இரட்டை குழந்தை தான் வேணும் !!!!!!!!!!

அன்புள்ள தோழிகளே ,

எனக்கு ரெட்டை குழந்தை மேல் தான் கொள்ளை விருப்பம் , எந்த level nu சொல்ல தெரியல.ரெட்டை குழந்தை னு யாராவது ஒரு வார்த்தை சொன்னாலே , அந்த நாள் முழுசா சந்தோஷமா இருப்பேன் !!!!!!!!!!!! ரெட்டை குழந்தை உருவாவது ரொம்ப கஷ்டம் னு சொல்லுவாங்க . செயற்கை முறைல ரெட்டை குழந்தை உருவாக்க முடியுமா ? நான் கோயம்புத்தூர் ல இருக்கேன் , இங்க எந்த டாக்டர் , எந்த hospital போனா, என் ஆசை நிறைவேறும் ?

எங்க குடும்பத்துல ரெட்டை குழந்தைகளே இல்ல, அதுனால இயற்கையா கண்டிப்பா , ரெட்டை குழந்தை எனக்கு கிடைக்காது . யாராவது நல்ல வழி சொல்லுங்களேன், Plz plz plz plz !!!!!!!!!!

சுகந்தி

நான் ஐஸ்வர்யா ஹாஸ்பிடலில் இதை பற்றி கேள்விபட்டுள்ளேன். மருத்துவரை கன்சல்ட் செஞ்சுட்டுட்டு எதுனாலும் உங்களின் உடல் தன்மைக்கு ஏற்ப செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுகந்தி உங்கள் ஆசை புரிகிறது. ஆனால் உங்களால் இயற்கையாக கருத்தரிக்க முடியும் என்னும் போது இரட்டைக் குழந்தை ஆசைக்காக செயற்கை முறை கருத்தரிப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது என் கருத்து. ஏன்னா அது போன்ற சிகிச்சைகளில் பக்கவிளைவுகள் இருக்கும்(ஹார்மோன் மருந்துகள் பயன் படுத்துவதால்). வேறுவழியே இல்லை செயற்கை முறைதான் ஒரே வழி என்னும் போதுதான் பக்க விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் குழந்தையே முக்கியம் என அதை நாட வேண்டும்.

ஒரு நல்ல மருத்துவர் இயற்கையாக கருத்தரிக்க முடியும் பெண்ணுக்கு செயற்கை முறையை எக்காரணத்துக்கும் பரிந்துரைக்க மாட்டார்.

எதுவென்றாலும் நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன சொல்வது என்று தெரியவில்லை. முதலில் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள். டாக்டர்கள் இப்படிச் செய்வார்களா, என்ன சொல்வார்கள் என்பது தெரியவில்லை. ;)

குழந்தை இல்லை என்று குழந்தைக்காக செயற்கை முறையில் முயற்சிப்பது வேறு. இது வேறு.

ஒரு குழந்தை என்றாலே வளரும் காலத்தில் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி இருக்கும். இரட்டையர்களைச் சமாளிப்பது ஒரு தனிக் கலை. ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல. அவர்களுக்கு என்று வாழ்க்கை ஆரம்பித்து உங்களைப் பிரிந்து செல்லும் வரை எத்தனையோ இருக்கிறது. எல்லாமே இரட்டைச் செலவு, இரட்டை வேலை... ஒரே சமயத்தில்.

சில விடயங்கள் தன்னால் கிடைத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாம். தேடிப் போவது பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியவில்லை.

‍- இமா க்றிஸ்

செயற்கை முறை கருத்தரிப்பால் ஏற்படும் பக்கவிளைவுகள் ப்ற்றி கொஞ்சம் எனக்கு சொல்லுங்கள், என்னுடைய கணவருடைய உறவினர் ஒருவர் பெருந்துறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செய்து இப்பொழுது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அது ஒவ்வொருவருடைய உடல்வாகு மற்றும் எடுத்துக் கொண்ட சிகிச்சையைப் பொறுத்தே பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாது என்னும் போது செயற்கை முறையை நாடியிருப்பதால் பக்கவிளைவுகளைப்பற்றி இப்போது யோசிக்காமல் இருப்பதே நல்லது. மருத்துவர் ஆலோசனைப்படி நடந்தாலே போதுமானது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி,

உடனடி பதில் போட்டதற்க்கு நன்றி.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹெலோ சுகந்தி,
எனக்கு இரட்டை குழந்தை தான் பிறந்திருக்கிறது. தற்போது ஐந்து மாதம் ஆகிறது. இந்த குழந்தைகள், தரித்தவுடன், checkup ku போனென். Dr , கூறினார் எனக்கு குழந்தையின் Heart Beat-ல் சந்தேகம் உள்ளது. அதனால் Scan செய்ய சொன்னார். scan செய்த பிறகு இரட்டை என்று தெரிந்தது.
அதன் பிறகு Dr-ம் Report காண்பித்த பிறகு Dr என்னிடம் கேட்டார் இரட்டை குழந்தைக்காக மாத்திரை எடுத்தாயா?
இல்லை என்னுடைய அப்பாவின் தம்பிக்கும் இரட்டை குழந்தை தான் என்றென்.
ஆனால் கரு தரித்ததிலிருந்து இன்று வரை கஷடமாக தான் இருக்கிறது.
நான் குவைத்தில் இருக்கிரேன், தனியாக குழந்தைகளை பார்ப்பது ரொம்பா கஷ்டமாக இருப்பதால் வெலைக்கு தான் ஆள் வைத்து பார்த்து கொள்கிறேன்.
எனவே Dr-ம் consult பண்ணி பாருங்கள்
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

சுகந்தி, வணக்கம். எனக்கும் இரட்டை குழந்தைகள் தான். ஒரு பெண், ஒரு ஆண் இரண்டு வயது ஆகிறது. எனக்கு 42 நாட்களில் ஸ்கேன் செய்து டாக்டர்கள் கன்பார்ம் செய்தார்கள். டாக்டர் என்னிடம் மாத்திரை எடுத்துக் கொண்டேனா என்று கேட்டார்கள். பிறகு, எங்கள் குடும்பத்தில் யாருக்காவது இரட்டை குழந்தைகள் பிறந்தார்களா என்று கேட்டார். என் கணவருடைய சித்தப்பாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அதனால் எங்களுக்கு இரட்டையர் பிறந்ததாக கூறினர். வம்சாவளியில் யாருக்காவது இரட்டை குழந்தைகள் பிறந்தால் அது போன்று பிறக்க வாய்ப்புள்ளதாக கூறினர். எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்து டெஸ்ட் டியூப் பேபிக்கு டிரீமெண்ட் எடுத்து ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார். 2 பெண் குழந்தைகள் 1 ஆண் குழந்தை. மூன்று குழந்தைகளும் ஒன்றரை கிலோ எடையில் இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மூன்று குழந்தைகளுமே 40வது நாள் இறந்துவிட்டன. என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்போது இருக்கும் நவீன மருத்துவ வளர்ச்சியில் அனைத்தும் சாத்தியமே. நீங்கள் மனம் தளராமல் ஒரு மருத்துவரை பார்த்து அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக எனது வாழ்த்துக்கள்:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரம்யா ,

நானும் அந்த பத்தி கேள்வி பட்டு இருக்கேன் .இன்னும் சென்று பார்க்க வில்லை ........

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனக்கும் புரிகிறது கவி. மனசுல தீராத ஒரு ஆசை. அதான் வழி இருக்கானு தெருஞ்சுகலம் னு கேட்டேன் !!!! இதுக்கு ஒரே வழி மனச மாத்திக்கணும் னு நினைக்கறேன் !!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்