தேவையானப் பொருட்கள்
- வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla)
- ஃபுரோஸன் சோளம் - 1/4 கப்
- கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப்
- வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
- உள்ளி- 3 பல்லு
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு
- எலுமிச்சை - பாதி
- சீஸ் கலவை - 1 கப்
- (பார்மஜான், மொற்சரில்லா, செடார்)
- ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப்
- எண்ணெய்
|
செய்முறை
- கறுப்பு பீன்ஸை உப்பு போட்டு அவித்து வைக்கவும்.
- உள்ளியை நசித்து வைக்கவும்.
- வெறும் சட்டியில் ஃபுரோசின் சோளத்தைப் போட்டு வறுத்து வைக்கவும்.
- ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- பின்னர் உப்பு, உள்ளி, மிளகாய்தூள், சோளம், கறுப்பு பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- கலவை நன்கு சேர்ந்ததும் இறக்கவும்.
- பின்னர் சுட வைத்த ரோர்டியாவை ஒவ்வொன்றாக எடுத்து அதன் அரைவாசியில் வதக்கிய கலவையை பரப்பி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
- பின் அதன் மேலே துருவிய சீஸ் கலவையை பரப்பி சிறிது உப்பு தூவவும்.
- பின் அதன் மேல் சிறிது ஹலபீனோவை வைத்து பரப்பி மறு பாதியால் மூடவும்.
- மூடிய ரோர்டியாவின் மேற்புறத்தில் ஒரு பிரஷால் சிறிது எண்ணெய் தடவி சிறிது உப்பு தூவவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி இதனை திரும்பவும் இரு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும். (சீஸ் உருகும்வரை)
- சுவையான வெஜ் கேசடீயா தயார். இதை அப்படியே சாப்பிடலாம்.
|
குறிப்பு:
இதற்கு 8 அங்குல ரோர்டியாவை பயன்படுத்தவும். ஹலபீனோ என்பது ஒரு வகை மிளகாய். மிகவும் காரமானது. மெக்சிகன் உணவில் அதிகம் பயன்படுத்துவார்கள்.
வழங்கியவர்
Mrs.B.Narmatha
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
20 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -