காதில் எண்ணெய் ஊற்றலாமா?

வாக்ஸ் போவதற்கு,குழந்தை காதில் நல்லெண்ணெய் காய்ச்சி ஆறவைத்து ஊற்றினால் 2நாட்களில்வெளியே வந்துவிடும் என்று கூறினார்கள்.அவ்வாறு யாராவது செய்திருக்கிறீர்களா?செய்யலாமா என்று உடனே சொல்லவும் ப்ளீஸ்.

அன்புடன் அனு

அய்யோ அப்படீல்லாம் செய்துடாதீங்க! பேபி பட்சால் குழந்தை தூங்கும் போது மெல்ல எடுத்து விடுங்கள். குழந்தை விழித்திருக்கும் போது செய்யாதீங்க. குழந்தை தலையை ஆட்டி பட்ஸ் இயர் டிரம்மில் அடி பட வாய்ப்பு இருக்கு.

பேபிஸ் ஷாப்பில் கேட்டால் பேபி பட்ஸ் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முந்தைய த்ரெட்டில் டிசென் தெளிவாக சொல்லியிருந்தார்கள்...ஈ என் டியிடம் போனால் க்லீன் பண்ணி தருவாங்க..அதை விட்டால் பேபி பட்ஸ் முன் பக்கம் பெரியதாக காதை பதம் பார்க்கா விதம் இருக்கும்(ஃபார்மசியிலும் கிடைக்கும்) அது வாங்கி தூங்குறப்ப க்லீன் பன்னுங்க...அதை இதை உருக்கி ஊற்ற வேண்டாம் வேறு ப்ரச்சனையில் கொண்டு விடும்

பதில் தநத கவி,தளிகா இருவருக்கும் மிக்க நன்றி.இன்று திரும்பவும் G.P யிடம் போகவேண்டும்.பார்க்கலாம் என்ன சொல்கிறார் என்று.

அன்புடன் அனு

மேலும் சில பதிவுகள்