|
|
தென்னிந்தியர்களின் சிற்றுண்டி வகைகளில் வடைக்கு முக்கிய இடம் உண்டு. வீட்டில் விஷேசம் என்றால், என்ன சாப்பாடு, வடை பாயசமா? என்று கேட்கும் அளவிற்கு விஷேசங்களும் வடைக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. இந்த வடையில்தான் எத்தனை எத்தனை வகைகள்! மெது வடை, மசால் வடை, தவலை வடை என்று வித விதமான ருசியில் பல்வேறு வகை வடைகள் தயாரிக்கப்படுகின்றன. | |
![]() | |
வடையைப் போன்றே பஜ்ஜி, போண்டா ரகங்களும் மிகவும் ருசியானவை. எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் சமாச்சாரங்கள். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் கொஞ்சம் கவனமுடன் சாப்பிட வேண்டும். மாலை நேரத்தில் சூடான பஜ்ஜியும், சுவையான டீயும் கிடைத்தால், சிலருக்கு சொர்க்கம் அதுவே. பருப்பு வடை செய்யும்போது முளைவிட்ட பயறு சேர்த்து அரைத்து செய்தால், சுவை கூடுவதுடன் சத்தும் பலமடங்கு அதிகரிக்கும். பஜ்ஜி, போண்டா போன்றவை மிருதுவாக உப்பினாற்போல் வருவதற்கு சிலர் சிறிது சோடா உப்பு சேர்ப்பார்கள். |


சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
17 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
19 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -