அவன் பயன்படுத்துவது எப்படி ??

அறுசுவை தோழிகளின் ஆலோசனைப்படி ஒரு அவன் மற்றும் மைக்ரோ ஓவன் சோலோ வாங்கிவிட்டேன் பா... இப்ப அதை எப்படி use செய்வது என்று தெரியவில்லை . கடையில் வாங்குவதற்கு முன் டெமோ காட்ட வருவாங்கன்னு சொன்னங்க, ஆனா இப்ப அதெல்லாம் வர மாட்டாங்க புக் பாத்து நீங்களே செய்யணும்னு சொல்றாங்க . அறுசுவைல இருந்து ஒரு சிம்பிள் பிஸ்கட் ரெசிபி எடுத்து ட்ரை பண்ணினேன் . அது போல் செய்த போது மாவு அப்படியே இருந்தது. நேரம் போதவில்லை என்று மீண்டும் அதே போல் செய்தேன் . வேகவில்லை. பிறகு டிகிரி கூட்டி நேரத்தை குறைத்தேன் . லேசாக ஸ்மெல் வர ஆரம்பித்தது . உடனே ஆப் செய்து விட்டேன் . பிஸ்கட் கடிக்க முடியாத அளவுக்கு உள்ளது.

என்னை போல ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு என்று எதாவது டிப்ஸ் குடுக்க முடியுமா . அல்லது வேறு வெப்சைட் கூரினாலும் நன்றாக இருக்கும். நான் வாங்கியிருப்பது Morphy richards 28R OTG அவன்

http://busycooks.about.com/od/microwaveovens/a/microwavehow.htm &http://www.indiaparenting.com/video/display.cgi?v1=522&v2=mjcODgfCDRE

வாழு இல்லை வாழவிடு

உடனடியாக பதில் தந்தமைக்கு நன்றி சுமி . படித்து பார்கிறேன் .

படித்து பார்த்துவிட்டு நல்ல நல்ல சமையலா செய்து அசத்துங்க.

வாழு இல்லை வாழவிடு

கண்டிப்பா சுமி . OTG அவன் பத்தி உங்களுக்கு தெரியுமா ??

சாரிப்பா என்னிடம் அவன் இல்லை. நீங்க கேட்டிங்க எடுத்து கொடுத்தேன். ஆனா உங்களூக்கு யாராவது வந்து பதில் சொல்லுவாங்கப்பா.

வாழு இல்லை வாழவிடு

பரவாயில்லை சுமி . இதற்கெல்லாம் சாரி வேண்டாம் .

சென்னையில் அவன் கிளாஸ் ஏதாவது இருந்தால் கூட சொல்லுங்கப்பா . ப்ளீஸ் ....

இதுக்கு எதற்க்கு கிளாஸ் நம்ப தோழிங்க சொல்லிருக்கிற மாதிரி செய்து பாருங்க நல்லா வரும். நீங்க எந்த கடையில் வாங்கினிங்க.

வாழு இல்லை வாழவிடு

நான் அவன் உபயோகிபதற்கு புதிது என்பதால் எனக்கு basic தெரியவில்லை. அது மட்டும் இன்றி யாருமே பதில் சொல்ல வில்லை . அதனால் தான் இப்படி கேட்டேன் . அறுசுவை recipe தான் ட்ரை செய்தேன் . நன்றாக வரவில்லை . அதனால் கேட்டேன் . currimbhoys parrys வாங்கினேன் .

என்னப்பா இது யாருமே பதில் சொல்ல மாற்றங்க . ஒரு அவன் அண்ட் மைக்ரோ ஓவன் வாங்கி வச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் . யாருமே உதவ மாடீங்களா ??

மேலும் சில பதிவுகள்