பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

//இவர்கள் ஒழுங்காக இருந்தால் நம் நாடு என்றோ முன்னேறி இருக்கும் ..//என்ன நடுவர் அவர்களே, அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு நேரடியான தொடர்பு இல்லையே. ஒரு அரசியல்வாதியை பார்க்க வேண்டும் என்றால், இடையில் உள்ள ஏராளமான அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் தாண்டி போய் தான் நம்மால் பார்க்க முடியும். அப்படியிருக்க இந்த இடைத்தரகர்களை ஒழுங்கி படுத்தினால் தானே நாட்டின் நிலைமை சீராகவும் சிறப்பாகவும் இருக்க முடியும்.

நடுவரே, அப்புறம் காவல்துறை பற்றி பேசினாங்க. மக்களை காக்க வேண்டிய நிலையில் இருந்து கொண்டே மக்களுக்கு துரோகம் செய்யும் சுயநலவாதிகளாக தான் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். காந்தி சொன்னார், ஒரு பெண் தெருவில் எப்போது தனியாக போக முடிகிறதோ அன்று தான் உண்மையான சுதந்திரம் என்று!! ஆனால், இன்று ஒரு பெண்ணால் தனியாக அதுவும் இரவில் போக முடியும், ஆனால் ஒரு பெண்ணால் காவல் நிலையம் சென்று அவள் கற்போடு வரமுடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. காவல்துறை அதிகாரிகளாக இருந்து கொண்டு அவர்களை பார்த்து இன்று ரவுடிகள் பயப்படுவதில்லை நடுவர் அவர்களே, பொது மக்கள் தான் பயப்பட வேண்டியுள்ளது.

இன்னொரு விஷயம், இந்த பட்டியை படித்து கொண்டே வேலையில் இருந்து வந்து கொண்டிருந்த போது, சாலையோரத்தில் பத்து பதினைந்து வண்டிகளை நிறுத்தி காவல்துறையினர் செய்யும் அநியாயம் தான் கண்ணில் பட்டது. நாம் வாதாடுவது சரியான பக்கத்துக்குதான் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது நடுவர் அவர்களே!! டீக்கடைக்கு போனா காசு கொடுக்க வேண்டாம். இன்னும் பேருந்தில் சொல்லவே வேண்டாம் போங்க, எல்லாமே ஃப்ரீ தான், டிக்கெட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.

//எத்தனை கொடிகள் ..எத்தனை விளக்குகள் .எத்தனை ஆடம்பரம்... // இதையெல்லாம் செய்வது யாருங்க. லைன் மேனில் இருந்து அதிகாரி வரை, இந்த செயலை செய்வது அரசு அதிகாரிகள் தானே!!

இன்று ஓட்டு போடும் பாதி பேரில் உள்ளவர்கள் அரசு அதிகாரிகளே. இந்த கள்ள ஓட்டெல்லாம் இவர்கள் அனுமதியின்றி நடக்க முடியுமா நடுவர் அவர்களே!! கொஞ்சம் யோசித்து பாருங்க, வாக்களிப்பின் போது அனைத்து வாக்களிக்கும் இடத்தில் அங்கு பணியில் அமர்த்தப்படுபவர்கள் அரசு ஊழியர்கள் தானே, அங்க எத்தனை பேர் ஒழுங்காக வேலை செய்கிறார்கள். லீவ் நாளில் வேலை பார்த்ததுக்கு பணம் வந்தா போதும், நாடு எப்படி போனா எனக்கு என்ன என்று வாக்களிக்கும் இடத்தில் கள்ள ஓட்டு போட வைக்கிறாங்களே!!

கலவரம் போன்ற நேரங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் வேலை தானே நடுவரே!! ஆனா அந்த காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் மக்களுக்கு உதவாமல் நடக்கும் சண்டைகளை வேடிக்கை பார்க்கும் பொருளாக தானே இன்று இருக்கிறார்கள். இதை டிவியில் படமெடுத்து போட்டும் அவர்கள் திருந்தியபாடில்லை.

அன்புடன்
பவித்ரா

எதிரணியினர் சொல்வதை கேட்டால் சிரிப்புதான் வருது நடுவரே..
தும்பைவிட்டு வாலை பிடித்த கதைதான்.
.
ஒரு பொம்மலாட்டம் நடக்குது
.
நாலு பேரு நடுவிலே
..
நூலு ஒருத்தன் கையிலே.
.
கேளுங்க எதிரணியினரே...

ஆரம்பம் ஆவது பெரிய தலையிடமிருந்து. முடிவது சின்ன தலையிடம்..

இப்படி இந்த அரசு ஊழியர்கள் மாட்டிக்கொண்டு படும் பாடு.யாருக்கு தெரியும்..
இந்த ஊழ்ல் பெருச்சாளிகளான .அரசியல்வாதிகள் நிறைந்த நம் நாடு எப்போ வல்லரசாகும்.

கணவுதான் கான முடியும்..
ஒரு மசோதா நிறை வேறிய உடன் . அதை எப்படி நன்றாக செய்யவேண்டும் என்கிற எண்ண்த்தைவிட ,அதில் எவ்வளவு நாம் அடிப்பது என்றுதான்.நினைக்கிறார்கள்..

அமச்சரால் தன் கீழ் வேலை செய்யும் ஒருவனை கவனிக்காமல் எதுக்கு அமைச்சர் பதவி..

மக்களுக்காகத்தானே..

எங்கோ போகிறது நம் நாடு ஊழலில்...

இந்த அரசியல்வாதியிடமிருந்து யார் காப்பாற்றுவார் நம் நாட்டை....

வருகிரேன் மீண்டும் நடுவரே...

வாழு, வாழவிடு..

நடுவராக பொறுப்பேற்ற தோழி கவிசிவா.... வாழ்த்துக்கள் பல. நேற்றே சீதாலஷ்மி தலைப்பை சொன்னாங்க. இன்றே பதிவிட முடிந்தது. தாமதத்துக்கு காரணம் உங்களுக்கும் தெரியும் என்பதால் மன்னிப்பும் கிடைத்திருக்கும் ;) என நம்புகிறேன். தலைப்பை தந்த திரு. குமார் அவர்களுக்கு நன்றிகள் பல(நிஜமாவே உங்க அப்பா'வா??? இல்லை வயதில் பெரியர் என்று சொன்னீங்களா??? அரட்டை பகுதியில் கேட்கிறேன்.).

எது எப்படியோ... தலைப்பு சூப்பர். தேர்வுக்கு நன்றி நடுவர் அவர்களே!!! :)

இனி நம்ம கட்சிக்கு வருவோம். என் அணி தலைவி பவித்ரா.... அதாவது... அரசு ஊழியர்கள்'னு சொல்ல வந்திருக்கேன். :) கொஞ்சம் நேரம் கொடுங்க... வாதத்தை டைப் பண்ண.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே.... எந்த ஒரு தப்பும் ஆரம்பமாகும் இடம் கீழ்மட்டம் தான். இங்க நான் கீழ்மட்டம்'னு சொல்றது அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகம்.

நல்லா யோசிச்சு பாருங்க ஒரு அரசியல்வாதி தனி ஆளா கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்ய முடியுமா???!!! வாய்ப்பே இல்லை. அவனுக்கு துணை போக ஒவ்வொரு இடத்திலும் அவனுக்கு தேவையானதை செய்து கொடுக்க, தப்பு பண்ண ஆளிருந்திருக்கனும்... அது யாரு??? நிச்சயம் அரசு ஊழியர்கள் தான்.

ஒரு ரோட் கான்ட்ராக்ட் எடுக்க ஒருத்தன் அரசியல்வாதிக்கு 1 கோடி கொடுத்தா, அதன் பின் அந்த கான்ட்ராக்ட் கிடைக்க அரசியல் வாதி பல அரசு ஊழியர்களை தான் சரிகட்ட வேண்டி இருக்கும்.

ஒரு குற்றம் நடந்தா அதை தட்டி கேட்க வேண்டிய காவல் துறை அவன் கட்சிகாறன்னு கைய கட்டிக்கிது.

சட்டம் கூட குற்றவாளி அரசியல்வாதின்னா கண்ணை கட்டிக்குது.

மருத்துவமணையில் அரசியவாதி தன் மேல் இருக்கும் குற்றச்சாட்டுக்கு பயந்து போய் நெஞ்சு வலின்னு படுத்தா அங்க இருக்க அரசு மருத்துவர் துணை போறார்... பொய் செர்டிபிகேட் கொடுக்க.

இதெல்லாம் ரொம்ப கம்மிங்க.... அரசியல்வாதின்னு சொல்லும் எதிர் கட்சிக்காக அரசியல்வாதிக்கே துணை போறவங்க அரசு ஊழியர் தான்னு சொல்ல தான் இந்த உதாரணம்.

எல்லா இடத்திலுமே இப்போ லஞ்சம் வளருது. இதை வாங்குறது... காவல் துறை, ரெஜிஸ்டர் ஆபீஸ், ரெயில்வே, இப்படி அடுக்கடுக்கா எல்லாமே அரசு ஊழியர்கள்.

அரசு கொண்டு வரும் பொது கழிவறை முதல், பறக்கும் ரயில் திட்டம் வரை எல்லாமே ஊழல். அரசு ஊழியர்கள் செய்யும் ஊழல்.

கண்டிப்பா அரசியவாதிக்கு பங்கு இருக்கு... ஆனா ஊழியர்கள் துணை இல்லாம அவங்க செய்யல. இந்த உதவி நின்னாலே ஊழல் நிக்கலன்னாலும், நிச்சயம் குறைந்துவிடும்.

ஒரு சாமான்ய மனிதன் தன்னுடைய தினசரி தேவைக்கு போகும் ரேஷன் கடையில் கூட பித்தலாட்டம் நடக்குது. அதுவும் கூட ஒரு வகையில் நம் நாட்டை சீரழிக்கும் விஷயம் தானே?? அங்க எங்க வந்தான் அரசியல்வாதி???

அரசு வேலைக்கு அப்லிகேஷன் போட்டுட்டு வருடகணக்கா... ஏன்... கிழவனாகும் வரை கூட காத்திருக்கிறார்களே... அது ஏன்??? உள்ள இருக்க ஊழியர்களுக்கு சம்திங் கொடுக்காம வேலை வரும்'னு கணவு கண்டதால. 50 வயசுல வேலை கிடைச்சு, அப்பறம் கல்யாணம் பண்ணி.... ரொம்ப கஷ்டம்ப்பா, வாழ்க்கையே கெழவனான பிறகுதானா ஆரம்பிக்கும்???? இதாலயே இப்பலாம் அரசு வேலைக்கு ஆசை போயிடுச்சு... தனியார் பலமடங்கு அதிகம் கொடுக்கறான்னு எல்லாம் அங்க தாவினாங்க.... கடைசியில வெளிநாட்டுக்கு ஓடி போனாங்க. அப்பறம் நாடு எங்க முன்னுக்கு வரும்???!! இதெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுப்போடவில்லையா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பணத்தை அரசியல்வாதியே சுருட்டிக் கொள்வதாக வைத்துக் கொண்டால் கூட அதற்கு துணை போவது இந்த அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தான்..அவர்களின் துணை இல்லாமல் அரசியல்வாதியால் ஒன்றும் செய்ய முடியாது..//

அரசியல்வாதி ஊழலோடு அதிகார துஷ்பிரயோகமும் செய்யும்போது அரசு

அதிகாரிகள் துணை போகிறார்கள்……..அவ்வளவே….ஊழலின் அரிச்சுவடி

தொடங்குவதே அர்சியல்வாதியிடமிருந்துதான் :-)

//அரசியல்வாதி 5 வருடத்திற்குப் பின் திரும்ப அதே பதவிக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம் ஆனால் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் அப்படி அல்லவே! நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளின் பதவிக்காலம் அதிகமா இல்லை அரசு ஊழியர்களின் பதவிக்காலம் அதிகமா?//

அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இருக்கும்

பட்சத்தில் ஐந்து வருடத்திற்கொருமுறை மாறாவிட்டால் ஆணிவேரை பலமாக

ஊன்றிவிட்ட சாக்கில் முன்னைவிட கூடுதலாக ஊழல் செய்வார்கள் அல்லது

அவர்கள் மாறி வேறோருவர் வந்தாலும் முன்னவர்களுக்கு போட்டியாக(ஊழலில்)

அவர்களைவிட முன்னணியில் இருப்பார்கள்.இது காலம் காலமாய் தொடரும்

கதைதானே……:(

அரசு ஊழியர்களும் தப்பு செய்யும்போது சட்டப்படி தூக்கியெறியும்

அதிகாரம் அரசியல்வாதிக்கு இருக்கிறது

//”சிட்டிசன்” என்றோரு படம் வந்ததே அதில் அப்பாவி மக்களைக் கொண்ட ஒரு கிராமத்தையே அழித்தது மூன்றே மூன்று பேர் கொண்ட அரசு அதிகாரிகள் குழுதான்.. அங்கு அரசியல்வாதிக்குத் தேவையே ஏற்பட வில்லையே!அரசியல்வாதியின் துணை இல்லாமல் அதிகாரியால் எவ்வளவு தூரம் கொடுமை செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறவில்லையா அந்தப் படம்.. //

முதல்வன் என்றோரு படம் கூட வந்ததே ,,,,,,அதில் ஊழல் செய்யும்

முதன்மை பொறுப்பில் உள்ள ஒரு அரசியல்வாதி நினைத்தால் ஒரே நாளில் நாட்டின் மொத்த ஊழலையும் ,சட்டம் ,ஒழுங்கையும் சரி செய்ய முடியும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி என்றுகூட மிக அழகாக சொல்லப்பட்டிருந்ததே…...என்ன இதுமாதிரி எல்லாம் படத்தில்தான் நடக்குது நிஜத்தில் எந்த அரசியல்வாதியும் அப்படி நினைப்பதில்லை என்பதுதான் உண்மை :(

//எப்பேர் பட்ட அரசியல் வாதியாக இருந்தாலும் தப்பு செய்தால் நீதித்துறையிடம் தான் போயாக வேண்டும்.அங்கு இருக்கும் நீதிபதி அரசு ஊழியரே ஒழிய அரசியல்வாதி அல்ல!!//

நல்லவேளை அவராவது அரசியல்வாதியில்லை என்று

சந்தோசப்படுங்கள்…….அப்படியே நீதித்துறையிடம் போனாலும் அந்த

நீதித்துறையை விலைக்கு வாங்கும் சக்தி அரசியல்வாதிக்கு உண்டு….

//ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் அதிகாரிகள் இட மாற்றம் நடக்குதே ஏன்? தனக்கு உடன் படும் ஆட்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதால் தானே.. //

சரியா சொன்னீங்க ஒவ்வொரு ஆட்சியிலும் தனக்கு ஒத்துவராத அதிகாரிகளை

தண்ணீயில்லா காட்டிற்கோ/விருப்பமில்லா ஊருக்கோ மாற்றம் செய்யும் வித்தை

அரசியல்வாதிக்கு தெரியும்..

//ஆனால் எந்த அதிகாரியை மாற்றினாலும் அந்த அதிகாரி அரசியல்வாதிக்கு உடன் படாமல் நீதிக்கு மட்டுமே உடன் படுபவராக இருந்தால் தவறான அரசியல் வாதியால் என்ன செய்துவிட முடியும்?//

எந்த அரசியல் வாதி வந்தாலும் நேர்மையாகவும் ,கண்டிப்பாகவும் நிர்வாகம்

செய்தால் எந்த அரசு ஊழியர்களும் வாலாட்ட முடியாது

//ஒரு மந்திரி கெட்டவனா இருந்து அவனுக்கு கீழ வேலை செய்கிற அதிகாரிகள் நல்லவங்களா இருந்தா அவங்களோட புத்திசலிதனத்தாலையும்,நேர்மையாலையும் அந்த மந்திரியையும் மாற்றி எல்லா நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கிறமாதிரி செய்யலாம்
ஆனா ஒரு மந்திரி நல்லவனா இருந்து கீழ வேலை செய்யிற அரசு அலுவலர்கள் கெட்டவங்களா இருந்தா குட்டிச்சுவருதான்//

பெற்றோர்கள் தவறான முன்னுதாரணமாய் இருந்தால் அதை பார்த்து வளரும்

குழந்தைகளும் அப்படியே இருப்பார்கள் ஆனால் பெற்றோர்கள் சரியான

கவனிப்பும்,அளவான கண்டிப்பும் கொடுத்து நேர்மையான வழியில் வளரும்

குழந்தைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள் …ஆக எல்லாருடைய நம்பிக்கையின்

பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி சமுதாயத்தின் காவல்

….பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து சமுதாயத்தின் ஒவ்வொரு நபரும் தன்

பிள்ளை ,இந்தநாடு தன் குடும்பம் என்று நினைத்து நேர்மையான வழியில்

செயல்பட்டால் அவர்களின் கீழ் உள்ளவர்களும் நல்வழிதான்….அப்படியின்றி

வேலியே பயிரை மேய்ந்தால் வேறென்ன இருக்கிறது சொல்ல..:(

அடுத்த பதிவு நேரம் கிடைக்கும்போது தொடரும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

\\\\ஒரு மந்திரி கெட்டவனா இருந்து அவனுக்கு கீழ வேலை செய்கிற அதிகாரிகள் நல்லவங்களா இருந்தா அவங்களோட புத்திசலிதனத்தாலையும்,நேர்மையாலையும் அந்த மந்திரியையும் மாற்றி எல்லா நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கிறமாதிரி செய்யலாம்/////
நடுவரே என்ன எதிரனி தோழி குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருக்கிரார்கள் திட்டங்களை போடுவதே அரசியல் வாதிகள் தானே . அது நல திட்டங்கள் அல்ல நடுவரே மக்கள் கிட்ட இருந்து எடுக்கப்படுகின்ற காசுல தான் அவங்க அத பன்ராங்க அதுலயும் முக்கா வாசி அரசியல் வாதிகளே சுருட்டிக்கராங்க

அன்புடன்
ஸ்ரீ

**************அரசியல் சாக்கடையும் அப்படித்தான்.. அதை சரி செய்ய வேண்டியதும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கைகளிலும் தான் இருக்கு.தெரிஞ்சுக்குங்க!****************
அரசு ஊழியரோ அல்லது அரசு அதிகாரிகலோ செய்யும் ஒரு சின்ன விஷயமும் அரசியல்வாதிகளுக்கு தெரிந்தால் அவ்லோதான் என்ன நடுவரே யோசிக்கரீங்களா என்ன பன்னுவாங்கன்னு நான் சொல்ரேன் உடனே தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவாங்க இதுக்கு பயப்படரவங்க எப்படி எதிர்த்து நிக்க முடியும்.

அன்புடன்
ஸ்ரீ

\\\\\ஒரு ரோட் கான்ட்ராக்ட் எடுக்க ஒருத்தன் அரசியல்வாதிக்கு 1 கோடி கொடுத்தா, அதன் பின் அந்த கான்ட்ராக்ட் கிடைக்க அரசியல் வாதி பல அரசு ஊழியர்களை தான் சரிகட்ட வேண்டி இருக்கும்./////
ஒரு சின்ன விளக்கம் ஒரு ஆஃபிஸ் ல க்ளர்க், மேனேஜர், முதலாளி இதுல மத்த ரெண்டு பேரும் கையெழுத்து போட்டாலும் உச்சி முதலாலி கிட்ட தானே இருக்கு அவர் மத்த ரெண்டு பேரயும் சரி கெட்ட தேவயில்லை ம் ந்னு ஒரு சவுண்ட் கொடுத்தா போதும் அத்தனையும் நடந்து முடிந்து விடும் அத்தனையும் அரசியல் வாதிகளிடம் மட்டும் தான் உள்ளது.

அன்புடன்
ஸ்ரீ

இதிலென்ன சந்தேகம். இன்று தகவல் தொடர்பு துறையைப் பார்த்தீர்களா? அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது. கை கட்டி வாய் பொத்திதான் நிற்கணும்.

அரசியல்வாதிகள்தான் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம்
அன்புடன்
ஜெமாமி

//\பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்\\
இது பொன்மொழி யென்னாலும் உண்மை அல்லவா நடுவர் அவர்களே!

இன்றைய செய்திதாள்களில் நாம் படிக்கவில்லையா? அரசு ஊழியர்கள் கையும் களவுமாக படிக்க படுகிறார்கள்//

ஆமா ஆமா திருடன் அதிகாரியா இருந்தாலும் அரசியல்வாதின்னாலும் சரி பிடிபட்டே தீருவான். நாங்களும் செய்தித்தாள் படிக்கறோம்ல :). ஆயிரம் வாங்கினவனும் மாட்டியிருக்கான் ஆயிரமாயிரம் கோடி வாங்கினவனும் மாட்டியிருக்கான். என்னத்த சொல்ல :(

//இதிலும் கொடுமை என்னா தெரியுமா? மக்களிடமும் பணத்தையும் பிடிங்கிகொண்டு எங்களுக்கு போனஸ் வேண்டும். சம்பளத்தை உயர்த்தவேண்டும். என்று ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்.
இது அராஜகம் இல்லையா?//

உண்மைதானே கிம்பளம் வாங்குறவனுக்கு சம்பளமே போனஸ்தானே அதுக்கப்புறமும் போனஸ் கேட்டா நியாயமா? பதில் சொல்லுங்கப்பா :)

தேவி தொடர்ந்து வாதங்களை அள்ளி வைங்க. காத்துக்கிட்டு இருக்கோம்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்