அபசகுணத்திலும் நிகழ்ந்த நல்ல விஷயங்கள்

நம்மில் சிலர் இந்த முகூர்த்த நேரம்,பஞ்சாங்கம்,ஜோசியம், மூடநம்பிக்கைகளை நம்புவதில்லை. காரணம் எதுவாகவும் இருக்கலாம். இந்த காலக் கட்டத்தில் அது தேவை இல்லாத ஒன்றே!!! ஆனால் அத்தகைய விஷயங்களை மனதில் கொண்டே பெரியவர்கள் வாழ்ந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.

நான் சொல்வது என்னவென்றால், இந்த மூடபழக்கங்களை மீறி(அபசகுணமாக ஏதாவது நடந்தும்) எதிலாவது நாம் வெற்றி கண்டுள்ளோமா?

அவற்றை நம்பலாமா? அவையெல்லாம் உண்மையா? அத்தகைய நம்பிக்கைகளை முன்னோர்களாகவே உருவாக்கி கொண்டவைகளா?

யாருக்காவது அந்த அனுபவம் உண்டா? அப்படி
இருந்தால் மறக்காம வந்து சொல்லிட்டு போங்க!!!!!

ஆமினா... எல்லாம் மூட நம்பிக்கியோ இல்லையோ எனக்கு நிறைய சென்டிமென்ட்ஸ் உண்டு. அதனால் இந்த தலைப்பில் நான் ஒன்னுமே சொல்ல வாய்ப்பில்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினா..

எனக்கு மூடநம்பிக்கை இல்லைனாலும், பெரியவங்க வாய் திறந்து இந்த நேரத்துல பண்ணக்கூடாது, எடுக்கக்கூடாதுனு சொல்லிட்டா,,, மீறி செய்ய சங்கடமா இருக்கும்.. ஒருத்தர் வாயிலிருந்து கேட்ட பின் மீற பயமாவும் இருக்கும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா, வனிதா அக்கா

நீங்கள் சொல்வது சரி தான். பெரியவர்கள் சொல்வதை தான் நான் கூட கேப்பேன்.

ஆனால் நான் கேட்டது அபசகுணத்திலும் ஏதாவது நல்லது நடந்துள்ளதா? என்பதே.

உதாரணத்திற்கு என் வீட்டில் முதன் முதலில் நான் பால் காய்ச்சிய போது பால் திரண்டு விட்டது. இது அபசகுண்மாச்சே என எல்லாரும் வருத்தப்பட்டார்கள். ஆனால் அதனால் எந்த பாதிப்பும் அந்த வீட்டில் நான் இருந்த வரை நிகழவில்லை.

கொடி சுத்தி பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என சொல்வார்கள். அப்படி பிறந்த எங்கள் வீட்டுப்பிள்ளையால் இது வரையிலும் எந்த பாதிப்பும் இல்லை.

அதுபோல் ஏதாவது நிகழ்ந்திருந்தால் தோழிகள் சொல்லவும்.
.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்குத்தெரிந்த ஒரு பையனுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம்
ராகு காலம் என்ற நம்பிக்கை கள் கிடையாது. இத்தனைக்கும்
அவர்கள் வீட்டுப்பெரியவர்கள் ரொம்பவே ஆர்த்தடாக்ஸ்.
உக்காந்தா சாமி குத்தம், நின்னா சமி குத்தம் என்று எதற்கெடுத்தாலும்
சகுனம், ஜாதக தோஷம் பரிகாரம் என்றே இருப்பார்கள். வீட்டில்
இருந்த வரையிலும் அவனும் அதற்கெல்லாம் அனுசரித்துத்தான்
போக வேண்டி யிருந்தது.10-வது முடித்து வெளி ஊரில் போய்
கிடைத்த வேலையில் சேர்ந்து விட்டான். பகல் நேரங்களில் வேலைக்கு
போய், இரவுக்கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்து தன் திற்மைகளை
வளர்த்துக்கொண்டு ஒவ்வொரு பேங்க் எக்ஸாமாக எழுதி வந்தான்
கேனரா பேங்கிலிருந்து இண்டர்வ்யு வுக்கு கூப்பிடிருந்தார்கள்.
வெள்ளிக்கிழமை நல்ல ராகு காலமான காலை 11 மணிக்கு இண்டெர்வியு
இருந்தது. அவன் ராகு காலம் பற்றி யெல்லாம் யோசிக்கவே இல்லை.
இண்டர்வியூவில் செலெக்ட் ஆகி பேங்க் வேலையும் கிடைத்தது.
அதுமுதல் அவனுக்கு எல்லா நல்ல விஷயங்களுமே, மற்றவர்களுக்கு
கெட்ட நேரமாக தோன்றும் நேரத்திலேயே நடந்திருக்கின்றன. அதுமுதல்
அவனும் செண்டிமெண்ட் என்று எதுவுமே பார்க்கர்தில்லைனாகூட
அவனுக்கு நடந்த நல்லவை எல்லாமே மற்றவர்கள் ஒதுக்கும் நேரத்திலேயே
நடந்து வந்திருக்கிறன.இப்போ சிங்கப்பூரில் வீடுகட்டி ஆக்ஸ்ட் 1-ம் தேதி
( அதாவது ஆடி மாசம்) தான் குடி போகப்போரான்.

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வார்கள்... வீட்டுக் கிணற்றில் ஆமை இருந்தால் அதை வேறெங்காவது கொண்டு விட்டுவிட வேண்டும் என்றும் சொல்வார்கள்... ஆனால் என் அம்மா வீட்டில் உள்ள கிணற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை இருக்கிறது... எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது... அது எங்கள் வளர்ப்பு பிராணியாக மாறியே விட்டது... பெயர் கூட உண்டு... :-)

வித்யா பிரவீன்குமார்... :)

திறமைக்கு நல்ல நெரம் கெட்ட நேரம் என்பது இல்லை என்பதற்கு உதாரணம் நீங்கள் சொல்லும் நபர்.நான் வீடு குடிபோகும் போதும் இந்த மாறி தான் என் மாமியார் சொல்வார். சென்னையில் அவசரத்துக்கு வீடு கிடைப்பதே பெரிய விஷயம். அதுனால நான் பார்ப்பது இல்லை.

அதுபோல் ஒரு வீட்டில் குடியிருந்தேன். எல்லாரும் அந்த வீட்டுக்கு போக வேண்டாம். அந்த வீட்டில் இருந்த வீட்டுக்காரம்மாவுக்கு யாரோ செய்வினை செய்து வைத்திருந்தார்கள் என்று தடுத்தார்கள். நான் போவதற்கு முன்னால் அந்த வீட்டை பார்த்தாலே பயமாக இருக்கும். யாரும் அந்த வீட்டுக்கு வராததால்(1 வருடம் ஆகியும்) 6 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்க வேண்டிய வீட்டிற்கு வெறும் 4 ஆயிரம் மட்டுமே கேட்டனர். நானும் போனேன்.2 வருடம் எந்த பிரச்சனையும் இல்லை. நான் லக்னோ போவதால் வீடு காலி செய்ய போறேன் என்று சொன்ன அடுத்த நாளே ஆள் வந்தார்கள். அதில் போட்டி வேறு. ஓனர் 8 ஆயிரத்திற்கு சற்றும் குறையவில்லை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

"ஆமை புகுந்த வீடு விளங்காது"அது பொறாமை, கல்லாமை போன்ற ஆமைகள்தான். அந்த அப்பாவி ஆமைகள் இல்லை. சீனர்கள் ஆமையை வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள் ராசியாம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வித்யா

உண்மை தான். என் தாத்தாவின் வீடு கட்டும் போது கூட ஆமை வந்ததாக சொல்லி அதை எடுத்து வேறு இடத்தில் கொண்டு போனார்கள். எந்த பிரச்சனையும் இன்றி எல்லோரும் சுகமாக தான் இருக்கிறார்கள்.

கவிசிவா தெரியாமல் சொல்வதால் தான் மூட நம்பிக்கை என்கிறார்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்