கோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...

எல்லாரும் நல்லாருக்கீங்களா? கோவை கெட் டூ கெதர்-ல கலந்துக்கற தோழிகள் இங்கே வந்து அரட்டை அடிக்கலாம். மத்தவங்க திட்டாதீங்க நீங்களும் பேசலாம். ஏன் நான் கெட் டூ கெதர்ல கலந்துக்கறவங்களை மட்டும் பேசக்கூப்பிடறன்னா நாம எல்லாரும் நேர்ல பாத்துக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்காம முழிக்க கூடாதில்லை. ஜஸ்ட் பேசின பழக்கம் இருந்தாகூட அடடா நீங்களா அவங்கன்னு அறிமுகம் ஆக ஈஸியா இருக்கும். சோ வாங்க பழகலாம்...

தனியா வரீங்களா இல்லை உங்க துணைகளோட வரீங்களான்னும் சொல்லுங்க. அப்படியே உங்களைப்பத்தி சொல்லுங்க. சின்ன சின்ன விருப்பங்களையும் திறமைகளையும் பகிர்ந்துக்கங்க அங்க நாம என்ஜாய் பன்ன அது உதவியா இருக்கும். ஓகே...

ரெடியா...

மீண்டும் பேசலாம்...

என்றும் அன்புடன்
லதாவினீ.

சௌமியன், மேடம் நு எல்லாம் சொல்லதீங்க. நான் உங்கள விட சின்ன பொண்ணு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இல்ல sungathi நீங்க எதாவது யோசுசிங்க்களா? குனியமுத்தூர் பக்கமா எங்க?

எனக்கு ரத்தினம் காலேஜ் குள்ள வேலை..... நானும் என் பிரண்ட்ஸ் கிட்ட அத பத்தி தான் கேட்டுகிட்டு இருக்கேன்..... பாக்கலாம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இடம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நண்பர்களிடம் விசாரிக்கச் சொல்லி இருக்கின்றேன். பெரும்பாலும் காந்திபுரம் அருகில் ஏதேனும் ஒரு ஹோட்டலில் நடத்தப்படலாம். ஜங்சன் அருகில் சில ஹோட்டல்ஸ் பற்றி சொல்லி இருக்கின்றார்கள். பார்க்கலாம். இடம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது எத்தனை பேர் வருவார்கள் என்பது சரியாக தெரிய வேண்டும். ஹோட்டலில் பார்டி ஹால் புக் செய்வதாக இருந்தால் நபர்களின் எண்ணிக்கை சரியாக தெரிய வேண்டும்.

இடம் பற்றி உங்களுக்கு ஏதேனும் அபிப்ராயங்கள் இருந்தால் இங்கே தெரிவிக்கலாம். யார் வீட்டிலாவது பெரிய மொட்டை மாடியோ இருந்தால், ஷாமியானா போட்டு நடத்திவிடலாம். :-)

கெட்டுகெதர், காலையிலா மாலையிலா எந்த நேரம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம் அண்ணா. கேட்டா தப்பா எடுத்துக்காதீங்க, அங்கு நடக்கவிருக்கும் செலவுகள் பற்றி???? தவறென்றால் ப்ளீஸ் சாரி சாரி சாரி:(

அன்புடன்
பவித்ரா

நியூசிலாந்தில் இருந்து திருமதி. சத்தியா அவர்கள் பேசினப்ப, படிச்ச காலேஜ் பத்தி பேச்சு வந்துச்சு. அவர் யூஜி படிச்ச காலேஜ் பேரைச் சொன்னதும் என் தம்பியும் (சித்தி பையன்) அங்கேதான் படிச்சான், அவனோட மனைவி பேரைச் சொல்லி, அந்த பெண்ணும் அங்கதான் படிச்சது ன்னு சொன்னேன். அவர் ஆச்சரியமாக, அட.. அது என் க்ளாஸ்மேட் ங்க, அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?. கல்யாணம் முடிஞ்சு குழந்தையோடு இப்ப அமெரிக்காவில செட்டிலாயிட்டாங்க ன்னேன்.

அப்புறம் பிஜி படிச்ச காலேஜ் பத்தி சொன்னார். என்ன மேஜர், எந்த வருசம் னு கேட்டேன். சொன்னார். அப்படின்னா என் ப்ரெண்ட் நிரஞ்சனா வை உங்களுக்கு தெரியுமா ன்னு கேட்டேன். அய்ய்யோ நாங்க எல்லாம் ஒரே க்ளாஸ்தான். அந்த நிரஞ்சனாவும் கெட் டுகெதருக்கு வர்றாங்கன்னு சொன்னதும் அவருக்கு சந்தோசம் தாங்கலை. ஒரு ஆர்வத்துல சொல்லிட்டு அப்புறம்தான் யோசிச்சேன். அவர் வர்றதை பத்தி சொல்லாம இருந்திருந்தா, அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கலாமேன்னு.

பி.கு. இந்த ப்ரெண்ட் நிரஞ்சனா தான் நான் அப்பளத்துல பாயாசத்தை போட்டு சாப்பிடுறதை கிண்டல் பண்ணினது. அவங்க க்ளாஸ்ல இருந்த ஒரு பொண்ணுதான் எங்க ஊர்ல அப்பளம், பாயாசம்,வடை எல்லாம் சேர்த்து போட்டு சாப்பிடுவோம்னு சொன்னது. :-)

So, இந்த மீட்ல இன்னும் நிறைய ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள்(!!) உங்களுக்கும் கிடைக்கலாம். எதற்கும் ரெடியா இருங்க. :-)

சாம்பிள் நிகழ்ச்சி நிரல் :-)

10 மணிக்கு தொடக்கம்.

10.30 பானம், எதேனும் ஸ்நாக்ஸ்.

பின்னர் ஒரு மணி வரை அறிமுகம், விளையாட்டுகள், அரட்டை எல்லாம்..

1.00 மணிக்கு மதிய உணவு

மறுபடியும் அரட்டை, மற்ற பயனுள்ள விசயங்கள்.

3 மணி அளவில் ஸ்நாக்ஸ், டீ

4 மணிக்கு பிறகு வீடு திரும்பலாம்.

(காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஹால் புக் செய்யலாம் என்று இருக்கின்றோம்.)

பஸ், டாக்ஸி, ஆட்டோ ஏதேனும் பிடித்து, இடத்தை கண்டுபிடித்து வரும் செலவுகள் உங்களது. :-)

ஹலோ அட்மின் அண்ணா ,

இதெல்லாம் ரொம்ப அநியாயம். நாங்க ஊருக்குவரும்
போதெல்லாம் கெட் டூகெதர் ஏற்பாடு செய்யமாட்டீர்கள். பரவாயில்லை enjoy பண்ணுங்கோ.

மத்தவங்க எல்லோரையும் போல போட்டொவைப் பார்த்து திருப்தி பட்டுக்கொள்கிறோம்.

ரம்யா எங்களுக்கெல்லாம் அழைப்பில்லையா? இதுதான் உங்ககூடமுதல் முறையா பேசுகிறேன். என் பெயர் மணி. எங்க ஊர் தாராபுரம். கோவை கெட் டூகெதர் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹாய் தோழிகளே எல்லாரும் நல்லாருக்கீங்களா? நான் ஆரம்பிச்சதோட சரி என்னால அறுசுவைக்கு வர முடியாத ஒரு சிட்சுவேஷன். மன்னிக்கவும்.

மணிசாரா தாராபுரத்துல தானே இருக்கீங்க நீங்களும் கலந்துக்கலாமே??? எப்ப 31ம் தேதி வரும்னு காத்துட்டு இருக்கேன் நான்.

அட்மின் அண்ணா ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் மட்டும் இருக்காது கண்டிப்பா சந்தோஷமும் இந்த கெட் டூ கெதர்ல கலந்துருக்கும். நாங்க எல்லாருமே எதிர்பாத்துட்டு இருக்கோம். சோ காட்டுக்குள்ள வெச்சாலும் நான் வ்ந்துருவேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... ஹாஹாஹா.

பதிவு குடுத்த தோழிகள் எல்லாருக்கும் நன்றி...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நல்லாருக்கீங்களா? நீங்க குனியமுத்தூரா??? நான் இப்பதான் ஒரு வாரத்துக்கு முன்னாடி அங்க வந்துருந்தேன். இடையர்பாளையம் பிரிவுக்கும், மதுக்கரைக்கும் அங்க என் ரிலேசன்ஸ் இருக்காங்க தெரியாம போய்ருச்சு நீங்க குனியமுத்தூர்னு... ஓகே ஓகே வாங்க பாத்துக்கலாம்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்