உதவி தேவை

அடுத்த மாதம் my brother's marriage.Wedding day அன்று தான் எனக்கு periods வரும்.1 வாரம் தள்ளிப்போட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?


நான் செஞ்சதை சொல்றேன்.போன மாசம் எங்கண்ணாவுக்கு 60 ஆம் கல்யாணம் திருகடையூர்ல நடந்தது. அப்போ நேக்கு ‘குளிக்கறதுக்கு நாள்’.என்னை கட்டாயம் தாலி முடிய வரனும்னுட்டா.என்ன பண்ணறது?

’ப்ரைமோலிட் என்’ மாத்திரை தான் போட்டுண்டேன்.இருந்தாலும் அது ஒங்களுக்கு ஒத்துக்குமானு ஒங்க லேடி டாக்டர கேட்டுண்டு சாப்டுங்கொ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Thanks mohana madam.எப்பொழுது மாத்திரை எடுக்க வேண்டும்? மாத்திரை போட்டால் எவ்வளவு நாள் தள்ளி போகும்?

சுதா மாத்திரை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரைப் பார்த்து வாங்குங்கள். நாமே இதுபோல வாங்கி சாப்பிடுவது பிரச்சினையை உண்டாக்கும். குழந்தைகள் இருக்கிறார்களா தெரியவில்லை. இனிமேல்தான் குழந்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே சாப்பிடுங்கள். பயமுறுத்த சொல்லவில்லை. முன்னெச்சரிக்கை அவ்வளவுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் இதே மாத்திரை(promolet-n) தான் எடுத்துக் கொண்டேன் என் தம்பியின் திருமணத்தின் போதும். நத்தனார்ல எல்லா சடங்குகளும் நாமதான் பண்ணனும் அப்படி இருக்கும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையா போச்சு. ஆனால் எனக்கு இதைப் போல் மாத்திரை எடுத்துக் கொள்வதில் துளியும் கூட இஷ்டம் இல்லை. நான்கு நாள் முன்பாக போடலாம் சுதா. ஏதேனும் சாப்பாடு சாப்பிட்டுட்டு போடவும்.

சுதா, நீங்க தள்ளி போறதுக்கு மாத்திரை போடுவதை விட, முன்னாலே வருவதற்க்கு இயற்கை வைத்தியம் பாருங்கள். இந்த முறையை என்னுடைய சிஸ்டர்ஸ் செய்வாங்க. கரெக்டா ஒரு வாரம் முன்னதாகவே நீங்க நிறைய எள்ளு பண்டங்களை சாப்பிட்டு வாங்க. உங்களுக்கு பீரியட் முன்னாடியே வந்துவிடும். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுதா கல்பனா சொல்வது தான் எனக்கும் கரைக்டாபடுது நீங்க மாத்திரை எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லது அல்லமா. முன்கூட்டியே வர ஏதாவது செய்ங்க. எள்ளு பண்டங்கள் நிறைய சாப்பிடுங்க. இன்னும் திருமணத்திற்கு தான் ஒரு மாதம் இருக்கே. இப்போதுலிருந்தே சாப்பிடுங்க.

விரைவில் வர எள்ளு என்றால் தாமதமாக பொட்டுக்கடலை.உங்கள் டேட் அன்று காலை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் அன்று கண்டிப்பாக ஆக மாட்டீர்கள்.அடுத்தநாள் வேண்டும் எனில் அடுத்தநாளும் தொடருங்கள். இது நான் அவள் விகடனில் படித்தது. எனக்கும் ஒரு முறை கை கொடுத்தது.

ஓ பொட்டுக்கடலை சாப்பிட்டா தாமதமாகுமா? இது நாள் வரை எனக்கு தெரியாம போய்டுச்சே. வீட்டிலேயே நல்ல ஒரு கைமருந்து வச்சிட்டு பின்ன எதுக்கு மாத்திரைலாம் போட்டு உடம்ப கெடுத்துக்கனும். நன்றி சாந்தினி.

நான் என்ன பண்ணுவேன்னா, சாந்தினி சொன்ன மாதிரி டேட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியிருந்தே பொட்டுக்கடலை வெறும் வயிற்றில் சாப்பிட தொடங்கிடுவேன், தேவையான function முடியற வரைக்கும் சாப்பிடுவேன், கண்டிப்பா டேட் ஆகாது, மாத்திரை வேண்டாம்

அன்புடன்
பவித்ரா


கவி சிவா மேம் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.

ஒரு மாசத்துக்கு முன் பீரியட் ஆன நாள்லெந்து 4ஆம் நாள் வெறும் வயத்துல
ஒரு பிடி க்றிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து தொடர்ந்து ஒரு 10 நாளைக்கு சாப்பிட்டால் ’நாள்’ தள்ளி போகும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்