யாராவது ஆலோசனை சொல்லுங்கள் இரவில் சமைப்பது.

என் கணவர் காலை 7 மணிக்கு வேலைக்கு கிளம்புகிறார், நான் 5.30 மணிக்கு எழுந்து சமைத்து விடுவேன், சில சமயம் பருப்பு,மொசசை குழம்புகள் வைக்கும் போது குக்கரில் வைப்போமில்லையா நான் சிங்கப்பூரில் வசிப்பதால் அதிகாலை விசில் ஒலி வரக்கூடாது என்கிறார்கள், நான் இரவே வேகவைத்து எடுத்து காலையில் தாளித்துகொள்ளலாமா?யாராவது ஆலோசனை சொல்லுங்கள்.

இரவில் வேக வைத்து ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.காலையில் எடுத்து சமைக்கலாம். சிங்கையில் என் அண்ணியும் இதுபோல்தான் செய்கிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்கள் இரவிலேயே பருப்பு மற்று பயறு வகைகளை வேக வைத்து ஆறிய பின் fridge இல் வைத்து விடுங்கள்.காலையில் குழம்பு கூட்டி வைத்து தாளித்து கொள்ளலாம் கீரையையும் கிள்ளி கவரில் போட்டு வைத்து விடுங்கள். காலையில் கழுவி விட்டு தாளித்து கொடுத்து விடலாம்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹாய் கவி,

மிக்க நன்றி, சிங்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் உங்கள் அண்ணி.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் கார்த்திகா ராணி,

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி, இனி இதே போல் பின்பற்றுகிறேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

//என் கணவர் காலை 7 மணிக்கு வேலைக்கு கிளம்புகிறார், நான் 5.30 மணிக்கு எழுந்து சமைத்து விடுவேன், சில சமயம் பருப்பு,மொசசை குழம்புகள் வைக்கும் போது குக்கரில் வைப்போமில்லையா நான் சிங்கையில் வசிப்பதால் அதிகாலை விசில் ஒலி வரக்கூடாது என்கிறார்கள், நான் இரவே வேகவைத்து எடுத்து காலையில் தாளித்துகொள்ளலாமா?யாராவது ஆலோசனை சொல்லுங்கள்.//

இது என்ன போங்கு. என் மருமகள் காலை 0545க்கு வேலைக்கு கிளம்புகிறாள். நான்காலை 4 மணிக்கு எழுந்து டிபன்,சமையல் இரண்டும் செய்துவிடுவேன். குக்கர் என்ன, மிக்சியில் கூட அரைப்பேன். உங்கள் வீட்டிற்குள் கதவை எல்லாம் மூடி விட்டு குக்கர் வையுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் எனக்கு லீவு. அன்றாவது காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்திருக்கலாம் என்றால் பக்கத்து வீட்டில் 5 மணிக்கு கல்லில் அடித்து துணிதோய்த்துக் கொண்டிருப்பார்கள். அதற்காக நாம் போய் கேட்க முடியுமா? இதிலெல்லாம் தலையிடுவதே தப்பு. வீட்டிற்கு வெளியே nuisance செய்பவர்களையே கேட்க முடிவதில்லை.

Hello Heme

ஹலோ ஹேமா , நான் ஆனந்தி , நானும் சிங்கையில் தான் இருக்கிறேன். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்.

ஜெ மாமி நலமா? சிங்கையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கம்ப்ளெய்ண்ட் செய்தால் நடவடிக்கை கண்டிப்பாக உண்டு. இங்குள்ள சட்டதிட்டங்களை கடைபிடித்தாக வேண்டும் வேற வழியில்லை :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் கேள்விப்பட்டிருக்கேன். வீட்டில் ஒரு கொசு இருந்தால் அபராதமாமே. அப்படி இங்க இந்தியாவில் சட்டம் கொண்டு வந்தா சொத்தையே அபராதமா செலுத்த வேண்டியதுதான்.

கொசு வேண்டாம் கொசு உருவாவதற்கான சூழல் இருந்தாலும் அபராதம்தான். நாம வீட்டுல பூக்கள் தண்ணீரில் போட்டு வைப்போம் இல்லையா. அந்த தண்ணியை ஒழுங்கா மாற்றாமல் கொசு முட்டையிட்டு இருந்தாலும் அபராதம்தான். இன்னும் நிறைய இருக்கு மாமி :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்