பட்டிமன்ற தலைப்புகள்

அனைவருக்கும் எனது வணக்கம். இந்த இழையினை அட்மின் சகோதரர் சொன்ன கருத்தின்படி ஆரம்பித்து வைக்கிறேன். இதில் யார் யாருக்கு என்ன தலைப்பு தோன்றுகிறதோ அதனை பதிவு செய்யலாம். யார் அடுத்த நடுவரோ அவர் இதில் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்யலாம்.

வாருங்கள். எல்லாரும் உங்களுக்கு தோன்றியதை பதிவு செய்யுங்கள்.

அன்புடன்
உமா

thevaithaan

இக்கால பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்கின்றார்களா இலலையா?
தீண்டாமை இன்னும் இருக்கிறாதா இல்லையா?
நாகரிகம் மக்களை வளர்த்திருக்கிருதா, இல்லை சீரழிக்கிறதா?

by valarmathi

இக்கால பெற்றோர் சிலர் குழந்தைகளை கவனிக்கிறார்கள்,ஒரு சிலர் கவனிப்பதில்லை.

தீண்டாமை இன்னும் இருக்கிறது....

நாகரிகம் மக்களை வளர்க்கவில்லை சீரழிக்கிறது.....

மூட நம்பிக்கை மக்களை சீர்படுத்துகிறதா!சீரழிக்கிறதா!

Don't Worry Be Happy.

விலைவாசி உயர்வு - அதிகம் பாதிப்பது கீழ் தட்டு ஏழை மக்களையா? நடுத்தர வாழ் மக்களையா?

அரசு பள்ளி தரம் குறைந்ததால் மக்கள் தனியார் பள்ளியை நாடுகிறார்களா? அல்லது மக்கள் தனியார் பக்கம் போவதால் அரசு பள்ளி கவனிப்பின்றி இருக்கிறதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1.இணையதளத்தின் நட்பு,காதல் உண்மையானதா?பொய்யானதா?
2.அதிகம் மக்களை பாதித்தது வைரமுத்து கவிதைகளா?கண்ணதாசன் கவிதைகளா?
3.கவிதைகளில் சிறந்தது புதுக்கவிதையா?மரபுக்கவிதையா?
4.ஒரு நாள் இந்த உலகம் அழியும் என்பது உண்மையா?பொய்யா?
5.அதிகம் சுமைதாங்கி ஆண்களா?பெண்களா?
6.ரசிகர் மன்றம் தேவைதானா?தேவை இல்லையா?
7.அவசர காலங்களில் உதவிபுரிவது நண்பர்களா?சொந்தபந்தங்களா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

1.ஜாதிக்கொடுமையினால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிப்படைகிறார்களா?இல்லையா?
2.அரசாங்கமே முன்வந்து நடத்தும் டாஸ்மார்க்(சாராயம்)வியாபாராம் சரிதானா?தவறா?
3.இன்றளவு மூடநம்பிக்கைகள் இருக்கிறதா?இல்லையா?
4.சிறந்தது எது?ஆங்கிலேயர்களின் ஆட்சி இன்றைய ஆட்சி??
5.மறைந்த தலைவர்களுக்கு சிலை தேவைதானா?இல்லையா?
6.சந்திரனில் ஆம்ஸ்ட்ராங் இறங்கியது உண்மையா?பொய்யா?
7.மைக் பாடகரில் சிறந்தவர் யார்?முரளியா?மோகனா?
8.நாகரீகம் என்பது கல்வி கற்றதா?ஒழுக்கம் என்பதா?
9.மனைவிக்கு கணவன் பனிவிடை செய்வது இன்றளவு சாத்தியமா?இல்லையா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Nobody takes care on safty aspects.Boys and girls riding two wheelers must not be allowed by parents.Same way those who try to turn must chose their left side to turn in.

அச்சமில்லை

கோபி ஆனந்தன்... புதுசா இணைந்திருக்கீங்க... வருக வருக. தமிழில் போடுங்க பார்ப்போம் அடுத்த பதிவை... :) இல்லைன்னா யாரும் படிக்க மாட்டாங்க. அதுக்கு தான் சொல்றேன். சரியா?? :) கூடவே நீங்க குடுத்த பதிவு பட்டிமன்ற தலைப்பா குடுக்க நினைச்சதா?? இல்ல என்றால் வேறு இழையில் குடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெளிநாட்டுவாழ் நம் குழந்தைகளுக்கு தமிழை அதிகம் கற்று கொடுப்பது உறவுகளா?ஊடகங்களா?

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்