எனது மனைவிக்கு வாழ்த்து சொல்லுங்க...

இதை எனது மனைவியின் சார்பாக எழுதுகிறேன்...இப்பொழுது என் துணைவியார் இந்தியாவில் (மதுரை)இருக்கிறார்.போனமாதம் தான் வலைகாப்பு முடிந்தது.ஊருக்கு போற அவசரத்தில் எங்களால் அருசுவைக்கு வந்து சொல்ல முடியாமல் போனது.மேலும்,ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பிரசவ நாள் கொடுத்து இருக்கிறார்கள்...மேலும் அடிக்கடி சொல்லுவாங்க அறுசுவை மற்றும் உங்களின் ஆலோசனைகளை பற்றியும்...

திருமதி,கார்திகாராணி அவர்கள் சொன்னதை (அம்மாகிட்ட நல்லபடியா வளர்ந்து, சமர்த்தா, சந்தோசமா இந்த உலகத்துக்கு வரணும், அம்மா சொல்றத கேட்டு நல்லபிள்ளையா நடந்துக்கணும். உன் வருகையை உன் அப்பா அம்மா, மற்றும் இந்த அத்தையும் ஆவலாக எதிர்பார்த்து கிட்டு இருக்கோம்." இதை உங்க குழந்தைகிட்ட நான் சொன்னதாக சொல்லிவிடுங்கள்)இதை பற்றி அடிக்கடி சொல்லுவாங்க...

நாங்கள் மணம் முடித்த உடன் (6 நாட்களில்)கத்தார் வந்து விட்டோம்.அதனால் எல்லா விசயங்களையும் நாங்கள் அறுசுவை மூலமாக தெரிந்து கொண்டோம் சமையல் உட்பட...(தமிழில் எழுவது உட்பட)...எனவே நான் அறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களை சொல்ல கடமை பட்டு இருக்கிறோம்.இதை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கும் திரு.பாபு அவர்களுக்கும் நன்றிகள் பல....

மேலும்,என் மற்றும் எனது குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்,எனது மனைவி நல்ல ஆரோக்கியத்துடனும்,இறை அருளடனும் இந்த உலகத்திற்கு ஒரு நல்ல குழைந்தையை கொடுப்பதற்க்கு இதன் மூலமாக உங்கள் வாழ்த்துகளையும்,நல் ஆசிகளையும் கொடுப்பதற்க்கு வேண்டுகிறோம்.

இந்த தீப ஒளி திருநாளில் தீமைகள் விட்டு ஒழிந்து,எல்லார் வாழ்விலும் தீபத்தின் ஒளி போல் பிரகாசமாக அனைத்தும் நடக்க/இருக்க இறைவனை இறைந்து வேண்டுகிறோம். தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வாழ்க தழைத்து,வளர்க நிறைந்து.

வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..

என்றென்றும் அன்புடன்,

குமார்-செல்லா.
டோஹா,கத்தார்.

உங்கள் மனைவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நல்லபடியாக பிரசவம் ஆக வேண்டுகிறேன்.

செல்லா குமார் உங்கள் தலைப்பை சின்னதாக இரு வார்த்தைக்குள் எழுதுங்கள். இல்லைன்னா திரு. பாபு அண்ணா அவர்கள் அடிப்பாங்க :))

டெம்ளேட் மாறிடுமாம். மாத்திடுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தலைப்பை மாற்றியாகி விட்டது மேடம்.... நன்றி மேடம் முதலில் வாழ்த்துகளை கொடுத்ததற்கு....

செல்ல குமார், உங்கள் மனைவி சுகப்பிரசவத்தில் அழகான,அறிவான,ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கணவன் - மனைவி இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சொன்னதும் கோபம் கொள்ளாமல் என்னை திட்டாமல் மாற்றியதற்கு மிக்க நன்றி!

இன்னொன்னும் சொன்னா கோபப்படாம திட்டாம கேப்பீங்களா? :)

//மனைவிக்கு வாழ்த்து சொல்லுங்க// என இன்னும் சின்னதாக்கிடுங்க. ப்ளீஸ்! தலைப்பு சின்னதாக தான் கொடுக்க வேண்டும் என்பது அறுசுவையில் சொல்லப்பட்ட விதிமுறை. அதற்காக தான் சொன்னேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முதலில் திரு. குமார் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

தலைப்பு குறித்து சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகின்றேன். குமார் அவர்கள் கொடுத்துள்ள தலைப்பின் அளவில் பிரச்சனை இல்லை. மன்ற இழையின்(thread) தலைப்பு ஓரளவிற்கு பெரிதாக இருக்கலாம். அதில் பிரச்சனை இல்லை. அதற்காக இரண்டு மூன்று வரிகளில் வரும் அளவிற்கு பெரிதாக கொடுத்தால் நன்றாக இருக்காது.

கருத்து தெரிவிக்கும்போது அதாவது, பதில் கொடுக்கும்போது கொடுக்கப்படும் தலைப்புகள்தான் சிறியதாக இருக்க வேண்டும். மூன்று நான்கு வார்த்தைகளுக்குள் இருக்குமாறு கொடுத்தால் நன்றாக இருக்கும். பெரிய தலைப்புகூட பிரச்சனை இல்லை. இடைவெளியே (spaces) இல்லாமல் சிலர் தலைப்பு கொடுத்துவிடுவார்கள். அதுதான் பிரச்சனையே. அதுதான் டெம்லேட்டை பாதிக்கும். அதனால்தான் சிறிய தலைப்பாக, இடைவெளி விட்டு கொடுங்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவேன்.

அடடா
அண்ணா என்னை அடிச்சுட்டாங்களே!!!!

நல்லவேளை விளக்கம் கொடுத்தீங்கண்ணா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தற்பொழுது தலைப்பு சரியாக இருக்கு என்று நினைக்கின்றேன்

உங்கள் இருவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உங்கள் மனைவிக்கு நல்லபடியாக பிரசவம் ஆக வேண்டுகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

குமார் செல்லா அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவலைபடவேண்டாம் சகோதரரே......நாம் எல்லோரும் சேர்ந்து இறைவனை வேண்டுவோம்.நல்லபடியாக குழந்தை பிறந்து,தாயும் சேயும் நலமுடன் நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ வேண்டும்.உங்கள் மனைவிக்கு மிக பெரிய ஆறுதலாகவும்,பலமாகவும் நீங்கள் இருங்கள்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

மேலும் சில பதிவுகள்