பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எதிரணியினரே, நான் இந்த இடத்தில் சர்க்கஸ் கோமாளிகளை குறிப்பிடவில்லை. உங்கள் அணிதோழர் சொன்னதற்க்கு சொன்னேன். நான் ஒன்றும் தத்து பித்துன்னு உளறவில்லை. உங்களின் மனம்கவர்ந்த இந்த கால காமெடி நடிகர்கள் தான் என்ன பேசுகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமலேயே உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மாமா. . .மாப்ளே. . . . ஹ ஹ ஹா. . . இதுவும் நடைமுறை வார்த்தைதான்,இதை வைத்து ஒரு பாடலில் வயிறு வலிக்க சிரிக்க வச்சிருப்பாங்கோ. . .கலாட்டா கல்யாணத்தில் ஒரு குழந்தையுடன் நாகேஷ்,சிவாஜி என்னமா சிரிக்க வச்சாங்கப்பா. . .பட்டணத்தில் பூதம் படத்தில் பன்னாத காமெடியா?ஆச்சியின் பாட்டி சொல்லை தட்டாதே..ல இலலாத காமெடியா?சார்லிசாப்லினுக்கு இணையா நம்ம சந்திரபாபு சார் கலக்கினாரே மறந்துட்டிங்களா?நின்னா காமெடி நடந்தா காமெடி பார்த்தா காமெடி படுத்தாலும் காமெடினு வாழ்ந்தவங்க சந்திரபாபுவும்,நாகேஷும், அவர்களை எதிரணியினர் இவ்வளவு சீக்கிரம் மறக்கலாமா?இவர்களுக்காகத்தான் அவர்கள் மறைந்தாலும் தன் காமெடியை நிலைநிறுத்தி இக்காலத்தவரை போட்டியிட வைத்துளளனர்.எதரில் ஆட்கள் இல்லாமல் அவர்தம் திறமைக்கு மட்டுமேகூட இணை கொடுக்க முடியாமல் இவர்கள் போராடுகின்றனர் அவர்களின் பெயர் போர்வைக்குள் ஒளிந்து கொண்டே...இன்னும் வாதங்கள் வேண்டுமோ எதிரணியினர்கு?அக்காலமே சிறந்தது என்று கூற

அந்த காலத்துல மாமா மாப்ளேன்னு கூப்பிட்டுகிட்டு, அதுக்கு ஒரு பாட்டு, அது பத்து நிமிடம் ஓடும். அப்போ யாருக்கும் வேலை அதிகமில்லை. உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போ அது மாதிரியா, சாப்பிடுவது கூட நின்று கொண்டே சாப்பிட வேண்டிய அவசர உலகத்தில் உட்கார்ந்து பார்க்க நேரம் ஏதுங்க?. அந்த காலத்தில பில்டர் காபி, இந்த காலத்தில இன்ஸ்டன்ட் காபி, அதே போல் அந்தா காலத்தின் மாமா இப்போ மாம்ஸ், மாப்ளே இப்போ மாப்பு. அந்த காலத்தின் பலகாரங்களை நீங்கள் யாராவது இப்போது செய்வதுண்டா?. ஒப்புட்டு, அதிரசம், இதெல்லாம் சாப்பிடவே மாட்டீங்க, நீங்க சாப்பிட வேண்டாம் எங்களுக்கு செய்து கொடுங்கன்னு கேட்டால் அதையெல்லாம் யார் செய்வது, அதையெல்லாம் செய்வதற்கு நேரம் இல்லைன்னு ஒரு பதில் வருகிறது. என்னமோ வாயில் நுழையாத பெயரில் என்னென்னமோ ஸ்வீட் செய்யறீங்க, அதை நாங்க திங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தின்டாடுவது தனி கதை. அதே போலதாங்க காலத்திற்கேற்ப நகைச்சுவையின் தோற்றமும் மாறியிருக்கிறது. ஆனால் சுவை மாறவில்லை.

அன்புடன்
THAVAM


சேலத்தை சேர்ந்த ஒரு கொழந்தை விபத்தில் சிக்கி கோமாஸ்டேஜ்ஜுக்கு போயிருக்கு.

அந்த கொழந்தைக்கு எங்க ’வைகை புயல்’ வடிவேலு காமெடியை போட்டு காமிச்ச்சதுல குணமாயுடுச்சு.

’அழகர் மலை’’ படத்தை பாத்தேள்னா
வடிவேலுவின் வெடிகுண்டு காமெடியில் திரையரங்கே சிரிப்புச் சத்ததால் சிதறுதேங்கா மாறி சிதறதுமில்லை.

’அழகர் மலை’ ஏறினா கால் வலிக்கும்.

பாத்தா வயறு வலிக்கும்!

எங்க ‘வைகை புயல்’ வைகை புயல்தான்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கல்பனா சொல்றதும் சரிதானோ?...///வீட்டுக்கு வரும் தோழர்களில் யார் யாரை எங்கே நிறுத்த வேண்டும் என்று ஒரு வரைமுறை உண்டு. ஒரு சிலரை ஹால் வரை அனுமதிக்கலாம்.இன்னும் ஒருசிலரை சமையறைக்கும் அனுமதிக்கலாம். இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக மிக உயர்ந்தவனை பூஜை அறை வரைக்கும் அனுமதிக்கலாம் . அந்த தகுதியை அந்த கால நகைச்சுவையே பெறுகிறது. இந்த கால நகைச்சுவை வராண்டாவிற்கு கூட அனுமதிக்காமல் தெருவிலேயே பார்த்து அனுப்பி விடலாம். அதன் தரம் அப்படி உள்ளது.///

எதிரணி சீக்கரம் வாங்க.. கல்பனா கேள்விக்கு பதில் சொல்லுங்க... நல்ல ருசியான சாப்பாட்டை ஏற்க மறுக்கறீா்களா?.......... வள்ளுவர் எல்லாம் துணைக்குக் கூப்பிட்டுருக்காங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்க தீவிரவாதியை தப்பிக்க விடுறது பாத்து உங்களுக்கு சிரிப்பு வருதா? இது நியாயமா? எதிரணி என்னப்பா இப்படி ஆகிப் போச்சு.. சீக்கரம் நல்ல கருத்துக்களோட வாங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

////கொய்யால, டுபுக்கு, கொங்காங்கோ என்ன வார்த்தைகள் இதுலாம், கேட்கவே ஏதோ மாதிரி இல்ல. இதுல சின்ன பிள்ளைகளையும் நகைச்சுவை பண்ண வைக்கிறேன்னு அலங்கோலம் படுத்திடுறாங்க.//// நியாயமான கேள்வி.. ஏங்க இந்தக்கால நகைச்சுவைல சின்னப்பிள்ளைங்கள அலங்கோலப்படுத்துறீங்க.....

கௌரிலஷ்மி ரொம்ப நல்ல கருத்துக்கள் சொல்லி தன் அணிக்கு பலம் சேத்துருக்காங்க.. எதிரணி ரொம்ப சைலன்டா இருந்தா என்ன அர்த்தம்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏங்க கல்யாண சமையல் சாதம் பாட்டில் எப்படி சிரிப்பு வருது.. அதுக்கு ஈடு உண்டா அப்படின்னு ரேணுகா கேக்குறாங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எதிரணி என்ன காமெடி பீஸ் ஆகிட்டீங்களா?... பைத்தியத்தை பாத்தா பரிதாபம் தானங்க வரணும்... ஏங்க சிரிக்கறீங்க...உங்க பார்வையே மோசமா இருக்கே... சமுதாயத்தின் மீது அக்கறையோட இருங்கப்பா....
வடிவேலு அட்வைஸ் தான பண்ணிருக்காரு.... அதெல்லாம் புரியலையா உங்களுக்கு.... ///கனி இருக்கும் போது காயை பறித்ததால் தானே வள்ளுவர் அப்படி எழுதினார்.///

வந்து தவமணி அண்ணாவோட இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமா நல்ல கருத்துக்களை கூறிருக்கீங்க...

இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமா இந்தகாலத்துல இருக்குனு எல்லாரும் எதிரணில சொல்றாங்க... இதுக்கு என்ன சொல்லப்போறீங்கப்பா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்