Stop baby Feeding Milk

என்னுடைய குழந்தைக்கு இரன்டு வயது ஆகிரது ஆனால் இன்னும் என்னுடைய பால் குடிகிரது. இதை எப்படி நிருதுவது யாரவது ஒரு பதில் தாருங்கள்.

வேப்பிலயை அரைத்து தடவினால் குழந்தைகள் விட்டு விடுவார்கள் என கேள்விபட்டிருக்கிறேன்.என் பசங்களுக்கு பால் நிறுத்துவதற்க்கு நான் கஷ்டப்பட்டதில்லை.நான் கொடுக்கமாட்டேன் அவங்களும் கேட்கமாட்டாங்க.

வேப்பிலயை முயற்சியுங்கள்.

உடனே நிறுத்தினால் குழந்தைக்கு சில நேரங்களில் ஏக்கத்தினால் காய்ச்சல் வரும். ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாக தான் மறக்கடிக்க முடியும். நீங்கள் முதலில் பால்பாட்டிலை இரவிலும், தாய் பாலை பகலிலும் கொடுங்கள். அதாவது எப்ப அவன் தூங்குகிறானோ அப்போதெல்லாம் பால் பாட்டிலில் பால் கொடுங்கள்.

இந்த முறை பழகியதும் (20 நாட்களுக்குள்), அவன் முழித்திருக்கும் போது பால்கொடுக்க வேண்டி சூழ்நிலை வந்தால் வேப்பெண்ணை தடவுங்கள். ஒரு முறையல்ல,அவன் வாய்வைக்க போகும் போதெல்லாம். பசி அதிகமானால் வேறு வழியில்லாமல் பால் பாட்டிலை நாடுவான்.(3-4 மாதம் மட்டும் இப்பழக்கத்தை கடை பிடிங்கள்)

அதன் பிறகு முடிந்த வரை பாட்டிலில் கொடுக்காமல் டம்ளரில் கொடுத்து பழக்கம் பண்ணுங்கள். நான் சொன்ன அந்த 3 மாதத்திற்குள்ளாகவே டம்ளர் பழக்கத்தை முயற்சி செய்யவும்.

பின் 3 வேளையும் சாப்பாடு கொடுத்தால் பசி இல்லாமலிருப்பதால் பால் பாட்டிலை நாட மாட்டான்.

எது செய்தாலும் படி படியாக செய்யுங்கள். அது தான் குழந்தையின் உடலுக்கு நல்லது.

நான் இம்முறை தான் பின்பற்றினேன். பிறந்ததில் இருந்தே பால் பாட்டிலில் வென்னீர் கொடுப்பதால் 9 மாதத்திலேயே மறக்க வைத்தேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி ! நான் முயன்று பார்கிறென் .

மிக்க நன்றி ! நான் முயன்று பார்கிறென் . Dear Sisters

நீங்க பால்பாட்டில் குடுத்து பழக்கீருக்கீங்களா? இல்லன்னா இனி தான் குடுத்து பழக்கனும்னா கொஞ்சம் கஷ்டம்தான்... ஏன்னா என் பொன்னுக்கு பால் பாட்டில் குடுத்ததே இல்ல அதனால பால் மறக்க வெக்கும் போது நான் ரொம்ப கஷ்டபட்டேன்... ஆனாலும் 10 நாள்லயே மறக்க வெச்சுட்டேன்.

பாப்பாக்கு பசி எடுக்கரதுக்கு முன்னயே பால் இல்லாம வேர ஏதாச்சு குடுத்துருங்க பசி இல்லன்னா பால் கேக்க மாட்டா இல்ல?

தூங்கரதுக்கு முன்ன பால் குடிச்சுட்டு தூங்கற பழக்கம் இருந்தா தோள்ள போட்டு தட்டி குடுத்து தூங்க வெய்யுங்க. நடுவில எந்துருச்சு அலரான்னு பால் குடுத்தாலும் சீக்கிரம் மரக்க வெக்க முடியாது அப்பவும் தட்டிக்குடுத்து தூங்க வெய்யுங்க...

பால் வேனும்னு அலுது அடம் புடிச்சா நீங்க பால் குடுத்துறாதீங்க அப்பறம் அதே பழக்கம் ஆயுரும் அப்பவும் எப்படியாது சமாளிச்சுருங்க...

ஒரு பத்து நாள் இப்படி பன்னீங்கன்னா ஓரளவுக்கு மறந்துருவா...
ஓகேங்களா...

ஆமா என்ன குழந்தைன்னே சொல்லலயே???

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

குழந்தைக்கு சரியான இடைவேளைகளில் திட உண்வு கொடுஙகள்..இரவு இடையில் அழுதால் feeding bottlelil milkகொடுக்கலாம்.கொஞ்சநாள் கஷ்டமாக இருக்கும்

2 வயது குழந்தைக்கு பாலை மறக்கடிப்பது எளிது தான் ஏனென்றால் அவர்களுக்கு இப்போது நிறைய டைவர்ஷன் கிடைச்சுருக்கும். விளையாட்டுல, டிவில அப்படின்னூங்க குழந்தை உங்க அம்மாவிடமோ அல்லது உங்க மாமியாரிடமோ நன்கு பழகுவான் அவருடனே இருந்துக் கொள்வான் என்றால் அவர்களுடன் ஒரு வாரம் போல் இருக்க வையுங்கள். நீங்க அப்பப்போ பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் அவனுக்கு பசிக்க விடாமல் வேலைக்கு சாப்பாடு கொடுத்து விடுங்கள். அப்படியே இரவில் பசி எடுத்தால் பால் பாட்டிலில் கொடுத்து பழகுங்கள்.

நல்லா இருக்கீங்களா? வரவேற்கிறோம் அறுசுவைக்கு வருக. மன்றத்தில் பேறு காலம் - குழந்தை வளர்ப்பு என்ற பகுதியில போய் பாருங்க முன்பே இதை பற்றி நம்ம தோழிகள் பேசி இருக்காங்க அது உங்களுக்கு உதவுதான்னு பாருங்களேன் ஷாகி

மேலும் சில பதிவுகள்