இட்லி, தோசைக்கு என்ன பச்சரிசி உபயொகிப்பது, pls help me

நான் துபாயில் இருக்கிறேன், நான் royal chef இட்லி அரிசி தான் இட்லி, தோசைக்கு போடுவேன். பச்சைஅரிசி என்றால் எந்த அரிசி போடுவது , உளுந்து எவ்வளவு போடுவ்து, இட்லி வெண்மையாக பூ போலவர என்ன சேர்க்க வேண்டும் ,இட்லி , தோசை இரண்டுக்கும் இந்த ஒரே மாவு பயன்படுத்தலாமா, அப்படி என்றால் என்ன விகிதத்தில் என்னென்ன அரிசி , உளுந்து சேர்க்க வேண்டும், எவ்வள்வு நேரம் ஊற வைக்க வேண்டும் உதவுங்கல் தோழிகளே

pls helm me friends

ஹாய் மீனா...,தாங்கள் துபாயா?
நானும் துபாயில் தான் இருக்கின்றேன்.நானும் அதே இட்லி அரிசியை உபயோகித்துதான் இட்லி செய்கிறேன்.மிகவும் நன்றாக வருமே....
ஒரு சில விஷயங்களை மட்டும் எக்ஸ்ட்ராவாக சொல்கிறேன்.
மூன்று டம்ளர் அரிசி என்றால்.... ஒரு டம்ளர் அளவு உளுந்து சேருங்கள்.
இவற்றை ஊற வைக்கும் போதே....ஒரு பாத்திரத்தில்(மாவு அரைக்க தேவையான அளவு தண்ணீர்..)தண்ணீரை எடுத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்து விடுங்கள்.மூன்று மணியிலிருந்து ஐந்து மணிநேரத்திற்க்குள்ளாக ஊரினால் போதுமானது.
முதலில் உளுந்தை அந்த ஐஸ் வாட்டர் கொண்டு அரையுங்கள்.பின்பு அரிசியை அரையுங்கள்.அரிசி போடும் போது எக்ஸ்ட்ராவாக ஒரு கைய்யளவு சாதமோ...அவலோ....சேர்த்து அரைக்கலாம்.
அரிசியை கொஞ்சம் கொரகொரவென்று அரைத்தால் நன்றாக இருக்கும்.
இதை உப்பு போட்டு பிசைந்து புளிக்க விடுங்கள்.
இந்த மாவை இட்லிக்கும் சரி தோசைக்கும் சரி பயன்படுத்தலாம்.சூப்பராக வரும்.
ஸ்பெஷலாக ஹோட்டல் தோசைபோல் நல்ல மணமுடன் தோசை வேண்டுமெனில்....வெறும் தோசைக்கென்றே அரைத்துக் கொள்ளலாம்.
அதற்க்கு செய்ய வேண்டியது...
இந்த அரிசி,உளுந்து அளவுடன்...ஒருகை அளவு கடலைபருப்பும்,ஒரு ஸ்பூன் வெந்தயமும் உளுந்துடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கொள்ள வேண்டியதுதான்.
முயன்று பாருங்கள்.வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள் சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அடடே மறந்துட்டேன்.....பச்சரிசி பற்றி கேட்டு இருக்கீங்கள்ல....
மும்தாஜ் பாஸ்மதி அரிசி ஆப்பத்திற்க்கும் சரி எதற்க்கும் சரி நன்றாக இருக்கும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி தோழி . உளுந்து அரிசி, இரண்டும் 5 மணி நேரம் ஊறினால் போதுமா. துபாயில் தாங்கள் எங்கு உள்ளீர்கள்.

சரியாக சொல்லனும்ணா ஷார்ஜா பார்டரில் இருக்கேன்.சஹாரா செண்டர் தெரியுங்களா...?அதன் அருகில்.
நீங்க எங்கே இருக்கீங்க?
இரண்டும் ஐந்து மணி நேரம் ஊரினாலே போதும் நன்றாக வரும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்