கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

சுந்தரி... மிக்க நன்றி. நீங்க சொன்ன புடவை நானும் பார்த்தேன். வந்து சில மாதங்கள் ஆகிறது, இப்போதே பார்க்க முடிந்தது. நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அழகாய் இருந்தது. நெட் இருந்ததால் மெயின்டெனன்ஸ் கஷ்டம் என்று வாங்க யோசித்தேன். அடுத்த முறை வாங்கிடுவோம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்கள் எல்லா பதிவுகள் பார்த்திருக்கிறேன் ஆனால் பதில் அனுப்ப முடிவதில்லை எனக்கு 12 வயதில் மகள் இருக்கிறாள் மில்ட் cerebral பாலிசி ஆனால் கவலையெலாம் இல்லை ஸ்பெஷல் ஸ்கூல் போகிறாள் வேலை சரியாக இருக்கும் நான் சொல்ல வந்தது MTR முறுக்கு மாவு ரொம்ப பெஸ்ட் நான் முயற்சி செய்து பாத்திருக்கிறேன்.மேலும் டபுள் horse இடியாப்ப மாவு ரொம்ப பெஸ்ட். உங்கள் சமையல் அறை ரொம்ப arumai

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

முதலில் உங்க வேலைக்கு நடுவே இங்கு பதிவிட்ட அன்புக்கு மிக்க நன்றி. குழந்தைக்கு ஒன்னும் பிரெச்சனை இருக்காது, விரைவில் எல்லா குழந்தைகளையும் போல் நல்லா இருப்பாள்.... அதுக்காக எங்க பிராத்தனை எப்பவும் உண்டு.

நீங சொன்ன ப்ராண்ட் நான் இது வரை பயன்படுத்தல. ஆனா சமீபத்தில் மார்கெட்டில் பார்த்தேன். அவசியம் முயற்சி செய்துடறேன். சுலபமா முறுக்கு செய்ய கசக்குமா?? ;) மிக்க நன்றி தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ லேட்டஸ்டா ஆர்.எம்.கே.வி'யில் குழந்தைகளுக்கு நவராத்திரி பட்டு வந்துதே விளம்பரம் பார்த்தீங்களா??? நேரில் பார்த்தீங்களா??? மல்டி கலர்'ல அருமையா இருந்தது ரெடிமேட்'அ தெச்சா அந்த பாவாடை சட்டை. 2 வயது குழந்தைக்கு கேட்டா 5000 ரூபாய்'னு சொன்னாங்க!!! அட கடவுளே, என்ன இருக்கு இத்துனூன்டு பட்டு பாவாடையில்'னு நினைச்சு விட்டுட்டேன். துணியா எடுத்து தைக்கிறதுன்னா 2500'ல இருந்து இருக்கு, சட்டையும் அதுலயே வந்துடும். உங்களுக்கு ஆசை இருந்தா வாங்குங்க... அழகான தையல், அழகான கலர்ஸ். ஆனா ரெடி ஸ்டிச்டு எல்லாம் ஆர்டர் கொடுத்தா தான் கிடைக்கும், போனதும் வாங்க இயலாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இந்த மல்டி கலர் பட்டு பாவாடை ஆந்திராவில் போன வருடமே வந்துவிட்டது.நீங்க சொல்கிற அதே விலை தான்.அருமையா தைத்தால் அழகாயிருக்கும்.

இப்ப லாங் ஃப்ராக் இப்ப ரொம்ப ஃபாஷன்.பெண் குழந்தைகள் இதை போட்டால் தேவதை போல இருப்பார்கள்.இதன் விலை தான் அதிகம்.தொடக்க விலையே 1200 ரூ தொடங்கி, 2000 வரை வுள்ளது.விலைக்கு தகுந்த மாதிரி வேலைபாடு உள்ளது.

சுந்தரி... மிக்க நன்றி. நான் இன்னும் இதை பார்க்கலயே... அடுத்த முறை கடைக்கு போனா கண்டிப்பா கேட்டே பார்த்துடறேன் :)

ஆந்திராவில் மல்டி கலர் வரலன்னா தான் அச்சர்யம் ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்ல தலைப்பு...நானும் இந்த தீபாவளி கு எப்படியாவது லாங் டாப் அனார்கலி சுடி வாங்கணும் நு ட்ரை பனேனே..கிடைக்கவே இல்ல...அது எங்க கேட்டாலும் அவுட் of பேஷன் நு சொளிட்றாங்க..எங்க கிடைக்கும் நு தெரிஞ்ச சொலுங்க தோழிகளே..

நான் இந்த வருஷம் ஜூலையில் இந்தியா போயிருந்தேன்.காரைக்காலில் அன்னார்கலி எடுத்தேன்,சூப்பர் கலர் & நார்மல் விலை,green & brown mixed color with stones & full net hand,இன்ஷா அல்லாஹ் வரும் செவ்வாய் 16 ந் தேதி ஹஜ் பெருநாளுக்காக வைத்துள்ளேன்.இப்போ அது out of fashionஆ என்று தெரியவில்லை.வெளிநாட்டில் வசிக்கிறவங்களுக்கு ஊரிலிருந்து எடுத்து வருவதைத்தான் வைத்து போடனும்,மீண்டும் அடுத்தமுறை ஊருக்கு போனால் தான் new dresses எல்லாம்.

Eat healthy

இப்ப தங்க நகை எல்லாம் யாருமே போடுவது கிடயாது . என்ன கலர் ட்ரஸ் எடுக்கரோமோ அதுக்கு ஏத்த கலர் பேஷன் நகை வாங்கி கொள்கிறார்கள். நானும் இந்த தீபாவளிக்கு போய் பச்சை கலர் பட்டு புடவை எடுத்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி செட் ஒன்னு வாங்கிட்டேன் பச்சை கலர் ல ஒயிட் கலர் ஸ்டோன் வச்சி எப்படி.

அன்புடன்
ஸ்ரீ

வித்யா, நீங்க மதுரையா? எப்படி இருக்கீங்க? போத்தீஸ், லலிதா வில் பாருங்கப்பா, நான் குவைத்தில் இருக்கிறேன் இப்போத்தான் அம்மா அனுப்பி வைத்தாங்க.

வனிதா மேம் எப்படி இருக்கீங்க? உங்க டிப்ஸ் எல்லாம் சுப்பர், நல்லா பயனுள்ளதாக இருக்கு, ரெம்ப நன்றி.

மேலும் சில பதிவுகள்