Hello sisters

என்னை மன்னித்துவிடுங்கள் நான் intha post as delete பன்னின்டாதுக்கு,,,அவளா மத்தாவ குறைகுருவதை தங்க முடியவில்லை. நான் எனது தவறு பெரியாத என்னுடைய தவறா என்று தெரின்சுக்க தன் எலுதிப்போட்டேன், நீங்கள் அனைவரும் நெக்கு ரொம்ப அறுதலா தன்னம்பிக்கை கொடுத்து இருக்கிறேல்,, உங்கள் அறுதால் கேட்டு என்னுடைய புதிய வாழ்க்கை நான் தொடங்க உல்லேன்,, என்னுடய siru vayathu latchiyam,, melumm padichu nattukum en vittukum perumai serkanum.. kalyanam kathall ithu than vazkai enru nenaithu ennai naa nogadikka inimetu virumpala..
i will enjoy my life with my professional,,

thanks all 4 ur comments and ur advice

தோழி முதலில் தமிழில் பதிவை மாற்றுங்க அப்போ தான் உங்கலுக்கு பதில் சொல்லுவாங்க,,,, ஆனால் ஒன்னு சொல்றேன் தெரியாம தப்பு (முகம் பாக்கதவரை விரும்பிடிங்க) பண்ணிடிங்க அதை உடனே திருத்திக்கங்க... காலம் எல்லத்தையும் மாத்தும் ,,, உங்கல சுற்றி இருக்கவங்கலலையும் சந்தோஷம் தரமுடியும் avaruorutharalathan mudiumnu ninaikkatheengka,,, ஒரு வேளை கல்யாணத்துக்கு பின் இதுபோல பேசத அளவுக்கு மாறி இருந்தால்?... அதனால எல்லம் நன்மைக்கேனு நினைங்க,,, நினைத்தது நீங்க அதனால உங்கலால தான் மற்றிக்கொள்ளவும் முடியும் (தவராக கூறி இருந்தால் மன்னிக்கவும் என் சொந்த அனுபவதால் தான் கூறினேன்)

கிட்டாதாயின் வெட்டென மற
அன்புடன்
ஜெமாமி

கிட்டாதாயின் வெட்டென மற
அப்படினா என்ன மாமி???

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ஔவையார் “கொன்றை வேந்தனில்” சொல்லி இருக்கிறார்.

”கிட்டாதாயின் வெட்டென மற” என்று

ஒண்ணு கிடைக்கலைன்னா அதையே நினைச்சுண்டு இருக்காம அத சட்டுன்னு மறந்துடணும்ன்னு.

கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.
ஏன்னா எதுவுமே அடுத்தவங்களுக்கு சொல்லறது சுலபம்.

தனக்கு வந்தாதானே தெரியும் தலைவலியும், திருகுவலியும்.

அன்புடன்
ஜெமாமி

நன்றி சிஸ்டெர்ஸ் சுலபமக மறக்க முடியுமா என்ரு தெரியவில்லை அவரை மறந்து வழமுடியுமா?? அவர் என்னை காதலியக மறா என்று இருந்தால் நனும் மறந்து இருப்பேன், கனவன் மனைவியாக வழ்ந்திட்டு மறாப்பாது எப்படி முடியும், என் விட்டில் இந்த உன்மை தெரிய வந்தல் என்ன ஆகும் நெனைச்சுகூட பர்க்க முடியவில்லை

வாணி உண்மை சில நேரங்களில் கசக்கும். ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். அப்புறம் நீங்க எப்படி இப்படி சொல்லலாம்னு வருத்தப் படாதீங்க கோபப்படாதீங்க!

முகம் தெரியா காதல், இண்டெர்நெட் காதல், செயினை தாலியா போடறது எல்லாம் சினிமாவுல பார்த்து கைதட்டிட்டு போய்கிட்டே இருக்கத்தான் லாயக்கு. உண்மை வாழ்க்கைக்கு உணர்வுப் பூர்வமா செயல்படாம அறிவுப்பூர்வமா செயல் படணும்.

நடிகையின் ஃபோட்டோவை ப்ரொஃபைலில் நீங்க போட்டிங்க. இது பலரும் செய்வதுதான். அதை அவர் நீங்கன்னு நம்பிட்டார்னு சொல்றதை கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க நம்பற மாதிரி இருக்கா? அப்பவே நீங்க யோசிச்சிருக்க வேண்டாமா ஏதோ சரியில்லைன்னு.

எந்த தைரியத்தில் அவரை இரவு நேரத்தில் தனியா சந்திக்கப் போனீங்க? உங்களை நேரில் பார்த்ததும் நீங்க அவர் நினைச்ச ஆள் இல்லைன்னு தெரியலையா? முதல் சந்திப்புலயே அவர் தாலின்னு செயினைப் போட்டார்னு சொல்றீங்க. ஆண்கள் பெண்ணை வலையில் வீழ்த்த செய்யும் சதி என்பது கூடவா புரியவில்லை உங்களுக்கு.

சரி நடந்தது நடந்து விட்டது. இப்போதாவது அந்த நபரின் உண்மை முகம் தெரிந்து விட்டது இல்லையா. இனிமேலாவது வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுப்பூர்வமாக சிந்தியுங்கள். கணவன் மனைவியாக வாழ்ந்த பின் எப்படி மறக்கறதுன்னு நீங்க என்ன அர்த்தத்தில் சொன்னிங்கன்னு எனக்கு தெரியாது. மன ரீதியாக மட்டுமோ அல்லது உடல்ரீதியாகவுமோ எப்படி இருந்தாலும் கெட்ட கனவாக மறக்க முயற்சியுங்கள்.

மெடிட்டேஷன் மூலம் மனதை ஒருமுகப் படுத்துங்கள். இனிமேலும் இணைய காதல் கருமாந்திரம்னு கண்ணை மூடிக்கிட்டு குழியில் விழாதீங்க. அந்த நபர் சம்பந்தமான எந்த பொருளோ அல்லது நீங்கள் பயன்படுத்திய இணைய தள ஐடியோ எல்லாவற்றையும் தலைமுழுகுங்கள்.

எனக்கு மறக்க முடியலை அப்படி இப்படின்னு மனசைப் போட்டு குழப்பாதீங்க.

புதிய வாழ்வை ஆரம்பியுங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முடியல நிஜமா பா சரி மாமிகிட்ட ஒன்னு கேட்டோமே என்ன சொல்லி இருக்காங்கனு பாக்கலானு வந்தேன்,,,,, ஆனால் மாமி சுருங்க சொன்னாலும் அர்த்தமாக சொல்லி இருக்காங்க,, கவி நீங்க விரிவா, தெளிவ, உறுதியான ஒரு பதில சொல்லி இருக்கீங்க,,, மனுசனுங்கலுக்கே மதிப்பில்லத உலகத்துல, யாருனே தெரியாதவங்க மனசுக்கு மிக மிக ஆறுதலா இருக்கமாதிரி பங்கு எடுத்துக்கிர அறுசுவைல நானும் இருக்கேனு நினைக்கும் போது நன்றி!!!! சொல்ல முடில... பெருமை இருக்கு (ஏன் இவளவு பேசுரேன்னு நினைக்கதீங்க காரணம் தங்லீஷ் ல பதிவு இருந்த அவலவாயாரும் பதில் சொல்ல மாட்டாங்க ஆனால் இங்க சொல்லியிருக்காங்கன அந்த மனச புரிந்ததல் மட்டுமே,,, ) வாணி மன்னிக்கனும் இந்த பதிவை இங்க போட்டதுக்கு ரொம்ப அழக சொல்லி இருக்காங்க க ண்டிபா யோசிச்சி பாருங்க,,,, un vazhkkai un kaiyil,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

வாணி,வணக்கம் தோழி.முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.இணையத்தில் காதல் மலர்வதெல்லாம் உண்மை கிடையாது.எங்கோ கோடியில் ஒன்று உண்மையாக இருக்கலாம்.பார்த்த காதல்,பார்க்காத காதல்,பேசாத காதல் இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். உண்மை உலகத்தை புரிந்து கொள்ளுங்கள்.இப்போது உங்கள் பிரச்சனையை வெளியில் நின்று பாருங்கள்.உங்களுக்கே உண்மை புரியும்.

நீங்கள் நான்கு வருடங்களாக காதலிப்பதாக கூறியுள்ளீர்கள்.உங்களுக்கு இருபத்தினான்கு வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.உங்களுடைய இருபது வயதில் நீங்கள் பொழுதுபோக்காக இணையம் பக்கம் வந்திருக்கலாம்,உங்கள் தோழிகள் சொல்லியும் வந்திருக்கலாம்.சரி,என்ன காரணத்திற்காக வந்திருந்தாலும் எவ்வாறு காதலிக்கும் அளவிற்கு சென்றீர்கள்?சர்க்கரைப் பேச்சைக் கேட்டா,கையை வெட்டிக் கொள்வேன் என்ற பேச்சை நம்பியா?உங்களுக்கு ஒரு பழைய பாட்டை சொல்ல விரும்புகிறேன்,தோழி.

கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலைவிரிக்கும்.

தோழி,இது ஏமாற்று உலகம்.புரிந்து கொள்ளுங்கள்.உங்களது உண்மையான புகைப்படத்தை தரவில்லை என்கிறீர்கள்.அதில் தவறேதுமில்லை.யாரும் இங்கு அவர்களுடைய உண்மையான புகைப்படத்தை தரமாட்டார்கள்.ஏதோ ஒரு பூ,இயற்கை காட்சி,சினிமா நட்சத்திரங்கள் என்றுதான் வைத்திருப்பார்கள்.இது ஆபத்தான உலகம்,நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் உங்கள் புகைப்படத்தை தராததை நினைத்து சந்தோஷப்படுங்கள். தோழி,கையை அறுத்துக் கொள்வதெல்லாம் உங்களை ஏமாற்றச் சொல்லுவது.

தோழி,உங்களை பார்த்தவுடன் புகைப்படத்தில் உள்ளது நீங்கள் இல்லை என்று தெரிந்திருக்குமே.பின் எதற்காக பேச்சை தொடர வேண்டும்.அப்போதே வேண்டாமென்று சொல்லிச் சென்றிருக்கலாமே.ஏன்,பேச்சை தொடர வேண்டும்,பின் எதற்காக ஏமாற்றியதாக சொல்லி விலகிச் செல்ல வேண்டும்.கொஞ்சம் யோசித்து பாருங்கள்,தோழி.உங்களுக்கே உண்மை புரியும்.இங்கு கையாளப்படும் தந்திரங்கள் அநேகம்.உங்கள் அறிவு கொண்டு அதை வெல்லுங்கள்.செயின் போட்டால் திருமணம்,பொட்டு வைத்தால் திருமணம் என்பதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும்.ஒரு செயினை பார்த்துக் கொண்டு உங்கள் ஒரே வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள்.

எவ்வாறு இரவில் ஒரு அறிமுகமில்லாத மனிதனை சந்திக்கச் சென்றீர்கள்?வெறும் இணையப் பழக்கத்தை நம்பியா?தோழி,இனி என்றும் இவ்வாறு செய்யாதீர்கள்.இனிமேல் கவனமாக இருங்கள்.யாரிடமும் ஏமாறாதீர்கள்.எந்த முடிவையும் நன்கு யோசித்து எடுங்கள்.அறிவுக்கு முதல் இடமளியுங்கள்.குற்ற உணர்ச்சியை விடுங்கள்.உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.பழையவற்றை மறந்து,புது வாழ்க்கையை தொடங்குங்கள்.

புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்.சமையல்,கைவேலை,ஒரு புதிய மொழி,தோட்டம் போடுவது,ஏதாவது ஒரு கோர்ஸ் என்று உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள்.நல்ல புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.

தோழி,தகுதியற்ற ஒருவருக்காக உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.உங்களைச் சார்ந்தவர்களின் நிம்மதியையும் கெடுக்க வேண்டாம்.நம் சந்தோஷத்தையும்,துக்கத்தையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.உங்கள் மனதிற்கு நீங்கள் மட்டும் எஜமானனாக இருங்கள்.உங்கள் அன்பிற்கு தகுதியில்லாத ஒருவரை நினைத்து உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்.

தோழி,நான் மீண்டும் சொல்கிறேன்,நம் வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து நன்றாக வாழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்
நித்திலா

தோழி வாணி,நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.பரவாயில்லை நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்.இனி நடக்க போவது என்னவென்று மட்டுமே யோசியுங்கள்.

கவிசிவாவும்,நித்திலாவும் மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டார்கள்.இதை விட பளீச்சென்று உங்களுக்கு புரியவைக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றேன்.அவர்கள் சொன்ன அத்தனையும் இன்றைய அளவில் பலருக்கும் நேரும் விபரீதம்.அவ்வளவும் உண்மையே.....இத்தனையும் படித்து விட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களோடதுதான்.

காதல் என்ற பெயரில் அந்த நபர் உங்களை பயன்படுத்திக் கொண்டதை நீங்கள் சொல்லும் விதத்திலேயே நன்றாக தெரிகின்றது.அப்படிபட்ட அந்த நபரை இன்னும் பாசத்துடன் ஏங்கி காத்து கிடப்பதில் சிறிதும் நியாயமில்லை.கொஞ்சம் கொஞ்சமாக அவனையும்,அவனை சார்ந்த விஷயங்களையும் மறக்க முயற்ச்சியுங்கள்.நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களின் மீது அக்கறையுள்ள உங்கள் குடும்பம் இருக்கின்றது.இதை விட நமக்கு என்ன வேண்டும் என சிந்தியுங்கள்.இனி உங்கள் எதிர்காலத்தை எப்படி நல்லவிதமாக அமைத்துக் கொள்ளலாம் என யோசித்து அதன் படி செயல்படுங்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு படியாக தாண்டுபோதும் ஒரு சருக்கலாவது ஏற்படும்.அதற்க்காக சோர்ந்து உட்கார்ந்து விடலாமா என்ன..?அதுவே நமது வாழ்க்கைக்கு முன்னேற்ற கூடிய வலுவை தரும்.அதுபோன்றுதான் உங்களுக்கு நேர்ந்ததும்.இப்போது இந்த பாடம் உங்களுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.யாரிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை சொல்லி தரும்.

நிதானமாக உங்கள் குடும்பத்தினரை மட்டும் மனதில் கொண்டு சிந்தியுங்கள்.இதற்க்கு முன் சொன்னவர்களின் கருத்துக்களை மனதில் ஆழமாக பதித்து விடுங்கள்.நல்லதொரு தெளிவு பிறக்கும்.

அதற்க்கும் மேலாக நடப்பவை யாவும் நன்மைக்கே...இறைவன் கை விட மாட்டான் என அவ்வபோது நினைவில் கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்