அட்மின்(பாபு) அண்ணாவுக்கு

அட்மின்(பாபு) அண்ணாவுக்கு எனக்கு ஒரு சந்தேகம் நான் ஒரு செய்முறை அனுப்ப உள்ளேன் விளக்கபடங்களுடன், அதற்க்கு ஒரு படத்தை அதாவது தேவையான பொருட்களை இரண்டு விதமாக படம் எடுத்துள்ளேன் இதில் நன்றாக உள்ளதை நீங்களே தேர்வு செய்து கொள்வீர்களா என்பதை கூறவும்
(அண்ணா நான் அனுப்பியா கேள்வியை நீங்க பார்கலைனு நினக்கிறேன் பதில் தறவும்)please.

மன்னிக்கவும். இந்த பதிவை இப்போதுதான் பார்க்கின்றேன்.

கவலைவேண்டாம். நீங்கள் அனுப்பும் படங்களில் சிறப்பாக உள்ளவற்றை தேர்வு செய்துதான் வெளியிடுவோம். அதனால் இரண்டையும் அனுப்பி வையுங்கள்.

அண்ணா ரொம்ப நன்றி நான் இந்த பதிவை போட்ட நேரம் நீங்கள் தேனீர் விருந்து நிகழ்ச்சியில் வேலையாக இருந்தீர்கள் ஆதலால் நானும் உங்களை தொந்தரவு செய்யவில்லை மிக்க நன்றி.

டிப்ஸ்,டிப்ஸ்.... இழை நாந்தான் அரம்பித்தேன், எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது (காயத்திரி அனுப்பியா குறிப்பு பற்றி) நீங்கள் கூறியது போல எந்த இனயதளதில் இருந்து எடுத்ததோ அந்த முகவரியையோ, இல்லை புத்தகதில் இருந்து எடுத்தால் அந்த புத்தகத்தின் பெயரையோ குறிப்பிட வேண்டும் என்று கூறி இருந்தீர்கள், அவர் அதையும் குறிப்பிடவில்லை. எனக்கு கூற தயக்கமாக இருந்தது நானும் அருசுவைக்கு புதுசுதான் ஆதலால் கொஞ்சம் தயங்கினேன் என்னையும் மன்னியுங்கள். ஆமினா போல தைரியம் வரவில்லை இனி அருசுவைக்கு தீங்கு விளைவிப்பது போல இருந்தால் தயங்காமல் கூறிவிடுகின்றேன். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்
நித்யா

//எந்த இனயதளதில் இருந்து எடுத்ததோ அந்த முகவரியையோ, இல்லை புத்தகதில் இருந்து எடுத்தால் அந்த புத்தகத்தின் பெயரையோ குறிப்பிட வேண்டும் என்று கூறி இருந்தீர்கள்//

இல்லை. இதை கொஞ்சம் வேறு மாதிரி சொல்லி இருந்தேன்.

அப்படி வேறு தளங்களில் இருந்து எடுத்து வெளியிட வேண்டிய அவசியம் இருப்பின், அப்படி வெளியிடும்போது எங்கிருந்து எடுத்து வெளியிடுகின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கின்றேன். தளங்களின் பெயரை வெளியிட்டு வெளியிடலாம் என்றால், அதையும் தவறாக பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள். எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு கீழே அந்த தளத்திற்கான லிங்க் கொடுத்துவிடுவார்கள். தளத்தின் பெயரை வெளியிட்டு எதை வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அர்த்தமாகிவிடும்.

வேறு தளங்களில் இருந்து எடுத்துப் போட வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி ஒரு சூழல் இருந்தால், எடுக்கப்படும் தளம் அல்லது புத்தகம் பற்றி தகவல் குறிப்பிட வேண்டும்.

இந்த த்ரெட்டில் அப்படி எந்த அவசியமும் இருந்திருக்கவில்லை. அவராகவே எடுத்து வெளியிட்டு இருக்கின்றார். அதுமட்டுமல்ல. இத்தனை பேர் அந்த குறிப்புகளை அவர்தான் கொடுத்திருக்கின்றார் என்று நினைத்து, அவரை பாராட்டுகின்றார்கள். அப்போதாவது ஒரு வார்த்தை, இல்லை.. இது என்னுடைய சொந்த தொகுப்பு அல்ல, நான் வேறு இடத்தில் இருந்து எடுத்தது என்று தன்னடக்கமாக குறிப்பிட்டு இருக்கலாம். இவர் பாராட்டியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு இதுதான் புரியவில்லை. நாம் செய்யாத ஒன்றிற்காக நமக்கு பாராட்டு கிடைக்கும்போது, நமது மனதிலேயே ஒரு உறுத்தல் இருக்காதா? இந்த பாராட்டிற்கு எனக்கு தகுதி உள்ளதா என்ற கேள்வி எழாதா? என்னவோ போங்கள்.. நான் தான் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கின்றேன் போலும்.. :-(

எனக்கு அதை பார்க்கும் போதே மெயிலில் படித்த மாதிரி இருந்தது, ஆனால் எனக்கு அப்படி போடக்கூடாதுன்னு தெரியாதுண்ணா, அப்புறம் அருசுவை ஆங்கில சைட் பத்தி கேட்டிருந்தேனே, நீங்க அதுக்கு பதிவே போடலை, ஆங்கில அருசுவை தொடக்கம் எப்போது?

அன்புடன்
பவித்ரா

அட்மின் அவா்களுக்கு

நாங்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குறிப்பு நன்றாக உள்ளது என்று நினைத்துதான் பாராட்டினோம். எனக்கு ஒரு விஷயம் தான் உறுத்தியது. அவா்கள் அனுப்பும் குறிப்புகளை டைப் செய்யவே சிறிது நேரம் பிடிக்கும். அவா் நன்கு தட்டச்சு செய்பவராக இருந்தாலும் கூட. நானும் high speed வரை பாஸ் செய்துள்ளேன். ஆனால் இவ்வளவு வேகமாக அடிப்பது சாத்தியமில்லை. ஆனால் சொன்னால் தவறாக போய்விடுமோ என்று எண்ணி தான் அதை கூறவில்லை. பாராட்டிவிட்டு போய்விட்டோம். இதில் எங்கள் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

மேலும் தங்களின் வேலைப்பளு அதிகமான காரணத்தினால் எழுத்துப்பிழைகளை திருத்த முடிவதில்லை. அதனால் யார் குறிப்பு தருகிறார்களோ அவா்களே திருத்தி அனுப்பவும் என்று கூறியுள்ளீா்கள். ஆனால் பலருக்கும் சரியாக தட்டச்சு செய்ய வருவதில்லை. அதனால் அவா்கள் தவறாகவே கொடுத்துவருகின்றனா். உங்களுக்கு ஆட்சேபனை இல்லைஎன்றால் அறுசுவைக்காக அதை நான் திருத்தி தருகிறேன். இப்படி கூறலாமா என்று தெரியவில்லை. என் மனதில் பட்டதை கூறினேன். நன்றி

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இப்பொழுது நன்றாக புரிந்தது நன்றி.

//நாங்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குறிப்பு நன்றாக உள்ளது என்று நினைத்துதான் பாராட்டினோம்//

நீங்கள் பாராட்டியதை நான் தவறு என்று சொல்லவில்லையே.. :-) நான் பயப்படும் விசயம், இது போன்ற செயல்களுக்கு இங்கே ஆதரவு உண்டு என்று தெரிந்தால், மற்றவர்களும் அதை தொடர நினைப்பார்கள். அதனால்தான் இந்த விசயத்தில் நான் கடுமையாக இருக்கின்றேன். மற்ற தளங்களில், மின்னஞ்சல்களில் இருக்கும் விசயம்தான் இந்த தளத்தில் இருக்கின்றது.. புதிதாக என்ன இருக்கின்றது என்ற ஒரு ஒப்பீனியன் நமது தளத்தைப் பற்றி வந்துவிடக்கூடாதே என்று பயப்படுகின்றேன்.

//உங்களுக்கு ஆட்சேபனை இல்லைஎன்றால் அறுசுவைக்காக அதை நான் திருத்தி தருகிறேன். //

குறிப்புகள் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது சமையல் குறிப்புகளையா என்பது தெரியவில்லை. நான் கதை, கவிதைகள் பற்றிதான் குறிப்பிட்டு இருந்தேன். நீங்கள் பிழை திருத்தம் செய்து தர இயலுமென்றால் நிச்சயம் எனக்கு சந்தோசமே.. அதை எப்படி செய்வது என்று யோசித்து, அதற்கான வழிமுறைகளை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்.

// ஆங்கில அருசுவை தொடக்கம் எப்போது? //

சகோதரி பவித்ரா அவர்களுக்கு, மன்னிக்கவும். உங்கள் கேள்வியை நான் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். எனக்கு பதில் தெரியாத கேள்வியை கேட்டு இருக்கின்றீர்கள்.. :-)

கடந்த ஒரு மாத காலமாக அதைப் பற்றி யோசிக்ககூட நேரம் இல்லாமல், மற்ற வேலைகளில் மூழ்கி கிடக்கின்றேன். இதை எழுதும் நேரம்கூட ஒரு அவசர அழைப்பு. இப்போது உடனே திண்டுக்கல் செல்ல வேண்டியுள்ளது.

அறுசுவையின் நீண்ட நாள் உறுப்பினரும், எனது நெருங்கிய நண்பரின் மனைவியுமாகிய திருமதி. கரோலின் இம்மானுவேல் குறித்து பழைய உறுப்பினர்களுக்கு தெரிந்து இருக்கலாம். கூட்டாஞ்சோறில் கேக், பிஸ்கட் குறிப்புகள் நிறைய கொடுத்து இருக்கின்றார். மன்றத்தில் அதிகம் கலந்து கொண்டதில்லை. அவரது தங்கை, ஐந்து மாத கர்ப்பிணி, உடல் நிலை சரியில்லை என்று இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடலில் அடைப்பு ஏற்பட்டு, இன்று காலை இறந்துவிட்டார். செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தற்போது அவசரமாக திண்டுக்கல் புறப்பட்டு கொண்டிருக்கின்றேன். மீண்டும் நாளை அல்லது மறுநாள்தான் அறுசுவைக்கு வர இயலும். வந்த பிறகு மற்ற விபரங்களை தெரிவிக்கின்றேன்.

தோழி கரோலினுக்கு, அருசுவையின் சார்பில் condolence தெரிவிக்கவும். வருத்தப்படாதீர்கள், போய் வாருங்கள்.கரோலின் யார் என்று தெரியாமலேயே அவரின் தங்கைக்காக மனது வருத்தப்படுகிறது.

அன்புடன்
பவித்ரா

//அறுசுவையின் நீண்ட நாள் உறுப்பினரும், எனது நெருங்கிய நண்பரின் மனைவியுமாகிய திருமதி. கரோலின் இம்மானுவேல் குறித்து பழைய உறுப்பினர்களுக்கு தெரிந்து இருக்கலாம். கூட்டாஞ்சோறில் கேக், பிஸ்கட் குறிப்புகள் நிறைய கொடுத்து இருக்கின்றார். மன்றத்தில் அதிகம் கலந்து கொண்டதில்லை. அவரது தங்கை, ஐந்து மாத கர்ப்பிணி, உடல் நிலை சரியில்லை என்று இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடலில் அடைப்பு ஏற்பட்டு, இன்று காலை இறந்துவிட்டார். செய்தி கேள்விப்பட்டதில் இருந்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தற்போது அவசரமாக திண்டுக்கல் புறப்பட்டு கொண்டிருக்கின்றேன். மீண்டும் நாளை அல்லது மறுநாள்தான் அறுசுவைக்கு வர இயலும். வந்த பிறகு மற்ற விபரங்களை தெரிவிக்கின்றேன்//

உயர்திரு.அட்மின் சார் அவ்ர்களுக்கு.

மேலே நீங்கள் கூறிய செய்தி எங்களுக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது.
திருமதி.கரோலின் இமானுவேலின் தங்கை ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அண்ணா, மன்னிக்கவும். நான் காயத்ரி கொடுத்த குறிப்புகள் அனைத்தும் அவருடையது என்று தான் நினைத்தேன். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு பிடித்த, தெரிந்த விஷயங்களை என்து பெயரில் ஒரு பவர்பாயின்ட் டாகுமென்ட் ல் சேவ் செய்வது வழக்கம். (Slide show)அது போலத்தான் அவரும் ஏதொ ஒரு உத்தியை கையாள்வதாக நினைத்தேன்.

அட்மின் அண்ணா நீங்கள் கூறிய செய்தி எங்களுக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது. கர்ப்பிணி பெண் என்பதால் மனதிற்கு மிக வருத்தமாக உள்ளது. எத்தனையோ பேர் அந்த பாக்கியத்திற்காக ஏங்கி இருக்க இறைவனின் இந்த சோதனையை என்னவென்று சொல்வது. திருமதி.கரோலின் விரைவில் மன ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகிறோம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்