மழலை சொல்

என் மகன் L.K.G படிக்கிறான். அவன் நன்றாக படிக்கிறான் ஆனால் அவனுக்கு மழலை சொல் மாறததால் அவன் ORAL சொல்வது யாருக்கும் புரிவதில்லை. அவன் மழலை சொல் மாற என்ன செய்வது?

பரவாயில்லைங்க..மழலை சொல் மாறினால் அதன் அழகு குறைந்து விடுமே...சில குழந்தைகளுக்கு 6 வயதெல்லாம் ஆகும் அது மாற...டீச்சருக்கு நீங்கள் சொல்லி புரிய வைய்யுங்கள்..
மற்றபடி நீங்கள் வீட்டில் நாம் பேசுவது போல் பேசுங்கள் அவர் பேச்சு போல் கொஞ்சி பேச வேண்டாம்.

உங்கள் பையனிடம் நிறைய தெளிவாக அவன் முகத்தை பார்த்து பேசி கொண்டே இருங்கள். நிறைய பாடல் rhymes எல்லாம் சொல்லி குடுங்கள். பாட்டு பாட கத்து குடுங்கள். போக போக மழலை மாறி தெளிவாக பேச ஆரம்பித்து விடுவான்

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ராதிகா, உங்க பையனாவது பரவாயில்லை சின்னப் பையன். என்னோட அக்கா பையன் 2வது படிக்கிறான். இன்னும் அவனுக்கு வார்த்தைகள் தெளிவாக வரவில்லை. அவன் குழந்தையாக இருந்தபோது அவனுக்கு சூட்டினால் பேதி அதிகமாகும். அதற்கு என் அம்மா வசம்பு இழைத்து ஊற்றியிருக்கிறார்கள். வசம்பு அதிகமாக நாக்கில் பட்டாலும் நாக்கு தடித்து சொற்கள் தெளிவில்லாமல் வரும் என்பார்கள். நீங்கள் உங்கள் பையனிடம் மழலைச் சொல்லில் பேசாமல் வளர்ந்த பையனிடம் பேசுவது போன்றே பேசுங்கள். அதை கவனித்து பையன் நன்றாக பேசினாலும் பேசுவான். சாதாரணமாகவே ஆண் பிள்ளைகள் பேச நாளாகும். போக போக சரியாக போகும். கவலை வேண்டாம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Kumaresan Muthiah, ENT Surgeon, Siva ENT Head And Neck Hospital, 94(New No: 159), Avvai Shanmugam Salai (Lloyds’ Road), Royapettah, Chennai- 600 014, India, Tel (044) 9841055774
பொதுவாக 12 வயது வரை ஆண், பெண் இருபாலருக்கும் குரல் பெண் குரல் போல்தான் இருக்கும். 13, 14 வயதில் குரல் நாண் நீளம் அடையும்.

'சில ஆண்களுக்கு குரலில் பெண் தன்மை இருக்கும். 'கீச்சு கீச்சுனு பேசுறான்' என்பார்கள். இது ப்யூபர்போனியா (Puberphonia) எனப்படும் குரல் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை'' என்று சொல்லும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குமரேசன், ''இது 100 சதவிகிதம் சரிசெய்யக்கூடியதே. அதை அறியாமல், காலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்'' என்ற விழிப்புணர்வுத் தகவலைச் சொல்லி, பல ஆண்களின் தாழ்வு மனப்பான்மையைத் துரத்தி தன்னம்பிக்கை தருகிறார்.

''நுரையீரலிலிருந்து காற்று வருகிறது. அப்போது குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் அதிர்வு ஏற்படுகிறது. அதை நாம் வார்த்தையாக்கி வெளிப்படுத்துகிறோம். இதுதான் பேச்சு. குரல், நாண் இணையும் செயல்பாடு இருவகையில் நடக்கிறது. முதலாவது நரம்பு, தசை இயக்கத்தால் நடைபெறுவது. இரண்டாவது அடிவயிற்றிலிருந்து வரும் காற்றால் குரல் நாண் இயங்குவது.

பொதுவாக 12 வயதுவரை ஆண், பெண் இருபாலருக்கும் குரல் பெண் குரல் போல்தான் இருக்கும். 13, 14 வயதில் குரல் நாண் நீளம் அடையும். அப்போது குரல்வளை விரிவடைந்து குரல்வளையில் உள்ள ஒரு குருத்தெலும்பு தள்ளிக்கொண்டு வெளியே வரும். ஆண்களின் தொண்டையில் வெளிப்புறமாக நீண்டுகொண்டிருக்கும் இதை 'ஆடம்ஸ் ஆப்பிள்' என்பார்கள்.
ஆணும் பெண்ணும் பருவ வயதை எட்டும்போது அவர்களுக்கான பாலினச் சுரப்பிகள் வீரியம் அடைகின்றன. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகம் சுரக்கும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் அவர்களின் பாலின உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள், ஆண்களுக்கு அவர்களின் குரல் நாண்களிலும் ஏற்படும். அந்த மாற்றங்களால்தான் ஆண்களின் குரல் ஆழமானதாகவும் எதிரொலிப்போடும் மாற ஆரம்பிக்கும் (பெண்களுக்கு குரல் நாண் நீளவோ, விரிவடையவோ செய்யாது). 16 வயதிலும் ஆண்களுக்குப் பெண் குரல் இருந்தால் அது 'ப்யூபர்போனியா' என்று கருதப்படுகிறது.

ப்யூபர்போனியா என்பது ஒரு நோய் அல்ல. இது ஒரு மாறுபட்ட குரல் நிலைமை. அசாதாரண உச்சரிப்பு, தொண்டைக்கம்மல், மூச்சே குரலாக ஒலித்தல், சோர்வான குரல் இவையெல்லாம் ப்யூபர்போனியாவின் தன்மைகள். இந்த வாய்ஸ் டிஸ்ஆர்டர், உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களால் ஏற்படுகிறது.

ப்யூபர்போனியா ஒரு நோயல்ல. இதை ஒரே நாளில் சரி செய்துவிடலாம்.
டாக்டர் குமரேசன்
உயிரியல் காரணங்களாக, குரல்வளை தசை இறுக்கம், குரல்வளை சதைகள் மாறுபட்டு அசைவது, குரல்வளை குறைபாடு, குரல் நாண் சமச்சீரற்ற தன்மை, குரல் நாண் நரம்பு பாதிப்பு, தைராய்டு குருத்தெலும்பு இணையாதது என ஆறு காரணங்கள் இருக்கின்றன. ப்யூபர்போனியா பாதிக்கப்பட்ட ஆண்களின் குரல் நாணிலோ, குரல்வளையிலோ எவ்வித மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் சுருதியில் மாற்றம் தென்படும். இதற்குக் காரணம் உயர் சுருதி தொனி (High Pitch Tone) என்று பலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அதிர்வு (resonance) தான் காரணம்.

உளவியல் காரணங்களாக மனச்சோர்வு, உடலளவில் விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களில் தாமதம், குடும்பம், நண்பர்களால் மனநிலையில் ஏற்படும் மாற்றம், ஸ்ட்ரெஸ் ஆகியவை இணைகின்றன.

ப்யூபர்போனியா பிரச்னைக்கு பேச்சுப் பயிற்சி, அறுவை சிகிச்சை ஆகிய தீர்வுகள் உள்ளன.

பேச்சுப் பயிற்சியைப் பொறுத்தவரை, வெவ்வேறு விதமான பயிற்சிகள் தரப்படும். தேவையைப் பொறுத்து, சிலருக்கு ஓரிரு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், தொடர் சிகிச்சையை எடுத்துக்கொள்ள பலருக்கும் பொறுமை இல்லாமல், பாதியில் நிறுத்திவிடுகிறார்க
மற்றொரு வகையில் வாய்ஸ் பிட்ச் அனலைசர் மூலம் பாதிக்கப்பட்டவரின் தொனியை உறுதிசெய்து, அவருக்குத் தொண்டைப் பகுதியின் அதிர்வலையை அதிகரிப்பதற்காக ஒரு சிறு முடிச்சு தொண்டையின் உட்பகுதியில் போடப்படும். அதை இழுத்துக்கொண்டே பேசும்போது, சம்பந்தப்பட்ட நபர் ஆண் குரலைப் பெறுவார். அதைத் தொடர்ந்து மூன்று நாள்கள் மருத்துவமனையிலேயே குரல் அதிர்வலையை அதிகரிக்கும் பயிற்சி தரப்படும். தொடர்ந்து 21 நாள்கள் வீட்டில் சில உபகரணங்களின் உதவியுடனும் ஆப் மூலமும் பயிற்சிசெய்ய ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

அதிகமாக இருக்கும் குரல் சுருதியைக் குறைப்பதற்காகக் குரல்வளைத் தளர்வு அறுவைசிகிச்சை (RelaxationThyroplasty) மற்றும் குரல் நாண் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை (Type III Relaxation Thyroplasty) செய்யப்படுகின்றன. ப்யூபர்போனியா பிரச்னை உள்ள பலர், இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை இருக்கிறது என்பதையே அறியாமல் இருக்கின்றனர். இனி தங்கள் குரல் குறைபாட்டை நினைத்து அவர்கள் கவலையுற வேண்டாம்.
A small technique of treatment for puberphonia is done by Dr.M.Kumaresan. High pitch voice can not become normal in duecourse. The treatment is permanent and immediate. This treatment also completely eliminates the old theories of endocrinal imbalance, failure of development of secondary sexual characteristics, maturation disturbances, abnormal functional adaptation, deep-seated psychological problems, immature voice, chest voice, breaking voice, immaturity, fear of adult responsibility, losing maternal protection, hero worship of an older boy, feminine tendencies, rejection of masculine voice, small larynx, short vocal folds and natural tenor voice. (The typical tenor voice lies between C3 (one octave below middle C) to C5 (one octave above middle C). The low extreme for tenors. Singing outside the natural vocal range imposes a serious strain upon the voice.)
500 years back Tholkappiyar clearly told about the origin of voice and production voice and how to strengthen the voice. Voice should come from lower abdomen the sound should vibrate and resonate in the head, neck and chest. The voice should be delivered out only by tooth, lip, tongue, nose and palate. So palatal voice should be practiced before our procedure. Patient is encouraged to stand in front of the mirror and practice to make loud noice with open mouth with the movement of the soft palate.

மேலும் சில பதிவுகள்