தோழிகளே என்னகு உதவி செய்யுங்கள்!

ஹை என் பெயர் ஜானகி என்னகு வயது 23.திருமணமாகி 3 மாதம் ஆகிவிட்டது.தற்போது singapore வசித்து வருகிறன்.நாங்கள் தற்போது one year குழந்தை வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம் .பிற தோழிகளின் அறிவுறை கேட்ட பிறகு குழப்பமாவுள்ளது நான் எடுத்த முடிவு சரியா? குழந்தை தள்ளி போடுவது தவறா?

குழந்தை தள்ளி போடுவது தவறில்லை தான். ஆனால் தன்னிச்சையாக எதுவும் செய்ய கூடாது. மருத்துவர் ஆலோசனை தேவை. எந்த முறை?என்னன்ன மருந்துகள்? தேவையான வழிமுறைகள் என பல உள்ளது.

ஆகவே நல்ல மருத்துவரை தொடர்புக்கொள்ளுங்கள்...

என் தோழியும் படிக்க வேண்டும், வயது இருக்கு என குழந்தை பெறுவதை தள்ளி போட்டாள் மருத்துவரின் ஆலோசனையின்றி. ஒரு முறை அபாஷனும் செய்திருகிறாள். 2 வருடம் தள்ளி போட்டவள் இப்போது குழந்தை பெற முடியவில்லை. தன்னிச்சையாக கருத்தடை மாத்திரை, வீட்டு வைத்தியம் என செய்ததால் பக்க விளைவு ஏற்பட்டு விட்டதாம். இப்போது ட்ரீட்மெண்ட் எடுக்குறா:(

உங்களை பயமுடுத்தவில்லை. என் அக்கா கூட 1 வருடம் தள்ளி போட்டாள். ஆனால் நல்ல மருத்துவரின் ஆலோசனையோடு. பிறந்த குழந்தையும் நல்லபடியாகவே பிறந்தது. அதே போல் செய்யுங்கள்

தலைப்பை மாற்றுங்கள். அப்போது தான் பதில் போட எளிதாக இருக்கும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஜானகி சிங்கையில் இருக்கீங்களா?! குழந்தை பெறுவதை ஒரு வருடத்துக்கு தள்ளிப் போடணும்னு நினைக்கிறது தப்பு இல்லை. ஆனால் நல்ல மருத்துவரின் ஆலோசனையின் படி செய்ய வேண்டும். முதலில் இருவரும் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி அடிப்படையான சோதனைகள் செய்து கொண்டு வேறு பிரச்சினைகள் இல்லைங்கறதை உறுதி செய்துக்கிட்டு அவரது ஆலோசனைப்படி சரியான கருத்தடை முறையை பின் பற்றுங்கள். நீங்களாக மாத்திரை உட்கொள்வது என்று இருக்க வேண்டாம். அது நிச்சயம் சிக்கல்தான். முடிந்தவரை நீங்கள் மாத்திரைகளோ கருத்தடை ஊசிகளோ பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

அனுபவம் உள்ள தோழிகளும் வந்து சொல்வார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி தோழி! kavisiva கண்டிப்பாக doctor ஐ அணுகி அலோசனை பெறுகிறேன்.

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

நன்றி தோழி! ஆமினா உங்கள் கருத்து உதவியாக உள்ளது.கண்டிப்பாக doctor ai ஆணுகுகிறோம்.

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

ஆமினா மற்றும் கவிசிவா ,நாங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் சொன்னதை போல் doctor ai அணுக முடிவெடுத்தேன்.அதற்கு முன் என்னுடைய அக்காவிடம் அலோசனை பெற்றேன்.akka staff nurse 5 years exp.அக்காவிடம் கேட்பதற்கு சற்று தயக்கம் ஆனாலும் தேவை என்பதால் கேட்டு ஆலோசணை பெற்றேன்.இதைபற்றி நான் என் கணவர் இருவரும் கலந்து பேசினோம்.முடிந்தவரை விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

வாழ்த்துக்கள் ஜானகி உங்கள் இருவரின் முடிவிர்க்கு, உங்கள் பதிவை நான் இன்றுதான் பார்த்தேன் காலாகாலத்தில் நடப்பது நடந்தால் தான் மனதுக்கும் வாழ்க்கைக்கும் நிறைவாக இருக்கும். உங்களுக்கு ரெகுல்ர் பீரியட்ஸ் என்றால் முதல் நாளிலிருந்து 8 நாட்கள் மற்றும் பீரியட்ஸ்க்கு முந்தைய 8நாட்களும் நீங்கள் சேர்ந்தால் கரு உருவாகாது. அதாவது ரெகுல்ர் பீரியட்ஸாக இருக்கும் பட்சத்தில் பெண்ணின் கருமுட்டை 14-ஆம் நாள் வெளிப்படும் எனவே அந்த 1வாரம் சேர்தலை தவிர்ப்பது இயற்கையான கருத்தடையாக அமையும்.பயப்பட வேண்டாம் என் தோழி என்னிடம் கேட்டதர்க்கு நான் இதைத்தான் பரிந்துரைத்தேன் அவளும் 8மாதம் ட்ரைப் பண்ணி சசியாக இருக்கிறது என்றாள்.இப்போது குழந்தை பெற முடிவெடுத்து விட்டாள்.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அது தான் சரியான முடிவு ஜானகி. நான் சொல்ல தயங்கியதை நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள் (சொன்னா உங்க மனசு கஷ்ட்டப்படும்னு சொல்லல)

சீக்கிரமே குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்!
என்ன குழந்தைன்னு மறக்காம சொல்லிடுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி!. ரேணுகா மற்றும் ஆமினா .இருவரையும் அக்கா என சொல்லாம் என்று நினைக்கிறேன்.நான் singapore ல் குடும்பத்தை விட்டு தனியாக வசிக்கிறோம்.i miss my family all.உங்களிடம் விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன் akka. என்னகு periods regular a (28 days) வருகிறது.விரைவில் குழந்தை பெற ஆலோசணை சொல்லவும்.பதிலுக்கு காத்திருக்கிறேன்.

கடவுள் கொடுப்பது எந்த குழந்தையாக இருந்தாலும் மகிழ்ச்சி.

அன்புடன்
ஜானகி

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

மிகவும் சந்தோஷமாக உள்ளது ஜானகி .சகோதரி கொஞ்சம் அவசர வேளை ஒரு 15னிமிடம் கழித்து பதில் போடுகிறேன் சரியா

பொதுவா ரெகுலர் பீரியட் பெண்களுக்கு தலை குளித்த முதல் நாளிலிருந்து 14-ஆம் நாள் கருமுட்டை வெளியாகும்.ஆகவே அதற்கு முன்பு 2 நாள் பின்பு 2 நாள் என்ற கணக்கில் நீங்கள் சேர்ந்து இருந்தால் 1,2 மாதத்தில் கரு தங்கும்.இது டாக்ட்ர் என்னிடம் கூறியது,தினமும் இரவு தூங்குவதற்கு அரை மணிமுன்பு பாலில் பாதாம் ,முந்திரி உடைத்துப் போட்டு காய்ச்சி 2பேரும் குடியுங்கள். அது உன் கரு முட்டையையும் அவரின் உயிர் அனுக்களையும் வலுவாக்கும்.நல்ல முறையில் உண்டாகி குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்,கண்டிப்பாக அக்காவிடம் விஷேசத்தை சீக்கிரம் சொல்லுமா..

மேலும் சில பதிவுகள்