சொல்ல விரும்பினேன் !!

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 100'கு மேல போயிடுச்சு அதான் புது இழை. :) இந்த முறை புது பெயரும் வைக்க எண்ணம்.... வச்சுட்டேன்.

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

சின்ன சின்ன பதிவுகள் பகுதிக்கு இந்த முறை புது பெயரும் வைக்க எண்ணம்.... வச்சுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா
வந்துட்டேன், முதலில் புது பெயருக்கு வாழ்த்துக்கள், எனக்கு இன்னும் தூக்கம் வரலைக்கா, அதான் இன்னும் வலை தேடல், என் நேரம் அதுவும் ஸ்லோ, காலையில வேற சீக்கிரம் எழுந்துக்கணும், ஆடி வெள்ளியோனோ குளிக்கனும், சீக்கிரம்னா 6 மணிதான்

அன்புடன்
பவித்ரா

கை வலி சரியாகிவிட்டதா? சிரியா பயணம் அடுத்த பாகம் எப்போது வரும்.

ஆடி வெள்ளி... நினைவு படுத்தினதுக்கு நன்றி. போன ஆடி வெள்ளி படைச்சுட்டு நியாபகம் இல்லாம நம்ம செண்பகா கொடுத்த முட்டை குழம்பு செய்து வெட்டு வெட்டுன்னு வெட்டினேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீதா... வரும். ;) எப்போன்னு எனக்கே தெரியலயே!!! அண்ணா'ட தான் இருக்கு கீதா எல்லா பாகமும். அண்ணா பிழை திருத்தி படம் இணைத்து வெளியிடணும் இல்லையா... அதனால் கொஞ்சம் நேரம் எடுக்கும். எல்லாரும் காத்திருந்து படிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம வீட்டில் புதுசா ஒரு ஓட்டுனர். வேலைக்கு வைத்தது சாத் சாத் வனிதா தான். பேரு சின்னா. பேருக்கு ஏற்ற மாதிரி ஆளும் சின்ன பையன். உருவமும் சின்ன பையன். பேசிகிட்டே இருப்பான்.... எப்பவும் என் தங்கை ஆபீஸ் போகும்போது மெஸேஜ் அனுப்புவா "உன் டிரைவர் பேசிட்டே வரான்"னு. "யார்'ட"னு கேட்டா... "ரோட்டுல போறவங்கல்ட"னு சொல்வா. அப்போ புரியல.... அப்பறம் தான் தெரிஞ்சுது பையன் தனியா பேசிட்டே வண்டி ஓட்டுறான்னு. அப்பா'ட சொன்னா "வனி சேர்த்துவிட்ட ஆள்... அப்படி தான் இருப்பான்னு"னு சிரிச்சுட்டு போயிட்டார். :( அறுசுவை என் மானத்தை இப்படியா வாங்கனும்??? இதால நான் தனியா பேசுறேன், தனியா சிரிக்கறேன்.

இது கூட பரவாயில்ல.... ஒரு நாள் அந்த பொடியன் சொல்றான் "அக்கா... யமாஹா பைக் வாங்கி அதுல ஆர்னால்ட் மாதிரி வரணும்"னு. என் கைல இருந்த என் பையன் "கெக்கெக்கெக்கே"னு சிரிச்சுட்டான். எனக்கு அர்னால்ட் கைல மாட்டின எலி மாதிரி தெரிஞ்சான் சின்னா. ;)

ஒரு நாள்.. "அக்கா... ஜின் நல்லா போது"னான். என்னடா வாய திறந்தா பீர், ஜின்னு தானா'னு கேட்டா "வண்டி பேரு அப்படி இருந்தா நான் என்ன பண்ண??"ன்றான். "பாவி இது பேரு ஜின் இல்ல Zen."னு சொல்ல, எல்லாரும் என்னை ஒரு பார்வை பார்த்தாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி! ஜின் ஜோக் சூப்பர்... இப்படி காமெடி செய்வதெல்லாம் குமரனுக்கு புரியுதா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் பவித்ரா ராம் ஆடி வெள்ளியை ஞாபக படுத்தியதற்க்கு நன்றி

இலா... வாங்க வாங்க. அவனுக்கு ஒன்னும் புரியாது... ஆனா டைமிங்'ல நச்சுன்னு சிரிச்சு மானத்தை வாங்கிடுவான். நாம சிரிச்சா அவனும் சிரிப்பான். போதாததுக்கு சில நேரத்துல யாராது கொஞ்சினா "அய்யே..."னுவான். கொஞ்சினவங்க நொந்துக்க வேண்டியது தான். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது எப்படி வனி எங்க வீட்டு ட்ரைவரும் உங்கவீட்டு ட்ரைவர் போலவே! ஜின் காமெடி சூப்பர்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்