|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|

ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே
அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது.
ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும்.
எளிதாய் பொடியாகும். அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில்,
வறுக்காமல் அப்படியே அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம். |
| |
பாயசம் கொதிக்கும் போதுதான் முந்திரி இல்லை என்ற ஞாபகம் வருகின்றதா?
அல்லது முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம். தேங்காயைப்
பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவை
கூடும். |
| |
மதியம் வைத்த சாதம், யாரும் சரியாக சாப்பிடாமல் அப்படியே இருக்கின்றது
என்று வருத்தப்படுகின்றீர்களா? மீந்த மதிய சாதத்தை மிக்ஸியில் இட்டு,
ஒரு சுற்று ஓடவிட்டு (நன்கு அரைத்துவிடக் கூடாது), அத்துடன் சிறிது
அரிசி மாவு, ஒரு தேக்கரண்டி பொடித்த மிளகு, நறுக்கின சின்ன வெங்காயம்,
தேக்கரண்டி சீரகம், நறுக்கின பச்சை மிளகாய், சிறிது தேங்காய்த் துருவல்,
கறிவேப்பிலை, தேவையான உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து அடை
மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து கொள்ளவும். இதனை மாலையில் அடையாக
ஊற்றிக் கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவர். |
| |
இதேபோல், மீந்த சாதத்துடன் சிறிது கடலை மாவு, சிறிது கோதுமை மாவு சேர்த்து
கெட்டியாக அரைத்து, அதில் நறுக்கின வெங்காயம், நறுக்கின இஞ்சி, பொடியாய்
நறுக்கின பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து கிளறி, வாணலியில்
எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாகப்
பொரித்து எடுக்கலாம். |
| |
சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம்
ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொண்டு,
மாவுடன் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும்
சேர்த்து பிசையலாம். பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத்
தேய்க்கவும். தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன்
கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும். |
| |
தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி அரைக்கும் போது, ஒரு சிறு துண்டு
இஞ்சியையும் சேர்த்து அரைக்க சுவையும், மணமும் கூடும். செரிமானத்திற்கும்
மிக நல்லது. |
| |
பூண்டு உரிப்பதற்கு கடினமாக இருக்கின்றதா? வெறும் வாணலியில் லேசாக
வறுத்து பிறகு தோலை உரித்தோமென்றால், மேல் தோல் எளிதாக வந்துவிடும். |
| |
ஆம்லெட் போடும் போது, கல்லில் ஊற்றிய பிறகு அதன்மீது ஸ்வீட் பிரட்டை
பொடியாக உதிர்த்து, பரவலாகத் தூவி விட்டு, வேக வைத்து எடுத்தால் ஆம்லெட்
சுவையாய் இருக்கும். அப்படியே சாப்பிடலாம். மிளகுப் பொடியைத் தவிர்த்து
விடவும். பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். |
| |
சீனிப்பாகு காய்ச்சும் போது, கொதிக்கும் பாகில் சிறிது பால் விட்டுக்
கலக்கினால், பாகில் உள்ள அழுக்கு மொத்தமும் திரண்டும் மேலே வரும்.
அவற்றை எளிதாக கரண்டியால் வழித்து எடுத்து விடலாம். |
| |
- நூடுல்ஸ் சமைத்தால் உணவு விடுதிகளில் கிடைப்பது போல், பொல பொலவென்று
இல்லாமல் கொழ கொழ என்று ஆகிவிடுகின்றது என்பது பலரது குறை. பொதுவாய்
உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் நூடுல்ஸ் நாம் இல்லங்களுக்கு
வாங்கும் மாகி, ரேமன் தரத்தில் இருப்பது இல்லை. அவை சற்று கடினமானவை.
பொல பொலவென்று வந்தாலும் சுவை சற்று கம்மிதான். இல்லங்களில் பயன்படுத்தும்
நூடுல்ஸையும் பொல பொலவென்று தயாரிக்கலாம்.
- நூடுல்ஸை வேக வைக்கும் போது, தண்ணீருடன் முதலிலேயே சேர்த்து
கொதிக்க வைக்காதீர்கள். முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, பிறகு
அதில் நூடுல்ஸை உடைத்துப் போட்டு வேகவிடவும்.
- தண்ணீரின் அளவை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். மிகத் திட்டமாக
தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் நூடுல்ஸை வேக வைப்பது. இம்முறையில்
வடிகட்டும் அவசியம் இருக்காது. நீர் முழுவதையும் நூடுல்ஸ் உறிந்து
விடும். சத்துக்கள் வீணாவதில்லை. இம்முறையில் தண்ணீரின் அளவும்,
வேக வைக்கும் நேர அளவும் சரியாக இல்லாவிடில் நூடுல்ஸ் குழைந்துவிடும்.
- மற்றொரு முறையில், நீரின் அளவை சற்று அதிகம் வைத்து, நன்கு கொதித்தவுடன்
நூடுல்ஸைப் போட்டு, ஒரு நிமிடம் மட்டும் வேக வைத்து எடுத்து, நீரை
வடித்து ஆறவிடுதல். இம்முறையில் நூடுல்ஸ் கொதிக்கும் போது நுரைக்க
ஆரம்பிக்கும். அப்போது கரண்டியின் பின் பாகத்தால் நன்கு கலக்கி
விடவும். முக்கால் பதத்திற்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வடிகட்டிய பிறகு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி எடுத்து,
காற்றில் சிறிது நேரம் ஆறவிடவும். (சிலர் சிறிது எண்ணெய் சேர்த்து,
தோசைக்கல்லில் இட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுத்துக் கொள்வர்).
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|