பொதுப்பிரிவு

நல்வரவு _()_

எனக்கென்று ஒரு பக்கம் அறுசுவையில்!

வரவேற்கிறேன்,

வருக! வருக!
வணக்கம்! _()_

அறுசுவைக்கு ஏழாம் சுவையாக
அமையாது போனாலும்
‘தொட்டுக்கொள்ள...’

நிச்சயம் சுவைக்கும்.

தோசைக்கு சட்னி,
கிரிபத்துக்கு கட்டசம்பல்,
பான்கேக்குக்கு மேப்பிள் சிரப்.
இங்கு...
‘தொட்டுக்கொள்ள...’
என்ன வைப்பது!!!

தோன்றவில்லை எதுவும்!

என் சட்டியில் உள்ளதுதான்
அகப்பையில் வரும்.
அதை அழகாய்ப் பரிமாறுவேன்.

தொட்டுக்கொள்க!
கருத்தினை
விட்டுச் செல்க!

நன்றி!
மீண்டும் வருக!

- இமா க்றிஸ்

5
Average: 5 (5 votes)

வாழ்த்து!

வாழ்த்து!! ஆம் வாழ்த்து என்னும் மந்திரச்சொல் ஒவ்வொரு மனித வாழ்விலும் நிச்சயம் இடம் பெறாமல் இருக்காது :)

வாழ்த்துக்கள்தான் எத்துணை விதமாக வருகிறது. வாழ்த்தை வெறுக்கும் மனிதன் தான் உண்டோ? எவ்வளவுதான் கல்நெஞ்சக்காரராக இருந்தாலும் அந்த கல்லையும் கனிய வைக்கும் தன்மை கொண்டதுதான் வாழ்த்து. :)

நமது தினசரி வாழ்வில் பார்த்தோமேயானால் காலை எழுந்தவுடன் புன்சிரிப்புடன் நம்மை எதிர்நோக்கும் நம் உறவுகள் சிந்தும் மென்புன்னகையும் கூட ஒருவித வாழ்த்துதான். பிறந்த குழந்தையின் மென்சிரிப்பில் கடவுளின் வாழ்த்தை பார்க்கிறோம்.

தலைகோதிச் செல்லும் தென்றலும் கூட இயற்கை நமக்களிக்கும் வாழ்த்துதானோ!! இருள்பிரியாத அதிகாலைவேளையில் புல்லினங்கள் எழுப்பும் சப்தமும் நமக்கான வாழ்த்துதானோ!! வானம் பூமிக்கு பாடும் வாழ்த்துப் பா தான் மழையோ!! கெட்டி மேளம்!! கெட்டி மேளம்!! என்றவுடன் ஒலிக்கும் மங்கள இசைக்கு நடுவே மணமகன், மணமகளின் கழுத்தில் மங்கள நாண் ஏற்றிய அந்த வேளையிலே, அட்சதை மழையில் நனைந்தவாறே நாணத்துடன் தலை கவிழ்ந்த மணமகளை போல் மரங்கள் நிற்கின்றன, வானமகள் அனுப்பிய வாழ்த்தினை தலை கொள்ளாமல் ஏந்தியபடி. பதிலுக்கு தன் நன்றியை பச்சை வண்ண பாய் விரித்து பதில் மரியாதை கொடுக்கிறாளோ பூமி அன்னை!! நன்றி மறக்காதே!! நீ கடந்து வந்த பாதையை என்றும் மறவாதே!! என்பதை நமக்கு உணர்த்தும் விதம்தானோ இது!!

குழந்தை பிறந்தவுடன் வரும் வாழ்த்து செய்தி, அக்குழந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அத்தாயின் மனக்கண்முன்னால் நிழலாடிச்செல்லும். வாழ்த்தானது கொடுப்பவரையும் மகிழ்விக்கும், பெறுபவரையும் பூரிப்படையச்செய்யும் :)

இதயம் கனிந்த, உளப்பூர்வமான, மனப்பூர்வமான, இனிய, இன்னும் இதுபோல் பலப்பல அழகிய சொற்களை தாங்கி வரும் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒருவரை உற்சாகத்துடன் இயங்கவைக்கும் என்பதில் மிகையேதுமில்லை. இந்த வார்த்தைகள்தான் எவ்வளவு அழகு :)

என்னுடைய வாழ்த்துப்பூக்களை காற்றுவெளியில் தூவி தங்கள் அனைவருக்கும் அனுப்பி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்!! சேகரித்து வைப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் :)

Average: 5 (4 votes)