என் மாமனாருக்கு கண் அருவை சிகிச்சை செய்ய வேண்டும். அரவிந்தில் செய்யலாம் என்று இருந்தோம்.இப்போது அங்கு காப்பிட்டு திட்டம் செயல் படாது என்ரு கூறிவிட்டார்கள். எனவே என் கணவர் 14000 கொடுத்து இந்த அருவை சிகிச்சை செய்ய இருக்கிரார். அரவிந்தில் இலவசமாக செய்யும் மருத்துவமனையும் உள்ளது. அங்கு செய்யலாம் என்று என் கணவர் சன்டை போடுகிரார் நானும் வேலைக்கு செல்கிரேன்.என் கணவரின் அண்ணனுக்கு அதிக வருமானம் இல்லை.அவர் வேலைக்கு அதிகமாக செல்ல மாட்டார்.அவரது மனைவி வீட்டில் தான் இருகிரார். அவர்து பையன்னுகு போன மாதம் தான் 4000 ரூபாய் பல்லி கட்டணம் செலுத்தினோம். இந்த மாதம் என் மாமனாரின் கண் அருவை சிகிச்சை அதற்கு அவர் அண்ணன் எதுவும் பணம் தரமாட்டார்.நான் சிக்கானமாக இருந்து சேர்க்கும் பணததை என் கணவை அவரது சம்பலம் 5000 .என் வருமானதை 3500-வைத்து தான் வாழ்கிரோம். நான் இந்த மாதத்தில் இருந்து சீட்டு கட்ட துவங்கி உள்ளேன். நல்ல சாப்பாடு கிடையாது. நானும் எதும் கேட்க்கமாட்டேன். இலவச மருத்துவமனையில் செய்யலாம் என்ரால். என் கணவர் சண்டை போடுகிரார். என் மீது தவரு இருக்கிரதா இல்லையா என்று தெரியவில்லை.குழப்பத்தில் உள்ளேன் யாரேனும் விடை சொல்லுஙகல்
அன்பு வளர்
ஒரு சில சமயம் நாம் நல்லது செய்தாலும் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் சொல்வது தான் சரி. இலவசமாக என்றாலும் அரவிந்த் hospitalil நன்றாக
கவனிப்பார்கள்.ஆபரேஷன் ஆன பிறகு செலவுகள் இருக்கும் அதற்கும் செலவழிக்க
வேண்டியிருக்கும் . வுங்கள் மாமனாரிடம் பேசி அவரை வுங்கள் கணவரிடம் சொல்ல
சொல்லவும். பெற்றோருக்கு செய்வதை தவறு என்று நான் சொல்ல வரவில்லை அது
நம் கடமை. அதே நேரம் வுங்கள் எதிர்காலம் பற்றியும் ஆலோசனை செய்யவேண்டும் .
வுங்கள் கணவரிடம் மெதுவாக பேசி புரிய வைக்கவும்.
அன்புள்ள வளர்... உன் கஷ்டம்
அன்புள்ள வளர்... உன் கஷ்டம் எனக்கு புரிகிறது.. என்ன உன் கணவருக்கு வருமானம் அதிகமில்லாவிட்டாலும் நீ உன் திறமையால் பணம் சேர்த்து வைக்கிறாய்..உன் கணவருக்கு அவரது அப்பா மேல் ரொம்ப பாசம்னு நினைக்கிறேன்.. அதுதான் எதைப்பத்தியும் யோசிக்காம்ல் செலவு செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்.. அதுவும் நீ உன் மாமனாருக்கு இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் கூறுவது அவருக்கு பிடிக்கவில்லை.. இந்த விசயத்தில் 2 முடிவுகள் எடுக்கலாம்..1. நீ தனிமையில் உன் கணவருடன் இருக்கும் போது அவரிடம் எடுத்துக்கூறு(கோபப்படாதே)..இலவச மருத்துவம் நன்றாகத்தான் செய்வார்கள்..என் தோழியின் மாமியாருக்கு செய்தார்கள் என்று கூறு..ஆனால் கவனம் வளர்...தப்பித்தவறி கூட பணத்தைப்பற்றி பேசாதே..இதற்கு அவர் ஒத்து வரவில்லை என்றால்..14000 கட்டி செய்யட்டும் விடு.. ஆனால் இனி உன் சேமிப்புகளை அவருக்கு தெரியாமல் செய்..இதை நான் தவறான நோக்கத்தில் சொல்லவில்லை..நீ பணம் சேர்த்து யாருக்கு செலவிட போகிறாய்.. உன் கணவருக்குதானே..மனதை தளர விடாதே.. வாழ்க்கையை இனிதாக்கி கொள்.. ஆல் தி பெஸ்ட்..
வளர்...
வளர்...
உங்களின் குழப்பம் தீர சில ஆலோசனைகள்.
1.முதலில் யாரேனும் அரவிந்த் ஹாஸ்பிட்டலில் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து உள்ளனரா என பாருங்கள். அதன் மூலம் அவர் நல்ல முறையில் குணம் அடைந்து இருப்பதை உறுதி செய்யுங்கள்.
2.அவ்வாறு இருப்பின் உங்கள் கணவருக்கு சுட்டிக் காட்டி புரியவைங்கள். இலவசமாக செய்வதில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில்.
3.உங்கள் கணவர் பயப்படுவதிலும் அர்த்தம் உள்ளது. அசால்ட்டாக விட்டுவிட்டார்கள் என உங்கள் மாமனார் நினைக்ககூடாது.ஏனெனில் வயதாகிவிட்டால் யாரும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என தவறாக நினைக்கத் தோன்றும்.
4.கண் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இலவச மருத்துவத்தின் கவனிப்பு பற்றி சரியாகத் தெரியாமல் செய்ய வேண்டாம்.
5.என்னை பொறுத்தவரையில் நாம் நலமுடன் இருந்தால் தான் எதையும் செய்ய முடியும்.உடல்நலத்தில் எந்தவித தயக்கமும் பணத்தினால் வேண்டாம்.அதனால் செலவைப் பற்றி இந்த முறை எண்ணாமல் 14000 கட்டி செய்வது உத்தமம் எனத் தோன்றுகிறது.
6..இலவச மருத்துவம் நல்ல முறையிலே இருக்கட்டும்.. ஆனால் வேறு ஏதேனும் பிரச்சனையால் பாதிப்பு ஏற்படின் உங்கள் கணவன் மனைவி உறவில் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.ஏனெனில் அவர் ஏற்கனவே சம்மதிக்காமல் உள்ளார் இல்லையா?
பின் பிறந்த வீடு புகுந்த வீடு பாகுபாடு என பிரச்சனை வரும். உங்கள் மாமனார் கருத்தை பாளிஷாக கேளுங்கள்.
இதில் குழப்பம் வேண்டாம்.அனைவரும் சேர்ந்து முடிவு எடுங்கள்.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கண் அறுவை சிகிச்சை
அரவிந்த் கண் மருத்துவமனை மதுரையில் மிகவும் பிரபலமானது. எங்கள் ஊரில் பலர் அவ்வாறு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அடிக்கடி இலவச கண் மருத்துவ முகாம் போடுவதும் உண்டு.என் உறவினர் சிலர் அங்கு தான் சிகிச்சை செய்தார்கள். கவனிப்பும் நல்ல முறையில் தான் இருக்கிறது. 3 மாதத்துக்கு ஒரு முறை செக்கப் கூட இலவசமாக தான் செய்கிறார்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது நம் போன்ரவர்களுக்கு தான் பொருந்தும். உங்கள் கணவரிடம் இதையே அடிக்கடி பேசாமல் ஒரு முறை அங்கு விசாரிப்பது போல் சென்று உங்கள் கணவனை அழைத்து (இலவச மருத்துவ பிரிவுக்கு) செல்லுங்கள். அங்குள்ளவர்களை பார்த்தால் ஒரு வேளை உங்கள் கணவரின் மணம் மாறலாம்.
முன் பின் பரிச்சயம் இல்லாத மருத்துவமனையின் இலவச முகாம் என்றால் தான் பயப்பட வேண்டும்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹலோ வளர்
முதலில்...ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கனும், எப்பவுமே பெரியவங்களுக்கு சிகிச்சை எடுக்கும் விஷயத்தில் நாம இப்படி வாதம் பன்னக்கூடாது, அந்த விஷயத்தில் பணத்தை முக்கியாமா நினைக்ககூடாது, அது உங்க பெற்றோர்களாயிருந்தாலும் சரி உங்க கனவருடைய பெற்றோர்களாயிருந்தாலும் சரி அவங்களுக்கு சிகிச்சை எடுப்பதில் இவ்வளவு செலவு பன்னகூடாது அவ்வளவு செலவு பன்னக்கூடாதுனு பிடிவாதம் பன்னுவது ரெம்ப தப்பு. பணம் திரும்ப சம்பாதிக்கலாம், உடல் உறுப்புகள் சேதம்டைந்துவிட்டால் அது கடையில போய் வாங்க முடியாது அதுனால உங்க மாமனாருக்கு மட்டுமில்லை யாருக்கு இந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் முடிந்தவரை முகம் சுழிக்காமல் ஒத்துழைக்கவேண்டும், பனம் செலவு பன்னுவது என்பது கனவரின் கடமை, நான் உங்க பணத்தை செலவு செய்ய சொல்லவில்லை. அது உங்க தனிப்பட்ட விருப்பம்.
உங்க கணவர்தான் இந்த செலவெல்லாம் செய்யவேண்டும். ஆனா நீங்க பனம்செலவு பன்னாமல் இலவசமாத்தான் பன்னனும்னு உங்க கனவருடன் மல்லுக்கு நிக்கிறீங்களே அதுக்காகத்தான் சொன்னேன். நீங்க ரெண்டுபேரும் இப்படி வாதம் பன்னுவது உங்க மாமனாருக்கு தெரிஞ்சா அவரு மனசு கஷ்டப்படாதா? உங்க மாமனாரும் வேற யார்கிட்டே போவாங்க அவரு நல்லவரோ கெட்டவரோ அது வேற விஷயம். ஆனா இயலாதவர்கள். நீங்கள்லாம் இல்லேனா அவங்க அணாதைதானே? கடைசி காலத்துல பெரியவங்கள கண்கலங்காம பார்த்துக்கொள்வதுதான் ரெம்ப புண்ணியம்பா, காரணம் எல்லோருமே கடைசி கால்மனு ஒன்றை சந்திக்க இருக்கிறோம், அந்த நேரத்தில் இன்னைக்கு FEES கட்டி படிக்கவைக்கிறீங்களே உங்க மகன் அவரும் உங்க மனைவியும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இப்ப நமக்கு தெரியாது. நீங்க இப்ப செய்யும் நன்மைகளெல்லாம் உங்க கடசி காலத்துல உங்களுக்கு திருப்பி தரப்படும் கவலைப்படாதீங்க, உதவி செய்து கெட்டுபோனவர்கள் யாரும் இல்லேம்மா, பிரச்சனை இல்லேனா வாழ்கை போரடிச்சு எதையோ இழந்த மாதிரிதான் இருக்கும். அதுனால எல்லா பிரச்சனையாயும் சவாலா எடுத்து சமாளிக்கனும் அதுதான் திறமை, உங்களை மீறீ என்ன நடந்திரப்போகுது
வாழ்ககை என்பது உங்களுக்கு WORKING HOURSன அதுல பிரச்சனை என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.
நீங்க சேர்த்து வைதுள்ள உங்க பணத்தை உங்க மாமனாருக்கு செலவு செய்யுங்கனு சொல்லவில்லை, அவங்களுக்கு நல்லா உதவியா இருந்து நல்லா கவனிச்சிகோங்கனு சொல்றேன்.
மலர்ந்த முகத்துடன் நீங்க அவங்களை கவனித்துக்கொள்ளும்போது எவ்வளவு கெட்டவங்களா இருந்தாலும் உங்க நடவடிக்கை பார்த்து உடனே திருந்திவிடுவார்கள், அவர்கள் உங்களுக்கு எதுவும் கெடுதல் பன்னியிருந்தாலும் இதுல அவங்க நெகிழ்ந்துபோய் குற்ற உணர்வாய் உனர்வார்கள் இதுதான் நீங்க கொடுக்கும் தண்டனை.
அதுக்காக உங்க மாமனார் கெட்டவர்னு சொல்லவில்லை. உடனே எங்க மாமனாரை நீங்க எப்படி கெட்டவர்னு சொல்லலாம்னு என் சட்டையப்பிடிச்சு எங்கிட்ட பஞ்சாயத்து வச்சிராதீங்க இது உறவுகளைப்பேன ஒரு பொதுவான யோசனை, நான் என்ன உங்க கனவருடைய மாமனாரையா பாத்துக்க சொல்றேன், உங்க மாமனாரைத்தானே கவனிச்சுக்க சொல்றேன் அதுனால நான் உங்க கட்சி.
என்ன சரியா, எல்லாம் சரியாப்போகும் கோவப்படாதீங்கப்பா, வருத்தப்படாதீங்க அதுனால் Pressure வந்து நாமதான் பிற்காலத்துல கஷ்டப்படனும், இப்ப அப்படி கஷடப்படுற எல்லா பெரியவர்களும் உங்கள மாதிரி அவங்க காலத்துல மனச போட்டு வருத்திக்கிட்டதால் வந்த வினைதான் அது. எல்லாரிடமும் அன்பா பழகி எல்லாருடைய அன்பையும் பெற்று ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆஷிக்
குழம்பி போன என் மனதிற்கு
குழம்பி போன என் மனதிற்கு ஆறுதலாய் இருக்கிரது உங்கள் வார்த்தைகள் மிக்க நன்றி தோலிகளே
அனுபவம்
Ramya Karthick அருமையா சொல்லி இருக்காங்க..(பிரச்சனைய எப்படி அனுகுவதுன்னு)
நன் ஏன் அனுபவதியும் பகிந்து கொள்கிறேன்
நான் வெளிநாட்டில் இருக்கேன் இங்க எனக்கு eye test பண்ணி கண்ணாடி குடுத்தாங்க (in pvt .)௦௦ 10000(aprox .) ஆச்சி. குள் மெட்டல் பிரான்மே மாடே இன் இத்தாலி அப்படி இப்படி நல்லா காச பிடிங்கிணாங்க ஆனா எனக்கு திருப்தி இல்லை ஒரு 3 month கூட நான் அந்த கண்ணாடிய use பன்னால. 2007 year vacation timela pondicherry அரவிந்தர் eye hospital ல போய் பார்த்தேன் நல்லா அழகா பார்த்தாங்க (அங்க இருக்குற அழகான பெண்கள் மாதரி) அங்க கொஞ்சம் வெயிட் பண்ண நேரம் கூட போனது தேரியல அப்படி ஒரு அமைதியான ஒரு சூழ்நிலை . ஏதோ 5 ஸ்டார் ஹோட்டல் மாதரி கிளீன் place. எனக்கு அங்க ஆனா பணம் ஒரு 1 ஆயரதிர்க்கும் கிழ . அந்த கண்ணடித்தான் எனக்கு இப்ப Compatible ல இருக்கு.
next month நான் vacation வரேன் அப்பகுட நான் அரவிந்தர் hospital தான் போய் திரும்ப ஒரு டெஸ்ட் பண்ணி கிளாஸ் மதலம்னு இருக்கேன். இது என் சொந்த அனுபவம்.
வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அரவிந்த் ஹாஸ்ப்பிட்டலை பற்றி
நன்றி soul ... உங்கள் பாராட்டுக்கு...
வளர்.. அனைவரும் அரவிந்த் ஹாஸ்ப்பிட்டலை பற்றி ( நல்ல விளம்பரம்) நல்ல விதமாகவே கூறியுள்ளனர்.. ஆமினா சொன்னது போல உங்கள் கணவரை அழைத்து சென்று விசாரியுங்கள்..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
அன்புத் தோழி வளர்மதி, நீங்கள்
அன்புத் தோழி வளர்மதி, நீங்கள் உங்களுடைய மாமனாருக்கு ரூ.14,000/- கட்டியே மருத்துவம் பார்த்துவிடலாம், அது உத்தமம். ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் கணவர் அவருடைய தந்தைக்கு கடைசி காலத்தில் கண்பார்வை நன்றாக இருக்கவேண்டும் என்று நினைகிறார் அதில் தவறில்லை. அவரை உங்களுடைய மாமனாராக பார்க்காமல் அப்பாவாக பாருங்கள். அப்போது உங்களுக்கே உங்களுடைய சொந்த பணத்தில் இருந்து செலவு பண்ண தோன்றும். உங்களுடைய மாமனார் இதுவரையில் என்ன செய்தார் என்று பார்க்காதீங்க. ஏனென்றால் இது வரவு செலவு பார்க்கும் நேரம் கிடையாது. அவர் காலம் கடந்து விட்டது. கணவருடைய அண்ணனும் கைவிட்ட நிலையில் அவருடைய நிலைமையை யோசித்து பாருங்கள். நீங்கள் சொல்வது புரிகிறது நாங்கள் ஒன்றும் கைவிடவில்லை, இலவச மருத்துவம் பார்க்கிறோம் என்று. நாம் நல்லதே நினைப்போம். அதையும் மீறி இலவச மருத்துவத்தில் எதாவது தவறு நேர்ந்து அவருடைய கண்பார்வைக்கு ஏதாவது ஒன்று ஆனால் அது உங்களுடைய வாழ்க்கையெல்லாம் உறுத்திக்கொண்டு இருக்கும். காசு இன்று இல்லையென்றாலும் நாளை சம்பாதித்துக் கொள்ளலாம். எனக்கும் 75 வயதான மாமியார் இருக்கிறார். அவருக்காக என் கணவர் செலவிடும் எந்த மருத்துவ செலவிலும் இதர பிற செலவுகளிலும் நான் எந்த குறுக்கீடும் செய்தது கிடையாது. நமக்கு வாய்த்த கணவர் நம்மை புரிந்து கொண்டு நம் மேல் அன்பை பொழிபவராக இருந்தால் அது போதும்.வானம் நம் வசப்படும். அவருடைய சுற்றத்தார் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்காதீகள். நான் என்னுடைய சகோதரிக்கு சொல்வதை போல உங்களுக்கு சொன்னேன். எதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
Hai Valar, Mu name is
Hai Valar,
Mu name is shridevi
You spend your money to your father-in-law for eye operation. Because your a niece.
TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.