குங்குமப்பூ பற்றி சொல்லுங்க??

ஏறகனவே இந்த தலைப்பில் நான் கேள்வி கொடுத்தேன்....அதற்கு பதில் கொடுத்த அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்ககள்....

நான் மருத்துவரிடம் கேட்டு தினமும் குங்குமப்பூ எடுக்கிறான்....என் சந்தேகம்,நான் ஸ்பானிஷ் குங்குமப்பூ எடுக்கிறான்....ஆனால் அதை பாலில் போடும் போது கலர் மாறவில்லை.ஸ்பூன் கொண்டு கலக்கும் போது கொஞ்சமாக கலர் வருகிறது அப்படித்தான் இருக்குமா??? இல்லை போட்ட உடன் கலர் நன்ற வரவேண்டுமா???

எனக்கு பதில் தாருங்கள்.....

அன்புடன்....
செல்லா
கத்தார்....

குங்கும பூ பாலில் ஊற ஊற தன கலர் வரும். போட்ட உடனேயே வராது. ஸ்பானிஷ் குங்கும பூ நல்லது தான். ஒரு டம்ளர் பாலில் ஒரு பிஞ்ச போட்டு கலந்து குடியுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

பாலில் போட்டவுடன் கலர் வருகிறது என்றால் அந்த குங்குமப்பூவில் கலர் சேர்க்கப்பட்டுள்ளதுன்னு அர்த்தம். கார்த்திகாராணி சொல்ற மாதிரி ஊற ஊறத்தான் கலர் வரவேண்டும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல குங்குமப்பூவை எப்படி பார்த்து வாங்குவது? நான் சிகாகோவில் இருக்கிறேன். இங்கு எங்கு நல்ல குங்குமப்பூ கிடைக்கும்?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

பக்கத்தில இந்தியன் ஸ்டோர்ஸ் இருந்தால் கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.நான் அங்கே தான் வாங்கினேன் கிடைத்தது.
மெக்ஸிகன் ஸ்டோர்ஸ் இருந்தாலும் கேட்டுப்பாருங்கள்.

நன்றி உமா

நான் இங்க உள்ள இந்தியன் ஸ்டோர்ல தான் கேட்டு பார்த்தேன். ஆனா அது நல்லா இருக்குமான்னு தெரியல. நிறைய பொருட்கள் காலாவதியான பொருட்களாக தான் இருக்கு. அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு. மெக்ஸிகன் கடையில் எப்படி கேட்பது? ஏதாவது பிராண்ட் இருக்கா?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

கிருத்திகா நீங்க சொல்ற மாதிரி இந்தியன் ஸ்டோர்ல காலாவதியானது இருக்க வாய்ப்புகள் அதிகம்.இங்கேயும் அப்படி நிறைய பொருட்கள் இருக்கும். நீங்க புதுசான்னு கேட்டு பாருங்க இல்லைன்னா மெக்ஸிகன் ஸ்டோர்ல நிறைய கலப்படம் இருக்கும். குங்குமப்பூ கலரில் அதில சிறிய வகை புற்கள் போன்ற கலப்பட பொருட்கள் மற்றும் கலர்லாம் சேர்க்கிறாங்க.
Golden Gate Brand saffron - இது கிடைக்குதான்னு பாருங்க.இல்லை இந்தியன் ஸ்டோர்ஸ் அதிகமாக இருக்கிற மார்கெட் பக்கம் போய் நல்லதா புதிய பொருளான்னு கேட்டு வாங்குங்க.

தங்கள் கருத்துகளுக்கு நன்றி....

எனது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதறக்கும் இந்த உலகத்துக்கு நல்லது

செய்வதர்க்கும் வாழ்த்துக்களை கொடுங்கள்...

அன்புடன் செல்லா
கத்தார்

செல்ல உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செல்லா வயிற்றில் இருக்கும் குட்டி பாப்பாவுக்கு - "அம்மாகிட்ட நல்லபடியா வளர்ந்து, சமர்த்தா, சந்தோசமா இந்த உலகத்துக்கு வரணும், அம்மா சொல்றத கேட்டு நல்லபிள்ளையா நடந்துக்கணும். உன் வருகையை உன் அப்பா அம்மா, மற்றும் இந்த அத்தையும் ஆவலாக எதிர்பார்த்து கிட்டு இருக்கோம்." இதை உங்க குழந்தைகிட்ட நான் சொன்னதாக சொல்லிவிடுங்கள்.
ungalukku duedate eppo ?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

உங்கள் வாழ்த்துக்கு நன்றி கலந்த வணக்ககள்....உங்கள் வரிகள் மற்றும் வாழ்த்தும் வார்த்தைகள் எனக்கு சந்தோசத்தை கொடுக்கிறது....

எனக்கு ஜனவரி மாதம் நாள் கொடுத்து இருக்கிறார்கள்...

என்றும் அன்புடன்

செல்லா...

i doni know.sorry

மேலும் சில பதிவுகள்