அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

ராதா, வதனா ரெண்டு பேரும் எப்படியிருக்கீங்க? தீபாவளி கொண்டாட்டம் தொடங்கிடுச்சா? வதனா நீங்க கிறிஸ்டியன்னு சொன்னீங்க நீங்க கிறிஸ்மஸ்க்கு ரெடியாயிட்டீங்களா? அறுசுவை தோழிகள் சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் வதனா
எப்படி இருக்கீங்க. அறுசுவைக்கு வாங்க வாங்க. இங்க சேத்துக்கோங்கனு கேக்கவே வேண்டாம். தானா வந்து ஐக்கியமாயிடுங்க. பொண்ணு பேர் என்னப்பா...

அந்தமான்ல இருக்கீங்களா? நல்ல விஷயம். அந்தமான்ல இருந்து ஒரு தோழி அறுசுவைக்கு வந்திருக்காங்க..

தீபாவளிக்கு இனிமே தான்பா எடுக்கணும். இன்னும் எடுக்கல. ஆமியும் வந்துடுவாங்க. கவலைப்படாதீங்க.. அரட்டையை கன்டினியு பண்ணலாம்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தவ்ஸ் அண்ணா, ஆம்ஸ் வாங்கோ வாங்கோ. தவ்ஸ் அண்ணா இந்த தங்கச்சிக்கு குஜராத்லயிருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க? ஆம்ஸ், இது அரட்டைப்பா தெரியாம வந்துட்டீங்க போல இருக்கு ;) நீங்க பாட்டியாச்சே அரட்டைகெல்லாம் வரமாட்டீங்களே ;))))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாங்க அண்ணாவை மறந்துட்டீங்களே

அன்புடன்
THAVAM

கல்ப்ஸ்
வாங்கப்பா.. குட்டீஸ் ரெண்டும் என்ன பண்ணுறாங்க. காலைல எத்தன மணி இப்போ? ரொம்ப நாளாச்சுப்பா அரட்டை அடிச்சு. ஆனா அரட்டைல யாரையும் காணோம் இப்ப தான புதுசா வதனா வந்திருக்காங்க.. தீபாவளி இன்னும் ஆரமபிக்கல கல்ப்ஸ்.. :(
உங்களுக்கு ஆரம்பிச்சுடுச்சா...குட்டீஸ்க்கு என்ன வாங்குனீங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அண்ணா
உங்கள சாப்டு வந்து தேடினா ஆளக்காணோம். நியாயமா இது. அடுக்குமா. என் அறுவைல இருந்து தப்பிச்சு ஓடிப்போயிடலாம்னு நினச்சீங்களா.. அண்ணி பசங்க நலமா? குஜராத் ட்ரிப் எப்படி இருந்துச்சு..

பால்வளம் பற்றி என்ன சொன்னாங்க. உபயோகமா எதாவது சொல்லுங்கண்ணா. எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே.....

தினமும் ரொட்டி சாப்பாடு சாப்டு நொந்து போயிட்டீங்களா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தவ்ஸ் அண்ணா, உங்களை மறப்பேனா? அறுசுவைல என் மதிப்பிற்குரிய பாசத்திற்குரிய அண்ணன்கள் ரெண்டு பேர். அது நீங்களும், அட்மின் அண்ணாவும் தான்.என்னைப்போய் இப்படி கேட்டுட்டீங்களே :((

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நலமாக இருக்கிறீர்களா!. குஜராத்ல இருந்து நான்... நான்... ஒரு நிமிடம் உங்க அண்ணி அழைக்கிறாங்க... ஹி...ஹி... சும்மாதான் கூப்பிட்டாங்களாம்.

அன்புடன்
THAVAM

ராதா, குட்டீஸ் ரெண்டு பேரும் அவங்க வேலைல ரொம்ப பிசியா இருக்காங்கப்பா. இங்க இப்ப 1.30 மணி. நானும் நேத்து யோசிச்சேன். நீங்க இப்பலாம் அரட்டைக்கே வர்றதில்லையேன்னு. இங்க தமிழ் குடும்பங்கள் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவாங்கப்பா. குட்டீஸ் வச்சுட்டு கலந்துக்கறது கஷ்டம். வீட்லயே புதுதுணி போட்டு பலகாரம் பண்ணி கொண்டாடிவோம். லீவெல்லெலாம் கிடையாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா
மதிய சாப்பாடு நேரம் வந்துவிட்டதா? அப்படியா.. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவாங்களா.. இங்க தீபாவளிக்கு லீவு உண்டுப்பா. அதுனால பிரச்சனை இல்ல. இங்கயும் எல்லாரும் ஒன்னா கொண்டாடுவாங்க. ஆனா ஒவ்வோரு ஏரியாவும் தனி தனியா கொண்டாடுவாங்க.

நானும் நினைப்பதுண்டுப்பா. ஆனா எல்லாருக்கும் பதில் போட்டுட்டு போய்டுவேன். சில சமயம் அரட்டைக்கு வந்தா ஒரு வேலையும் ஆகாது. அதான் பயந்து ஓடிப்போயிடுறேன். இப்ப கூட டிபன் பாதில நிக்குது. போய் முடிக்கணும்.அப்பப்ப வந்து பதிவு போடுறேன்

அண்ணா எங்களைக்கண்டு ஏன் இந்த ஓட்டம். பசங்க வீட்ல இருந்து ரகளை பண்ணுதுங்களா? என்ன பண்ணுதுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்