எடை குறைக்கலாம் வாங்க

ஹாய் தோழிகளே,
வாங்க எடை குறைப்பதை பற்றி பேசலாம்.அவங்க அவங்க அனுபவத்தை இங்கே வந்து பகிர்ந்துக்கோங்க.

எனக்கு நீண்ட நாட்களாக 1 சந்தேகம் யாராவது வந்து பதில் கூறுங்கள்.நான் இங்கே நிறைய எடை குறைப்பதற்கான குறிப்புகளை படிச்சிருக்கேன்.நிறைய தோழிகள் எடை குறைக்கணும்னா,காலையில 2 சப்பாத்தி,இல்லை கேழ்வரகு,கம்பு இப்படி சாப்பிடுங்க,மதியம் 1 கப் ரைஸ்,தயிர் ஊத்தி சாப்பிடுங்க,பருப்பு சாப்பிடுங்க.வாயை கட்டினாதான் முடியும் அப்படின்னு சொல்லியிருக்கீங்க.

சரி இப்போதைக்கு எடை குறையும் சரி.எத்தனை நாளைக்கு இப்படி,வாயை கட்ட முடியும்.எத்தனை நாளைக்கு 1 கப் ரைஸ்ஸும்,தயிரும்,பருப்பும் சாப்பிட முடியும்.இதனால் மறுபடியும் எடை அதிகரிக்க தான செய்யும்.எப்போதைக்கும் பின்பற்றக்கூடிய சாப்பாட்டு முறையை யாராவது கூற முடியுமா?

பெறுக இவ்வையகம்

நான் யோகாவில் சில பேசிக் போசேஸ் மட்டும் கற்றுக் கொண்டேன்..இதற்கு முன் தலைகீழாக நின்றும் என்னால் எடை குறைக்க முடியவில்லை..யோக செய்ய தொடங்கிய பின் எடை குறைவது எனக்கே ஆcச்ஹரியமாக இருந்தது

மட்டுமல்ல மனதளர்விலும் புத்துணர்ச்சியாக இருக்கும்..ஓரிருவாரம் செய்யாமல் விட்டேன் திரும்ப எடை கூடுவதை உணர்ந்தேன் இப்ப உஷாராகி விட்டேன்..முறையாக் யோகா கற்றி தினசரி 1 மணிநேரம் ஒதுக்கினால் கட்டாயம் குறைக்கலாம்

உணவில் பெரிசாக கட்டுப்பாடு ஏதும் இல்லை..எந்த நேரம் அதிகம் பசியில்லையோ அந்நேரத்திற்கு வெறும் பழம்,காய்கறி உணவு மட்டும் எடுக்கவும்..நான் ப்ரேக்ஃபாஸ்ட் மட்டும் எதாவது பழங்கள்..மதியம் சாதம் மட்டும் சப்பிடுவதில்லை..மற்ற பொரியல் சிக்கன்,மீன் எல்லாம் சாப்பிடுவேன்...இரவிலும் அப்படியே..இட்லி என்றால் 2,சப்பாத்ஹி என்றால் 1 அல்லது 2 இப்படி அடிக்கடி பசியெடுக்கும் முன் 1 கப் இனிப்பு சேர்க்காத பேரீத்தம்பழ சிரப் சேர்த்த ஜூஸ் குடிச்சுப்பேன்..முதல் 1 வாரம் தான் வயித்தை கட்டுபடுத்த கஷ்டம் பிறகு பழகிடும்.
யோகா ஒன்றும் பெரிய மலை போன்ற விஷயம் அல்ல..சாதா உடற்பயிற்சியில் நமக்கு சலிப்பு ஏற்படும் செய்து முடித்ததும் டயர்ட் ஆவோம்..இதில் செய்ய செய்ய உஷாராக இருக்கும் செய்து முடித்தாலும் நல்ல தெம்போடவே இருப்போம்..

//சில பேசிக் போசேஸ் மட்டும் கற்றுக் கொண்டேன்//

அது என்ன என்னன்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா, இந்த வையகம் வாழ்த்துதோ இல்லையோ, இந்த வையகத்தைச் சேர்ந்த ஒரு 84 கிலோ ஜீவன் வாழ்த்தும். :-)

//இதற்கு முன் 'தலைகீழாக' நின்றும் என்னால் எடை குறைக்க முடியவில்லை..//

ஹிஹீ.. அதுகூட ஒரு யோகாசனம் (சிரசாசனம்) தானே.. அப்ப அது வேஸ்டுன்னு சொல்றீங்க.. :-)

தளிகா அக்கா

பாபு அண்ணா சொன்னதுபோல் நீங்கள் கற்றுக்கொண்ட யோகா வை எங்களுக்கும் சொல்லுங்கள். எந்த மாதிரியான யோகா செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், அந்த யோகா பெயர் என்ன என்று சொன்னீகளே ஆனால், என் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். தயவு செய்து சொல்வீர்களா

hai,
do you know any good yoga centers in chennai?
i want to reduce my weight... but i cant... if anybody reply me immediately i m very thankful to them

ஹாய் தளிகா நீங்க கத்துக்கொண்ட யோகாவை இந்த அருசுவை தோழிகளுக்கும் கற்றுக்கொடுங்கலேன் நானும் உங்களை வாழ்த்துவேன்

அன்புடன்
ஸ்ரீ

hai srimathi.
i m new to this site.. just i want to say hello to u... r u try any diet?

எடை குறைக்கனும்னா யோகா சிறந்த வழிதான்.. அதுக்காக வாயைக்கட்டத் தேவையே இல்லை என்பது இல்லை.

இன்றைய வாழ்வில் சத்து இல்லாத சுவையான உணவுகள் ரொம்பவே அதிகம். உதாரணமா மைதா. மைதா உணவுகளான கேக்,பீட்சா,ப்ரெட், பஃப்ஸ் ,அப்புறம் அதிகப்படியான எண்ணெய் சேர்க்கப் பட்ட உணவுகள்.. குறிப்பா ஹோட்டல் உணவு எல்லாமே அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட தாகத்தான் இருக்கும். அதிலும் இந்த வட இந்திய உணவு புல்கா,ரொட்டி,(மைதா உணவு).. அப்புறம் அதற்கான சைட் டிஷ் அப்பப்பா எண்ணெய் மிதக்கும். இதை ஹோட்டலில் சாப்பிடும் போது தெரியாது.. பார்சலாக வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டால் நன்றாக உணரமுடியும்.. இரண்டு டீ ஸ்பூன் அளவு எண்ணெய் தனியாக பிரிந்து நிற்கும். பின் இனிப்பு வகைகள்,எண்ணெஇயில் பொறிக்கப்பட்ட உணவுகள்..

இவை எல்லாம் அதிக கொழுப்பு மற்றும் சத்தும் இல்லாதவை. வட இந்திய சைட் டிஷ் களை வீட்டிலேயே அதிக எண்ணெய் இல்லாமல் (சுவையாகவே இருக்கும்) சப்பாத்தியுடன் செய்து சாப்பிட்டுப் பழகி விட்டால் பின் ஹோட்டல் உணவு சுவைக்காது.. ;)

இந்த உணவுகளை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மேலும் வயதிற்கு ஏற்ப சாப்பிடவும் பழக வேண்டும்.

அடிப்படை யோகாவே ஆயினும் யோகா தெரிந்தவர்கள் மூலம் சிறிது காலம் செய்துவிட்டுப் பின் தாமாக செய்யலாம். இருப்பினும் பலரும் சேர்ந்து செய்யும் போது அதன் மூலம் கிடைக்கும் வைப்ரேஷன் மிகப் பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.

நான் இரண்டு மாதங்களாகக் கற்று வருகிறேன். அங்கு செய்யப்படும் அடிப்படை ஆசனங்கள் சில:

*வார்ம் அப் பயிற்சிகள் (யோகா,உடற்பயிற்சி எதுவாயினும் இது மிகவும் முக்கியம்)

*திரிகோணாசன்
*சூர்ய நமஸ்கார்
*சவாசன்
*நவாசன்
*பூர்வத்தாசன்( பெண்களின் பாலிசிஸ்டிக் பிரச்சினைக்கு சிறந்த ஆசனம் இது)
*கோமுகாசன்
*வஜ்ராசன்
*உஷ்ட்ராசன்/செஷாங்காசன்
*சிபிலாசன்
*தனுராசன்/மகராசன்/பவன முக்தாசன்

தியானம்.

தாளிகா அவர்கள் கூறி உள்ளது போல் மனதிற்கு கிடைக்கும் புத்துணர்ச்சி என் அனுபவத்தில் ஜிம்மில் கிடைப்பதை விட மிக மிக அதிகம்.. :)

அட இப்படில்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டா நான் திணறிடுவேன்..என் அப்பா முறையாக பயின்றவர்..அவர் இங்க வந்தபொழுது எனக்கு கற்று தந்தார்...
அதுவே எனக்கு வேறெந்த ப்ரச்சனையும் இல்லையென்ற தைரியத்தில் இல்லையென்றால் மாட்டேன் என்பார்.
எனக்கு பேரெல்லாம் தெரியாது....அவர் நேரில் சொல்லி தந்தே எனக்கு 1 வாரமா எதுவும் மண்டையில் ஏறாமல் கஷ்டபட்டேன் பிறகு தான் புரிந்தது.

தொடர்ந்து செய்தால் நம் பெண்கள் மிகவும் அழகாகி விடலாம்:-D..இதையெல்லாம் கேட்டு நான் ஏதோ இப்ப ஐஷ்வர்யா ராய் போல இருக்கேன்னு நெனச்சுக்காதீங்க.
மிக அதிக எடை என்ற கணக்கிலிருந்து இப்ப அதிக எடை என்ற நிலைக்கு வந்திருக்கேன்:-D..கட்டாயம் சரியான அளவுக்கு கொண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.

இதை தயவாய் மற்றவர்கள் சொல்லி கேட்டோ ,அல்லது படித்தோ செய்யாதீர்கள்..முதுகு வலி மூட்டு வலி அந்த இந்த வலியுள்ளவர்கள் தெரியாமல் செய்தால் எங்காவது சுளுக்கெடுத்து படுத்துக்குவீங்க:-D
யூ டியூபில் கூட நிறைய வீடியோஸ் இருக்கும்..ஆனால் அதுவும் சொந்த ரிஸ்கில் செய்து பாருங்கள்:-D(sadie nardini yoga)

எடை குறைய சில டிப்ஸ்
1)முதலில் எடை குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி விடுங்கள்...சொன்னதுக்காவது எடை குறைப்போம்
2)விரும்பிய நல்ல அழகான உடையை உங்கள் சயிசை விட சின்னதாக எடுத்து கொள்ளுங்கள்...அதை போடவாவது எடை குறைப்போம்(இப்படி தான் முதலில் குறைத்தேன்:-D))
3)தண்ணீர் நிறைய குடிங்க...முதல் 1 வாரம் மட்டும் கஷ்டபட்டு குடித்தால் பிறகு நம் உடம்பு தண்ணீர் தண்ணீர் என தானாக வாங்கி குடிக்கும்
4)அஷிகளவு சாப்பிட்டு பழகினவங்க முதலைல் அதை அளவாக்கி பழகுங்கள்
5)சும்மா இருக்காவே இருக்காதீங்க கண்டிப்பா எதையாவது தேவையில்லாம சாப்பிஒடுவோம்..ஒன்னு வேலைக்கு போங்க,இல்ல வீட்ல எதையாவது செய்துட்டே இருங்க அதுவுமில்ல வெளிய போயிடுங்க(ஃபுட் கோர்ட் பக்கமா போயிடாதீங்க)
6)சமைக்கும்போது அளவா சமைத்து பழகுங்க
7)டின்னரை ரொம்ப குறைச்சுக்குங்க

ஊரில் கூட முறையாக யோக தெரிந்த குருங்கள் வீட்டில் வந்து சொல்லிக் கொடுக்கிறார்கள்...நம்ப ஏரியாவில் உள்ள பெண்கள் ஒரு 15 பேர் சேர்ந்து ஆளுக்கு சிறிய அளவு தொகை கொடுத்தால் அவர்களுக்கு அது மாத சம்பளம் ஒரு பெரிய மொட்டைமாடி இருந்தால் எல்லாருமாக செய்யலாம்

இல்லையோ வெளிநாட்டில் கூட சில ஹாஸ்பிடல்களிலேயே யோகா க்லாஸ் எடுக்கிறார்கள்...

இன்னுமொன்று இதற்கும் மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை..இது கற்றால் ஓம் ரீம் கரீம் என்றெல்லாம் சொல்ல வேண்டிவரும் என்ற ஒரு தப்பான எண்ணம் உண்டு..இதை சொல்லி சண்டையோட வந்தீங்க அப்ரம் தோலை உரிச்சுடுவேன்

ஏன் தளிகா அட்மினை இடிஅமீன் ரேஞ்சுக்கு அடிமின் ஆக்கிட்டீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் எல்லா ஆசனங்களையும் அனைவரும் செய்த்து விட முடியாது.. முதுகுவலி உள்ளவர்கள்.பிபி உள்ளவர்கள்,வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் என சில உடல் உபாதை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய ஆசனங்களும் உள்ளன. அந்த உபாதைகளைக் குறைக்கும் குறிப்பிட்ட ஆசனங்களும் உள்ளன. எனவே முறையாகத் தெரிந்தவர் மூலம் தான் கற்றுப் பின் செய்ய வேண்டும்.. இணையத்தின் மூலம் வேண்டும் எனில் பாபு அண்ணா video session ஏற்பாடு செய்தால் வேணுமானால் கற்றுத்தரலாம்.. ;)

மேலும் சில பதிவுகள்