பிரபலமான ஆட்டோ வாசகங்கள்:
நான் சென்னை சென்ற போது ஆட்டோக்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
தமிழகமெங்கும் ஓடுகிற ஆட்டோக்களிடம் லைசென்ஸ் இருக்கிறதோ என்னவோ கண்டிப்பாக அதன் பின்னால் நல்ல வாசகங்கள் இருக்கும். கொஞ்சம்
சுவாரஸ்யமாக இருக்கும்.கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
நான் பார்த்த சில வாசகங்கள்:
சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...
வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம்..
நாம் இருவர்.. நமக்கு ஒருவர்..
பெண்ணின் திருமண வயது 21
இன்னும் பல வாசித்தேன் ஞாபகம் வரும்போது வந்து பதிவு போடுகின்றேன்.
நீங்கள் பார்த்த கேட்ட வாசகங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
ர(யோ)சித்த வாசகம்!
உ
‘பிரசவத்திற்கு இலவசம்’
‘மழை நீர் சேமிப்பே மனைக்கிங்கே அவசியமே’
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஆட்டோ.
சாரே ஜகான்செ அச்சா.இந்துஸ்தா ஹமாரா.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்.
நாம் இருவர், நமக்கு நாமே ஒருவர்.
உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயனும்.
நான் ரசித்த வாசகங்கள்;
உங்கள் இருவர் வாசகங்களும் நல்லாய் இருக்கின்றது.
மேலும் நான் ரசித்த வாசகங்கள்;
பிச்சை புகினும் கல்வி தவறேல்
நஞ்சை பருகினும் காதல் தவிர்.
அட நம்ம சந்திரன் !
சுமக்க நானிருக்க நடை பயணம் ஏன்...?
சோர்ந்து போனாலும் ஊர்ந்து போக மாட்டேன்.
கடவுள் காதலித்தால் புராணம்
மனிதன் காதலித்தால் மயானம்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை நரகத்தில் பயணப்படுகிறது.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பணம் குறைவாக இருந்தால்
பணம் குறைவாக இருந்தால் மற்றவர்களுக்கு உன்னை தெரியாது..அதிகமாய் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது..
தான் எழுந்துவந்து வரவேற்க்கமுடியாத காரணத்தில்தான் மலைராணி காற்றின் கையில் பூச்சென்டு கொடுத்து வரவேற்கிறாள்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
சமீபத்தில் ...
சமீபத்தில் ஆட்டோவில் பார்த்து பிடிக்காத வாசகம்...
"தாய்'கு பின் தாரம்... தாரம் வந்த பின் தாய் பாரமா?" - பிடிக்காததுக்கு காரணம் இங்கு சொன்னால் அதுக்கு ஒரு தனி பட்டி நடக்கும். அதனால் விட்டுட்டேன். ;)
பல வருடம் முன் இருசக்கர வாகனத்தில் பார்த்து நினைவில் நின்ற வாசகம்...
"My dad is my ATM".
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வேடிக்கை என்பது உனக்கு வரும்
வேடிக்கை என்பது உனக்கு வரும் வரை மட்டுமே.
உழைக்காமல் இருப்பவன் கை,கால்கள் இருந்தாலும், ஊனமுற்றவன்.
உழைப்பவன் கை , கால்கள் இல்லாவிடிலும் கம்பீர மனிதன்
தாய், தந்தை தெய்வம்
உன் வாழ்க்கை உன் கையில்
சமீபத்தில் ரசித்தவை
" உங்கள் பயணம் எங்கள் கையில்
எங்கள் வாழ்க்கை தங்கள் கையில்"
சமீபத்தில் ஆட்டோவில் பார்த்து ரசித்தது
அன்புடன் அனு
யோகராணி.. நான் பயன்படுத்தும்
யோகராணி..
நான் பயன்படுத்தும் வாசகம் ஆட்டோவில் இருந்து பிடித்தது தான்.
நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
மதுரை குறும்பு வாசகம்..
மதுரை நகரம் தூங்கா நகரம் னு எல்லாருக்கும் தெரியும்..ஆனால் போஸ்டர் நகரம் னு இன்னொரு பெயரும் இருக்கு..உண்மையான க்ரியடிவிட்டி ஆ பார்த்து அதிசிய படலாம் எங்க ஊரில்..சமிபத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாட்டில் சாதனை பண்ணி இருந்த போது..எங்க ஏரியா கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து போஸ்டர் அடிச்சு ஒட்டி இருந்தாங்க..."கடவுள் பலருக்கு பல மாதிரி..ஆனால் எங்களுக்கு ஒரே மாதிரி..அவன் எங்கள் தங்க தலைவன் சச்சின் மட்டுமே ..கிரிக்கெட் கடவுளே உன் சாதனையை வணங்குகிறோம்..இவன் உன் பக்தர்கள்"
Madurai Always Rocks...
சமீபத்தில்........................
உ
1 பெண் அடிமை தீரும் மட்டும் மண் அடிமை தீராது.
2 ஓங்கட்டும் பெண் உரிமை ஒழியட்டும் பெண் அடிமை.
3 பெண்ணே நீ விழித்திரு! படித்திடு! முன்னேறு!
4 புத்தகத்தை எடுப்போம் புத்துலகம் அமைப்போம்!
5 ஆட வேண்டிய பிஞ்சு கால்கள் வாடிடலாமோ போலியோவால்?
இன்னைக்கு நான் பெரியவளோட விருதுநகர்ல PMEGP சார்பா நடந்த EDP TRAINING-க்கு பேர்ந்தேன். இதெல்லாம் அங்கேதான் எழுதியிருந்தா!
6 ’மரணம்’ அது மற்றவருக்கு மட்டுமே ‘ரணம்’ இதுவே உற்றாருக்கு.(யாரோ)
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...