பிரார்த்தனை

இந்த உலகில் எத்தனையோ சகோதரிகள் பல விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் ஒரு பிரார்த்தனை குழு ஆரம்பிக்க கூடாது. யாருக்காவது பிரர்ர்த்திக்க வேண்டும் என்றால் எழுதுங்கள். கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை.

இப்படி ஒரு பகுதி ஆரம்பிச்சீங்கன்னா, அதிகமான பிரார்த்தனை குழந்தை வரம் வேண்டி தான் பா இருக்கும்.. ஸோ, நாம அதுக்காகவே பொதுவான பிரார்த்தனை செய்யலாம் பா..

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய் ஜானகிரவி நான் கிறேஷ்ரவி குவைதில் இருக்கிறேன் உங்களை பற்றி தெரிந்துகொள்ளலாமா?

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

இந்த பகுதியை ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி janaki. என் வயது 26. நான் சிறுநீரக கோளாறுக்கு மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அலோபதியில் transplantation செய்ய வேண்டும் என்கிறார்கள்.
சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்கிறார்கள். நான் விரைவில் குணமடைய ப்ரார்த்தனை செய்யுங்கள் தோழியரே.

நான் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம். எனக்கு கல்யாணம் முடிந்து 3 மாதம் ஆகுது. என் கணவர் மெக்கானிக்ல் பொறியாளர். உங்கள் குடும்பம் எப்படி?

நிச்சயமாக பிரார்த்திப்போம். உங்கள் சிறுநீரக பிரச்சினை கூடிய விரைவில் தீரும். கவலை படாமல் இருஙகள்.ஏந்த ஆபரேஷனும் இல்லாமால் நீங்கள் குணமாவீர்கள். நம்மை படைத்த கடவுள் உங்களை கை விட மாட்டார்.

நான் தலைவர் ரசிகை... அதுனால, அவரு style- லயே சொல்றேன்... "ஆண்டவன், நல்லவங்களை சோதிப்பான்,ஆனா கை விட மாட்டான்..." ஸோ... Dont worry... எங்கள் ப்ரார்தனை உங்களுக்கு உண்டு...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

முதல்ல உங்க தலைவரை கடவுள் நல்ல நடிப்பை கொடுத்து காப்பாத்தட்டும். என்று செய்து ஒரு நடிகனை தலைவர் என்று சொல்வதை என்று தமிழன் நிறுத்துவனோ அன்றுதான் தமிழநாடு உருப்படும்.ஒரு கன்னடத்துகாரனை தமிழ்ச்சி தலைவன் என்று சொல்வதா? வெட்கக்கேடு.

ஜானகி சரண்யா உங்கள் வார்த்தைகள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. 5 மாதங்களாக என் மனம் பட்ட வேதனைக்கு நல்லதொரு ஆறுதல் கிடைத்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்பல. பிரார்த்தனையோடு நில்லாமல் உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். ஜானகியும் சரணயாவும் எங்க இருக்கீங்க நான் சின்னமனூரில் இருக்கிறேன். ஒரு பையன். 2 1/2 வயது.

ஜானகி n சரண்யா உங்கள் வார்த்தைகள் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. 5 மாதங்களாக என் மனம் பட்ட வேதனைக்கு நல்லதொரு ஆறுதல் கிடைத்திருக்கிறது. உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்பல. பிரார்த்தனையோடு நில்லாமல் உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். ஜானகியும் சரணயாவும் எங்க இருக்கீங்க நான் சின்னமனூரில் இருக்கிறேன். ஒரு பையன். 2 1/2 வயது.

எனக்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம். எனக்கு கல்யாணம் முடிந்து 3 மாதம் ஆகுது. என் கணவர் மெக்கானிக்கல் பொறியாளர்.

மேலும் சில பதிவுகள்