ரொட்டி ( bread ) ஸென்விச் மேக்கர் பயன்படுத்தும் முறை பற்றிய தகவல் தேவை

வணக்கம்
நான் புதிதாய் ஸென்விச் மேக்கர் ஒன்று வாங்கியியுள்ளேன்
அதை பயன்படுத்தும் முறைகள் பற்றிய தகவல் தேவை
எப்படி வெண்ணெய் தடவுவது,ப்ரெடின் மேல்புறம் தடவுவதா,உட்புறம் தடவுவதா?
பிளேட்டில் எண்ணெய்,வெண்ணெய் தடவலாமா?
எவ்வளவு நேரம் விடுவது அல்லது அதுவே off ஆகிவிடுமா?
தெரிந்தவர்கள் தெளிவாய் கூறவும்
நன்றி

பாமா உங்க தலைப்பை கொஞ்சம் சின்னதா போடவும். இல்லை என்றால் அட்மின் அண்ணன் திட்டுவார்.

வாழு இல்லை வாழவிடு

சுமி அட்மின் அண்ணா பாவம் அவரை வில்லன் ரேஞ்சுக்கு ஆக்கிடாதீங்க :). இழையின் தலைப்பு இந்த நீளம் ஓகேன்னுதான் அண்ணா சொலியிருக்கார். பதிவுகளுக்கு கொடுக்கும் தலைப்புதான் சின்னதா வைக்க சொல்லியிருக்கார்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சேண்ட்விச் மேக்கரின் மேனுவலில் இதெல்லாம் இருக்குமே பாமா! நான் வெண்ணெய் எதுவும் தடவுவதில்லை. என்னுடையதில் டைம் எல்லாம் செட் செய்ய வேண்டாம். தயாரான உடன் க்ரீன் லைட் எரியும் அவ்வளவுதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சாரிப்பா தெரியாம செல்லிவிட்டேன்.

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுமி இதுக்கெல்லாம் என்னப்பா சாரி சொல்லிக்கிட்டு! என்னோட ஸ்மைலியை நீங்க பார்க்கலியா? அண்ணா ஏற்கெனவே ஒரு பதிவில் விளக்கியிருந்ததைத்தான் சொலியிருக்கேன். நோ ஹார்ட் ஃபீலிங்ஸு. நாமெல்லாம் தோழிகள்பா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம், நான் உஷா லெக்கஸ் பேரன்ட் வைத்திருக்கிறேன். முதலில் ப்ளக்கை ஆன் செய்துவிட்டு பார்த்தால் ரெட் லைட் எரியும். பிறகு கட்டம் ஷேப்பில் கருப்பாக உள்ள இடத்தில் பிரட்டை வைக்கவும். பிறகு அதில் சிறிது வெண்ணை தடவுவம்.பிறகு தேவையான காய்கறிகள் வைக்கவும். பிறகு கலவையின் மேல் மற்றுமொரு பிரட்டை வைத்து மூடவும். அடுத்தது அந்த சேன்ட்விட்ச்ரை மூடி வைத்தால் ஒரு 3- 5 நிமிடம் கழித்து கீரின் லைட் எரியும். இப்போழுது பிரட் சேன்ட்விச் தயார்.இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ரொம்ப நேரம் கீரின் லைட்டில் இருந்து பிரட்டை எடுக்காவிட்டால் ரொட்டி பிஸ்கட் போல் ஆகிவிடும். நன்றி.

மேலும் சில பதிவுகள்