பயனுள்ள அரட்டை பாகம் 4

ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....

தலைப்பு - சிக்கனம்

எப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.

2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி

comfort தெரியும். எப்பயாவது சின்ன பாக்கெட் வாங்குவோம். இனி அந்த பாட்டிலை வாங்கிவைச்சுட வேண்டியது தான்.

ஆகா! சிக்கனம்!

1 சிரிப்பில் சிக்கனம்! இமாவின் புன்னகை!:):):):)

2 வார்த்தை சிக்கனம் ! ஒருவரி பதில் !

3 உணவு சிக்கனம்! 2 வேளை சாப்பாடு!

4 முடி சிக்கனம் ! பாஃப் கட்டிங் !

5 கவிதை சிக்கனம் ! ஹைகூ கவிதைகள்!

6 துணி சிக்கனம் ! நாலே புடவை !(ஜிஜிஜிஜி)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நானும் கம்போர்ட் தான் யூஸ் பண்றேன். துணி ரொம்ப நாளைக்கு வரும் என்பதையெல்லாம் ஒரு பக்கம் விட்டு தள்ளுங்க (ஏன்னா 2 வருஷம் ஒரு சுடி இருப்பதே பெரிய விஷயம். வருஷா வருஷம் எடை தான் அதிகமாகுதே:( என்னிடம் செமி ஆட்டமெடிக் வாஷிங்மெஷின் தான் இருக்கு. அதுல எப்படி யூஸ் பண்ணுவீங்க. கொஞ்சம் சொல்லுங்க. துணி இருக்கும் போது போட்டா துணி கலரே மாறுது. அதுனால தனியா வெளியே எடுத்து தான் அலசி பின் கம்போர்ட் கலந்த நீரில் முக்கி எடுப்பேன். இது அதிகாகவே எனக்கு சிரமமா இருக்கு.

அந்த வாசனைக்காகவே அதை உபயோகிப்பேன். ஷாம் கூட அவன் ட்ரஸை ஸ்மெல் பண்ணி தான் போடுவான். அந்த விளம்பரத்தை முதலில் நான் அதிகமாகவே கேலி செய்தேன். ஆனா அதை யூஸ் பண்ணிய பிறகு தான் அந்த விளம்பரத்தில் உள்ளவர்களை போலவே நானும் துணிகளை முகர்ந்துக்கொண்டே இருப்பேன். இது தான் கம்போர்ட்டின் மகிமை :))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

துணி காய போடும் போது நிழலில் காய போடுவது துணிக்கு நல்லது. அதுவும் உள் பக்கத்தை வெளியே தெரியும் படி காயப்போட வேண்டும். அப்படியே வெயில் தாக்கினாலும் உள்பக்க துணி மட்டும் தான் கலர் மாறும்(வெளுக்கும்). அதுவுமில்லாமல் சில பறவைகளின் எச்சங்கள் துணியில் பட்டால் போகாது. இப்படி போடுவதால் பயம் இல்லை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கல்பனா

நான் சந்தை என்ற ஒன்றை பார்த்ததே சென்னையில் தான். எங்கள் ஊரிலும் வார சந்தை உண்டு. ஆனால் அங்கு பெண்கள் போவது அரிது. பாட்டிமார்களும், தாத்தா, அப்பாமார்களும் மட்டும் தான் போவார்கள். அதனால் எனக்கு அதை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனா நீங்க சொன்னது போல் சந்தை நடக்கும் நாளிலிருந்து 3 நாள் வரை யார் வீட்டுக்கு போனாலும் மிக்சர்,காரசேவு என கொடுப்பார்கள், அவல் செய்து கொடுப்பாங்க. சந்தை நடக்கும் அன்று நாட்டுக்கோழி குழம்பு இருக்கும். அடுத்த நாளும்,அதற்கு அடுத்த நாளும் நிறையா காய்கறிகளும் சாப்பாட்டில் சேர்ப்பார்கள். அன்னைக்கு கண்டிப்பா வீட்டு வாசலில் நிலக்கடலை தோல், நுங்கு தோல் இருக்கும். யாராவது ஊருக்கு போனால் சந்தைக்கு ஒரு முறை போயிட்டு தான் போவாங்க. அங்கிருந்து தேவையான பொருட்களை வாங்கி உறவினர்களுக்கு கொடுத்து அனுப்புவார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் துணிகள் அலசி முடிந்ததும் அதிலேயே துணிகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நிரப்பிக் கொண்டு (ரொம்ப அதிகமாக தண்ணீர் வேண்டாம்) கம்ஃபர்ட் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் ஓட விடுங்கள். பின்பு எப்போதும் போல் ட்ரையரில் போட்டு அல்லது கைகளால் பிழிந்து உலரப் போட்டு விடலாம். தனியே பக்கெட்டில் எடுத்து அலச வேண்டிய அவசியம் இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானும் வந்திட்டேன்:)
வாஷிங்மெசீன் பிரச்சனை போயிட்டிருகு போல.... எனக்கு கிரைண்டர் பற்றியது, என்னென்றால், என்னிடம் panasonic கிரைண்டர் இருக்கு, ஆனால் அதன் சிறிய கப்(dry mill ) வேலை செய்யுதில்லை.தனிய அதனை வாங்க முடியுமா? இங்கு பார்த்தோம் ,coffee கிரைண்டர் தான் இருக்கு,full செட் வாங்கவும் விருப்பமில்லை பழையது வீணாய்போயிடும் என்று பிரீத்தி என்ன மாதிரி எல்லாவற்றுக்கும் உபயோகப்படுமா, பாவிப்பவர்கள் சொல்லுங்கோ.. பிளீஷ்,

கவிசிவா

நான் அப்படி தான் ஒரு முறை செய்து துணியில் அது பட்டதால் வடுவடுவாய் சில இடங்களில் வெளுத்து துணி உபயோகிக்க முடியாமல் போய்விட்டது. அதான் பயம். தனியா பக்கெட்டில் சிறிது தண்ணீரில் கரைத்து பின் மெஷினில் ஊற்றி ட்ரை பண்ணி பார்க்கிறேன். நன்றி கவி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹலோ தோழி nhm writer எப்படி டவுன் லோட் செய்வது எப்படி பயன் படுத்துவது விளக்கமாக சொல்லுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்

அது ஒன்னும் பெரிய விஷயமில்லை
English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.//////////

இதுலாம் நான் சொன்னது இல்ல. ஆஷிக் சொன்னது. இதன் படி செய்யுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்