தொண்டை கட்டி விட்டது

என் பையனுக்கு 13 மாதங்கள் ஆகிறது, அவனுக்கு பயங்கரமா மார்சளி, இருமல்,fever பிடித்து இருக்கிறது.அவனுக்கு தொண்டை கட்டி விட்டது, கர கர என பேசறான். கஷ்டமாக உள்ளது. என்ன செய்வது. pls pls urgent help me,சாப்பிடவும் மாட்டென்ரான்/ இப்பொ என்ன உணவு தருவது சளியாக இருக்கிறாதால்
pls advice

சளி இருந்தால் இப்படி ஆகும் சரியாகிடும் கவலைபடாதீங்க./.பிள்ளைகளுக்கு இதெல்லம் வந்தால் எப்படியும் ஓரிரு வாரம் நின்று தான் சரியாகும்..அதுவரை நமக்கு மனசு கஷ்டமா தான் இருக்கும்.நல்ல ஒரு வைத்தியம் உண்டு.
கிச்சனில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நல்ல கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் போட்டு கொதிக்க விட்ட்டுடே இருங்க ..கிச்சன் கதவை நல்ல சாத்தி எக்ஹாஸ்ட் போடாமல் விட்டால் சமையலறை நல்ல வியர்க்க துடங்கும்..பின் குழந்தையோடு கிச்சனில் அந்த ஆவியை கொண்டு வியர்க்க்கும் வரை சுமார் 20 நிமிடம் நில்லுங்க...தண்ணி பக்கத்தில் விட்டுடாதீங்க...குழந்தையின் ட்ரெஸ்ஸை எல்லாம் கழட்டிடுங்க..இப்படி தினம் 2 வேளை செய்தால் ஓரிரு நாளில் நல்லாவே வித்யாசம் தெரியும்..
பிறகு குப்புற மடியில் படுக்க வைத்து நெஞ்சு கீழேயும் வயிறு மேலேயும் லேசாக தூக்கியிருக்குமாறி மடியில் வைத்து முதுகில் நம் கைய்யை ஒரு சின்ன டீகப் போல குவித்து முதுகில் லேசாக தட்டிக் கொடுத்துட்டே இருக்கவும்..சளி கரையும்
மருந்தை எப்படியாவது தள்ள பாருங்க..ஒரு ட்ராப்பரில் மருந்தெடுத்து குட்டியிடமே கொடுத்து பாருங்க சிஅல சமயம் விளையாட்டாக அவங்களே சாப்பிடுவாங்க

தளிகாவே நல்ல ஐடியா சொல்லிட்டாங்க. எனக்கு தெரிஞ்சு ஒன்னு குழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் ராப்பரில் முதலில் தேன் கொடுத்து பின்னர் அடுத்த முறை மருந்து கொடுக்கலாம். தேன் மருந்தோட சேர்த்து நன்கு வேலை செய்யும்.

விக்ஸை சூடு காட்டி நெஞ்சில் தடவுங்க. இல்லைன்னா வெத்தலையில் விக்ஸ் தடவி சூடு காட்டி ஒத்தடம் கொடுங்க!

மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைக்கும் போதே விஸ்க் போடலாம் இல்லையா தளிகா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பையனுக்கு தொண்டை கட்டி இருக்கிறது. அதற்கு வழி சொல்லுங்க pls

jaya

சளினால தான் பா தொண்டை கட்டியுள்ளது. அதாவது வரட்டு இருமல்! என் மகனுக்கும் இது போல் வந்தது. பேச நினைத்தாலே கர கரவென இருக்கும். சரியாகிவிடும். சுடான நீரே கொடுங்க! வெதுவெதுப்பா உள்ளே போனா கொஞ்சம் இதமா இருக்கும்.

சுண்ணாம்பில் நல்லெண்ணெய் குளப்பி லேசாக தேய்த்து பாருங்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Thanks amina and thalika sisters

jaya

நன்றி தோழிகளே. இப்பொ பரவாயில்லை பையனுக்கு.fever, cough இல்ல. சளி தான் இருக்கு. நீங்க சொன்ன மாதிரி மருந்து தந்தென். குடிக்கிறான்.

jaya

ஹாய் ஜெயா, சளிக்கு தேனும், மிளகு பொடியும் சேத்து கொழப்பி குடுங்க, சீக்கரம் சரி ஆகி விடும். இல்லைனா, இஞ்சி சாரும்,துளசியும் தாங்க. இதுவும் ரொம்ப நல்ல மருந்து. எங்க அம்மா, எங்க வீட்டு குட்டீஸ் கு இப்படி தன பண்ணுவாங்க. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்