அதிக நேரம் விக்கல் வருவது நல்லதா? கெட்டதா?

என் அப்பாவிற்க்கு நேற்று ஒரே விக்கல்.காலையில் ஆரம்பித்த விக்கல்.மதியம் வரை நீடித்திருக்கிறது.பின் சாயந்திரம் காபி சாப்பிட்டதும் மீண்டும் ஆரம்பித்த விக்கல் இரவு வரை தொடர்ந்திருக்கிறது.சாப்பிட முடியாமல் அவதி பட்டிருக்கிறார்.பின் இரவு விக்கல் இல்லை.இவ்வாறு தொடர் விக்கல் எதனால் வருகிறது.அதனால் ஏதாவது உடலுக்கு கெடுதலா?தெரிந்தவர்கள் இதை பற்றி கூறவும்.

சுந்தரி... இது போல் விக்கல் குழந்தைகளுக்கு கூட வரும். சிலர் சத்தில்லாமல் இருந்தா கூட வரும்'னு சொல்றாங்க. உண்மையான காரணம் எனக்கு தெரியல. ஆனா அப்படி வரும்போது நாக்கில் தேன், அல்லது சர்க்கரை வைத்து சிறிது சிறிதா சப்பி விழுங்கினால் விக்கல் கட்டுப்படும். முயற்சி செய்து பார்க்க சொல்லுங்க. விக்கல் இல்லாத நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்கணும். உடம்பில் நீர் வற்றினால் விக்கல் மட்டும் இல்லை இன்னும் பல பிரெச்சனைகள் ஏற்படும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யூரியா அதிகமானாலும் விக்கல் வரும்,ப்ளட்,யூரின் செக் பண்ணுங்க.

நீங்க மருத்துவரை சந்திப்பது நல்லது என்று நினைக்கிரேன். தொடர் விக்கல் பல பிரச்சனைக்கு வழி கொடுக்கும்

LIVE ND LET LIVE

ரொம்ப நேரமா தோழிகள் எனக்கு பதில் சொல்வார்கள் என எதிர் பார்த்திருந்தேன்.வனி,ரீம்,சரிஹா உங்களுக்கு என் நன்றி.அப்பா அம்மா தமிழ் நாட்டில் இருக்காங்க,நான் ஆந்திராவில் இருக்கிறேன்.நேற்று போனில் சொன்னதிலிருத்து ஒரே டென்ஷ்ன் எனக்கு.இனி விக்கல் வந்தால் கட்டாயம் மருத்துவமனிக்கு கூட்டி செல்ல சொல்லியிருக்கிரேன்.இவ்வளவு தூரத்திலிருக்கும் எனக்கு அருசுவை தோழிகளின் பதில் ஆறுதலை அளிக்கிறது.மேலும் இது பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அன்பு சுந்தரி,

இதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனீங்களா? டாக்டர் என்ன சொன்னார்?

அன்புடன்

சீதாலஷ்மி

நேற்று இரவு மருபடியும் விக்கல் வந்துவிட்டதாம்.இரவு டாக்டரிடம் கூட்டி போனார்களாம்.டாக்டர் அஜீரண கோளாறு இருந்தாலும் விக்கல் வரும் என்று சொன்னாராம் அம்மா.இப்ப விக்கல் இல்லயாம்.இந்த தொடர் விக்கலை இப்பதான் நாங்களும் பார்க்கிறோம்.உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி அம்மா.

அப்பாவை ஆஸ்பிடல் கூட்டி போனாங்களா? டாக்டர் என்ன சொன்னாங்க. கொஞ்சம் வயதானவர்களுக்கு வரும் சின்ன் ப்ராப்ளம் கூட நாம்மால சரியா
புரிஞ்சுக்க முடியாமத்தான் இருக்கு. டாக்டரிடம் ஆலோசனை பெறுவதுதான்
சரியா இருக்கும். எதுக்கும் கவனமா இருப்பதுதான் நல்லது இல்லியா?

மேலும் சில பதிவுகள்