அர்த்தமே இல்லாத அரட்டை - 84

இதுவரை என்னைக்கு நம்ம அறுசுவையில் அரட்டை அர்த்தமுள்ளதா இருந்தது??? எப்பவும் பொழுது போகாம வந்து நல்ல இருக்கீங்களா, சமையல் ஆச்சா, சாப்ட்டாச்சா, தூங்கியாச்சா கேள்வி தானே ;) அதான் தலைப்பை மாத்திட்டேன். தொடருங்க கச்சேரியை.

எனக்கு மிக பெரிய கண்டம் நடந்துகிட்டிருக்கு .எல்லோரும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுகன் நீங்க என்ன படிச்சு வெப் டிசைனர் ஆனீங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் அரட்டை தோழிகளே, என்னது அர்த்தமுள்ள அரட்டை அர்த்தமே இல்லாத அரட்டையா மாறிடுச்சு. என்னே கொடுமை வனிக்கா நாங்க நிறைய உருப்படியான விஷயங்களை பற்றி பேசியிருக்கோம் நீங்க பார்க்கலையா பரவாயில்லை போங்க.

சுமி ஹாய் இன்னக்கி லீவு சொல்லிட்டு போனீங்களே, அண்ணா பிறந்தநாள் எப்படி போகிட்டு இருக்கு. அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டீங்களா சுமி. ரசமலாய் எப்படி வந்துச்சு.

சுகி,இன்னிக்கு கலையில் ஜலீலாக்காவுடைய சாம்பார் வடை செய்யலாம் என்று செய்ய ஆரம்பித்து கடைசியில் அவரே மாவு அரைத்து, வடை செய்து அதை முடித்துவிட்டு சாம்பார் வடையை எடுத்துக்கொண்டு ஆபிஸ் போயிருக்கார், நேற்று குளோப் ஜாமூன் அவரே செய்தார். நான் ரசமலாய் மட்டும் தான் செய்தேன்.

யாழினி,ரசமலாய் செய்தேன் டேஸ்ட் பரவாயில்லைப்பா, அவசரத்துக்கு செய்து கொள்ளலாம். அது பால்கோவா டேஸ்ட் இருக்கிறது.

அஸ்வதா, வாங்கப்பா.

வாழு இல்லை வாழவிடு

அஸ்வதா, என் கதை பெரிய கதை...... நான் 12 th ல நல்ல மார்க் தான்(85%) வாங்கினேன்....2003 ல தான் நான் 12th முடுச்சேன், அப்ப எல்லாம் யாரா பாத்தாலும் இன்ஜினியரிங் தான் சேந்தாங்க, எனக்கு இன்ஜினியரிங் சேர விருப்பம் இல்லை. மெடிக்கல் லைன் ல போலாம் ன்னு ஆசை இருந்துச்சு. கவுன்செலிங் க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன், அதுக்கு நடுவுல சும்மா ஒரு கோர்ஸ் இருக்கட்டும் ன்னு, எங்க family டாக்டர் (Food & Nutrition ) ல application போடா சொன்னார். நானும் சும்மா தான ன்னு போட்டேன். அந்த டாக்டர் future ல கம்ப்யூட்டர் field எல்லாம் இருக்காது, மெடிக்கல் க்கு தான் value இருக்கும் ன்னு, எங்க அம்மா, அப்பா க்கு ப்ரைன்வாஷ் பண்ணிட்டாங்க. அதுனால ஆர்ட்ஸ் குரூப் கூட சேர முடியல. எனக்கு (Food & Nutrition ) கோர்ஸ் கொஞ்சம் கூட பிடிக்காது. கடைசில எல்லாரும் கொளப்பி விட்டு, இந்த கருமத்த படிக்க வெச்சுட்டாங்க. எப்படியோ இந்த கோர்ஸ் மூணு வருஷம் பிடிக்காமையே படுச்சு தொலைச்சேன்......இதுக்கு அப்பறம் மீதி கதைய, சாப்பிட்டு வந்து சொல்றேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுமி அப்போ இன்னக்கி குலாப் ஜாமூன், ரசமலாய், சாம்பார் வடை ம் ம் அசத்துங்க ஆனா இதில் இரண்டு ஐட்டம்ஸ் அண்ணா தான் செய்தாங்களா? அதான் ஹைலைட். நானும் முயற்சித்து பார்க்க போகிறேன் சுமி. அமுல்யாவே நல்லா இருக்கா சுமி.

சிமி உங்க பதில் போட்டு முடித்தவுடன் பவர் கட். திரும்ப பேச முடியல சாரிப்பா. ஸ்வர்ணா வாங்க மதியம் வந்த பிறகு இன்னும் காலை வணக்கத்தோட இருக்கீங்களா.
சுகி பவி ஆபிஸ் மாதிரி உங்க ஆபிஸ்லையும் ப்ளாக் பண்ணிட்டாங்க. நேரம் கிடைக்கும் போது அப்ப அப்ப வந்து அட்டனெஸ் கொடுத்துட்டு போங்க சுகி.

நான் எவளவோ சொன்னேன், இந்த கோர்ஸ் வேண்டாம் ன்னு, எங்க வீடுள்ள கம்பெல் பண்ணி படிக்கவெச்சுட்டாங்க. நானும் கடனேன்னு தான் படுச்சேன். கோர்ஸ் முடுச்ச பின்னாடி,MSC பண்ண சொன்னங்க, வந்துச்சு பாருங்க கோபம், மூணு வருஷம் படுச்சதே தெண்டம் ன்னு சொல்றேன், நீங்க msc பண்ண சொல்றீங்களான்னு திட்டிட்டு, சும்மா கம்ப்யூட்டர் basic கோர்ஸ் படுச்சேன், அப்பறமா ஒரு சின்ன கம்பெனி க்கு SEO ன்னு சொல்ற வேலைக்காக தான் போனேன், நான் போய் சேந்த நேரம்ன்னு பாத்து, ஒரு மாசம் தான் SEO ப்ரோஜெக்ட்ஸ் வந்துச்சு. அப்பறம், அங்க எலலரும் webdesigning தான் பண்ணினாங்க. அவங்க பக்கத்துல்ல உட்காந்து உட்காந்து, என்ன பண்றங்கன்னு பாத்து பாத்து கத்துக்கிட்டேன். அதுவும் MD க்கு தெரியாம தான், தெருஞ்ச அவரும் திட்டுவார். அப்படி கத்துகிட்டது தான் இந்த "webdesigning "..... எபப்டியோ மூணு வருஷமா இந்த field ல வொர்க் பண்றேன். நிறைய கத்துக்கிட்டேன், நிறைய அனுபவங்கள், நிறைய சோதனைகள்.....சோதனைன்னா என்னன்னு கேக்கறீங்களா? மூணு வருஷம் அனுபவம் இருந்தாலும், நான் interview க்கு போற பக்கம் எல்லாம், எல்லாரும் கேக்கற ஒரே கேள்வி,"""' நீங்க என் nutrition படுச்சுட்டு இந்த பில்ட் க்கு வந்தீங்க?""""அட ராமா, ன்னு தலைல அடுச்சுட்டு ஒரு பெரிய விளக்கஉரை வேற தருவேன்.....இன்னும் தந்துட்டு இருக்கேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நல்லா அரட்டை போய்ட்டு இருக்கு போல என்னபா இன்னும் நம்ம தேவி , கல்ப்ஸ்,சுந்தரி மஞ்சு இவங்கள எல்லாம் கானவே கானும்

அன்புடன்
ஸ்ரீ

உங்க கதை சூப்பர் பா கேக்க ரொம்ப இன்றஸ்டிங்கா இருக்கு சரி சரி அடிக்க வராதீங்க பா

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்