காரணப் பெயர்கள் - சில குறிப்புகள்

காரணப் பெயர்கள் - சில குறிப்புகள்

அறுசுவை தோழிகளே. இந்த பகுதியில் நமக்கு தெரிந்த சில ஊர்,சுற்றுலா தளம்,பழம்,காய்கறி,கீரை, மளிகை சாமான்,மலர் என எந்த பொருளாகவோ அல்லது விஷயமாகவோ இருந்தாலும் அதற்கான பெயர் காரணத்தை தெரிவிக்கலாம்.

இதை பற்றி சில பாட்டிமார்கள் கூற கேட்டுள்ளேன்.. இந்த அறுசுவையில் பல விஷயங்களில் கைத் தேர்ந்த தோழிகள் நிறைய பேர்கள் உள்ளனர்.அவர்களிடம் இருந்து தேவையான அளவு தகவல் கிடைக்கும் என நம்புகிறேன்.இது நம் குழந்தைகளுக்கு கூட சொல்லிக் கொடுக்கலாம்.இதை பற்றி அவர்கள் தெரிந்து இருப்பது நமக்கு பெருமைதானே.

எனக்கு தெரிந்த நான்கு பொருட்களுக்கு பெயர் காரணம் கூறுகிறேன்..
சீரகம் - சீர் அகம்
நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரும்பங்கு வகித்து நம் அகத்தை (உடலினுள்) சீராக்குகிறது.

வெந்தயம் - வெந்த அயம்
அயம் என்றால் இரும்பு. அதாவது இரும்பு சக்தி அதிகம் கொண்டுது என்பதை தான் வேக வைத்த இரும்பு என கூறுகின்றனர்.அத்தனை நல்ல குணத்தை கொண்டதாம்.

பொன்னாங்கன்னி - பொன் ஆம் காணீர்.
இந்த கீரையை உட்கொள்வதால் மேனியானது பொன்னை போல மிளிரும் என்பதை காணீர் என கூறுகிறனர்.

மொடக்கத்தான் - முடக்கு அறுத்தான்.
இது ஒரு கீரை வகை. நம் உடலில் வாயுவால் ஏற்படும் பிடிப்பையும், மலசிக்கலை போக்குவதிலும் வல்லது. எனவே தான் முடக்கை(தடை) அறுக்கக்கூடியது என இந்த பெயர் காரணம்.

அனைவரின் பங்களிப்பை எதிர்ப்பார்த்து, இன்னும் நிறைய பெயர் காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் நான் மட்டும் அல்ல அனைத்து தோழிகளும்.. ;-)

ஹாய் ramya மிகவும் உபயோகமான,பயனுள்ள த்ரெட்பா,எனக்கும் உங்களுக்கு தெரிந்தது தான் தெரியும்.

நல்ல தலைப்பு:
பழனி - முருகன் ஞானபழத்தை விரும்பி கோவித்து கொன்டு சென்ற இடம் பழம் நீ என்று பெயரிடப்பட்டது நாளடைவில் பழனி என்று ஆனது.

வளர்..

நன்றி.. நல்ல பெயர் காரணம். இன்னும் பல தெரிந்து வந்து கூறுங்கள்..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க. சூப்பர்ங்க. அஹா நிறைய பெயர் காரணங்கள் தெரிஞ்சுக்கலாம் அப்போ. நல்ல உபயோகமான பதிவு. இப்ப எனக்கு இப்ப எதுவுமே நியாபகத்திற்கு வரல ரம்யா அப்பறம் சொல்லட்டா. இந்த த்ரெட் பார்த்ததும் உங்கள பாராட்ட தோணுச்சு அதான உடனே உள்ளாக்க வந்துட்டேன்.

அன்பு தோழியரே,

எங்கள் ஊரின் பெயர் தாரமங்கலம், சிவனுக்கு திருமால் தாரை வார்த்து கொடுத்து திருமணம் நடந்ததால் தாரை+மங்கலம் தாரமங்கலம் ஆனது. மேலும் இவ்வூரில் உள்ள கைலாய நாதர் ஆலயத்தில் சிவன் மேல் சூரியஒளி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்று நாள் படும், இதை பார்க்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

1. அகத்திக்கீரை - அகம் + தீ அகத்தில் உள்ள சூட்டை தணிப்பதால் அந்த பெயர் வந்தது.

2. ஒப்பிலியப்பன் என்றால் எதற்கும் ஈடு இணை இல்லாதவன், எதனோடும் ஒப்பிட முடியாதவன் என்று பொருள். அது தற்போது திரிந்து உப்பிலியப்பன் என ஆயிற்று. அதனால் அந்த கடவுளுக்கு உப்பு இல்லாத பண்டங்களை செய்து படைகின்றனர்.

3. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு - (ஆயிரம் முறை போய் சொல்லி) ஒரு வரனை முடிக்க பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் ஆயிரம் முறை போய் சொல்லி முடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை நம் மக்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேவி..

உங்கள் பாராட்டுக்கு நன்றி.. சீக்கிரம் நிறைய தகவல் சேகரித்து கூறுங்கள். அதற்காக காத்துருக்கிறேன்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹேமா...

நல்ல விளக்கம் நன்றி.. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்பணா

வாவ்...நல்ல பெயர் காரணம்.நன்றி.. அதிலும் அகத்திக்கீரை சூப்பர்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என் பெயர் வளர்மதி. அதன் காரனம் வளர் என்றால் வளர்ச்சி, மதி என்றால் 2 பொருள் 1- நிலவு, 2- அறிவு. நம் முன்னோர்கள் எதை செய்தாலும் வளர்பிரையில் தான் செய்வார்கள். ஆகவே இப்பெயரின் காரணம் அறிவிலும், வாழ்க்கையிலும் வளர்ச்சி அடைய வேன்டும் என்பது பொருள்.

மேலும் சில பதிவுகள்