பாஸ்போர்ட்

வணக்கம் நண்பர்களே...

எனக்கு பாஸ்போர்ட் சம்பந்தமாக ஒரு சந்தேகம். யாரேனும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்களா? பாஸ்போர்டில் பிறந்த தேதி மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?

பாஸ்போர்ட் அப்ளை செய்யும்போது தேவைப்படும் விசயங்களில் பிறந்த தேதிக்கான ஆதாரம் மிகவும் அவசியமான ஒன்று. அது பிறப்பு சான்றிதழாகவோ அல்லது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள கல்விச் சான்றிதழாகவோ இருக்க வேண்டும். அதனைக் கொடுத்துதான் நீங்கள் பாஸ்போர்ட் அப்ளை செய்திருப்பீர்கள். அப்படி நீங்கள் கொடுத்த தேதியும், பாஸ்போர்ட்டில் உள்ள தேதியும் மாறி இருந்தால் (தவறாக ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்தால்), உடனடியாக அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, அதனை சரிசெய்து புதிய பாஸ்போர்ட் பெற்றுவிடலாம். இதைக்கூட நீங்கள் பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடனே சரிபார்த்து செய்திருக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் சான்றாக கொடுத்த தேதியையே மாற்றி, புதிய தேதியாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், அது அவ்வளவு எளிதான விசயம் அல்ல. பொதுவாக பெயர் மாற்றம், முகவரி மாற்றம் எல்லாம் அடிக்கடி நடைபெறும் விசயங்கள் என்பதால், அதற்கான விதிகள் எளிதானது. ஒருவரது பிறந்த தேதியும், பிறந்த இடமும் மாறும் விசயம் அல்ல. அப்படி மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் நீதிமன்றம் வாயிலாக இதற்கு முறையீடு செய்து, அதற்கான அனுமதியை பெற வேண்டும். அல்லது இதற்கு முன்பு நீங்கள் கொடுத்திருந்த சான்றிதழை வழங்கிய கல்வித்துறையோ/நகராட்சியோ உங்களது தேதியை மாற்றி அதற்கான ஆதாரங்களையும் வழங்க வேண்டும். இது சற்று சிரமமான விசயம்தான். நீங்கள் இது குறித்து அனுபவம் உள்ள ஒரு வழக்கறிஞரை நாடுவதுதான் சிறந்த வழி.

பி.கு: நான் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை. வேலை செய்யும் நண்பர் ஒருவரைக் கேட்டு பதில் கொடுத்துள்ளேன். :-)

மிக்க நன்றி தங்களின் விளக்கமான பதிலுக்கு.

என் பாஸ்போர்ட் எடுத்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது இது பற்றி அதிகம் சிந்திக்கவும் இல்லை செயல் படவும் இல்லை. என் பாஸ்போர்ட் ஒரு ஏஜெண்ட் மூலமாக எடுத்தது. நான் கொடுத்திருந்த அனைத்து டாக்குமென்ட்ஸ்சும் சரியாக கொடுத்திருந்தும் அவர் பிறந்த தேதியில் தவறு செய்துவிட்டார். காலங்கள் பல சென்ற பிறகு, வேறு வேலைக்கு முயற்சி செய்யும் போது என் சர்ட்டிபிகெட்ஸும் பாஸ்போர்ட் தேதியும் வேறு வேறாக இருப்பதால் சிரமம் ஏற்படுகிறது.

பின் நான் இங்கே உள்ள தூதரகத்தை நாடும் போது அவர்கள் இந்தியாவில் A declaratory Court Order ( In Original with copy ) issued by a First Class Judicial Magistrate in India instructing the Consulate to correct date / place of Birth duly attested by the concerned state Home Department. இது இப்படி வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

இதை சரி செய்யக்கூடிய நபர்கள் யாரேனும் நம் தளத்தில் இருக்கிறார்களா? அவர்கள் உதவ முடியுமா? அதற்கான செலவை நான் தந்துவிடுகிறேன். வேறு யாரேனும் தெரிந்தவர்கள் சரி செய்யகூடியவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் தொடர்பு கொள்கிறேன்.

நண்பருக்கு மீண்டும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

நண்பர்கள் யாரும் கருத்து பதிக்க விருப்பம் இல்லையா?

ஹலோ கண்ணன்,
எனக்கும் இந்த விசயம் பற்றி அவ்வளவாக தெரியவில்லை.
ஆனாலும் நீங்கள் உங்க ஃப்ரெண்ட்ஸ் யார் கிட்டயாவது சொல்லி இந்தியா ல பாஸ்போர்ட் ஆஃபிஸ் கு வெளில முன்னால் ராணுவத்தினர் இருப்பாங்கல்ல அவங்கள் ட விசாரிச்சு பார்க்க சொல்லுங்க. இல்லை என்றால் அவர்களின் செல்லிடப்பேசி எண்ணை வாங்கி நீங்களே நேரடியாக கேளுங்கள்...
( தெரியலை நா சும்மா இருக்க வேண்டியது தான ஏன் இப்படி வந்து மொக்கை ஐடியா எல்லாம் குடுக்குரீங்க நு நீங்க திட்டுரது எனக்கு கேக்குது, ஏன்னா நான் குவைத் துல தான் இருக்கேன்)

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

காலை வணக்கம் திருமதி அனிதா. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு தாங்கள் கருத்து கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. நானும் பல வகைகளில் முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறேன். வழி தான் பிறக்கவில்லை.

( ஓ நீங்க சிங்கம்புணரியா? நான் காரைக்குடி தான் )

passportil பெயர் மாற்றம் செய்ய என்னலாம் செய்ய வேண்டும்?? என் பையனுக்கு பெயர் கொஞ்சம் நீளம் ..passportil அதையே வைத்து விட்டோம் ..இப்பொது கொஞ்சம் சிறிதாக்க யோசிக்கிறோம் ..என்னலாம் செய்ய வேண்டும் ??

Friends make Life Beautiful !!!

அப்புச்சி காரக்குடிங்கலா, அப்படீனா அருசுவைக்கு நீங்களே நிரைய குறிப்பு எழுதி அனுப்பலாமே (சும்மா காமெடி தான்,,,, நிஜமா முயற்சி பன்னிடாதீங்க ) ..........
நான் ஒரு டிராவல்ஸ் நம்பர் தர்ரேன், நீங்க வேணா பேசி ஏதாவது தகவல் கிடைக்குதா நு பாருங்க.......
0431-2411338, 2414666

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Anudeepa இந்த சுட்டியில் போய் பாருங்கள் http://www.immihelp.com/nri/indianpassport/change-of-name.html இங்கே உள்ள முறை சுலபமாக தெரிகிறது.

ஆமா ஆச்சி நான் காரக்குடி (கார) தான். பதிலுக்கு மிக்க நன்றி. அருசுவை இருப்பதால் தான் தனியாக இருக்கும் என்னைப்போல் உள்ளவர்கள் ஏதேனும் சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். ( நேற்று கூட நான் சமைத்த வெண்டக்காய் ஃப்ரை இங்கே பார்த்து சமைத்தது தான் ) நீங்க பயப்படாதீங்க.. நான் ஒரு நாள் சமைத்து வைக்கிறேன் வந்து சாப்பிட்டுவிட்டு எப்படின்னு சொல்லுங்க. பூவோடு சேர்ந்த நாறும் மணம் வீசும். அப்படி இருக்க கொஞ்சமாவது செட்டிநாட்டு வாசம் இருக்கும் தானே?

அனிதா, நான் தாங்கள் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டேன். விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பதில் எனக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. எப்படியும் என் இந்த மாற்றம் செய்துவிடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். கோர்ட் மூலம் தான் மாற்றவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மிக்க நன்றி

மிக்க சந்தோசம், தங்களது கோரிக்கை விரைவாக எந்த வித சிரமும் இல்லாமல் பூர்தி அடைய வாழ்த்துக்கள்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்