்புகளை ஈசியாக செய்து கொடுத்து பாராட்டுக்களை வாங்க எல்லோரும் இங்க ஆஜாராகுங்க பார்க்கலாம்...:)
முதல்ல இருக்கிறவர் நம்ப அறுசுவையின் சமையல் ராணி வனியோட பான் போகிபா.. பிரட்டும் தேங்காய்ப்பாலும் டேட்ஸ் மற்றும் நட்ஸும் சேர்த்து செய்யும் ஈசியான ஸ்வீட் ரெசிப்பீ. மாலத்தீவோட முக்கிய ரெசிப்பி.. நான் இந்த ரெசிப்பியை குறைந்தது 10 முறையாவது செய்துருப்பேன். அதுக்காகவே பிரெட்ட ஸ்டாக் வெச்சுக்குவென். அம்புட்டு டேஸ்ட். குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும்.எல்லா பொருளும் இருந்தால் சீக்கிரம் செய்து விருந்துக்கு வரவங்களை அசத்த சுலபமான குறிப்பு. நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க...வீட்டில இருக்கிறவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
http://www.arusuvai.com/tamil/node/21457

இரண்டாவதா இருக்கிறவர் நம்ப அருளோட பருப்பு சாதம் . கொங்கு நாட்டு ஸ்பெஷல். நான் புகுந்த வீடு ஈரோடுன்னாலும் அங்க செய்யும் பருப்பு சாதம் இன்னும் வேற மாதிரி இருக்கும்.ஆனா இந்த ரெசிப்பிய நான் ட்ரை பண்ணினதுக்கு அப்புறம் என் புகுந்த வீட்டோட பருப்பு சாதத்தை பத்தி நினைக்கக்கூட முடியல. ( இந்த ரெசிப்பியை மறந்தாத்தானே அதை நினைக்கிறது) இப்போ எங்க வீட்டில பருப்பு சாதம்னாவே அருளோடஅரிசி பருப்பு சாதம் தான். முக்கியமா குட்டீஸ்க்கு லன்ச் பாக்ஸ்க்கு சீக்கிரமா செய்து கொடுத்து அசத்திவிடலாம்.தொட்டுக்க வெறும் அப்பளம் மட்டும் போதும்.நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/24510

மூணாவதா ஜம்முன்னு கலரா இருக்கிரவர் நம்ப மீனாவோட சோயா புளிக் குழம்பு. கலரைப் போலவே இவரும் சூப்பரான டேஸ்ட்டுல இருப்பார். இதுக்கும் முன்னாடி நான் சோயாவில் ப்ரை, பிரியாணி தான் செய்து இருக்கேன். இப்போ மீனாவோட உபயத்தில புளிக் குழம்பும் செய்து பழகிட்டேன். புளியில சோயா நல்லா ஊறி சாப்பிட அப்படியே நாக்குல.... இதுக்கும் மேல நான் சொல்றதவிட நீங்களே இந்த ரெசிப்பியை ட்ரை பண்ணிப் பாருங்க.. விட மாட்டீங்க. காய்ச்சல், சளி பிடித்து விடும் சமயம் இந்த குழம்பு செய்து சாப்பிடா மரத்துப்போன நாக்குக்கு செமையா இருக்கும். அதுவும் செல்வி அம்மாவோட பள்ளிபாளையம் சிக்கனோட செம காம்பினேஷன்..:) ( சிக்கன் போட்டோ அடுத்த பதிவில போடறேன்)
http://www.arusuvai.com/tamil/node/28535

இப்போ சொல்லுங்க தோழீஸ்.. இதெல்லாம் சூப்பர் டூப்பர் ஈசி ரெசிப்பி தானே.. இன்னும் நிறைய இருக்கு, எல்லாத்தையும் ஒரே பதிவுல போட்டா நீங்க எல்லாரும் பயந்துடக் கூடாதில்ல...;) அதனால மீதியெல்லாம் அடுத்த பதிவில வரும்...:)
எல்லா ரெசிப்பிக்கும் லிங் கொடுத்து இருக்கேன். எல்லாரும் செய்து பார்த்து எப்படி இருந்துதுன்னு அந்த அந்த குறிப்புக்கு கீழே பதிவு போட்டுடுங்க...:) அது தான் எனக்கு சந்தோசம்..:) இப்போ நான் வரட்டா... டாட்டா...:)

5
Average: 5 (5 votes)

குக் குக் குக்கீஸ் !

எனக்கு நியாபகம் இருக்க அளவில் நான் இதுவரை இனிப்பான குக்கீஸ் செய்தது இல்லை. ஒரு சில முறை மசாலா பிஸ்கட் செய்திருக்கிறேன் அவனில். எப்போதோ மைக்ரோவேவில் குக்கீஸ் செய்தேன், அதுவும் யாரோ சொல்லிக்கொடுத்தது. மற்றபடி வனிக்கு குக்கீஸ் பேசிக்ஸ் கூட தெரியாதுன்னு தான் சொல்லனும். பாபு அண்ணா கொடுத்த கொத்தமல்லி பிஸ்கட் பார்க்க ஆசையாக இருக்கும். இதுவரை ட்ரை பண்ணதில்லை. ஆனா சமீபத்தில் முகபுத்தகத்தில் ரேணு (பூனைக்குட்டி ரேணு) போஸ்ட் பண்ண கஸ்டர்ட் குக்கீஸ் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன். அதை விட அவங்க இதுவரை கைவினை குறிப்பு தான் தந்தாங்க, சமையல் குறிப்பு கொடுத்ததில்லைன்னதும் இன்னுமே ஆர்வம் அதிகமாயிட்டுது. அவங்களை பிடிச்சு ஒரு வழியா அவங்ககிட்ட இருந்து கஸ்டர்ட் குக்கீஸ் ரெசிபியை அறுசுவையில் வாங்கிட்டேன். அன்றிலிருந்து பல நாட்களா அதை செய்ய ஆசை... பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை, அந்த அளவுக்கு அனுபவம் இல்லாத வேலை, சொதப்பிடுவோமோ என்ற குழப்பத்திலேயே இவ்வளவு நாள் போயிடுச்சு.

இப்போ கடந்த வாரத்தில் வாணியின் கீ குக்கீஸ் வந்ததும் நான் ரொம்பவே டென்ஷனாகிட்டேன். எப்படியாவது இந்த குக்கீஸை செய்துடனும்னு தோனுச்சு. ஆனா பாருங்க ரேணு குறிப்பை செய்யாம இதை செய்ய மனசு வரவே இல்லை. அடிச்சு பிடிச்சு வாங்கி வெச்சிருந்த கஸ்டர்ட் பவுடரை கண்டு பிடிச்சேன். இதோ... ஆகா ஓகோ!! வீட்டில் எல்லார் பாராட்டையும் வனியே வாங்கிகிட்டேனே ;) ரேணு... போனா போகுதுன்னு அந்த பாராட்டில் கொஞ்சம் உங்களுக்கும் பங்கு :P ஹஹஹா. ரேணு... சூப்பர் டூப்பர் ஹிட் என் முதல் குக்கி ரெசிபி. நான் கேட்டதும் மறுக்காம எனக்காக மெனகிட்டு மீண்டும் செய்து படமெடுத்து அனுப்பினீங்க... எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா எனக்கு? அந்த மகிழ்ச்சியை இன்று உங்களுக்கும் திரும்ப தர எண்ணி இதோ கஸ்டர்ட் குக்கீஸ் புகைப்படம். கலர்ஃபுல். ஐ ஜஸ்ட் லவ் தி குக்கீஸ். மக்களே... அவைசியமா நேரம் கிடைக்கும் போது இந்த குக்கியை ட்ரை பண்ணுங்க. ஆக்‌ஷுவலா நேரம் தேவை இல்லை... 1/2 மணி நேரம் போதும் முழுவதும் செய்து முடிக்க.

http://www.arusuvai.com/tamil/node/27977

அடுத்து உடனே கை துருதுருன்னு வாணி குறிப்பையும் அடுத்த நாளே எடுத்துடுச்சு. இது இன்னும் ஈஸி. நான் நினைச்சேன் நெய் இவ்வளவு ஊற்றினால் சாப்பிட எப்படி இருக்கும்னு? ஆனா உண்மையில் அவங்க சொன்ன மாதிரி அப்படியே யம்மி... ஸ்மூத்தா... வழுக்கிட்டு போகுதுங்க. ரொம்பவே ஈசி குறிப்பு. வாணி... அந்த டீயோட உங்க குறிப்பு ஃபோட்டோ என்னை அப்படியே கொண்டு போய் கிச்சனில் விட்டுடுச்சு. செய்தே ஆகனும்னு. உண்மையில் உங்க குறிப்பை பார்த்து தான் கஸ்டர்ட் குக்கீஸை உடனே செய்தாகனும்னு முடிவு பண்ணேன். இரண்டு அசத்தலான குறிப்பை கத்துகிட்டேன் இப்போ. நீங்க 15 நிமிஷம் கொடுத்திருந்தீங்க, எனக்கு 20 நிமிஷம் எடுத்தது என் அவனில். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. வீட்டில் எல்லோரும் “குக்கீஸ் கடையில் வாங்கினது போலவே இருக்கு. சூப்பர்.”னு பாராட்டிட்டாங்க. தேன்க்ஸ் எ லாட் வாணி :) இனி அடிக்கடி செய்து ஸ்டோர் பண்ணிக்குவேன் இந்த குக்கீஸ் எல்லாம். தோழிகள் எல்லோரும் கட்டாயம் செய்து பாருங்க... முன்ன பின்ன குக்கீஸ் செய்யாதவங்களுக்கு கூட சொதப்பாம வரும்.... இங்க வந்திருக்க குக்கீஸ்க்கு நான் கேரண்டி. ;)

http://www.arusuvai.com/tamil/node/28657

யாருடா இது மூன்றாவது ஒருத்தர்? ரீசண்ட்டா அறுசுவையில் இவரை பார்த்த மாதிரி இல்லையே!! எப்படி பார்த்திருப்பீங்க? இன்னைக்கு வனி தானே செய்து அனுப்பி இருக்கா குறிப்பை ;) இனிமேல் தான் வரும். ஹஹா... இப்ப தான் கோடு போட கத்துகிட்ட, அதுக்குள்ள ரோடு போட ஆசையா? அதான் வனி. ஒரு பேஸ் கிடைச்சா பெரிய கட்டடமே கட்டுவேனாக்கும். ராகி குக்கீஸ்.... இங்க வந்த நாளில் இருந்து கண்டோன்மண்ட் ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு பேக்கரியில் எனக்காகவே எப்போதும் இவர் வாங்கி வருவது. அதை வீட்டில் செய்தா எப்படி இருக்கும் என்று யோசிச்சேன். கஸ்டர்ட் குக்கீஸ், கீ குக்கீஸ்ல் இருந்து நான் கத்துகிட்ட பேசிக் டெக்னிக்ஸ் வைத்து செய்தது. சுவைத்து பாருங்க... நிச்சயம் முதல் முயற்சின்னு சொல்ல மாட்டீங்க. என்னாலயே நம்ப முடியல தான்... ஆனா நம்பனும். :) இதுக்கு லின்க் குறிப்பு வெளியான பின் தான் கொடுக்க முடியும்.

5
Average: 4.3 (6 votes)

அட... நாங்களும் பொரிப்போம்ல !!

இந்தா வந்துட்டேன்... இந்தா வந்துட்டேன். இந்த டயலாக்குக்கும் ”கூழ் வடகம்” குறிப்புக்கும் சொந்தக்காரர் நம்ம சீதா. அம்மணி எங்கிருந்தாலும் இங்குட்டு ஆஜராகும்படி கேட்டுக்கொள்கிறேன். ஹெஹ்ஹே.... நாங்களும் பொரிப்போம்ல வத்தலு. ;) இந்த வத்தலு எப்படி இருந்துச்சுன்னு சொல்றதுக்கு முன்னாடி வத்தலுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்குங்க, அந்த கதையை முதல்ல போட்டுக்காட்டிடுறேன். எல்லாரும் ரெடியா?

வனியும் வத்தலும் (1)

அன்றொரு நாள்... வனி புதுசா குடி வந்த வீடு இதுவரை இல்லாத மாடியோட உள்ள தனி வீடு. ஆகா!!! மொட்டை மாடி!! பார்த்ததில் இருந்து வனிக்கு வத்தல் போட ஆசை வந்துச்சாம். அறுசுவையை தலை கீழா பிரட்டிப்பார்த்து இருந்ததுலையே சுலபமான குறிப்பா தேடி எடுத்து புக் மார்க் பண்ணாங்க. சாதம் எல்லாம் மிச்சம் பண்ணி எடுத்து பிசைஞ்சு சின்ன வெங்காயம் எல்லாம் மெனக்கிட்டு உரிச்சு அரைச்சு... அட அட அடா!! வனி என்னா வேலை பார்த்தாங்க தெரியுமா? அப்ப தானே வத்தல் சுவையா இருக்கும்? அதுவும் சின்ன வெங்காயம் எல்லாம் போட்டு வத்தல்! அச்சோ... நினைக்கும் போதே ஜோடி போட்டுகிட்டு ரசம் சாதமும் (மனக்)கண்ணில் வந்து போதே!! எல்லாம் வாசமா அருமையா தான் வந்துச்சுங்க. அதை கிள்ளி கிள்ளி (வத்தலுக்கு வலிக்காம) அழகா எடுத்து ப்ளாஸ்டிக் கவரில் வச்சு, காய வெச்சு, அடுத்த நாள் அழகா பிரிச்சு தட்டில் வெச்சு, காய வெச்சு, வெய்யிலில் வனியும் காக்காயா காய்ஞ்சு (காக்கா குருவி வராம விரட்ட தான்)... ஒரு வழியா ஒரு வாரத்துக்கு அப்பறம் ஈரம் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு எடுத்தாங்க வத்தலை. வனியின் கஷ்டத்துக்கு சுவை பார்க்கும் நாளாச்சே! ரொம்ப ஆர்வமா இருந்தாங்க. சரின்னு எண்ணெய் எல்லாம் காய வெச்சு போட்டாங்க பாருங்க... வத்தல் கல்லு போல கடாயின் அடியில் உட்கார்ந்துகிட்டு வரவே இல்லையாம். அச்சசோ!!! ஆனா சிவந்து தானே இருக்குன்னு வனியும் ஆர்வம் தாங்காம எடுத்து எண்ணெய் வடிச்சுட்டு கடிச்சு பார்த்தாங்க... ;( இதுக்கு மேல சொல்ல வாயையே திறக்க முடியல தெரியுமா? ஆசை யார விட்டுச்சு? இன்னும் பலதை எடுத்து எண்ணெயில் போட்டும், பொரியாம கல்லு மாதிரி இருந்த ’சோற்று உருண்டையை’ (?! இனி என்ன பெரிய வத்தல்? அது தான் பொரியலயே!) பார்த்து கண்ணில் நீர் வந்துடுச்சுங்க வனிக்கு. அது கூட சேர்ந்து அவங்களும் தானே வெய்யிலில் காய்ஞ்சு வத்தலானாங்க? (சாரி, அவங்க மட்டும் தான் வத்தலானாங்க!) அட்மின் டீமை சாட்ல பிடிச்சு கேள்வியா கேட்டாங்க... அனுபவமுள்ள பெரியவர் எவரிடமேனும் ஏன் இப்படி ஆனதுன்னு சரியா விசாரிச்சு சொல்லுங்கன்னு. பாவம்!! ”உனக்கு குறிப்பு கொடுத்ததுக்கு, எங்களுக்கு இப்படி அசைன்மண்டா??!” ஆனா பாருங்க அவங்களுக்கு விடையே கிடைக்கல.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி

விடை இல்லா கேள்விகள் ஆயிரம்... அதில் ஒன்று எப்போது உங்களுக்கு வரும்னு இறைவனுக்கே வெளிச்சம்.
நாம என்ன தான் வவ்வாலா தொங்கி தலை கீழா அறுசுவையை பிரட்டினாலும் வத்தல் போட கொஞ்சம் புத்தியும் வேணும் ;(

சரி... அந்த வனி கதையை விடுங்க. இப்போ அடுத்த வனி கதைக்கு வருவோம். ரெடியா கதை கேட்க?

வனியும் வத்தலும் (2)

அன்றொரு நாள்... ஒரு ஊருல வனி வனின்னு (ஒரே வனி தான்) ஒரு பொண்ணு. அவங்களுக்கு சீதா சீதான்னு ஒரு ஃப்ரெண்ட். அவங்ககிட்ட பேசிகிட்டு இருந்தப்போ பொண்ணு வீட்டுக்கு, மகன் வீடுக்கு எல்லாம் வத்தல் போட திட்டமிட்டதை யோசிக்காம வனிகிட்ட வாயவிட்டுட்டாங்க. அடடா!! நமக்கு வராத வத்தல்ல கில்லாடியா ஒரு லேடி இருக்கும் போலிருக்கே! இந்த லேடிய விடக்கூடாதுன்னு வனி முடிவு பண்ணிட்டாங்க. ”சரி சரி சீதா... போடுறதும் போடுறீங்க, வத்தலை அவங்ககிட்ட கொடுத்துட்டு ஃபோட்டோவோட குறிப்ப அறுசுவைக்கு கொடுங்க”னு ரூல்ஸ் போட்டுட்டாங்க வனி. “சிக்குனியா சீதா? தேவையா? உனக்கிது தேவையா?” அப்படின்னு வாய்விட்டு சொல்ல முடியாம சீதா ஃபீல் பண்ணாலும் வனி புள்ளப்பூச்சி மாதிரி பிக்கும்னு குறிப்பை அனுப்பினாங்க. அந்த குறிப்பை வெளியிட சதி ஒன்னு நடந்துடுச்சு நடுவுல... தாமதமா வந்தாலும் விடாம கத்திரி வெய்யிலில் ஒரு நாள் வனியும் வேலையை துடங்கினாங்க. அன்னைக்கு சாயந்திரம் மாவை அரைச்சு வெச்சு பார்த்தா வெளிய புயல் மழை ;( ஆத்தா எதுவும் ஒன்னோட நிக்காதும்பாங்களே!! இந்த வத்தல் கூடவா? அப்படின்னு இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு வனி வெயிட் பண்ணாங்க. அடுத்த நாள் காலை மழை இல்லாம வெய்யில் அருமையா எட்டி பார்த்துச்சு. கட கடன்னு கஞ்சியை காய்ச்ச துவங்கினதுல இருந்து ஒரு கையில் மொபைல், அடுத்த கையில் கஞ்சின்னு சீதாவை ஒரு வழி பண்ணி சந்தேகமா கேட்டு தள்ளி ஒரு வழியா வனியின் சின்ன மகன் உதவியோட வத்தல் பிழிஞ்சு முடிச்சாங்க. இன்னைக்கு தாங்க அந்த டெஸ்ட் ரிஸல்ட்! ஆகா!! டிஸ்டின்க்‌ஷன்ல பாஸ்!! வத்தல் எப்படின்னு முதல் மற்றும் இரண்டாவது படத்தை பார்த்து நீங்களே மார்க் போடுங்க ;)

மாரல் ஆஃப் தி ஸ்டோரி

விடா முயற்சி விஷ்வரூப வெற்றி!

குறிப்பு இங்கே: http://www.arusuvai.com/tamil/node/28308

அப்பாடா!! இரண்டு ரம்ப கதையை போட்டாச்சு. அடுத்து? என் மகனோட போய் வத்தல் போட்ட கொடுமை இருக்கே!! அய்யய்யய்யோ!!! சாமி முடியல. “வனிதா நீ ரொம்ப ஸ்லோ... என்கிட்ட கொடுத்திருந்தா இன்நேரம் எல்லா மாவையும் முடிச்சிருப்பேன்” [வனி மைண்ட் வாய்ஸ் - முடிச்சிருப்ப மவனே... பிழிஞ்சிருப்பியா?]. நான் கவர் முதல் சுத்தமா இருக்கனும்னு தொடச்சு வெச்சா, அது மேலயே நடந்து போறான்! கடவுளே! மறுபடியும் தொடைக்க வேண்டியது தான். ’எப்ப சமைப்ப இதை?’ சரி இந்த கேள்வி எனக்குமே ஒரு ஆர்வம் தான். கொஞ்சம் வத்தலை அவன் ப்ரூஃப் ஷீட்டில் பிழிந்து அவன் ட்ரேவில் போட்டேன். மினிமம் ஹீட்டில் தான் வைத்து எடுத்தேன். ஒரு மணி நேரத்தில் வத்தல் பொரிச்சு என் குட்டீசோட நானும் சுவை பார்த்துட்டேன். சூப்பர். என்ன.. வத்தல் கலர் தான்! கொஞ்சம் சிவந்து போச்சு. சீதாவை கேட்டா “கத்திரி வெய்யிலில் போட்டா சிவந்து போகும்”னு சொன்னாங்க... சரி பெங்களூரில் கத்திரி வெய்யில்ல தான் வெய்யிலே இருக்கும்னு போட்டேன். அவன்ல போட்டது, அவங்க சொன்ன மாதிரி கத்திரி வெய்யிலில் காய்ந்த மாதிரி தான் இருந்தது. ஆனா சுவையும் க்ரிஸ்பினஸும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. அருமை. பிள்ளைகள் மிச்ச வடகத்தையும் அவனில் வை, சீக்கீரம் சமைச்சு சாப்பிடலாம்னு கேட்டாங்க. என்னுடையதில் மினிமமே அதிகம் தான்... அதுவும் ஒரு காரணம் சிவந்து போனதுக்கு. 60 - 70 c வைக்க முடியுறவங்க, தாராளமா இன்ஸ்டண்டா வத்தல் பொரிக்க அவன்ல காய வைக்கலாம். காலை காய்ச்சிய கஞ்சியை பிழிஞ்சு விட்டா மாலை நேரம் உங்க வத்தல் ரெடி ஆகி இருக்கும்.

வத்தல் என்னை படுத்தினபாடு!! அந்த வத்தலை போட ஆரம்பிச்சு அன்று முழுக்க நான் சீதாவை படுத்தினபாடு! அப்பப்பா... இப்போ வனியும் வத்தல் போடுவாகலாக்கும்!! ;) தேன்க்ஸ் டூ சீதா... சீசனுக்கு ஏற்ற அருமையான குறிப்பை வேண்டுகோளை ஏற்று சிரமம் பார்க்காம அனுப்பினதுக்கு. முதல்ல எங்க அம்மாகிட்ட காட்டனும்... நானே செய்ததாக்கும்! எங்க அம்மாவே வத்தல் போட்டதில்லையே! ஹைய்யா ஹைய்யா! ஆத்தா நான் பாஸாகிட்டேன் ;)

5
Average: 4.8 (6 votes)

ஈசி டேஸ்டி சமையல் (5)

வந்துட்டேன் வனி மீண்டும் சில குறிப்புகளோடு. இம்முறை எல்லாம் கலந்த கலவை. என்ன தான் நாம சூப்பரா சமைக்கிறவங்களா இருந்தாலும் சிறு மாறுதல்களோடோ அல்லது புதிதாகவோ குறிப்பு வந்தா அதை பாராட்டி செய்து பார்த்துடனும். ஏன் சொல்றேன்னா... சின்ன சின்ன மாற்றங்கள் கூட உணவில் சுவையை மாற்றும், வீட்டில் சாப்பிடுறவங்களுக்கு ஒரு புது சுவை எப்பவுமே நம்ம சமையல ரசிக்க வைக்கும். இதை நான் என் அம்மாகிட்ட தான் கத்துகிட்டேன். என்ன தான் கிராமத்து பெண்ணாக இருந்தாலும், கல்யாணத்துக்கு முன்பே விருந்துக்கு கூட தனியாக சமைக்கும் அளவு சமையல் தெரிந்திருந்தாலும், அம்மா எந்த ஊருக்கு போனாலும் அங்க உள்ள சமையலை கற்றுக்கொள்ள ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க. அருமையா அவங்களை போலவே சமைக்கவும் செய்வாங்க. அவங்ககிட்ட இருந்து தான் எல்லார் உணவிலும் ஏதோ ஒரு சிறப்பு இருக்க தான் செய்யுது, அதை அவங்க முறையில் செய்தா சுவையா இருக்கும் என்று நானும் கத்துகிட்டேன். நீங்களும் தான் புதுசு புதுசா ட்ரை பண்ணிப்பாருங்களேன், வீட்டில் இருக்கவங்களை அசத்திடலாம்.

முதல்ல இருப்பது நம்ம சீதாலஷ்மியின் ”பூசணிக்காய் பால் கூட்டு”. பால் கூட்டு என்றதும் பசும்பால் என்று தான் நினைத்தேன், தேங்காய் பாலில் செய்ய சொன்னதும் ரொம்ப சந்தோஷமா உடனே செய்தாச்சு. வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச கூட்டு இப்போ இதுவும். பூசணிக்காய் நான் அதிகம் வாங்குவதில்லை, ஆனால் இப்போது இந்த கூட்டு செய்யவே வாங்கி வருகிறேன். சுவையான கூட்டு, செய்வதும் சுலபம். அவசியம் ட்ரை பண்ணிப்பாருங்க. ;)

http://www.arusuvai.com/tamil/node/28372

அடுத்தது நம்ம நித்யா ரமேஷின் “ப்ரெட் ரோல்”. அப்பப்பா... நித்யா நீங்க தெய்வம். இதுவரை நான் இம்புட்டு கஷ்டப்பட்டு எதையும் செய்ததில்லை, ப்ரெட்டை மூடி ஒட்ட சிரமப்பட்டேன்... உங்க கையில் என்னவோ மேஜிக் தான் இருக்கு போல, எப்படிங்க ஒன்னு போல அம்புட்டு அழகா ரோல் பண்ணிருக்கீங்க? நிஜமாவே பாராட்டுறேன்... உங்க உழைப்பு வீனாகல. அத்தனை சுவையான யம்மி ப்ரெட் ரோல். சீஸ் தவிர வேறு எதுவும் அந்த டெக்‌ஷர் தந்திருக்காது. க்ரிஸ்பி, க்ரிமீ & ஸ்பைசி!!! சூப்பருங்க. குட்டீஸ் இருக்க வீட்டில் நிச்சயம் செய்து பாருங்க, சித்திரமும் கைப்பழக்கம் தானே? செய்ய செய்ய சுலபமா நித்யா போல செய்துடுவீங்க.

http://www.arusuvai.com/tamil/node/28373

அடுத்தவர் வேறு யாரும் இல்லைங்க... நம்ம சுவர்ணா விஜயகுமாரின் “மெதுவடை”. வடை ஷேப் பார்த்து பயந்துடாதீங்க, வனி மெதுவடையில் எக்ஸ்பர்ட் இல்லை. சமையலில் என் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் குறிப்பில் ஒன்னு மெதுவடை. இப்போ நான் அது கண்ணில் விரலை விட்டு ஆட்டுறேன்னா அது சுவா உதவியால் தான். ”நெவர் ஃபெயில் மெதுவடை”ன்னு அந்த குறிப்புக்கு பேரை மாற்றனும் (அட்மின்.. “நோட் தி பாயிண்ட்”). இப்போ எல்லாம் வீட்டில் விஷேஷம் மெதுவடை செய்யனும்னா தயக்கம் இல்லாம செய்யறேன். புதுசா சமைக்க கத்துக்குறாங்க, மெதுவடை வரலன்னு சொல்றவங்க எல்லாரும் நிச்சயம் இந்த முறையில் மெதுவடை செய்து பார்த்துட்டு சொல்லுங்க. “நீயா செய்த?? நல்லா வந்திருக்கே”னு நிச்சயம் பாராட்டு வாங்கிடுவீங்க.

http://www.arusuvai.com/tamil/node/24732

கலர்ஃபுலா இருக்க அடுத்தவர் அருட்செல்வியின் “கீரை பொரியல்”. நான் பொதுவா மணத்தக்காளி கீரை எல்லாம் செய்ததில்லை. சமைக்க கத்துகிட்டதே திருமணமாகி சிரியா போன பின் தானே... அங்க இதெல்லாம் கிடைக்காது. இப்போ தானே இந்தியாக்குள்ள வந்திருக்கேன், நிறைய விஷயங்கள் இப்ப தான் சமைக்க கத்துக்கறேன். அதில் ஒன்னு தான் இந்த கீரையும். இதை எப்படி சுத்தம் பண்ணி எடுக்குறதுன்னு கூட வீட்டுக்கு கால் பண்ணி கேட்டுத்தான் செய்தேன், அந்த அளவுக்கு நான் இதிலெல்லாம் சீரோ. ஆனாலும் அருள் குறிப்புகள் பொதுவா நல்ல ஹெல்தியான கிராமத்து சமையலாவே இருக்கு. அதனால் நிச்சயம் ட்ரை பண்ண எண்ணி இதை செய்தேன். சுவையான பொரியல், ஹெல்தியும் கூட. கட்டாயம் செய்துடுங்க.

http://www.arusuvai.com/tamil/node/24176

அடுத்திருப்பது என்னோட ஆல் டைம் ஃபேவரட். “வாழைத்தண்டு தயிர் பச்சடி”. எங்க அம்மாவின் கைப்பக்குவம். இது இருந்தா சிக்கன், மட்டன் கூட என்னை பிடிச்சு வைக்க முடியாதுங்க. சூடான சாதமும் இந்த பச்சடியும் மட்டுமே போதும். ஆரம்பத்தில் எனக்கு வாழைத்தண்டு சுத்தம் பண்ணி வெட்ட தெரியாது. மாலே வந்த பின் தான் அம்மா செய்து காட்டினாங்க. அப்படியே செய்ய துவங்கினது, இப்போ வாழைத்தண்டு எங்க கிடைச்சாலும் வாங்கி வந்து இதை செய்துடுவேன். எல்லாருமே இதில் இருப்பது சமைக்காத பச்சை தண்டுன்னு சொன்னா நம்ப மாட்டாங்க, அத்தனை சுவையான குறிப்பு. செய்து பார்த்து சொல்லுங்க.

http://www.arusuvai.com/tamil/node/22809

அடுத்திருப்பவர் சமீபத்தில் யாரும் சமைக்கலாம் குறிப்பாக வந்து எல்லார் கவனத்தையும் கவர்ந்தவர். சொல்லவே தேவை இல்லை... ஆமாம் உமாவின் “அலப்ப”. சும்மாவே எனக்கு இலங்கை உணவு வகைகள் விருப்பம், இப்படி எல்லாம் வாழை இலை வகைன்னா கேட்கவே வேண்டாம். சுவையான ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி ஆகிடுச்சு எங்க வீட்டில். குட்டீஸ் கூட விரும்பி சாப்பிடும் அளவு சுவையான உணவு. ராகியில் புட்டு, பக்கோடா, களி, கூழ், லட்டு, கஞ்சி மாதிரி இப்போ இந்த அலப்பவும் அடிக்கடி செய்யக்கூடிய உணவாகிடுச்சு. அவங்க சொன்ன முறையிலும் செய்தேன், கொஞ்சம் மாறுதலாக உள்ளே நட்ஸ் கலவை பொடி செய்து வெல்லம் கலந்து ஸ்டஃப் பண்ணியும் செய்தேன். இரண்டுமே சம ஹிட் தான். கட்டாயம் செய்து பார்க்க வேண்டிய ஒன்று, குறிச்சு வெச்சுக்கங்க எல்லாருமே.

http://www.arusuvai.com/tamil/node/28037

வழக்கம் போல புகைப்படங்களோடு குறிப்பின் லின்கும் கொடுத்துட்டேன், எல்லாரும் செய்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு குறிப்பு கொடுத்தவங்களுக்கு மறக்காம சொல்லிப்போடுங்க. அப்ப தானே நான் செய்து படமெடுத்து போட்டதுக்கும் பலனிருக்கும்?? ;) இன்னைக்கும் எங்க வீட்டில் பூசணிக்காய் பால் கூட்டு தான்... நான் போய் சமையலை கவனிக்கிறேன், நீங்க இதை எல்லாம் பார்த்து ரசிச்சு சமைச்சு ருசிச்சுட்டு சொல்லுங்க. வரட்டுமா? நிறைய வேலை இருக்கு... அடுத்த 6 குறிப்புகளோட வரனுமே சீக்கிரமே. :)

5
Average: 5 (5 votes)

ஈசி டேஸ்டி சமையல் (4)

எவ்வளவு நாளாச்சு வனி படங்காட்டி ;) வந்துட்டோம்ல. இம்முறை புது புது மக்களோட குறிப்புகளோட வந்திருக்கேன். முதல் இடத்தில் இருப்பது “வாழைப்பூ வடை”. பொதுவா நான் வடை குறிப்புகள் அறுசுவையில் தேடுவதே இல்லை. காரணம் அம்மா செய்முறை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா சிம்பிள் டேஸ்டி வடை செய்து அசத்துவங்க. சிரியாவில் இருக்கும்போது வீட்டுக்கு இன்வைட் பண்ணாலே “எனக்கு வடை செய்து தருவீங்கன்னா வருகிறேன்”னு சொல்வாங்க சிலர். அந்த அளவுக்கு நானும் சுமாரா வடை செய்வேன். வித்தியாசமா கண்ணில் பட்ட வாழைப்பூ வடை குறிப்பு நம்ம ஹர்ஷாவின் குறிப்பு தான். அருமையான வடை குறிப்பு. எங்க வீட்டு முறையில் காய்ந்த மிளகாய் பயன்படுத்துவோம், வெங்காயம், சோம்பு சேர்ப்போம். இஞ்சி பூண்டு சேர்ப்பதில்லை, பூவை மசிப்பதில்லை, கொத்தமல்லி புதினா சேர்ப்பதில்லை. ரொம்ப சுலபமா செய்யலாம். சூப்பர் க்ரிஸ்பி வடை. செய்து சுவைத்து பாருங்க...

http://www.arusuvai.com/tamil/node/22527

அடுத்தவர்கள் இருவர். முதல்ல இருப்பது சீதாலஷ்மி சொன்ன முறைப்படி செய்த இட்லி. மல்லிகைப்பூ இட்லின்னா அது இதுதாங்க. ஆமனக்கு கொட்டையெல்லாம் இல்லாமலே பஞ்சு போல இட்லி செய்ய முடிஞ்சா அது சூப்பர் தானே? தேன்க்யூ சீதா :) வந்ததுக்கு உங்களை மாவாட்ட விட்டு புடவை எல்லாம் மாவாக்கி அனுப்பி இருக்கேன்... ;) அந்த பலனை இப்ப நான் அனுபவிக்கிறேன். முன்பெல்லாம் நான் இட்லி செய்யறேன்னாலே நம்மாள் வேணாம்னு சொல்லிடுவார்... இப்போ அடிக்கடி இட்லி மாவு போடும் வேலை வைக்கிறது உங்க இட்லி குறிப்பு. அண்ணி சும்மாவே இட்லி நல்லா செய்வாங்க... உங்க முறையில் செய்து இப்போ சூப்பரா வருதுன்னு சொன்னாங்க. அவங்க பாராட்டையும் சேர்த்து பிடிங்க சீதா. பக்கத்தில் ஜோடி போட்டிருப்பது என்னோட குறிப்பு... வெள்ளை குருமா. இரண்டும் காம்பினேஷன் சம சூப்பர். அப்படியே ஜோடியா ட்ரை பண்ணி பாருங்க.

இட்லி: http://www.arusuvai.com/tamil/node/28137
வெள்ளை குருமா: http://www.arusuvai.com/tamil/node/10387

அதே படத்தில் கீழே இருப்பவர் நம்ம வாணியின் ”நாட்டுக்கோழி கூட்டு”. ஆனா பாருங்க நம்ம வீட்டில் நாட்டுக்கோழி வாங்க பெரிய தடா உத்தரவு இருக்கு. :( அதனால் வழக்கமா வாங்கும் கோழி தான். ஆனா சுவை அருமை. ரசம் சாதத்தோட... போங்கப்பா... செஃப் தாமு சொல்லும்போதே வாயூரும் பாருங்க... அப்படி எனக்கு நினைக்கும் போதே வருது. நான் கொஞ்சம் காரம் கம்மி பண்ணிட்டேன் பிள்ளைகளுக்காக, அதனால் கலர் கொஞ்சம் கம்மி... அட்ஜஸ் பண்ணிக்கங்க. கலராங்க முக்கியம்?? சுவை தானே முக்கியம். அந்த வகையில் பெஸ்ட் சிக்கன் ஃப்ரை ரெசிபி. கட்டாயம் எல்லாரும் ஒரு முறையாவது ட்ரை பண்ண வேண்டிய குறிப்பு. தேன்க்யூ வாணி. ஃபோட்டோ உங்க அளவு இல்லை... மொபைல் ஃபோட்டோ :P

http://www.arusuvai.com/tamil/node/28139

அடுத்த இருவரில் முதல்வர்... கடலைப்பருப்பு சுண்டல். அம்மா இதே போல தான் செய்வாங்க. காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் பயன்படுத்தி இருக்கேன் அம்மா செய்வது போல. எங்க கிராமத்து பக்கம் இதை ”பூம்பருப்பு சுண்டல்” என்போம். பூ போல பருப்பு மலர்ந்து வெந்து இருப்பதாலோ என்னவோ அந்த பெயர். எனக்கு அந்த பெயரும் பிடிக்கும், இந்த சுண்டலின் சுவையும் பிடிக்கும். என்னோட ஃபேவரட் சுண்டல் குறிப்பு. நன்றி சுமதி திரு.

http://www.arusuvai.com/tamil/node/2490

அடுத்தவரை பார்த்ததும் கண்டு பிடிச்சிருப்பீங்க... ஆமாம் நம்ம அருளின் “கேழ்வரகு / ராகி பக்கோடா” தான். ரொம்ப நாளா இது மேல ஒரு கண்ணு எனக்கு. செய்ய நேரமில்லாம தள்ளி தள்ளிப்போயிடுச்சு. சாதாரணமா ராகி பக்கோடா பண்றவங்க, வெறும் ராகி மாவு தான் பயன்படுத்துவாங்க. இதில் வேர்கடலை மாவெல்லாம் சேர்த்ததால் சுவை அருமையாக இருக்கும் என ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். இதை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருந்தேன், நினைவு வைத்து சமைக்க. ஒரு வழியா விருந்தினர் வருகை இருந்த அன்று செய்து அசத்திட்டோம்ல. நன்றி அருள். எல்லோருக்கும் பிடிச்சுது, எண்ணெய் குடிக்காமல், க்ரிஸ்பியா, டேஸ்டியா... செய்யவும் சுலபமா இருந்தது. படம் அத்தனை சரியா வரலன்னு கோவிக்காதீங்க அருள்... மாலை நேரம் வெளிச்சம் குறைவு, மொபைல் ஃபோட்டோ விருந்தினர் இருந்ததால்.

http://www.arusuvai.com/tamil/node/24115

வழக்கம் போல எல்லா குறிப்புக்கும் லின்கும் கொடுத்துட்டேன். இனி என்ன? செய்து பார்த்து சுவைத்து உங்க கருத்தை குறிப்புகளில் போட்டு, குறிப்பு கொடுத்தவங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துடுங்க. ஏன்னா நம்ம குறிப்பை மற்றவர்கள் செய்து பார்த்து அதை படத்தோடு வெளியிடும் போது அதை பார்த்து கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு ஏது? எனக்கு அப்படி தான்... யாராவது என் குறிப்பை செய்து படம் போட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதனால் தான் நான் செய்து சுவைத்து பிடிச்ச குறிப்புகளின் படத்தை நானும் போட்டு அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் கொடுக்க நினைக்கிறேன். ட்ரை பண்ணுங்க... குறிப்பையும், மற்றவரை மகிழ்விக்கும் பதிவையும். ;)

4
Average: 4 (4 votes)

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்...

அன்பான அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்! எனக்கென தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்க வாய்ப்பளித்த அட்மின் அவர்களுக்கு நன்றி சொல்லி பதில் அனுப்பிவிட்டு, எதைப்பற்றி எழுதி நம்ம முதல் பதிவை தொடங்கலாம் என மூளையை கசக்கி சிந்தித்ததில்... சரி, நமக்கு ரொம்ப பிடித்த(!), அறுசுவையின் நட்பு வட்டத்தில் நாம் சேர காரணமாக இருந்த, சாப்பாடு பற்றியே துவங்குவதென்று மண்டைக்குள் பல்பு எரிந்தது! :) என்ன?, அதை செயல்படுத்ததான் இத்தனை காலமாகிவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இதோ இன்று, நாளை, இந்த வாரம், அடுத்த‌ வாரம் என்று, விட்டால் வருடமே ஓடி விடுமோ என்று இன்னைக்கு ஓடி வந்திட்டேன்! சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம்.

இளையராஜாவின் இன்னிசை பாடல்கள் சீடி ஓடிக்கொண்டு இருக்கிறது ...

மச்சானை பார்த்திங்களா?! … மலவாழத்தோப்புக்குள்ளே...
... தலவாழ இலப்போடுங்க... ஊர விருந்துக்கு வரச்சொல்லுங்க...

(தலைவாழை இலைப்போடுங்க…)

ஆஹா, வாழை இலை சாப்பாடு என்றாலே அருமைதான் இல்லையா, அதுவும் நம்ம ஊரில், கல்யாணத்தில் இந்த வாழையிலை விருந்து ரொம்ப காலமா நம்ம பெரியவங்க பின்பற்றி வரும் முக்கியமான ஒரு வழக்கம் என்றே சொல்லலாம். இப்பப்ப புதுமைகள் புகுந்து, பஃபே முறைகள் சில இடங்களில் வந்துவிட்டாலும், இந்த இலைபோட்டு பரிமாறும் பந்திமுறையே பெரும்பாலான இடங்களில் பின்பற்றபட்டு வருகிறது. அதிலும் மோருக்கு முன்னால் விடப்படும் அந்த இளஞ்சூடான ஜவ்வரிசி பாயாசம் அந்த ஃப்ரெஷ் வாழை இலையில் பட்டதும் வரும் நறுமணத்தோடு ருசித்து பார்த்தவர்கள் இதை மறுக்கவே மாட்டார்கள்! ;-) சரி.., சரி... ரொம்பவே ஆசையை கிளப்பறேன்னு நினைக்கிறேன். இப்ப விஷயத்துக்கு வருவோம். ( இதையேதான் போன பத்தி தொடங்கும்முன்னும் சொன்னீங்கன்னு யாரும் கேட்டிங்களா என்ன?! :))

கல்யாணம் என்றில்லை, வீட்டில் ஒரு விஷேசம் என்றால், புதுமனை புகுவிழாவென்றால், பொண்ணு மாப்பிள்ளைக்கு விருந்து கொடுப்பதானால், குழந்தைக்கு பேர் சூட்டுவதானால், இன்னும் சில இல்லங்களில், சொந்தங்கள் கூடி ஒரு பண்டிகை, நாள் கிழமை என்று கொண்டாடினால் என்று, தென்னிந்திய குடும்பங்களில் இந்த வாழை இலை சாப்பாடு எப்பவுமே தனி இடம் பெற்றிருக்கிறது. ஆக‌, அருமையா சமைச்சா மட்டும் ஆச்சா?! அதை எப்படி அழகா பரிமாறனும்னும் தெரிஞ்சிக்கனும் இல்லையா, அதுக்குதாங்க இந்த பதிவு... (அப்பாடா, ஒரு வழியா விஷயத்துக்கு வந்தாச்சு! :))

முதலில் இலை போடும் முறை - எப்போதும் இலையின் சிறிய பகுதி (நுனி) அமர்ந்து சாப்பிடுபவரின் இடப்பக்கமும், இலையின் பெரிய பகுதி வலதுப்புறமாகவும் இருக்க வேண்டும். முதலில் இலையை தண்ணீர் தெளித்து நன்கு கழுவிவிட்டு அப்புறம் இலை போட ஆரம்பிக்க வேண்டும்.

இலையில் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் தரப்படுகிறது. உதாரணமாக, இலையின் மேல் வரிசையில் (இடமிருந்து வலமாக), முதல் இரண்டு இடங்களில் எப்போதும் உப்பு, ஊறுகாய் இடம் பெறும். அடுத்து பொதுவாக பச்சடி/உப்பு பத்தை (கேரட்/மாங்காயில் செய்தவை) இருக்கும். அதற்கடுத்து, ஒன்றோ, இரண்டோ ட்ரை பொரியல்கள், அடுத்து கூட்டு, அதற்குபிறகு வருவல் (வாழைக்காய்/ உருளை சிப்ஸ்), அப்புறம் வடை இருக்கும். அதற்கு சற்று கீழாக, எதாவது ஒரு ஸ்வீட் இருக்கும். (பொரியல்கள், கூட்டு சில வீடுகளில் இடம் மாறியும் இருக்கும்). இத்தனை ஐய்ட்டங்களும் இருப்பது இலையின் மேல்பாதியில்!.

இலையின் கீழ்பாதியில் (இடமிருந்து வலமாக) வாழைப்பழம் (சிலர் சிறிதளவு சர்க்கரையும் பழத்திற்கு பக்கத்தில் வைப்பார்கள்), அப்பளம், (சாதம்/ கலந்த சாதம்), பருப்பு (அதில் ஒரு சொட்டு நெய்!) பரிமாறப்படும்.

இதில் பெரும்பாலும் , அப்பளத்திற்கும் பருப்புக்கும் இடையில் சாதத்திற்கான இடம் காலியாக விடப்பட்டு இருக்கும். சாப்பிட வந்த விருந்தாளிகள் வந்தமர்ந்து சாப்பிட துவங்கும்போதே சூடாக சாதம் பரிமாறுவார்கள். இதுவே சில விருந்துகளில், திருமணங்களில் இந்த இடத்தில், வெரைட்டி ரைஸ், பெரும்பாலும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலந்த சாதங்களும் பரிமாறப்படுவது உண்டு. விருந்தினர்கள் அதை உண்டபிறகு ப்ளைன் /வெள்ளை சாதம் பரிமாறப்படும். தண்ணீர் டம்ளர் இலையின் நுனிப்பகுதி அருகில் இருக்க வேண்டும்.

சாப்பிடும் முறை: முதலில், ஸ்வீட்டில் இருந்து தொடங்கி சாப்பிடவேண்டும். ஸ்வீட்டை தொடர்ந்து, சாதம் & பருப்பு. கலந்த சாதம் இலையில் இருந்தால் அதை முதலில் சாப்பிடுவார்கள், அப்படி இல்லையென்றால் சூடாக பரிமாறப்பட்ட சாதத்தில் பருப்பை சேர்ந்து பிசைந்து சாப்பிடவேண்டும்.

அடுத்தடுத்து சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் என்ற வரிசையில் உணவுகள் பரிமாறப்படும்/சாப்பிடப்படும். ஒவ்வொரு ஐய்ட்டத்திற்கு முன்னும் சாதம் தேவையா என்று கேட்டு பரிமாறப்படவேண்டும். இதற்கு இடையில் பொரியல், கூட்டு யாருடைய இலையிலாவது காலியாகி இருந்தால், அப்பப்ப பார்த்து விசாரித்து பரிமாறவேண்டும். ரசத்திற்கு அடுத்ததாக பாயாசம். இலையில் பாயாசம் விட்டு அதை வாழையிலையில் இருந்து லாவகமாக எடுத்து சாப்பிடுவதுகூட ஒரு தனி கலைதான்! :) இப்போதெல்லாம் சில இடங்களில், பாயாசத்துக்கும் ஒரு கப் கொடுத்து விடுகிறார்கள். பாயாசம் கப் இலைக்கு வலதுப்புறமும், தண்ணீர் கப்/டம்ளர் இலைக்கு இடது புறமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கடைசியாக மோர், இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் பயன்படும். கூடவே மோர் சாதத்திற்கு உப்பு சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள், உப்பு கம்மியாக இருக்கு என்று நினைப்பவர்கள் சேர்த்துக்கொள்ளவே இலையின் மூலையில் முதலில் வைக்கப்படும் உப்பு. மோர் சாதத்திற்கு பிறகு கடைசியாக வாழைப்பழம் சாப்பிட்டு நிறைவு செய்யவேண்டும்.

சில பெரியவர்கள் சாப்பாடு முடிந்ததும், வெற்றிலை போட விரும்புவார்கள்.அவர்களுக்காக ஒரு தட்டில், வெற்றிலை, பாக்கு, சுண்னாம்பு தயாராக எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

அதேப்போல இலையை மடிப்பதில்கூட சில வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற நல்லசுப காரியங்களில் சாப்பிட்டு முடித்தவுடம் இலையின் மேல் பாதியை நம்மை நோக்கி மடிக்க வேண்டும் என்றும், மற்ற நேரங்களில் அதற்கு எதிர்புறமாக மடித்துவிட்டு எழவேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்லக்கேள்வி.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மிக‌ முக்கியமான ஒரு விஷயம். இதை எல்லாம் சிரிந்த முகத்துடன் பரிமாற வேண்டும். :‍)

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்க குழையும் விருந்து”

விருந்தோம்பல் குறித்து திருவள்ளுவர் சொன்ன இந்த பொன்னான வரிகளை நினைவுகூர்ந்து, இன்முகத்துடன் வரவேற்று, மனம்குளிர‌ விருந்து அளித்து சொந்தபந்தங்களோடு கூடி மகிழ்ந்திடுவோம்.

குறிப்பு: இங்கே நான் மேலே குறிப்பிட்டுள்ளவை எல்லாம் என்னுடைய சொந்த அனுபவத்தை, மலரும் நினைவுகளை மனதிற்குள் நிறுத்தி எழுதியவை. தோழிகள் அவரவர்களுக்கு இருக்கும் பந்தி பரிமாறும் பழக்கங்களையும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன். நன்றி!

படங்கள் உபயம். கூகுள் இமேஜஸ். நன்றி!

5
Average: 5 (3 votes)

நளபாகம் 1

நளபாகம் என்றால் சாப்பாடு மட்டும் பற்றித்தான் பேச வேண்டுமா? சமையலும், சமையல் சார்ந்த இடமும், பொருட்களும் அதற்கு தொடர்புடைய எதைப் பற்றியும் பகிரலாம் அல்லவா.

என் வீட்டில் உள்ள அறைகளில் எனக்குப் பிடித்தமான ஒன்று சமையலறை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுது போக்கு ஆர்வங்கள். ஆனால் எனக்கோ விதவிதமான சமையலறைப் பொருட்களை சேகரிப்பது பிடிக்கும். சமீபத்தில் ஒரு தமிழ் படத்தின் ஒரு சில காட்சிகளில் வந்து போன பழங்கால கிராமத்து சமையலறை என்னை வெகுவாக கவர்ந்தது. சமையல் மேடையில் விறகடுப்பு, திண்ணமாக கரிப்படர்ந்த அலுமினிய பானைகள், வெண்கலத் தட்டுக்கள் என்று பலப் பல என் நினைவுகளுக்குள் வந்து போயின.

காலங்கள் தான் எப்படியாய் மாறிவிட்டது. அதன் பின் மண்ணெண்ணெய் அடுப்புகள், கேஸ் ஸ்டவ், மின்சார அடுப்புகள் என்று எத்தனை எத்தனை மாற்றங்கள்!!! அதைப் போன்று தான் போன முறை ஊருக்கு சென்றிருந்த போது ஒரு பழங்கால அரண்மனை ஒன்றை சுற்றிப் பார்க்க நேர்ந்தது. அப்போது அரண்மனையின் சமையலறைப் பொருட்களை பார்வைக்கு வைத்திருந்தார்கள். அங்கு வைக்கப் பட்டிருந்த சில பொருட்களையே என் கண்கள் சுற்றி சுற்றி வந்தது, ஆனால் எதையுமே தொட்டுப் பார்க்க அனுமதியில்லை.

புட்டுக் குழல்; எனக்கு புட்டு மிகவும் மிகவும் பிடித்தமான சிற்றுண்டி. புதிதாக எந்த மாவுகளைப் பார்த்தாலும் இதில் புட்டு செய்ய முடியுமா என்று தான் யோசிப்பேன். அது போன்று தான் புட்டுக் குழலிலும் உள்ள மோகம் தீரவில்லை எங்காவது புட்டுக்கு தொடர்பான என்ன பொருட்கள் கிடைப்பினும் உடனே வாங்கி விடுவேன். திருமணத்திற்கு முன் மத்திய கிழக்கில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது, எனக்கு மட்டுமே என்று ஒரு கப் அளவில் உள்ள புட்டுக் குழல் வைத்திருந்தேன். சிரட்டை வடிவில் எவர் சில்வரில் இருக்கும், அதற்கு சிரட்டை புட்டு மேக்கர் என்று பெயர். எங்க ஊரில் தேங்காய் துருவியவுடன் அதே சிரட்டையில் துளையிட்டு புட்டு மாவினை உள்ளே வைத்து வேக வைப்பார்கள். அதன் ருசியே தனிதான். ஃப்ரெஷ் தேங்காய் மற்றும் சிரட்டையின் மணத்துடன் சுவையாக இருக்கும்.

கம்மிங்க் பேக் டு த பாயிண்ட், அரண்மனையில் பார்த்த பொருட்களில் ஒன்று பழங்கால புட்டுக் குழல், ஒரு மண் சட்டியில் மூன்று மூங்கில் குழல்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஒரு குடும்பத்திற்கே ஒரே நேரத்தில் செய்துவிடலாம் போலும்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது வாரம் ஒரு முறை விடுதியில் காலை உணவில் புட்டு இடம்பெறும், புட்டு என்றால் பிற மாணவிகள் யாரும் அத்தனை விரும்பி உண்டதில்லை, ஆனால் எனக்கு அதுதான் தான் ட்ரீட். தோழிகள் கேட்பார்கள் எப்படித்தான் உன்னால் மட்டும் சாப்பிட முடிகிறதோ என்று!!! எனக்கு தேங்காய் கலந்த புட்டுடன் பிடித்தது பழமும், சர்க்கரையும் தான். சில நேரங்களில் வேக வைத்த பாசிப் பயருடன், அப்பளமும் சேர்த்துக் கொள்வோம்.

என் அம்மாவின் சிறு வயதில் மூங்கிலால் செய்யப்பட்ட புட்டுக் குழலைத்தான் பாட்டி உபயோகித்ததாக சொல்வார்கள். பாட்டியிடமிருந்து சமையலறை அத்தையின் கைகளுக்கு மாறிய பின் அந்த காலத்துப் பொருட்கள் என்று எதையும் பார்க்க முடியவில்லை. பாட்டியோடு சென்றுவிட்டன போலும் எல்லாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு கடையில் மூங்கில் புட்டு மேக்கரைப் பார்த்தவுடன் வாங்கிவிட்டேன். என் கணவரோ ஏற்கனவே இரண்டு வைத்துள்ளாய், இப்போது இதுவுமா? கிச்சன் பக்கத்தில் இதற்க்கென்றே தனியா ஒரு ரூம் கட்டணும் போல என்பார். வேணும்னா இந்த தடவ பொறந்த நாளுக்கு பரிசு வேண்டாமே, (பிறந்த நாள் வருவதற்குள் அவருக்கு மறந்திடுமே). அதற்குப் பதிலா இது இருக்கட்டும் என்று சொல்லிவிடுவேன்.

சிறு வயதில் புட்டுக் குழல் என்றாலே ஒரு சிறிய குடம் போன்ற பானையின் மேல் புட்டுக் குழல் பொருத்தியிருக்கும், இப்போதும் அது உள்ள போதிலும், திருமணம் முடிந்து வெளி நாட்டிற்கு வரும் போது அம்மா என்னவோ சுலபமாக அதிக இடம் நிரப்பாமல் இருக்க என்று குக்கரின் மேல் பொருத்திவிடும் அமைப்பில் உள்ள குழல் தான் எங்க எல்லோருக்கும் வாங்கித் தந்தார்கள்.

ஒரு புட்டுக்குப் போயி இவ்வளவு பில்டப் ஆ ஆ ஆ...

எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது தோழீஸ். நீங்க எல்லோரும் புட்டுக் குழலால சாரி பூரி கட்டையால என்னை அடிக்க வர்ரதுக்குள்ள நான் எஸ்கேப். மேலும் மற்றுமோரு சுவையான எல்லோர் வீட்டிலும் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருளையும் அந்த அரண்மனையில் பார்த்தேன். இத்துடன் இணைத்துவிடலாம் என்றால் படங்கள் போட முடிவதில்லை என்றுவிட்டு விட்டுவிட்டேன். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

5
Average: 5 (5 votes)

என்ன சமையலோ !!!

வனி படங்காட்ட இம்முறை பாட்டோட வந்திருக்கேன் ;)

என்ன சமையலோ... என்ன சமையலோ...
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ...

இலையை போடடி பெண்ணே
இலையை போடடி
சமைத்த உணவை ருசித்து பார்க்க
இலையை போடடி!!!

ஹஹஹா... பாட்டு நல்லா இருக்கில்ல? சமையலும் இதே போல நல்லா இருந்தா? இந்த வம்பாட்டத்துக்கு நான் வரல... ஏன்னா நான் இன்னைக்கு போட்டிருக்க படமெல்லாம் என்னோட சமையலாக்கும். நல்லா தான் இருக்கும்... இல்லன்னாலும் சமைச்சு நல்லா இருந்துசுன்னு நீங்க சொல்லியே ஆகனும். இரண்டு நாள் முன்பு என்னமோ ஆயிட்டுது எனக்கு. அடுப்படி ஒரே அடிதடி தான். மனசுல என்ன எல்லாம் தோனுச்சோ அதை எல்லாம் செய்து பார்த்தேன். இப்படி சமைப்பது புதிது அல்ல... பல நாள் பொழுது போகாம கண்ணில் படுறத எல்லாம் பாத்திரத்தில் கொட்டி சமைச்சிருக்கேன். சில நாள் குப்பைக்கு போகும், சில நாள் இங்க வரும் அளவு தகுதியுள்ளதா இருக்கும். இம்முறை ஒரு ஐட்டமும் மிஸ் ஆகலங்க, நம்புங்க. முதலில் செய்தது “ஹெல்தி ராகி லட்டு” [பேரு நான் தான் வெச்சேன். நல்லா இருக்கா?]

சமைச்சு முடிச்சு வீட்டில் எல்லாருக்கும் கொடுத்து ருசி சூப்பருன்னு சொன்ன பிறகு தான் இங்க வந்திருக்காக்கும். ஆனாலும் ஸ்டெப் ஸ்டெப்பா எடுக்கல. ஆனா குறிப்பு உங்களுக்காக:

1. ராகி மாவு வெறும் கடாயில் வறுத்தது - 1 கப்
2. பாதாம் - 10 -15, முந்திரி - 10 -15, பிஸ்தா - 10, வறுத்த வேர்கடலை - 1 கைபிடி, ஏலக்காய் - 4 : எல்லாம் சேர்த்து பொடி செய்து 1 கப் அளவு வரும்.
3. வெல்லம் பாதி, சர்க்கரை பாதியாக சேர்த்து பொடி செய்து - 1 கப்
4. நெய் - 1/4 - 1/2 கப்

எல்லாம் ஒன்னா கலந்து நெய் விட்டு பிடிக்கும் பதம் வந்ததும் உருண்டை பிடிக்க வேண்டியது தான். என்ன ஈசியா? எங்க வீட்டு குட்டீஸ் பெரியவங்க எல்லாருக்கும் பிடிச்சுதுங்க. அவசியம் ட்ரை பண்ணிப்பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/9948

அடுத்த ஐட்டம் “ராகி பாதாம் ட்ரின்க்”.

பொடிக்க:

1. வறுத்த ராகி மாவு - 1/2 கப்
2. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
3. பாதாம் - 15
5. ஏலக்காய் - 5

தயாரிக்க:

1. பொடி - 1 மேஜைக்கரண்டி
2. 1/2 கப் நீர்
3. 1/2 கப் பால்
4. சர்க்கரை - சுவைக்கு

முதல்ல பொடிக்க கொடுத்ததை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி ஸ்டோர் பண்ணிக்கங்க. இந்த பொடியை 1 மேஜைக்கரண்டி அளவு எடுத்து நீர், பால் கலவையில் கலந்து கொதிக்க விட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம். நீர்க்கவும் இருக்காது, கெட்டியாவும் இருக்காது, கொஞ்சமே கொஞ்கம் திக்கா குடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும். அதுக்கு ஏற்ற மாதிரி நீர், பால் அளவை கூட்டிக்கங்க. சுவையான ட்ரின்க். ஹெல்தியும் கூட. ;) இதையும் ட்ரை பண்ணுங்க... முடிஞ்சா இந்த இரண்டையும் யாராவது ஸ்டெப் ஸ்டெப்பா படத்தோட குறிப்பு அனுப்புங்க. :)

http://www.arusuvai.com/tamil/node/10002

இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்காரு தானே? நம்ம உமாவின் “டெவில்டு கடலை” குறிப்பே தான். கடலைக்கு பதிலா கைவசம் கிடைச்ச மொச்சையை சேர்த்திருக்கேன். முறையில் லேசான வேறுபாடு.

1. மொச்சை வேகை வைத்தது - 1 கப்
2. காய்ந்த மிளகாய் - 2
3. முட்டை - 2
4. வெங்காயம் - 1/2
5. மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை

வழக்கம் போல மிளகாய் வற்றல் சேர்த்து கடுகு சீரகம் தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி பொடி சேர்த்து பிரட்டி மொச்சை உப்பு சேர்த்து கடைசியா முட்டை ஊற்றி வெந்ததும் எடுத்தேன். அம்புட்டு தான். உமா... உங்க குறிப்பை எப்படி மாத்தினாலும் சுவைக்கு குறைவே இல்லை. தேன்க்யூ சோ மச் உமா. :)

என்ன மக்களே... வனி கிச்சனில் பண்ண அட்டகாசத்தை பார்த்தாச்சா? இன்னும் இருக்கு... படங்காட்ட நிறைய. ஒரே நாளில் எல்லாத்தையும் போட்டுட்டா அப்பறம் நான் வலைபகுதியில் என்ன எழுதுறதாம்? அதனால் இதோட இன்னைக்கு முடிச்சுக்கறேன். இப்போ இருக்குறதை செய்தா அவசியம் எனக்கே இங்கையே போஸ்ட்டை போட்டுடுங்க ;) ஒரு வேளை நல்ல பிள்ளையா இதை செய்து யாரும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்பினீங்கன்னா, அந்த லின்க எனக்கு கொடுங்க, நான் இங்க அப்டேட் பண்ணிடுறேன்.

5
Average: 4.6 (7 votes)