பேச்சு வ‌ருவ‌தில் தாம‌த‌ம்

அன்பு தோழிக‌ளே,
என் ம‌க‌ன் பெய‌ர் ப்ர‌ண‌வ். அவ‌னுக்கு 21/2 வ‌ய‌து ஆகிற‌து. ஆனால் பேச்சு வ‌ர‌வில்லை. நாம் சொல்வ‌தை க‌வ‌னிக்க‌ ம‌றுக்கிறான். அவ‌னுக்கே தோணும் போது அம்மா என்கிறான்.ஏதேதோ உள‌றுகிறான்.காது ந‌ன்றாக‌ கேட்கிறது. இப்போது வார‌த்தில் 3 நாள் ப்ளே கேர் அனுப்புகிறேன். நாங்க‌ள் இப்போது (ஸியாட்டில், யூ.ஸ்)ல் வ‌சிக்கிறோம். என்ன‌ செய்வ‌து என்று தெரிய‌வில்லை. ஏதாவ‌து வ‌ழி இருந்தால் சொல்லுங்க‌ள் தோழிக‌ளே......

சில குழந்தைகள் லேட்டா தான் பேசும். என் அக்கா பையனும் அப்படி தான்.....ஆனால் பேச ஆரம்பிக்கும் போதே நீல நீளமாக பேசினான். அவன் விளையாடும் பொருட்களை காட்டி அது என்னனு சொல்லி கொடுங்க. என் இரண்டாவது பொண்ணு முஷளில் அவளுடையா அக்காவை தான் கூப்பிட்டால்......சில குழந்தைகள் அம்மா என்று முதலில் சொல்ல மாட்டார்கள்.....காரில் செல்லும்போது வழியில் செல்லும் கார் லைட் ட்ரீ என்று பார்ப்பவை எல்லாத்தையும் சொல்லி கொடுங்க. நீங்கள் உங்கள் குழந்தையிடம் நிறைய பேசுங்கள். பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு பேசுவார்கள். இவர் எவ்வளவு நாட்களாக போகிறார்? நீங்கள் எதற்கும் அவனின் மருத்துவரிடம் கேட்டு பாருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் புவனா நலமா?
நீங்கள் கவலைபடாதீர்கள் இப்பொதுதான் daycare போகிறார் அல்லவா போக போக நன்றாக பேசிவிடுவார் நாங்களும் ஸியாட்டலில் தான் இருக்கிறோம் என் மகனுக்கும் 3 வயது 3 மாதம் ஆகிறது அவனும் இன்னும் சரியாக பேசவில்லை கவலைபடாதீர்கள் போக போக நன்றாக பேசிவிடுவார்

Vr Scorp, Raji......அக்க‌றை மிகுந்த‌ த‌ங்க‌ள் ப‌திலுக்கு மிக்க‌ ந‌ன்றி

என் ம‌க‌ன் க‌ட‌ந்த‌ 3 வார‌ங்க‌ளாக‌ daycare செல்கிறான். நானும் என் க‌ண‌வ‌ரும் அவ‌னுட‌ன் பேசிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் பேசி விடுவான் என ந‌ம்புகிறோம்.

மேலும் சில பதிவுகள்