காக்கையின் கூட்டில்
கடும் இனக்கலவரம்
கதறுது குயிலின் குஞ்சு
குஞ்சுக்குத் தெரியாது
வஞ்சனை நடந்தது
பஞ்சுக்குள் கூடப் புயல்.
புயல் கடந்த பூமியாய்
கலைந்துபோன வாழ்க்கை
அலையுது உறவைத்தேடி.
தேடியும் கிடைக்கவில்லை
எங்கே என் தாய்?
கூவியது அனாதைக்குயில்
குயிலின் வேதனை
யாருக்கும் புரியவில்லை,
கேட்டு ரசிக்குது உலகம்
- விதுபா
வானவில்லாய் உன் நினைவுகள்
மழை மேகமாய் நீ
மறைந்த பின்னும்...
இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர்
பதிவுத் திருமணத்தில்
கையெழுத்திட!!
- டெய்சி
பணம் பத்தும் செய்யுமாம்!
யார் சொன்னது?
பத்து மட்டுமா செய்யும்?
பத்தோடு பதினொன்றும் செய்யுமே! - உன்னை
படு கஞ்சனாக்கவும் செய்யும்!
ஆம்........!
கால்வயிறு கஞ்சிக்காக
கால்தேய நடந்து வந்து - உன்னிடம்
மாடாய் உழைத்து
ஓடாய் தேய்ந்து - தன்
கைநீட்டி கூலி வாங்கும்போது - நீ
கொடுக்கிறாய் எண்ணி எண்ணி !
உழைக்க இயலாமலும் - உன்னைப்போல்
உல்லாசமாக இருக்க இயலாமலும்
வேறு வழியின்றி தானம் கேட்பவரை
வெளியே எட்டிப்பார்த்து கதவடைக்கிறாய்!
பண மயக்கம் கொண்ட மானிடா! - அதை
பகிர்ந்தளிக்க தயக்கம் ஏனடா?
உலகம் சுழல்வதை மறந்திடாதே!
உன் கையில் இன்றுள்ள பணம் - நாளை
இன்னொருவன் கையில்!
ஏழை எளிய நண்பர்களே!
நீட்டும் உங்கள் கரங்கள்
நீட்டட்டும்! - வாங்குவதற்கு அல்ல!
பிறருக்கு கொடுப்பதற்காக! - அதற்கான
காலம் கனியும் சந்தேகமில்லை! - அதே உழைப்போடு
காத்திருங்கள் தோழர்களே!
- அஸ்மா
Comments
கவிகள்(??)
கவிகள்(??) மூவருக்கும் எனதுவாழ்த்துக்கள்.. அனைத்திலும் அர்த்தம் இருக்கிறது..விது பாவம் குயில் குஞ்சு...எனக்கு போன வாரம் தான் குயில் குஞ்சு கதை தெரிஞ்சது
தளிகா:-)
To Daiz
Daiz உங்களது கவிதை வானவில் அருமை.. congrates
leemacyril
leemacyril
அர்த்தமுள்ள கவிதைகள்
ஹய் விது, டெய்சி, அஸ்மா கவிதை எல்லாம் அருமை. படிக்கும் ஆவலை தூண்டுது. சீக்கிரம் நிறைய கவிதைகளை காணிக்கையாங்கள்.
ஜானகி
to kavidhai Queens
Realy superb..........congrates to each and everyone
leemacyril
leemacyril
கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள்.
அருமையாக கவிதை படைத்துள்ள் கவிதாயினிகளே, மேன்மேலும் கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.
அஸ்மா, விது, டெய்ஸி,
அன்புடன்
ஜெயந்தி
அழகான கவிதை
அஸ்மா, டெய்சி,விதுபா உங்கள் கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளது கவிதை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் கவிதை எழுதியது எல்லாம் கல்யாணத்திற்க்கு முன் இப்பொழுது படிக்க மட்டுமே நேரம் மேலும் இதே போல் நிறைய படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்
அருமையாக கவிதை படைத்த விது, டெய்சி மற்றும் அஸ்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.விது உங்க கவிதை செண்டிமெண்ட் கடிதை.டெய்சி உங்க ரெண்டு ஹைக்கூவும் தூள்..டாப்...டக்கர்.அஸ்மாவின் கவிதை அருமையான கருத்து...கலக்குங்க தோழிகளே.....
அனிதா
hi
self-confidense is the key
self-confidense is the key to open the door of happiness in your life
விதுபா, அஸ்மா இருவருக்கும் வாழ்த்துக்கள். கவிதைகள் அருமையாக உள்ளது. அம்மா எங்கே கவிதை மனதைக் கவர்ந்தது.
என் கவிதைகளை வாழ்த்தி என்னை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி.
self-confidense is the key to open the door of happiness in your life
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!!!
வாழ்த்திய சகோதரிகளுக்கு என் நன்றியும் வணக்கமும்...
டெய்சியின் குட்டிக் கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்!!!
நன்றிகளும் பாராட்டுக்களும்
வாழ்த்துக்கூறி பாராட்டிய சகோதரிகள் தளிகா, லீமா, ஜானகி, ஜெயந்தி மேடம், கதீஜா, அனிதா ஷாந்தி, டெய்சி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
தோழிகளுக்கும் குடும்பத்தினருக்கும் சிற்சில கவிதைகள் அவ்வப்போது எழுதியுள்ளேன் என்றாலும், வெளி உலகுக்கு முதன்முதலில் அதை அறிமுகப்படுத்திய பெருமை நம் அண்ணன் பாபுவுக்குதான்! கவிதையில் இன்னும் ஆரம்ப நிலையில் நான் இருந்தாலும், அதையும் ஏற்றுக் கொண்ட அண்ணனுக்கும் அவர்களோடு தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்!
கவிக்குயில்கள் டெய்சி, விதுபாவுக்கு என் பாராட்டுக்கள்!
கவிதை தொகுப்பு அனுப்புவது எப்படி
அறுசுவையில் கவிதை தொகுப்பு அனுப்புவது எப்படினு சொல்லுங்களென்?
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
கவிதை அனுப்புதல்
கீழே தொடர்புக்கு என்று உள்ள பக்கத்தின் வாயிலாக கவிதைகளை அனுப்பவும். கவிதை பகுதியை சற்று மாற்றியமைக்க திட்டமிட்டு இருந்ததால் புதிய கவிதைகளை அந்த பகுதியில் சேர்க்கவில்லை. நேரமின்மை காரணமாக மாற்றங்களை பிறகு செய்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம். ஏற்கனவே நிறைய பேர் கவிதைகள் அனுப்பி இருக்கின்றனர். அவற்றை எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடுகின்றோம்.
அந்த இரு கவிதைகள்
இப்பதான் அந்த இரண்டு கவிதைகளையும் படித்தேன். விதுபாவின் 'அம்மா எங்கே' கவிதையில் நல்ல தேர்ந்த கவிஞரின் சொல் ப்ரவாகம் உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் ஒரு குயில்குஞ்சின் வேதனை போல தோன்றும். உள்நோக்கி பார்த்தால் அவரவருக்கு விருப்பமான ஒரு சோகத்தை கற்பனைப்பண்ணிக்கொள்ளலாம். அதுதான் ஒரு நல்ல கவிதையின் அடையாளம்.
டெய்ஸியின் 'நாம் இருவர்' நல்ல கற்பனை வளத்துடன் கூடிய ஒரு நேரடியான கவிதை.
யார் விதுபா?
யார் அந்த விதுபா? ஏன் மறுபடியும் கவிதைகள் ஒன்றும் எழுதவில்லை? தொடர்ந்து எழுதுங்கள்.
அஸ்மா, டெய்சி, விதுபா
அனைத்து கவிதைகளுமே நன்றாக உள்ளது..அஸ்மா, டெய்சி, விதுபா.... பாராட்டுக்கள்
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்