உடல் சூடு குறைய எனக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே!!!!

வணக்கம் தோழிகளே,
எனக்கு யாராவது help பண்ணுங்களேன், என் ஒடம்பு ரொம்ப Heat body. நானும் என்ன என்னமோ பண்ணி பாத்துடேன். Daily 6- 7 liter தண்ணி குடிக்கறேன், juice குடிக்கறேன், daily கற்றாளை சாப்பிடறேன், இருந்தாலும் கொஞ்ஜம் கூட கம்மி ஆக மாட்டேகுது, நான் Software la வேலை பார்க்கிறேன், 9 மணி நேரம் computer முன்னாடி இருப்பேன்.Night time la heat ku கண் எரியுது, ஏதாவது சாப்பிட்டா Heat கம்மி ஆகுமா???????

அம்மா சொல்றாங்க, computer முன்னாடி வேலை செய்றனால தான், heat அதிகமாகுது.

இதுக்கு மேல என்ன பண்ணி heat கம்மி பண்றது நு தெரியல. யாராவது ஹெல்ப் பண்ணுங்க .Plzzzzzzzzzzzzzz

சுகந்தி

நார்மல் பாடி ஹீட் சிலருக்கு இப்படிதான் அதை மாற்ற முடியாது. வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க.. ஏதாவது செய்து சூட்டை எச்சாக கிளப்பி விட்டுக்காதிங்க.
நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க..வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க.நிறைய மோர் குடிங்க.

வெந்தயக் கீரை, இட்லி செய்து சாப்பிடுங்க..

இதெல்லாம் உடம்பிற்கு ஒத்துக்குமானும் பாத்துக்கனும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

hai suganthi
குடிக்கிறதுக்கு சீரகத்த தண்ணில போட்டு கொதிக்க வச்சு குடிங்க. அப்புறம் தலைக்கு வெறும் தேங்காய் எண்ணெய் பதிலா, செம்பருத்திப்பூ, கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, கலந்து காய்ச்சின எண்ணெய் பண்ணுங்க. நேரம் கிடைச்சா உங்களுக்கு ஒத்துகிரும்னா வாரத்துக்கு ஒரு தடவை நல்லெண்ணெய் தேய்ச்சு மசாஜ் பண்ணி தலைக்கு குளிங்க. அப்புறம் அப்புறம் நீங்க தினமும் 6- 7 லிட்டர் தண்ணி குடிக்கிறதா சொன்னீங்க. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு தெரிஞ்சு எல்லா மருத்துவர்களுமே அதிக பட்சமாக 4 லிட்டர் தண்ணீரே போதுமானதுனு சொல்லிருக்காங்க. அதுவே நம்ம உடம்புக்கு போதுமானது. நீங்க குடிக்கிறது ரெம்ப ஜாஸ்தி. உடம்பு சூட குறைக்கிறதுக்கு நிறைய வழிகள் இருக்கு. தண்ணி தினமும் 3- 4 லிட்டர் குடிங்க. இன்னும் நிறைய தோழிகள் நல்ல ஆலோசனை சொல்லுவாங்க. அதுல உடம்புக்கு பொருத்தமான ஆலோசனைகளை தேர்ந்தெடுத்துக்கோங்க. இல்லைனா ஒரு மருத்துவர் அணுகி ஆலோசனை பண்ணி முடிவெடுங்க ரோஜா, செம்பருத்தி ரெண்டோட இதழ்களும் சூட்ட குறைக்க உதவி பண்ணும். சும்மா மென்னும் சாப்பிடலாம். அல்லது தண்ணில போட்டு கொதிக்க வச்சும் குடிக்கலாம்.
அன்புடன்
சுஜாதாசுதாகர்.

வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.

தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம்.

குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். நார்மல் நீரே போதும்.

இளநீர் அதிகம் அருந்துங்கள்.

பாட்டில் பானங்கள் அருந்த வேண்டாம்

வாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம்.

நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

வெள்ளரியை கண்ணீல் வைத்து கொள்ளுங்கள்.

சூடு குறைய என தலைப்பை மாற்றுங்கள். அடுத்து படிக்க வருபவர்களூக்கு சுலபமாக இருக்கும்.

தலைப்பை தேடுவதிலும் சிரமம் இருக்காது

தர்பூசணி, வெள்ளரி சாப்பிடுங்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுகந்தி உடல் சூடு குறைய ப்ரெண்ட்ஸ் நிறைய டிப்ஸ் சொல்லிட்டாங்க. எனக்கு தெரிந்த வரை உடலுக்கு குளிர்ச்சித்தரக்கூடிய ரோஜா குல்குந்து ஒன்று. கடல்பாசி சாப்பிடலாம். இரவில் படுக்கும்ப்போது விளக்கெண்ணெய் உள்ளங்காலில் தடவிவிட்டு படுக்கவும்.

பணங்கற்கண்டு பாலில் கலந்து காய்ச்சி குடிக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நன்றி ரம்யா , நான் வாரத்தில் ரெண்டு தடவ எண்ணெய் தேய்த்து குளிப்பேன் , வெள்ளிரிக்காய் ட்ரை பண்ணி பார்க்கிறேன் !!!!!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுஜாதா , மிக்க நன்றி. நான் வேணும் நு நிறையா தண்ணி குடிக்க மாட்டேன், நல்லா தாகம் எடுக்குது, இருந்தாலும் கம்மி பண்ண ட்ரை பண்றேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அமீனா மேடம் , ரொம்ப நன்றி. தலைப்ப மாத்த சொன்னதுக்கு நன்றி......வெந்தயக்களி ரொம்ப கசக்குமா??? எப்படி செய்ய வேண்டும் ??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வினோஜா,
உங்க ஐடியா நல்லா இருக்கு , நான் ட்ரை பண்ணி பாக்கறேன். ரோஜா குல்குந்து , கடல்பாசி எப்படி இருக்கும்? எங்க கிடைக்கும்? டெய்லி உம் சாப்பிட முடிமா ??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

sister eat carrot in juice form daily after finish morning tiffen bcz carrot called as agolden plant. it is reduce body heat .esply cool the eye area. and eye must be sharp .its true .bcz am drink carrot juice last 15 days.am getting good result.nallaennai kuliyal take twice in a week

மேலும் சில பதிவுகள்